Difference between revisions of "Linux-AWK/C2/Conditional-statements-in-awk/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 | <center>'''Time'''</center> | <center>'''Narration'''</center> |- | 00:01 | '''Awk'''ல் '''conditional statement'''கள் குறித்த ஸ்ப...")
 
 
Line 245: Line 245:
 
|-
 
|-
 
| 07:20
 
| 07:20
| இந்த ஸ்கிரிப்ட், அந்தராவினால் வழங்கப்பட்டுள்ளது. விடை பெற்றுக்கொள்வது, ஐ ஐ டி பாம்பேயிலிருந்து பிரவீன். கலந்துகொண்டமைக்கு நன்றி.
+
| இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ரிஷிதா. கலந்துகொண்டமைக்கு நன்றி.
 
|}
 
|}

Latest revision as of 11:20, 5 July 2019

Time
Narration
00:01 Awkல் conditional statementகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது- Awkல், if, else, else if .
00:15 இதை சில உதாரணங்கள் மூலம் நாம் செய்வோம்.
00:19 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், Ubuntu Linux 16.04 Operating System மற்றும் gedit text editor 3.20.1ஐ பயன்படுத்துகிறேன்.
00:32 உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் நீங்கள் பயன்படுத்தலாம்.
00:36 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, இந்த வலைத்தளத்தில் உள்ள முந்தையawk டுடோரியல்களை நீங்கள் படித்திருக்க வேண்டும்.
00:43 C அல்லதுC++ போன்ற ஏதேனும் ஒரு programming language, உங்களுக்கு தெரிந்திருக்கவேண்டும்.
00:50 இல்லையெனில், எங்கள் வலைத்தளத்தில் உள்ள அதற்கான டுடோரியல்களை படிக்கவும்.
00:56 இந்த டுடோரியலில் பயன்படுத்தப்பட்டுள்ள fileகள், இந்த டுடோரியல் பக்கத்தில் உள்ள Code Files இணைப்பில் உள்ளது. அவற்றை தரவிறக்கி, extract செய்துகொள்ளவும்.
01:06 ஒரு செயலை செய்வதற்கு முன்பு, ஒரு குறிப்பிட்ட conditionஐ சரிபார்க்க, ஒரு conditional statement நம்மை அனுமதிக்கிறது.
01:14 like if, else, else-if போன்ற conditional statementகள், awkல் எப்படி வேலை செய்கின்றன என்பதை கற்போம்.
01:22 எந்த programming languageலும் உள்ளது போல், if -else statement ன் syntax பின்வருமாறு:
01:28 if conditional-expression1, true என்றால், பின் action1.ஐ செய்யவும்.
01:34 else if conditional-expression2, true என்றால், பின் action2.ஐ செய்யவும்.
01:41 பல else if statements கள், இதன் பின் தொடரலாம்.
01:46 இறுதியில், குறிப்பிட்ட conditional expressionகளில் எதுவும் true இல்லையெனில், பின் action nஐ செய்யவும்.
01:54 else மற்றும்else-if பாகங்கள், கட்டாயமற்றவை ஆகும். ஒரு உதாரணத்தை பார்ப்போம்.
02:02 நாம் முன்னர் பயன்படுத்திய அதே awkdemo.txt fileஐ பயன்படுத்துவோம்.
02:10 ரூபாய் 8000க்கும் மேல் உதவித்தொகை பெறுகின்ற மாணவர்களுக்கு, 50 சதவிகிதம் உயர்வு கொடுக்கவேண்டும் என்று வைத்துக்கொள்வோம்.
02:19 இந்த conditionக்கு, ஒரு awk fileஐ உருவாக்குவோம்.
02:23 காட்டப்பட்டுள்ள பின்வரும் codeஐ , ஒரு text editorல் டைப் செய்து, அதை cond dot awk என சேமிக்கவும். நான் இதை ஏற்கனவே செய்துவிட்டேன்.
02:34 அதே file, Code Files இணைப்பிலும் உள்ளது.
02:39 இந்த codeல், நாம் Output Field Separatorஆக colon.ஐ set செய்துள்ளோம்.
02:45 முதல் print statement , field headingகளை print செய்கிறது.
02:50 அடுத்து, ஆறாவது fieldன் மதிப்பு, 8000க்கும் அதிகமாக உள்ளதா என்று if statement சரிபார்க்கும்.
02:58 ஆம் எனில், இரண்டாவதுprint statement செயல்படுத்தப்படும்.
03:03 இந்த print statementனுள் உள்ள $6 into 1.5, ஆறாவது fieldன் மதிப்பை, 1.5 சதவிகிதத்தால் பெருக்கும்.
03:13 இந்த codeஐ இப்போது செயல்படுத்துவோம்.
03:16 CTRL, ALT மற்றும் T keyகளை அழுத்தி, terminalஐ திறக்கவும்.
03:22 cd commandஐ பயன்படுத்தி, நீங்கள் தரவிறக்கி, extract செய்த Code Fileகளை வைத்துள்ள folderக்கு செல்லவும்.
03:29 இப்போது டைப் செய்க: awk space hyphen capital F pipe குறியீடு இரட்டை மேற்கோள்களினுள் space hyphen சிறிய f space cond dot awk space awkdemo dot txt. Enter.ஐ அழுத்தவும்.
03:49 conditionஐ பூர்த்தி செய்த, அதிகரிக்கப்பட்ட உதவித்தொகையை பெற்ற ஒரு மாணவரின் recordஐ மட்டும் output காட்டுகிறது.
03:57 இப்போது, விதி மாறுகிறது என்று வைத்துக்கொள்வோம்: ரூபாய் 8000க்கும் மேல் உதவித்தொகை பெறுகின்ற மாணவர்களுக்கு, 50 சதவிகிதம் உயர்வு.
04:07 இல்லையெனில், 30 சதவிகிதம் உயர்வு கொடுக்கவும். இதை நாம் எப்படி செய்வது?
04:13 நாம் ஒரு else block.ஐ சேர்க்கவேண்டும்.
04:16 மீண்டும், cond dot awk fileக்கு மாறவும்.
04:21 பின்வரும், code வரியை சேர்ப்போம். இறுதியாக மூடுகின்ற curly braceக்கு முன், Enter.ஐ அழுத்தவும்.
04:30 else , Enter.ஐ அழுத்தவும்.
04:33 print space dollar 2 comma dollar 6 comma dollar 6 into 1.3
04:42 Fileஐ சேமித்து, terminal.க்கு மாறவும்.
04:46 முன்பு செயல்படுத்தப்பட்ட commandஐ பெற, up arrow key ஐ அழுத்தவும். பின், Enter.ஐ அழுத்தவும்.
04:53 இப்போது, outputஐ கவனிக்கவும். யோஜ்னா சொவ்த்ரீ, முன்பு 1000 பெற்றுக்கொண்டிருந்தார். இப்போது, 1300 பெற்றுக்கொண்டிருக்கிறார்.
05:04 மீண்டும் விதிகளை மாற்றுவோம். ரூபாய் 8000துக்கும் மேல் உதவித்தொகை பெறுகின்ற மாணவர்களுக்கு, 50 சதவிகிதம் உயர்வு.
05:13 ரூபாய் 6000துக்கும் மேல் உதவித்தொகை பெறுகின்ற மாணவர்களுக்கு, 40 சதவிகிதம் உயர்வு. இல்லையெனில், 30 சதவிகிதம் உயர்வு கொடுக்கவும்.
05:23 Codeக்கு மாறவும். காட்டப்பட்டுள்ளபடி, codeஐ update செய்யவும்.
05:29 Fileஐ சேமித்து, terminal.க்கு திரும்பவும்.
05:33 Terminal.ஐ clear செய்கிறேன்.
05:36 முன்பு செயல்படுத்தப்பட்ட commandஐ பெற, up arrow key ஐ அழுத்தவும். பின், Enter.ஐ அழுத்தவும்.
05:44 இம்முறை, மாணவர் மீரா நாயர் 40 சதவிகிதம் உயர்வு பெற்றுள்ளதை கவனிக்கவும்.
05:51 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
05:54 சுருங்கச் சொல்ல. இந்த டுடோரியல் நாம் கற்றது: awkல் உள்ள, if , else, else if போன்ற Conditional statementகள்.
06:05 பயிற்சியாக, விதிகளை பின்பற்றி கிரேடுகளை கொடுக்கவும்: மதிப்பெண், 90க்கு சமமாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால், கிரேடு A ஆகும்.
06:15 மதிப்பெண், 80க்கு சமமாகவோ அல்லது அதிகமாகவோ இருந்து, ஆனால் 90க்கு குறைவாக இருந்தால், கிரேடு B ஆகும்.
06:23 மதிப்பெண், 70க்கு சமமாகவோ அல்லது அதிகமாகவோ இருந்து, ஆனால் 80க்கு குறைவாக இருந்தால், கிரேடு C ஆகும்.
06:30 மதிப்பெண், 60க்கு சமமாகவோ அல்லது அதிகமாகவோ இருந்து, ஆனால் 70க்கு குறைவாக இருந்தால், கிரேடு D ஆகும். இல்லையெனில், கிரேடு F ஆகும்.
06:41 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
06:49 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு , ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
06:58 மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
07:02 இந்த ஸ்போகன் டுடோரியலில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் உள்ளதா? இந்த தளத்தை பார்க்கவும்.
07:08 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
07:20 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ரிஷிதா. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree