Spoken-Tutorial-Technology/C2/Dubbing-a-spoken-tutorial-using-Movie-Maker/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
00:04 | வணக்கம் IIT Bombay, CDEEP சார்பாக இந்த Spoken Tutorialக்கு உங்களை வரவேற்கிறோம். |
00:11 | படிப்படியான செயல்பாடுகள் மூலம் ஒரு spoken tutorial அல்லது movie clip ஐ ஒரு மொழியிலிருந்து மற்றொன்றுக்கு எவ்வாறு dub செய்வது என்பதை இந்த tutorial விளக்குகிறது. |
00:20 | உங்களுக்கு தேவையானது உங்கள் கணினியுடன் இணைக்கக்கூடிய audio input உடன் ஒரு headset அல்லது stand-alone microphone மற்றும் speakers. |
00:30 | Windows Movie Maker, Microsoft Windows ன் ஒரு உள்ளடக்க பகுதி, – Me, XP அல்லது Vista போன்ற அனைத்து சமீபத்திய Windows பதிப்புகளுக்கும் கிடைக்கும் ஒரு editing மென்பொருள். |
00:43 | உங்கள் கணினியில் இது இல்லையெனில், www.microsoft.com/downloads தளத்திலிருந்து இதை இலவசமாக தரவிறக்கலாம். |
00:56 | Windows Movie Maker ஐ இயக்க அதன் மீது double click செய்க. திரையில் உரு காலி Movie project ஐ இது திறக்கும். இடப்பக்கம், Movie Tasks Panel ஐ காணலாம். |
01:11 | இந்த panelல் பல தேர்வுகளைக் காணலாம். முதலாவது Capture Video. இந்த தேர்வின் கீழ், Import Video என்ற துணைத்தேர்வைக் காணலாம். அதன் மீது சொடுக்குக. |
01:24 | இது Import Video dialog box ஐ திறக்கும். file-to-be-dubbed.wmv இருக்கும் இடத்திற்கு செல்க. file ஐ தேர்ந்தெடுத்து Import மீது சொடுக்குக. |
01:38 | video... Windows Movie Maker னுள் import செய்யப்படுகிறது. இப்போது video... Collections Panel ல் காட்டப்படும். video பெரியது எனில், பின் Windows Movie Maker தானாகவே video ஐ clipகளாக பிரிக்கும். |
01:54 | CTRL+A ஐ அழுத்தி அனைத்தையும் தேர்ந்தெடுக்கவும். இப்போது, clips மீது வலது சொடுக்கி ADD TO TIMELINE option ஐ தேர்க. video clips இங்கே Timeline க்கு சேர்க்கப்படும். |
02:07 | Videoக்கு அடுத்த கூட்டல் குறியை சொடுக்கவும். Audio Timeline ஐ இப்போது காணலாம். clip ஐ அதன் மீது சொடுக்கி தேர்ந்தெடுக்கவும். இப்போது வலது சொடுக்கி SELECT ALL option ஐ தேர்க. |
02:22 | அனைத்து audio clipகளும் தேர்ந்தெடுக்கப்படும். இப்போது Main Menuக்கு செல்க. Clip ஐ தேர்ந்து, Audio பின் Mute. இப்போது video... audio இல்லாமல் இருக்கும். Videoக்கு அடுத்த கழித்தல் குறியை சொடுக்குக. |
02:41 | timelineன் மீது நடப்பு இடத்தைக் காட்டும் frame head ஐ கவனிக்கவும். முன்னிருப்பாக, frame head... timelineன் ஆரம்பத்தில் இருக்கிறது. |
02:51 | அடுத்து Main Menuல் Tools ஐ சொடுக்கி Narrate Timeline துணைத்தேர்வை தேர்க. இது Narrate Timeline screenக்கு அழைத்துசெல்லும். முதலில் narrationக்கு Input Level ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். |
03:10 | input levelஐ தேர்ந்தெடுக்கும்போது, மேலிருந்து இரண்டாவது வரியில் குறிக்கப்பட்டிருக்கும் meter ன் சிவப்பு நிற பகுதிக்குள் நுழையாமல் மேல்நோக்கி ஒரு level ஐ தேர்ந்தெடுக்கவும். |
03:23 | capturing level மிகவும் கீழே அமைக்கப்பட்டால், பதிவாகும் audio கேட்கக்கூடியதாக இருக்காது. மாறாக, capturing level மிகவும் மேலே அமைக்கப்பட்டால், பதிவாகும் audio மிகவும் சத்தமாக சிதைந்தும் இருக்கும். |
03:38 | audio narration ஐ உங்கள் கணினிக்கு capturing செய்ய இப்போது Start Narration button ஐ சொடுக்குக. microphone ல் சாதாரணமாக பேசவும். நான் செய்துகாட்டுகிறேன். |
03:51 | input level ஐ இங்கு அமைக்கிறேன். frame-head ஐ இந்த நிலைக்கு நகர்த்துகிறேன். ஏனெனில் இங்கிருந்து தான் original video ல் narration ஆரம்பிக்கிறது. இப்போது Start Narration ஐ சொடுக்குகிறேன். |
04:06 | “Doston, CDEEP, IIT Bombay ki taraf se, main iss tutorial mein aap ka swagat karti hoon. Yeh tutorial CamStudio ki abhyas karne mein aap ki madad karegi.” |
04:18 | Stop Narration button ஐ சொடுக்கி narration capturing ஐ நிறுத்துகிறேன். எங்குவேண்டுமானால் narration ஐ நிறுத்தலாம் என்பதை கவனிக்கவும். |
04:28 | Movie Maker உங்கள் கணினியில் narration ஐ ஒரு audio file ஆக சேமிக்க சொல்லி கேட்கும். ஒரு dialog box திறக்கப்படும். அதில் பதிவு செய்யப்பட்ட audio clipன் file பெயர் மற்றும் அதை சேமிக்க விரும்பும் path ஐ குறிப்பிட சொல்லி கேட்கும். |
04:44 | இந்த folder ஐ தேர்ந்தெடுத்து இந்த பெயரை கொடுக்கிறேன். Save ல் சொடுக்குகிறேன். |
04:53 | audio file ஐ சேமித்த பின், Audio timeline ல் பதிவு செய்யப்பட்ட audio தோன்றுவதைக் காணலாம். இந்த audio clip ஐ அதன் மீது சொடுக்கி இழுப்பதன் மூலம் timeline ல் எங்கு வேண்டுமானாலும் நகர்த்தலாம். |
05:09 | முழு வேலையையும் ஒரு project ஆக சேமிப்பது பற்றி கூற இது நல்ல நேரம். project ஐ சேமிப்பது நீங்கள் நிறுத்திய இடத்திலிருந்து dubbing ஐ தொடர உங்களை அனுமதிக்கும். CTRL + S ஐ அழுத்துக. |
05:21 | முதல் முறை இதை செய்யும் போது, file பெயரைக் கேட்கும். இந்த project ஐ இந்த file பெயரில் சேமிக்கிறேன் - Dubbed_into_Hindi. |
05:32 | Save ல் சொடுக்குக. இதன்பிறகு CTRL + S இந்த project file னுள் தானாக சேமிக்கும். |
05:40 | project file னுள் சேமித்த பின் Movie Maker லிருந்து வெளியேறலாம். பின் dubbing ஐ எப்போது வேண்டுமானாலும் மீள்துவக்கலாம். |
05:48 | File பின் Open Project ல் சொடுக்கி திறக்க விரும்பும் project ஐ தேர்வு செய்யவும். |
05:55 | எங்கிருந்து நீங்கள் தொடர விரும்புகிறீர்களோ அங்கு frame head இருக்கிறதா என உறுதி செய்து கொள்க. முன்புபோல மீண்டும் dubbing செய்ய ஆரம்பிக்கவும். |
06:03 | dubbing ன் போது அடிக்கடி project ஐ சேமிக்க மறக்காதீர். |
06:08 | முழு spoken tutorial க்கும் narration முடித்த பின், ஒரு movie ஐ உருவாக்க வேண்டும். அதை செய்ய, Movie Tasks Panelக்கு செல்க. |
06:18 | Finish Movie செல்க. முதல் தேர்வு Save to my computer, அதன் மீது சொடுக்குக. இது Save Movie Wizard dialog box ஐ திறக்கும். |
06:29 | உங்கள் dub செய்த movie க்கு file பெயர் மற்றும் path ஐ குறிப்பிடுக. file பெயரை குறிப்பிட்டு இந்த path ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
06:36 | “Hindi_Dub_file.” Next button ஐ சொடுக்கவும். இங்கே output file தரத்தை தேர்ந்தெடுக்கலாம். |
06:46 | இதை விளக்குகிறேன். “Best quality for playback on my computer” ஐ தேர்ந்தெடுப்பது உயர்தர video ஐ தரும். ஆனால் file அளவு அதிகமாக இருக்கும். |
06:55 | “Best fit to file size” ஐ தேர்ந்தெடுப்பது குறைந்த தர video ஐ தரும். ஆனால் file அளவு குறையும். |
07:04 | “Other settings” ஐ தேர்ந்தெடுப்பது... முடிவு video ஐ சேமிக்கக்கூடிய... இருக்கும் அனைத்து சேமிக்கும் தேர்வையும் காட்டும். |
07:12 | எனவே video ஐ எவ்வாறு நீங்கள் பார்க்கப்போகிறீர்கள் அல்லது எங்கு upload செய்ய போகிறீர்கள் என்பதை பொருத்து அதற்கான தரத் தேர்வை தேர்ந்தெடுக்க வேண்டும். |
07:20 | Best fit for file size... 30MB தேர்ந்தெடுக்கப்போகிறேன். view dimensions 640*480 pixels ஆகவும் frame rate 30fps ஆகவும் இருக்கும். |
07:35 | dub செய்யப்பட வேண்டிய file இந்த dimension இல் இருப்பதாலும் dub செய்யப்பட்ட movie அதே dimensions ல் இருக்க நான் விரும்புவதாலும், இந்த தேர்வை தேர்ந்தெடுக்கிறேன். |
07:45 | இது தேவையில்லை எனில், 30MB ஐ விட குறைவான எண்ணை தேர்ந்தெடுக்கலாம். உதாரணமாக - 25 MB. view dimensions சிறியதானதை கவனிக்கவும். |
07:58 | திரும்ப சென்று இதை 30 MB என மாற்றி NEXT ல் சொடுக்குக. இந்த movie உங்கள் கணினியில் சேமிக்கப்படும். |
08:16 | Finish ல் சொடுக்கி Windows Movie Maker ஐ மூடவும். |
08:24 | எனவே இந்த வழிமுறைகளை பின்பற்றி, சில எளிய படிநிலைகளில் எந்த ஒரு spoken tutorial அல்லது movie clip ன் dub செய்யப்பட்ட பதிப்புகளை உருவாக்க முடியும். |
08:36 | இந்த தகவல் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன். |
08:39 | இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombayலிருந்து பிரியா. நன்றி |