Xfig/C2/Feedback-control-diagram/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
0:00 Xfig ஐ பயன்படுத்தி feedback வரைபடம் உருவாக்குவது குறித்த spoken tutorial க்கு நல்வரவு!
0:07 block diagram உருவாக்குவது குறித்த tutorial லில் இப்போது பார்க்கும் வரைபடத்தை உருவாக்கினோம்.
0:14 அதை blocks tutorial என சொல்லுவோம்.
0:18 இதை தொடரும் முன் blocks tutorial ஐ கற்கவேண்டும்.
0:22 இந்த tutorial லில், இந்த பக்கத்தில் காட்டப்படும் வகை block diagram களை உருவாக்குவதை காணலாம்.
0:31 நான் Xfig -ன் version 3.2, patch level 5 -ஐப் பயன்படுத்துகிறேன்
0:37 blocks tutorial -ல் உருவாக்கப்பட்ட block.fig என்பதில் இருந்து ஆரம்பிக்கலாம்
0:43 Xfig -க்குச் செல்வோம்.
0:47 file ஐ முதலிலும், பின் open -ஐயும் தேர்வு செய்யலாம்..
0:52 உள்ளீட்டு பெட்டியில் “block” என உள்ளிட்டு open ஐ அழுத்தலாம். அல்லது“block.fig” மீது இரட்டை சொடுக்கு சொடுக்கலாம்.
1:04 file -இல் “save as” தேர்வை பயன்படுத்தி இதை feedback என மாற்றி சேமிக்கலாம்.
1:24 இப்போது feedback.fig என்ற file உள்ளது.
1:28 “grids” மீது சொடுக்கி grid களை பொருத்தலாம்.
1:34 வலது பக்கம் உள்ள scroll bar ஐ பயன்படுத்தி canvas ஐ மேலும் கீழும் நகர்த்தலாம்.
1:41 மேல் வலது பக்கம் ஒவ்வொரு சொடுக்கி பட்டனின் வேலையும் காட்டப்படுகிறது.
1:46 இந்த வேலை செயலைப்பொறுத்தது.
1:49 இதை புரிய வைக்க சொடுக்கியை செங்குத்து “scroll bar” க்கு கொண்டு செல்கிறேன்.
1:55 இடது button க்கு அடுத்துள்ள குறிப்பை பாருங்கள்.
1:59 அதைக்காட்ட என்னால் சொடுக்கியை நகர்த்த முடியாது. ஏனென்றால் cursor -ஐ scroll bar -ல் இருந்து நகர்த்தினால் buttons -ன் வேலை மாறிவிடும்.
2:08 “இடது button” canvas -ஐ மேலேயும், “வலது button” அதை கீழேயும் நகர்த்துகிறது
2:17 இடது வலது button களுக்கு பதிலாக, நடு button ஐ சொடுக்கிப்பிடித்து, canvas ஐ மேலும் கீழும் நகர்த்தலாம்.
2:31 இதே போல் மேலே உள்ள "scroll bar” -ஐப் பயன்படுத்தி canvas -ஐ இட வலமாக நகர்த்தலாம்.
2:44 இப்பொழுது பெட்டியை மையத்தில் வைக்க "நடு button” -ஐ சொடுக்கிப்பிடித்து canvas -ஐ மையத்திற்கு இழுக்கிறேன்.
2:57 சொடுக்கியை விட பெட்டி மையத்துக்கு நகர்ந்துவிட்டது.
3:03 இந்த block கிலிருந்து feedback வரைபடத்தை உருவாக்கலாம்.
3:08 இந்த பெட்டியை பிரதி எடுக்கலாம்.
3:13 பெட்டி மீது சொடுக்கி அதை தேர்வு செய்யலாம்.
3:16 சொடுக்கியை புது இடத்திற்கு நகர்த்தி சொடுக்கலாம்.
3:27 கொஞ்சம் உரையை உள்ளிடலாம்.
3:29 இடது பக்க பானலில் இருக்கும் T ஆல் காட்டப்படும் “Text box”, ஐ சொடுக்குவோம்.
3:37 உரையின் எழுதுரு அளவை தேர்வு செய்யலாம்.
3:43 சொடுக்கியை value பெட்டிக்கு எடுத்துச் சென்று 16 -ஐ உள்ளிடவும்.
3:51 “Set” ஐ சொடுக்குக.
3:53 Attributes panel -ல் "Text Just” button -ஐ சொடுக்கவும்
4:02 நடு ஒழுங்கை தேர்வு செய்வோம்.
4:05 முதல் பெட்டியின் நடுவில் சொடுக்கலாம்.
4:11 மன்னிக்க, நான் சரியான இடத்தைத் தேர்வு செய்யவில்லை
4:15 Cursor -ஐ வெளியில் கொண்டுவர வேறு இடத்தில் சொடுக்குகிறேன்.
4:19 அதன்பின் சரியான இடத்தில் சொடுக்குகிறேன்.
4:27 “Control” என உரையை உள்ளிட்டு சொடுக்குகிறேன்
4:35 அம்புக்குறிகளுடன் இன்னும் சில வரிகளை சேர்க்க வேண்டும்.
4:40 “polyline button” ஐ தேர்வு செய்யலாம்.
4:43 Attributes panel -ல் “Arrow Mode” button ஐ தேர்ந்தெடுத்து இரண்டாம் தேர்வை தேர்ந்தெடுக்கலாம்.
4:53 “Arrow Type” button ஐ சொடுக்கி ஒரு அம்புக்குறியை தேர்ந்தெடுக்கலாம்.
5:00 வரி ஆரம்பிக்க வேண்டிய இடத்தில் சொடுக்கலாம்.
5:08 வரி முடிய வேண்டிய இடத்துக்கு சொடுக்கியை கொண்டு போகலாம்.
5:14 அங்கே சொடுக்கியின் நடு button ஐ அழுத்தலாம்.
5:20 அம்பு முனையுடன் கோடு தயார்.
5:25 எனக்கு ஒரு வட்டம் இட வேண்டும்.
5:27 இடது பக்க பானலில் இடது பக்கம் இருக்கும் வட்டத்தை சொடுக்குவோம்.
5:33 முதல் பெட்டியின் இடது பக்கத்தில் அதை வைக்கலாம்.
5:37 சொடுக்கலாம். சொடுக்கியை இழுக்க, இழுக்க வட்டம் பெரியதாகிறது.
5:47 சரியான அளவு வந்ததும் சொடுக்கி button ஐ விட்டுவிடலாம்.
5:54 வட்டம் நான் நினைத்ததை விட பெரியதாகிவிட்டது.
5:57 மேலே உள்ள எடிட் பட்டனைக்கொண்டு இதை செயல் நீக்கலாம்.
6:02 இடது பக்க பானலில் உள்ள டெலீட் பட்டனை பயன்படுத்தி இந்த object ஐயே நீக்கலாம்.
6:10 அதை இப்பொழுது செய்யலாம்.
6:14 குறுக்கிழைகளுடன் மண்டை ஓடு போன்ற குறி தோன்றுகிறது.
6:18 எல்லா object களின் key pointகளும் காணப்படுகின்றன.
6:22 வட்டத்தை குறிக்கும் ஒரு key point ஐ தேர்ந்தெடுத்து சொடுக்கவும்.
6:32 ஒரு வேளை தவறான ஆப்ஜக்டை நீக்கிவிட்டாலும் பதட்டப்பட தேவையில்லை.
6:35 அதையும் செயல் நீக்கம் செய்யலாம். “edit” button ஐ சொடுக்கிப்பிடித்து, “Undo” க்கு சென்று அதைவிடவும்.
6:44 ஒரு வேளை object கள் மிகச்சமீபத்தில் இருந்தால் தேர்வு செய்வது கடினமாக இருக்கலாம்.
6:49 இதை “zoom” அம்சத்தால் கையாளலாம்.
6:55 மேல் இட பக்க “View” button ஐ சொடுக்கிப்பிடித்து zoom தேர்வுகள் ஒன்றில் விடவும்.
7:00 “Zoom to fit the canvas” ல் சொடுக்கியை விடுகிறேன்.
7:04 இப்போது object களை எளிதில் பார்க்க்க முடிகிறது.
7:08 வட்டத்தை இப்போது நீக்குகிறேன்.
7:12 zoom ஐ நீக்கலாம்.
7:20 Scroll button களை பயன்படுத்தி வரைபடத்தை நடுவில் வைக்கலாம்.
7:35 நான் தவறுதலாக வேறு எதையாவது நீக்கக்கூடும் என்பதால் இங்குள்ள "delete” symbol -ஐ வைத்துக்கொள்ள விரும்பவில்லை
7:41 வேறு button -ஐத் தேர்வு செய்து இதை மாற்றலாம்.
7:44 இடப்பக்க வட்டத்தை தேர்வு செய்கிறேன்
7:47 வட்டத்தை மீண்டும் வரைகிறேன்.
8:00 இந்த கோட்டில் இருந்து மற்றொரு கோட்டை வரைய விரும்புகிறேன்.
8:04 அதற்கு அந்த கோட்டின் மீது ஒரு புள்ளி வைக்க வேண்டும்.
8:07 இடப்பக்க panel -ல் உள்ள "library” -ஐ சொடுக்கலாம்.
8:11 library ஒரு புத்தக அடுக்கால் காட்டப்படுகிறது.
8:15 ஒரு உரையாடல் பெட்டி திறக்கிறது.
8:17 library க்கு அடுத்து “None Loaded” என்கிறது.
8:20 அதை சொடுக்கி பிடிக்கலாம்..
8:22 கிடைக்கக்கூடிய library களின் பட்டியல் தோன்றுகிறது.
8:25 “Logic library” க் கு சொடுக்கியை நகர்த்தி விட்டு விடுவோம்.
8:31 “Small dot” ஐ இரட்டை சொடுக்கு செய்து தேர்வு செய்யவும்.
8:36 உரையாடல் பெட்டி மூடப்படுகிறது.
8:38 குறுக்கிழைகளுடன் தேர்ந்தெடுத்த சின்ன புள்ளி தெரிகிறது.
8:42 கோட்டின் மீது சொடுக்குவதால் புள்ளியை வைக்கவும்.
8:51 குறுக்கிழைகளுடன் தேர்ர்ந்தெடுத்த சின்ன புள்ளி மீண்டும் தெரிகிறது. அதாவது வேறெங்கும் இந்த புள்ளியை வைக்க வேண்டுமானால் அது தயாராக உள்ளது.
8:57 நாம் அதை வேறெங்கும் வைக்க விரும்பவில்லை.
9:00 சொடுக்கியின் வலது button ஐ சொடுக்கி அதை நீக்கலாம்.
9:05 வலது button “undo” செயலை செய்கிறது
9:08 புள்ளி தேர்வு நீக்கப்பட்டது.
9:10 இந்த புள்ளியில் இருந்து வட்டத்துக்கு ஒரு கோடு வரையலாம்.
9:15 polyline -ஐத் தேர்வு செய்யலாம்.
9:18 ஏற்கனவே தேர்வு செய்த "arrow mode” மற்றும் "arrow type” நினைவில் இருக்கிறது.
9:24 குறிப்பிட்ட ஒரு அமர்வில், Xfig... parameter மதிப்புகளை நினைவில் கொள்கிறது.
9:28 புள்ளியில் சொடுக்கலாம்.
9:34 சொடுக்கியை கீழே நகர்த்தி சொடுக்கலாம்.
9:41 சொடுக்கியை இடது பக்கமாக வட்டத்தின் கீழ் வரை கொண்டு சென்று திருப்பி சொடுக்கலாம்.
9:47 வட்டத்துக்குள் சொடுக்கியை நகர்த்தி நடு button ஆல் சொடுக்கலாம்.
9:54 வட்டத்தின் இடது பக்கம், பிரதி எடுப்பதன் மூலம் இன்னொரு கோட்டை வரையலாம்.
10:08 இந்த படத்தை Xfig இன் மேல் இடது மூலையிலுள்ள “file button” ஐ பயன்படுத் தி சேவ் ஐ தேர்ந்தெடுத்து சேமிக்கலாம்.
10:19 இப்போது file ஐ எக்ஸ்போர்ட் செய்யலாம்.
10:22 “file” button ஐ மீண்டும் சொடுக்கி “export” ஐ தேர்ந்தெடுக்கலாம்.
10:30 முதலில் “language” ஐயும் பின் “PDF” ஐயும் தேர்ந்தெடுக்கலாம்.
10:36 “feedback.pdf” என்ற file கிடைக்கிறது.
10:43 இதை open feedback.pdf என்ற கட்டளையால் திறக்கலாம்.
10:56 இப்போது நமக்கு தேவையான block diagram கிடைத்துவிட்டது.
11:00 நம் நோக்கத்தை முடித்து விட்டோம்.
11:04 இப்பொழுது உங்களுக்கு ஒரு வேலை.
11:08 block களை வேறு object களால் மாற்றவும்.
11:13 புரட்டுதல், சுழற்றுதல் போன்ற செயல்களை முயற்சி செய்து பாருங்கள்..
11:19 feedback.fig fileஐ ஒரு திருத்தியில் திறந்து பார்த்து வெவ்வேறு கூறுகளை அடையாளம் காணுங்கள்.
11:25 library ஐ பயன்படுத்தி வெவ்வேறு block diagram களை வரைந்து பாருங்கள்.
11:32 Spoken Tutorial என்பது இந்திய அரசின், MHRD ன் NMEICT -மூலம் ஆதரிக்கப்படும் Talk to a Teacher Project -ன் ஒரு பகுதி ஆகும்
11:44 இது பற்றி மேலும் அறிய: http://spoken-tutorial.org/NMEICT-Intro -ஐக் காணவும்
11:53 உங்களின் பங்களிப்பையும் கருத்துகளையும் வரவேற்கிறோம்.
11:57 மூல பாடம் கண்ணன் மௌத்கல்யா. நன்றி.

Contributors and Content Editors

Chandrika, Priyacst