Spoken-Tutorial-Technology/C2/Creation-of-a-spoken-tutorial-using-recordMyDesktop/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
0:01 | “recordMyDesktop” ஐ பயன்படுத்துவது குறித்த tutorial க்கு நல்வரவு. |
0:05 | recordMyDesktop இலவச கட்டற்ற ஒரு screencasting மென்பொருள். இது Ubuntu Linux இயங்குதளத்தில் வேலை செய்கிறது. |
0:13 | Screencasting மென்பொருள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு, இந்த தளத்தில் உள்ள "How To Use Camstudio" spoken tutorial ஐ காணவும். |
0:21 | gtk-recordMyDesktop பதிப்பு 0.3.8 ஐ என் கணினியில் Synaptic Package Manager மூலம் ஏற்கனவே தரவிறக்கி நிறுவியுள்ளேன். |
0:33 | Ubuntu Linux ல் மென்பொருட்களை நிறுவுதல் குறித்த மேலதிக தகல்களுக்கு, இந்த தளத்தில் உள்ள Ubuntu Linux spoken tutorial களை காணவும். |
0:43 | recordMyDesktop ஐ வெற்றிகரமாக நிறுவியபின், திரையின் மேலே உள்ள Ubuntu main menu க்கு செல்க. |
0:51 | Applications ல் சொடுக்கி Sound&Video ஐ தேர்க. |
0:55 | இது context menu ஐ திறக்கும். அதில் gtk-recordMyDesktop ஐ காணலாம். அதில் சொடுக்குக. |
01:02 | இது gtk-recordMyDesktop application window ஐ திறக்கும். |
01:07 | main application window பதிவுசெய்தலின் சில அடிப்படை அளவுருக்களை வரையறுக்கும் வேலைக்கு உதவுகிறது. முக்கியமாக tray icon உங்கள் பதிவை கட்டுப்படுத்த உதவுகிறது. |
01:19 | உங்கள் கணினியில் tray icon புதியாக வந்துள்ளதை கவனிக்கவும்- சிவப்பு வட்டம், record button ஐ குறிக்கிறது. |
01:27 | system tray icon 3 நிலைகளைக் கொண்டது: பதிவு செய்தல், நிறுத்துதல், இடைநிறுத்துதல் |
01:34 | recordMyDesktop துவக்கப்படும்போது, icon... பதிவு குறியாகும், எ.கா. சிவப்பு வட்டம். |
01:41 | பதிவை ஆரம்பிக்கும்போது, அந்த icon சதுரமாக மாறும். அது நிறுத்தல் குறி. |
01:46 | இங்கே 2 சதுரங்கள் இருப்பதைக் காணவும். |
01:48 | ஏனெனில் இந்த tutorial ஐ பதிவு செய்ய நான் recordMyDesktop ஐ பயன்படுத்துகிறேன். |
01:51 | பதிவை இடைநிறுத்த, அந்த சதுரத்தின் மீது வலது சொடுக்க வேண்டும். icon... இடைநிறுத்தல் குறியாக மாறும் - இரு இணை செங்குத்து செவ்வகங்கள். |
02:03 | பதிவை மீண்டும் ஆரம்பிக்க, இடைநிறுத்தல் குறியை மீண்டும் சொடுக்க வேண்டும். |
02:07 | பதிவை நிறுத்த, சதுரத்தை சொடுக்க வேண்டும். |
02:12 | அளவுருக்களை அமைக்கும் முன், ஒரு முக்கியமான தகவலைத் தருகிறேன். |
02:18 | சிவப்பு வட்ட system tray icon ஐ வலது சொடுக்குக. இங்கே main application window ஐ மறைக்க அல்லது காட்ட தேர்வுகள் உள்ளன. |
02:26 | பதிவு செய்ய ஆரம்பிக்கும் போது main window முன்னிருப்பாக தானாக மறையும். |
02:32 | இந்த தேர்வை தேர்ந்தெடுப்பதன் மூலம் main application window ஐ காட்டவும் தேரந்தெடுக்கலாம். |
02:37 | “Select Area on Screen” பதிவாக்க விரும்பும் பகுதியை வரையறுக்கும் வழியாகும். |
02:43 | இந்த தேர்வை தேர்ந்தெடுக்கையில் cursor ஒரு crosspen ஆக மாறும். அதைகொண்டு திரையில் தேவையான பகுதியை வரையலாம். |
