Difference between revisions of "Koha-Library-Management-System/C3/Installation-of-MarcEditor/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{|border=1 |'''Time''' |'''Narration''' |- | 00:01 | '''Windows.'''ல் '''MarcEditorஐ நிறுவுதல் ''' குறித்த '''spoken tutorial'''க்...") |
|||
Line 265: | Line 265: | ||
|- | |- | ||
|07:48 | |07:48 | ||
− | | | + | | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |
|} | |} |
Latest revision as of 15:25, 9 February 2021
Time | Narration |
00:01 | Windows.ல் MarcEditorஐ நிறுவுதல் குறித்த spoken tutorialக்கு நல்வரவு. |
00:08 | இந்த டுடோரியலில் நாம், ஒரு 64-bit Windows கணினியில், MarcEditor ஐ நிறுவக்கற்போம். |
00:16 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், பின்வருவனவற்றை பயன்படுத்துகிறேன்: Windows 10 Pro Operating System மற்றும் Firefox web browser. |
00:27 | இந்த டுடோரியல், library staffக்கு நன்கு பொருந்தும். |
00:32 | மேலும் தொடர்வதற்கு முன், பின்வருபவை உங்கள் கணினியில் உள்ளதா என்று உறுதிபடுத்திக்கொள்ளவும்- Windows 10, 8 அல்லது 7, |
00:43 | ஏதேனும் web browser. உதாரணத்திற்கு: Internet Explorer, Firefox அல்லது Google Chrome. |
00:51 | ஏற்கனவே உள்ள உங்கள் libraryல், library recordகளை நீங்கள் ஒரு Excel spreadsheetல் வைத்திருக்கலாம். |
00:58 | மேலும் இப்போது உங்கள் library, இப்போது Koha Library Management System.க்கு இடம்பெயர்க்கப்படுகிறது. |
01:05 | அதனால், எல்லா recordகளையும் Excelலிருந்து MARC formatக்கு மாற்ற வேண்டும். |
01:12 | Excel spreadsheetல் உள்ள recordகளை முதலில் MARC format க்கு மாற்றி, பின் Kohaவினுள் import செய்யவேண்டும் என்பதை தெரிந்துகொள்வது முக்கியமாகும். |
01:26 | இது ஏனெனில், Excel formatல் உள்ள dataவை நேரடியாக import செய்வதற்கான ஏற்பாடு Kohaவில் இல்லை. |
01:35 | தொடங்குவோம். |
01:37 | Excel dataவை MARC fileஆக மாற்ற, அதாவது (dot) mrc formatக்கு மாற்ற, நாம் MarcEdit softwareஐ பயன்படுத்தப்போகிறோம். |
01:48 | இந்த softwareஐ நிறுவ, browserக்கு சென்று இந்த URLஐ டைப் செய்யவும். |
01:55 | Downloads என்ற தலைப்பை கொண்ட ஒரு புதிய பக்கம் திறக்கிறது. |
02:00 | Current Development,ன் கீழ், MarcEdit 7.0.x/MacOS 3.0.x க்கு சென்று Windows 64-bit download.ஐ கண்டறியவும். |
02:17 | எனினும், உங்களிடம் ஒரு 32-bit கணினி இருந்தால், Windows 32-bit download. இணைப்பை நீங்கள் க்ளிக் செய்யவேண்டும். |
02:26 | உங்கள் கணினி, 32-bit ஆ அல்லது 64-bit, ஆ என்பதை சரிபார்க்க, கணினியின் கீழ் இடது மூலைக்கு செல்லவும். |
02:35 | Start iconஐ க்ளிக் செய்யவும். |
02:38 | மேலே scroll செய்து, Settingsஐ க்ளிக் செய்யவும். |
02:43 | இந்த iconகளிலிருந்து, System- Display, notifications, apps, power.ஐ க்ளிக் செய்யவும். |
02:51 | இடது பக்கத்தில் சில தேர்வுகளை கொண்ட மற்றொரு windowவை இது திறக்கிறது. |
02:56 | About tabஐ கண்டறிந்து, அதை க்ளிக் செய்யவும். |
03:00 | அதே பக்கத்தில், வலது பக்கமாக உள்ள, PC பிரிவின் கீழ், System typeஐ கண்டறியவும். |
03:08 | உங்கள் கணினியின் operating systemன் விவரங்கள் காட்டப்படும். |
03:13 | எனது கணினிக்கு, அது 64-bit operating system, x64-based processor. எனக்கூறுகிறது. |
03:21 | விவரங்களை படித்த பிறகு, windowவை மூடவும். |
03:25 | அதைச் செய்ய, மேல் வலது மூலைக்கு சென்று, குறுக்கு குறியீட்டை க்ளிக் செய்யவும். |
03:31 | அதே பக்கம், அதாவது Downloads.க்கு நாம் மீண்டும் திரும்ப வருவோம். |
03:36 | எனது கணினி, 64-bit, ஆதலால் 64-bit download.ஐ க்ளிக் செய்கிறேன். |
03:42 | இரண்டு பிரிவுகளுடன், 64-bit download என்ற தலைப்பையுடைய மற்றொரு புதிய window திறக்கிறது- Non-Administrator மற்றும் Administrator. |
03:53 | அடுத்து, Administrator பிரிவின் கீழே உள்ள Download MarcEdit 7 இணைப்பை நான் க்ளிக் செய்கிறேன். |
04:02 | இது ஏனெனில், நானே எனது libraryன் நியமிக்கப்பட்ட Koha administrator . |
04:09 | MacrEdit_Setup64Admin.msi என்ற ஒரு dialog-box திறக்கிறது. |
04:16 | இங்கு, இரண்டு தேர்வுகளை நாம் காண்கிறோம்- Save File மற்றும் Cancel. |
04:22 | கீழுள்ள Save File பட்டனை க்ளிக் செய்யவும். |
04:26 | அவ்வாறு செய்த பிறகு, உங்கள் கணினியின் Downloads folder க்கு செல்லவும். |
04:31 | இங்கு, MacrEdit_Setup64Admin.msi file சேமிக்கப்பட்டுள்ளதை நீங்கள் காணலாம். |
04:40 | இப்போது, சேமிக்கப்பட்ட fileன் மீது ரைட்-க்ளிக் செய்து, பின் தோன்றுகின்ற தேர்வுகளிலிருந்து Installஐ க்ளிக் செய்யவும். |
04:48 | User Account Control dialog box ல், Yesஐ க்ளிக் செய்யவும். |
04:56 | Welcome to the MarcEdit 7 Setup Wizard என்ற பெயரைக்கொண்ட மற்றொரு window தோன்றுகிறது. |
05:04 | பக்கத்தின் கீழுள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும். |
05:08 | License Agreement என்ற தலைப்புடன் மற்றொரு window திறக்கிறது. |
05:14 | License Agreement ஐ கவனமாக படிக்கவும். |
05:18 | மேலும், I do not agree மற்றும் I agree என்ற இரண்டு தேர்வுகளிலிருந்து, I Agree என்ற ரேடியோ பட்டனை க்ளிக் செய்யவும். |
05:28 | பின், windowவின் கீழுள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும். |
05:33 | Select Installation Folder என்ற பெயருடைய ஒரு புதிய window திறக்கிறது. |
05:39 | நிறுவப்பட்ட software சேமிக்கப்படப்போகின்ற folderன் pathஐ இது காட்டுகிறது. |
05:45 | மாறாக, இந்த softwareஐ உங்கள் விருப்பத்திக்கேற்ற ஒரு வேறுபட்ட folderல் நீங்கள் நிறுவலாம். அதைச் செய்ய, Folder. fieldல் தேவையான pathஐ டைப் செய்யவும். |
05:56 | Browse tabஐ க்ளிக் செய்தும், விரும்பிய pathஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். |
06:03 | எனினும், Folder. fieldல், folder pathஐ நான் அப்படியே வைக்கிறேன். |
06:09 | இப்போது, windowவின் கீழுள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும். |
06:14 | Confirm Installation என்ற மற்றொரு புதிய window திறக்கிறது. |
06:19 | இப்போது, அதே windowவின் கீழுள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும். |
06:25 | Installing MarcEdit 7 window திறக்கிறது. |
06:30 | இதற்குப் பிறகு, வெற்றிச் செய்தியை கொண்ட ஒரு windowவை நாம் காண்கிறோம். Installation Complete. MarcEdit 7 has been successfully installed என அது கூறுகிறது. |
06:42 | இந்த windowவிலிருந்து வெளியேற Close பட்டனை க்ளிக் செய்யவும். |
06:47 | MarcEdit 7.0.250 By Terry Reese என்ற தலைப்புடன் கூடிய window திறக்கிறது. |
06:56 | இப்போது, திறந்திருக்கின்ற அனைத்து windowக்களையும் minimize செய்யவும். |
07:01 | Desktop ல் ஒரு shortcut உருவாக்கப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். |
07:06 | இத்துடன், ஒரு 64-bit Windows கணினியின் Desktop ல் MarcEditor ஐ நாம் வெற்றிகரமாக நிறுவிவிட்டோம். |
07:14 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
07:22 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும். |
07:32 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் முன்வைக்கவும். |
07:36 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
07:48 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |