Difference between revisions of "Drupal/C3/Table-of-Fields-with-Views/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border =1 | '''Time''' | '''Narration''' |- | 00:01 | வணக்கம், Views மூலம் Fieldகளுடன் Tableஐ காட்டுதல் குற...") |
|||
Line 14: | Line 14: | ||
| 00:12 | | 00:12 | ||
|இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: | |இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: | ||
− | + | '''Ubuntu''' இயங்குதளம் | |
− | + | '''Drupal 8''' மற்றும் | |
− | + | '''Firefox''' web browser. | |
|- | |- | ||
| 00:23 | | 00:23 | ||
Line 510: | Line 510: | ||
| 13:07 | | 13:07 | ||
| ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் | | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் | ||
− | + | NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் | |
− | + | NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம். | |
|- | |- |
Revision as of 11:05, 7 October 2016
Time | Narration |
00:01 | வணக்கம், Views மூலம் Fieldகளுடன் Tableஐ காட்டுதல் குறித்த Spoken tutorialக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் fieldகளுடன் tableஐ உருவாக்க கற்போம். |
00:12 | இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:
Ubuntu இயங்குதளம் Drupal 8 மற்றும் Firefox web browser. |
00:23 | உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம். |
00:27 | இப்போது Fieldகளுடன் Tableஐ காட்ட கற்போம். |
00:31 | எதிர்காலத்தில் வரும் eventகளின் பட்டியலை இதுபோன்ற ஒரு tableல் காட்ட விரும்புகிறோம் என்போம். |
00:38 | இங்கு eventகளின் சில தகவல்களையும் அவற்றின் தேதிகளையும் user காணலாம். |
00:45 | இங்கு காட்டப்படும் fieldகள் 'Events Content typeல் உள்ளன. |
00:50 | இங்கு சில eventகளின் சில fieldகளை மட்டும் காட்டுகிறோம். |
00:55 | குறிப்பாக, இன்றைய தேதிக்கு பின்னர் வரும் eventகளை மட்டும் காட்டுவோம். |
01:02 | இம்மாதிரியான குறிப்பிட்ட contentகளின் பட்டியல் Reports அல்லது Query Results என மற்ற programகளில் அழைக்கப்படுகிறது. |
01:11 | இப்போது fieldகளை கொண்ட tableக்கு ஒரு view ஐ உருவாக்குவோம் . |
01:16 | நாம் ஏற்கனவே உருவாக்கிய website ஐ திறப்போம். |
01:21 | Shortcutsக்கு சென்று Views பின் Add new viewல் க்ளிக் செய்க. |
01:28 | இதை "Upcoming Events" என்போம். Content of typeஐ "All" ல் இருந்து "Events"க்கு மாற்றுவோம். |
01:37 | இதை நாம் அனைத்து Content type – Log entries, Files, Content revisions, Taxonomy terms, Users, Custom blocks போன்றவற்றிற்கும் செய்யலாம். |
01:50 | இப்போதைக்கு sorted by Newest first என இருக்கட்டும். |
01:55 | Create a pageல் checkmark ஐ இட்டு பின் Display formatல் "Table" of fieldsஐ தேர்ந்தெடுக்கவும் |
02:03 | Items to displayல் முன்னிருப்பு மதிப்பான 10 இருக்கட்டும் |
02:09 | Use a pager மற்றும் Create a menu linkல் checkmarkஐ இடுவோம் |
02:17 | Menuல் "Main navigation" ஐ தேர்ந்தெடுத்து பின் Link text ஐ "Upcoming Events" என்போம். |
02:28 | நம் menuகளை இன்னும் சரியாக ஒழுங்குப்படுத்தவில்லை. அதை பின்னர் செய்வோம். |
02:34 | Save and editஐ க்ளிக் செய்க. |
02:37 | நம் 5-step processஐ நினைவுகொள்வோம்.
Display ஆனது ஒரு "page". |
02:42 | FORMAT ஆனது ஒரு "table". |
02:45 | FIELDSல் "Title" உள்ளது. |
02:48 | FILTER CRITERIAல் நமக்கு "Upcoming events" மட்டும் வேண்டும், எனவே அதை மாற்ற வேண்டும். |
02:55 | SORT CRITERIA தவறாக உள்ளது. ஏனெனில் Event date வரிசையில் வேண்டும் Published date வரிசையில் அல்ல. |
03:03 | Saveஐ க்ளிக் செய்க. |
03:06 | மத்தியில் இங்கே PAGE SETTINGS உள்ளது. |
03:10 | இங்கு உள்ளவை Path, Menu, Access Permission. இப்போது landing pageக்கு அனைவருக்கும் அனுமதி உண்டு. |
03:20 | இந்த Add buttonகளை க்ளிக் செய்து HEADER அல்லது FOOTER ஐ சேர்க்கலாம். |
03:27 | Results ஏதும் இல்லை எனில் என்ன செய்வது என்பதையும் சேர்க்கலாம். |
03:31 | ஒரு pageல் எத்தனை item காட்ட வேண்டும் என்பதை இங்கு கொடுக்கலாம் |
03:36 | அடியில் ஒரு pager உள்ளதா அல்லது Viewன் அடியில் Read More link உள்ளதா எனவும் காணலாம் |
03:44 | ADVANCED tabல் மேலும் பல உள்ளன, அவற்றை இந்த டுடோரியலில் பார்க்கபோவதில்லை. |
03:50 | நாம் ஏற்கனவே Events மற்றும் User Groupsஐ இணைத்துள்ளோம் |
03:54 | எனவே நம் Eventsஐ sponsor செய்யும் User Groupsன் தகவல்களை எடுத்து Viewல் வைக்கலாம். |
04:03 | இதை நாம் உருவாக்கிய RELATIONSHIPS மற்றும் CONTEXTஐ பயன்படுத்தி செய்யலாம். |
04:10 | இப்போது நம் tableக்கு தேவைப்படும் fieldsஐ சேர்ப்போம். |
04:15 | Addஐ க்ளிக் செய்து கீழே வந்து Event Date fieldஐ காண்க. |
04:21 | Content type nameஐ பயன்படுத்தி என் fieldகளுக்கு கவனமாக பெயரிட்டுள்ளேன் |
04:27 | எனவே பின்னர் என்னால் அதை சுலபமாக Views கண்டுபிடிக்க முடியும். |
04:32 | Event Dateல் checkmarkஐ இட்டு Applyல் க்ளிக் செய்க. |
04:37 | இங்கு சில settingகளை மாற்றலாம். |
04:41 | இப்போதைக்கு Create a label மற்றும் Place a colon optionகளில் checkmarkஐ இடுகிறேன். |
04:47 | Date format ஆனது default அதாவது "medium date" ஆக இருக்கட்டும். |
04:53 | இப்போதைக்கு இவற்றைப் பற்றி கவலைவேண்டாம். |
04:57 | கடைசியாக Apply all displays பட்டனைக் க்ளிக் செய்க. |
05:02 | இப்போது 2 columnகள் TITLE மற்றும் EVENT DATE உள்ளன. |
05:08 | அடுத்த fieldஐ சேர்ப்போம். Addஐ க்ளிக் செய்து கீழே வந்து இம்முறை Event Logoஐ தேர்ந்தெடுப்போம். |
05:17 | Apply ல் க்ளிக் செய்க. |
05:21 | Create a label optionல் checkmarkஐ நீக்குவோம். |
05:25 | Image style ல் "Thumbnail"ஐ தேர்ந்தெடுப்போம். |
05:30 | பின் Link image to drop-downல் "Content"ஐ தேர்ந்தெடுப்போம் |
05:36 | பின்வரும் டுடோரியல்களில், இந்த layoutக்கு புது Image styleஐ உருவாக்குவோம். இப்போதைக்கு "Thumbnail"ஐ தேர்ந்தெடுப்போம். |
05:45 | Applyல் க்ளிக் செய்க. previewல் , Eventsக்கு devel மூலம் உருவாக்கப்பட்ட thumbnailsஐ காணலாம் |
05:55 | அடுத்த fieldஐ சேர்க்க Add ஐ க்ளிக் செய்க. இம்முறை கீழே வந்து ஒரேநேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட fieldகளை தேர்ந்தெடுப்போம். |
06:04 | Event Topics மற்றும் Event Websiteஐ தேர்ந்தெடுத்து Apply all displays பட்டனைக் க்ளிக் செய்க. |
06:13 | அடுத்த பக்கத்தில் settings எதையும் மாற்றாமல் Applyல் க்ளிக் செய்க. |
06:18 | ஒரே நேரத்தில் 2 fieldகளை Views ல் சேர்த்து அவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனி Settings screen வருவதைக் காணலாம். |
06:27 | மீண்டும் Apply all displays'ல் க்ளிக் செய்க |
06:32 | இப்போது EVENT TOPICS மற்றும் EVENT WEBSITE உள்ளன |
06:37 | அதில் title, date, topics மற்றும் website உள்ளன. Saveஐ க்ளிக் செய்க. |
06:45 | அடிக்கடி நம் வேலையை சேமிப்பது நல்ல பழக்கம். |
06:49 | அதை மீண்டும் காண்போம். நம் Display ஒரு Page. |
06:53 | FORMAT ஒரு Table. |
06:56 | FIELDS அனைத்தும் உள்ளன. |
06:59 | FILTER CRITERIA மற்றும் SORT CRITERIA தவறாக உள்ளன. |
07:04 | FILTER CRITERIAஐ சேர்க்க Add பட்டனை க்ளிக் செய்க. |
07:08 | கீழே வந்து Event Date ஐ தேர்ந்தெடுத்து Applyல் க்ளிக் செய்க |
07:17 | இந்த screen மிக முக்கியமானது. |
07:20 | Operator drop-downல், "Is greater than or equal to"ஐ தேர்ந்தெடுப்போம் |
07:26 | Value typeல், இன்றைய தேதியை இடக் கூடாது. |
07:32 | அப்படி செய்தால் தினமும் புது தேதியை இடவேண்டும். "An offset from the current time..." ஐ தேர்ந்தெடுக்கலாம் |
07:40 | Value fieldல் “now” என டைப் செய்வோம். |
07:45 | அதாவது இப்போதைய நேரத்திற்கு பின் வரும் event கள் மட்டும் காட்டப்படும். |
07:51 | இப்போதைய நேரம் என்பது இதை உருவாக்கும் நேரம் அல்ல, user இதைக் காணும் நேரம். |
07:59 | எனவே user எதிர்கால eventகளை மட்டும் பார்ப்பார். |
08:03 | Applyல் க்ளிக் செய்க. |
08:05 | devel மூலம் உருவாக்கப்பட்ட dummy contentகளில் எதிர்கால தேதி ஏதும் இல்லை என்பதைக் காணலாம். |
08:13 | எனவே View சரியாக வேலைசெய்கிறதா என காண நாமாக சில eventகளை தேர்ந்தெடுத்து அவற்றின் தேதிகளை எதிர்கால தேதிகளாக மாற்றுவோம். |
08:25 | Contentஐ க்ளிக் செய்து Events Type ஐ Filter செய்வோம். |
08:31 | ஒரு eventஐ தேர்ந்தெடுத்து Editல் க்ளிக் செய்க. எதிர்கால தேதி ஒன்றைத் தேர்ந்தெடுப்போம். |
08:39 | Saveஐ க்ளிக் செய்க. |
08:42 | டுடோரியலை இங்கு இடைநிறுத்தி 6 அல்லது 7 eventகளை இவ்வாறு update செய்யவும். |
08:49 | அதை முடித்தப்பின் டுடோரியலைத் தொடங்கவும். |
08:53 | Shortcutsக்கு சென்று Viewsல் க்ளிக் செய்து Upcoming Eventsக்கு சென்று Editல் க்ளிக் செய்க |
09:01 | நாம் எங்கு விட்டோமோ அந்த view பக்கத்திற்கு திரும்ப வருகிறோம். |
09:06 | கீழே வந்து previewஐ காண்க. |
09:10 | Event Date ஆனது greater than or equal to now என உள்ளவற்றை மட்டும் காண்கிறோம் |
09:17 | அடுத்து SORT CRITERIAஐ சோதிக்க வேண்டும் |
09:22 | முன்னிருப்பாக, content, date of authoringன் இறங்கு வரிசையில் sort செய்யப்படுகிறது. |
09:30 | Eventsக்கு, Event Date ஆனது ஏறுவரிசையில் இருக்கவேண்டும். |
09:37 | அதை மாற்ற, Authored on ஐ க்ளிக் செய்து Removeல் க்ளிக் செய்க |
09:44 | Addஐ க்ளிக் செய்து கீழே வந்து Event Dateஐ தேர்ந்தெடுக்கவும். |
09:51 | Applyல் க்ளிக் செய்க |
09:53 | இப்போது Orderல் Sort ascendingஐ தேர்ந்தெடுக்கவும். அது இன்றையிலிருந்து eventகளை sort செய்கிறது. |
10:03 | Applyல் க்ளிக் செய்க. |
10:05 | இப்போது Sort Criteriaஐ சரியாக அமைத்து Eventsஐ update செய்துள்ளோம். |
10:11 | இம்மாதிரியான ஒரு பட்டியலை இப்போது நாம் பெற வேண்டும். |
10:16 | இதில் எதிர்காலத்தில் வரும் அனைத்து eventகளையும் காணலாம். அவை EVENT DATE வரிசையில் உள்ளன. |
10:23 | Saveஐ க்ளிக் செய்ய மறக்காதீர். |
10:27 | இந்த குறிப்பிட்ட Viewல் நாம் மற்றொன்றையும் மாற்ற வேண்டும் |
10:32 | TITLE மற்றும் Logo columnகளை ஒன்றாக சேர்த்து பின் TITLE மற்றும் EVENT DATEஐ sort செய்யும்படி மாற்ற வேண்டும். |
10:41 | அதை செய்தால், TITLEஐ க்ளிக் செய்து அதன் feature மூலம் sort செய்யப்படும். |
10:48 | மேலே வந்து FORMAT > Tableக்கு பின் உள்ள Settingsஐ க்ளிக் செய்க. |
10:57 | Content Event Logoல் COLUMN drop-downல் "Title"ஐ தேர்ந்தெடுக்கவும். |
11:03 | மேலே SEPARATORல் ஒரு line breakஐ இடவும். |
11:08 | Title மற்றும் Event Date columnகளை SORTABLE மற்றும் Ascending order என மாற்றி Applyல் க்ளிக் செய்க. |
11:17 | எனவே இப்போது நம் Title மற்றும் logo ஒரே column ல் இருக்கும். TITLE மற்றும் EVENT DATE ஐ sort செய்யலாம். |
11:26 | Titleஐ Event Name என மாற்றுவோம் |
11:31 | "Title"ஐ க்ளிக் செய்து Labelல் "Event Name" என மாற்றுவோம்.
பின் Apply ல் க்ளிக் செய்க. |
11:40 | கீழே preview பகுதிக்கு வருவோம். Event Name, logo மற்றும் date அனைத்தும் சரியாக உள்ளன. |
11:48 | பின்வரும் டுடோரியல்களில், இந்த view இன்னும் நன்றாக தெரிய logoகளின் அளவை மாற்ற கற்போம். |
11:55 | Saveஐ க்ளிக் செய்து நம் Viewஐ சோதிப்போம் |
11:59 | Homepageக்கு செல்ல Back to siteஐ க்ளிக் செய்க |
12:03 | Upcoming Eventsஐ க்ளிக் செய்க |
12:06 | எதிர்காலத்தில் வரும் eventகள் மட்டும் இந்த table ல் சரியாக தோன்றுவதைக் காணலாம். |
12:13 | Event Name மற்றும் Event Date மூலம் sort செய்யலாம் என்பதையும் காண்க. |
12:20 | இத்துடன் நம் முதல் Table Viewஐ முடித்துள்ளோம் |
12:26 | சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் fieldகளுடன் tableகளை உருவாக்க கற்றோம். |
12:41 | இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது. |
12:51 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
12:58 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி பரிட்சையில் தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
13:07 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின்
NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம். |
13:19 | இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி. |