Health-and-Nutrition/C2/Importance-of-breastfeeding/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:00 தாய்ப்பாலூட்டலின் முக்கியத்துவம் குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00:07 இந்த tutorial லில் நாம் கற்க போவது:
00:09 தாய்ப்பாலூட்டலின் முக்கியத்துவம்
00:12 குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்குமான தாய்ப்பாலூட்டலின் நன்மைகள்
00:17 தாய்ப்பாலூட்டுதல் இன்றியமையாதது
00:19 குழந்தை பிறந்தலிலுருந்து தொடங்கி அதன் இரண்டாம் பிறந்தநாள் அல்லது அதன் மேலும் கொடுக்கக் கூடியது
00:26 பச்சிளம் குழந்தைக்கான ஆரோக்யமான ஆரம்பம் தாய்ப்பாலூட்டலின் மூலம் கிடைக்கிறது
00:31 அது குழந்தை மற்றும் தாயின் உடனடி மற்றும் எதிர்கால ஆரோக்கியத்தையும் நிர்ணயிக்கிறது
00:38 அதன் நன்மைகள் இருவருக்கும் வாழ்நாள் காலம் முழுவதும் நீடிக்கிறது
00:43 ஊட்டசத்து குறைபாடுள்ள தாய்மார்கள் கூட தங்களது குழந்தைக்கு தாய்ப்பாலூட்டலாம்
00:49 கர்ப காலத்தின் போது மார்பகத்தின் அளவு அதிகரிக்கிறது
00:53 பாலை உற்பத்தி செய்யும் திசுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இது ஏற்படுகிறது
00:59 எனினும் மார்பகத்தின் இறுதி அளவு பாலின் உற்பத்தியை பாதிக்காது
01:07 தாய்ப்பாலூட்டல் குழந்தை பிறந்த ஒரு மணிநேரத்திற்குள் தொடங்கப்பட வேண்டும்
01:13 இது தாய்ப்பால் வழங்குதலை அதிகரிக்கிறது
01:17 ஆதலால், பிரத்யேக தாய்ப்பாலூட்டல் முதல் 6 மாதங்களில் அதிகரிக்கிறது
01:24 தாய்ப்பாலூட்டுதல் மேலும் 2 வருடங்களுக்கு நீடிக்க இது உதவுகிறது
01:31 பிறந்த 1 மணி நேரத்திற்குள் தாய்ப்பாலூட்டப்படும் குழந்தைகள் இறக்கும் ஆபத்து குறைவாக உள்ளது
01:39 தாமதமான தாய்ப்பாலூட்டல் பச்சிளம் குழந்தைகளுக்கான வியாதிகள் உண்டாக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது
01:47 எதுத்துக்காட்டாக: நீரிழிவு நோய், உடல் பருமன் மற்றும் உயர் இரத்த அழுத்தம்
01:53 முன்கூட்டியே தாய்ப்பாலூட்ட ஆரம்பிப்பது, குழந்தைக்கு colostrum கிடைப்பதை உறுதிப்படுத்துகிறது
02:00 Colostrum என்பது குழந்தை பெற்றெடுத்த பிறகு சேகரிக்கப்படும் முதல் பாலாகும்
02:07 குழந்தைகளுக்கு, இது முதன்மையான சக்தி மற்றும் ஊட்டச்சத்து ஆகும்
02:13 இது முக்கியமாக, குழந்தை பிறந்த முதல் சில நாட்களுக்கு மிகவும் அவசியமாகும்
02:20 தொற்று நோய்களை எதிர்த்து போராடக்கூடிய கூறுகள் இதில் அதிகம் உள்ளன
02:24 Vitamin A மற்றும்
02:26 நல்ல கொழுப்புகள்
02:28 வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு தேவையானவையும் colostrum மில் அதிகம் உள்ளன
02:35 பழைய கழிவுகளை நீக்கக்கூடிய பண்பு colostrum மில் உள்ளது
02:42 Colostrum மின் விரிவான பல நன்மைகள் வேறொரு tutorial லில் விளக்கப்பட்டுள்ளது
02:48 மேலும் விவரங்களுக்கு எங்கள் வலைத்தளத்தை காணவும்
02:52 முதல் 6 மாதங்களுக்கு பிரத்யேக தாய்ப்பாலூட்ட வேண்டும் என்பதை நினைவில் கொள்க
02:59 தாய்ப்பால் என்பது தனித்துவமான மற்றும் போலியாக செய்யமுடியாத இணையில்லா உணவாகும்
03:05 குழந்தைக்கு 6 மாதங்கள் முடிந்தவுடன், கூடுதல் உணவு தொடங்கப்பட வேண்டும்
03:12 அது தாய்ப்பாலுடன் சேர்த்து கொடுக்கப்பட வேண்டும்
03:16 தாய்ப்பாலூட்டல் 2 வயது வரை அல்லது அதற்கு மேலும் தொடரப்பட வேண்டும்
03:22 தாய்ப்பாலூட்டுவதால் குழந்தைக்கு பல நன்மைகள் உண்டு
03:27 தாய்ப்பாலின் ஊட்டச்சத்துக் கலவை குழந்தையின் ஜீரணத்திற்கு ஏற்றது
03:34 தாய்ப்பாலின் மூலம் குழந்தைகளுக்கு antibodies கிடைக்கிறது
03:38 குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கி தொற்றுகளின் ஆபத்தை குறைக்கிறது
03:46 மேலும் குழந்தைகளுக்கு ஒவ்வாமை வராமல் தடுக்கிறது
03:52 வளர்ச்சிக்கு தேவையானவையும் தாய்ப்பாலில் உள்ளது
03:56 குழந்தைகளின் குடல் உறுப்பு மேம்பாட்டிற்கு இது உதவுகிறது
04:02 குழந்தையின் குடலில் நல்ல bacteria வளர இது உதவுகிறது
04:08 ஆதலால், குடல் வீக்கம் மற்றும் தொற்றுக்களில் இருந்து குழந்தைகளை இது காக்கிறது
04:16 மேலும், உடலின் பல்வேறு உறுப்புகள் மேம்பட இது உதவுகிறது
04:23 தாய்ப்பாலூட்டுதல் வயிற்றுப்போக்கின் ஆபத்தை குறைக்கிறது
04:27 மேலும் சில நன்மைகள், காது நோய்தொற்று
04:31 மற்றும் பல் சொத்தையிலிருந்து தடுப்பது
04:34 ஈறுகளை மேம்படுத்துதல் மற்றும் பற்களை வலிமை படுத்துதல் மேலும் சில உதாரணங்கள் ஆகும்
04:41 வாழ்வின் பிற்காலத்தில் ஏற்படும் சில வியாதிகளின் ஆபத்தையும் இது குறைக்கிறது
04:48 எதுத்துக்காட்டாக: நீரிழிவு நோய், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த புற்றுநோய்
04:56 சுவாச சம்பந்தமான வியாதிகளான ஆஸ்மா மற்றும் நிமோனியா குறைகிறது
05:05 1 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் திடீர் மரணத்தை தாய்ப்பாலூட்டுதல் குறைக்கிறது
05:14 தாய்ப்பாலூட்டப்பட்ட குழந்தைகளுக்கு atopic eczema கான ஆபத்தும் குறைகிறது
05:22 Eczema என்பது சருமத்தில் ஏற்படும் சிவந்த, நமைச்சல் ஏற்படக்கூடிய கடிமான திட்டுக்களாகும்
05:30 தாய்ப்பாலூட்டப்பட்ட குழந்தைகள் கூட நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர்
05:39 தாய்ப்பாலூட்டப்பட்ட குழந்தைகள் தங்கள் பசி அறிகுறிகளை அறிந்து கொள்கின்றனர்
05:44 தாய்ப்பாலில் பசியை கட்டுப்படுத்தக்கூடிய hormoneகள் உள்ளன
05:48 அந்த hormoneகள் பசியையும் பசி நிறைவுபெற்றதையும் உணர உதவி புரிகிறது
05:57 இந்த சுய கட்டுப்பாடு, தாய்ப்பால் கொடுக்கப்படாத குழந்தைகளிடம் சரியாக இருப்பதில்லை
06:03 இறுதியாக, இது தேவைக்கு அதிகமாக உண்ணுதல்,
06:07 உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயை உண்டாக்குறது
06:11 தாய்ப்பாலூட்டுதல் மூலையிலும் பலன்களை ஏற்படுத்துகிறது
06:15 தாய்ப்பாலிலுள்ள கூறுகள், மூளைyin வளர்ச்சி மற்றும் முதிர்ச்சியடைவதற்கு உதவுகிறது
06:23 தாய்ப்பாலூட்டப்பட்ட குழந்தைகளுக்கு அதிக அறிவு திறன் மற்றும் மற்ற திறன்களும் உள்ளன
06:28 தாய்ப்பாலின் நன்மைகள் குறைபிரசவ குழந்தைகளுக்கு மேலும் அதிகமாக கிடைக்கிறது
06:34 மார்பகத்தை உறுஞ்சுவதினால் இந்த குழந்தைகளுக்கு மூச்சுத்திறன் மேம்படுகிறது
06:40 இந்த குழந்தைகள் குடல் தொற்றுக்கு ஆளாக வாய்ப்புள்ளது
06:47 எடுத்துக்காட்டாக: வயிற்றுப்போக்கு மற்றும் Necrotizing enterocolitis எனப்படும் NEC
06:56 NEC என்பது நோய் தொற்றால் குடலுக்கு ஏற்படக்கூடிய ஒரு தீவிர வியாதியாகும்
07:05 தாய்ப்பால், குறைப்பிரசவ குழந்தைகளை நோய் தொற்றிலிருந்து காக்கிறது
07:11 குறைப்பிரசவ குழந்தைகளின் தாய்மார்களிடமிருந்து கிடைக்கும் பாலில்

நோய்தொற்றிலிருந்து பாதுகாக்கக்கூடிய புரதங்கள் உள்ளன

07:19 அதில் குடலை பாதுகாக்க கூடிய பொருட்களும் உள்ளன
07:25 அதிக அளவிலான குறிப்பிட்ட amino acidகள் மற்றும் நல்ல பாக்டீரியாக்களும் நிறைந்துள்ளன
07:33 குறைபிரசவ குழந்தைகளின் வளர்ச்சிக்கு இந்த amino acidகள் தேவை
07:40 ஆதலால், தாய்ப்பால் நோய்த்தொற்றிலிருந்து காத்து
07:43 எடை அதிகரிக்க உதவுகிறது
07:46 குறைபிரசவத்தினால் ஏற்படும் நீண்ட கால பிரச்சனையையும் தாய்ப்பால் குறைக்கிறது
07:52 எடுத்துக்காட்டாக: நுரையீரல் மற்றும் கண் சம்மந்தமான பிரச்சனை
07:57 ஆதலால், குறைபிரசவ குழந்தைகளுக்கு அதிகமான தாய்ப்பால் கிடைக்க வேண்டும்
08:04 கங்காரு மதர் கேர் என்று சொல்லக்கூடிய KMC கூட குறைபிரசவ குழந்தைகளுக்கு உபயோகமானது
08:12 அடிக்கடி தாய்ப்பாலூட்டுதல் மற்றும் அதிக நேரம் தாய்ப்பாலூட்டுதலை இது மேம்படுத்துகிறது
08:18 KMC இன் போது கொடுக்கப்படும் தோலுடன் தோல் தொடர்பானது குழந்தையின் உடல் வெப்பநிலையை பராமரிக்க உதவுகிறது
08:27 மேலும் குழந்தையின் இதயத்துடிப்பு மற்றும் இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை நிலைப்படுத்துவதற்கு உதவுகிறது
08:35 கங்காரு மதர் கேரின் செயல்முறை வேறொரு tutorial லில் விளக்கப்பட்டுள்ளது
08:42 தாய்ப்பாலூட்டுதல் குழந்தைகளுக்கு மட்டும் அல்லாமல், தாய்மார்களுக்கும் நன்மைகளை தருகிறது
08:48 இந்த நன்மைகள் உடனடி மற்றும் நீண்ட காலத்திற்கு ஆகும்
08:53 குழந்தை பிறந்தவுடன் உடனடியாக தாய்ப்பாலூட்டுதல் ரத்தப்போக்கை குறைக்கிறது
08:59 உடலில் oxytocin hormoneனின் அளவை அதிகரிக்கிறது
09:05 நஞ்சுக்கொடி உடலில் இருந்து வெளியே வருவதற்கு இது உதவுகிறது
09:09 இதன் விளைவாக கருப்பை சுருங்குதல் மேம்பட்டு இரத்த போக்கு குறைகிறது
09:17 ஆதலால், தாய்மார்களுக்கு இரத்த சோகை வராமல் தடுக்கிறது
09:21 தாய்ப்பாலூட்டுவதினால், தாய்மார்களுக்கு மன ரீதியான நன்மைகள் உள்ளன
09:27 அடிக்கடி தோலுடன் தோல் தொடர்பு ஏற்படுவதினால் தாய்க்கும் குழந்தைக்குமான பந்தம் மேம்படுகிறது
09:35 இந்த பந்தம் தாயை தாய்ப்பாலூட்ட தயாராக்குகிறது
09:39 இறுதியாக, மகப்பேற்று இறுக்கத்தையும் மனசோர்வையும் குறைக்கிறது
09:46 தாய்ப்பாலூட்டுதல் தாய்மார்களுக்கு நீண்ட கால நன்மைகளை தருகிறது
09:51 பிற்காலத்தில், எலும்புகள் பலவீனமாவதை தடுக்கிறது
09:56 மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பையின் புற்றுநோய் வருவது குறைகிறது
10:02 கர்ப காலத்தின் போது, பெண்ககளின் உடல் உள்ளுறுப்புகளில் கொழுப்பு சேர்கிறது
10:08 அதாவது, வயிறு, குடல் மற்றும் கல்லீரலில்
10:12 இந்த கொழுப்பானது, வயிறு மற்றும் அடிவயிற்று பகுதிகளில் ஒளிந்திருக்கிறது
10:18 அதிகப்படியான கொழுப்பு, இன்சுலின் எதிர்ப்பு,
10:23 நீரிழுவு நோய் மற்றும் உடல் பருமனை விளைவிக்கிறது
10:26 தாய்ப்பாலூட்டுதல், பெண்களிடம் இந்த கொழுப்பை குறைக்க உதவுகிறது
10:31 உடல் பருமன், இரத்த கொதிப்பு மற்றும் இதய நோய் வருவதை குறைக்கிறது
10:37 பிரத்யேக தாய்ப்பாலூட்டல் இயற்கையான கருத்தடையாக அமையலாம்
10:44 எனினும் தம்பதியர், பிரசவத்தின் 6 வாரங்களுக்கு பின் கருத்தடையை பயன்படுத்த வேண்டும்
10:50 இரண்டு பிரசவத்திற்கான இடைவெளி இருக்க இது உதவுகிறது
10:56 தாய்ப்பாலூட்டுவதலினால் சில பொருளாதார நன்மைகளும் உள்ளன
11:00 தாய்ப்பால் இலவசமாக கிடைக்கிறது மற்றும் குழந்தைக்கும் சிறந்தது
11:07 பவுடர் பால், புட்டி பால் மற்றும் செயற்கை காம்புகளுக்கான செலவு இல்லை
11:15 தாய்ப்பால் தயாரிப்பதற்கான அதிகப்படியான நேரமும் செலவிடப்படுவதில்லை
11:20 தாய்ப்பால் தயாரிக்க வெந்நீர், பாத்திரம் மற்றும் எரிபொருள் தேவைப்படுவதில்லை
11:28 அசுத்த நீர் மற்றும் அசுத்தமான புட்டி பால் குழந்தையை நோய்வாய்ப்பட செய்கிறது
11:35 ஆதலால், தாய்க்கும் குழந்தைக்குமான சுகாதர பாராமரிப்பிற்கான செலவு பிற்காலத்தில் குறைகிறது
11:42 தாய்ப்பாலூட்டப்படுவதினால் பல சுற்றுசூழல் நன்மைகளும் உள்ளன
11:47 முதலில், தாய்ப்பாலை பெட்டியினுள் அடைத்தல் மற்றும் இடம் மாற்றுதல் போன்ற வேலைகள் இல்லை
11:54 அது எந்த கழிவு,
11:57 புகை மற்றும் சத்தத்தையும் ஏற்படுத்துவதில்லை
12:00 உலகின் வளம் மற்றும் எரிபொருளை காத்து மாசை குறைக்கிறது
12:06 ஆதலால், தாய்ப்பாலூட்டலே சிறந்த தேர்வாகும்
12:10 குழந்தைக்கு 2 வயதாகும் வரை தாய்ப்பாலூட்டுவதை தாய்மார்கள் உறுதிபடுத்திக் கொள்ளவேண்டும்
12:18 இது தாய்க்கும் குழந்தைக்குமான ஆரோக்யத்திற்கே ஆகும்
12:24 தாய்ப்பாலூட்ட சரியான நுட்பத்தை அறிந்திருப்பது அவசியம்
12:30 அதனுடன் சேர்த்து, குடும்பத்தின் ஆதரவும் வழிகாட்டுதலும் கூட தேவை
12:38 இவை அனைத்தும் இதே தொடரின் வேறொரு tutorialலில் விளக்கப்பட்டுள்ளது
12:44 இத்துடன் இந்த tutorial லின் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த tutorial லை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஆர்த்தி. நன்றி.

Contributors and Content Editors

Arthi