02:51 | “Quit” தேர்வு recordMyDesktop ஐ மூடுகிறது, main window ல் உள்ள button போன்றே. |
02:57 | application windowக்கு திரும்ப வருவோம், இடப்பக்கம் preview window உடன் உள்ள display panel ஐ காண்க. |
03:06 | உங்கள் desktopஐ சிறிய அளவில் இது சித்தரிக்கிறது, இதை பதிவு செய்யும் பகுதியை வரையறுக்க பயன்படுத்தலாம். |
03:13 | இந்த panel ன் வலப்பக்கம் Video தரம் மற்றும் Sound தரத்தை அதிகரிக்க அல்லது குறைக்க தேர்வுகள் இருப்பதைக் காணலாம். |
03:22 | முன்னிருப்பாக, Video மற்றும் Sound quality இரண்டும் 100 க்கு அமைக்கப்பட்டிருக்கும். இந்த அமைப்பு சிறந்த playback video தரம் மற்றும் audio தரத்தை தருகிறது. |
03:32 | வர்த்த ரீதியாக, எனினும், file அளவு பெரியது. file அளவை அதிகரிப்பதால் Spoken Tutorialகளை உருவாக்குவதற்கு 100% Video தரம் தேவையில்லை. |
03:44 | இந்த அளவுருக்களுடன் சற்று சோதனை செய்வது போதுமான video மற்றும் sound தரத்துடன் சரியான file அளவை பெறவைக்கும். |
03:53 | video quality ஐ 50 க்கும் sound quality ஐ 100க்கும் அமைக்கிறேன். |
4:00 | இது ஏனெனில் முடிவு file ன் சிறு பகுதியை மட்டும் audio stream அளவு ஆக்கிரமிக்கும். |
4:08 | முன்னிருப்பாக, recordMyDesktop... audioஐ பதிவுசெய்யாது. audio capture ஐ செயலாக்க, Sound Qualityன் இடது பெட்டியை குறியிடவேண்டும். |
4:20 | ADVANCED button ஐ காண்க. அதை சொடுக்குக. இங்கு காட்டப்படுவது போல மற்றொரு dialog box ஐ இது திறக்கும். |
4:28 | recordMyDesktopன் நடவடிக்கையை நன்கு தனிப்பயனாக்க ADVANCED window ஒருமுறையாவது காண்க. |
04:35 | இதை மூடும் போது இந்த window ன் அனைத்து தேர்வுகளும் சேமிக்கப்பட்டு பொருத்தப்படுகிறது. இந்த window ன் main menu ல் 4 தேர்வுகள் உள்ளன. |
04:43 | முதல் tab Files. இங்கே இரு தேர்வுகள் உள்ளன. |
04:48 | உங்கள் பதிவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அதே இடத்தில் அதே file பெயரில் ஏற்கனவே இருக்கும் file ன் மேலெழுத ஒரு தேர்வு உள்ளது. |
04:57 | முன்னிருப்பாக இந்த தேர்வு தேர்வில் இருக்காது. எனவே ஏற்கனவே இருக்கும் fileகளை தொடவே மாட்டோம். பதிலாக அதன் file பெயரின் பின் ஒரு எண் கொண்டு புதியது சேமிக்கப்படுகிறது. |
05:10 | எனவே, பதிவை recording.ogv என சேமிக்க தேர்ந்தெடுக்கிறோம் எனில், home directory ல் ஏற்கனவே அந்த பெயரில் ஒரு file உள்ளது, |
05:18 | புதியது recording-1.ogv என சேமிக்கப்படுகிறது. recording-1.ogv ஏற்கனவே இருந்தால், பின் புது file recording-2.ogv என சேமிக்கப்படும். இதுபோல மற்றவையும். |
05:31 | Advanced tab ஐ மீண்டும் திறக்கிறேன். “Overwrite Existing Files” தேர்வு குறியிடப்பட்டிருந்தால், ஏற்கனவே இருக்கும் fileகள் அனுமதி கேட்காமல் நீக்கப்படும். |
05:41 | எனவே, இதனுடன் கவனமாக இருக்க வேண்டும். “Working Directory” தேர்வானது பதிவு செய்யும் போது தற்காலிக fileகள் சேமிக்கப்படும் இடமாகும். |
05:50 | நீங்கள் encoding ஐ செயல்பாடுத்தாமல் பயணிக்கும் போது மட்டும் இது உபயோகிப்படுகிறது. |
05:55 | அடுத்த tab Performance. இங்கே 5 தேர்வுகள் உள்ளன. “Frames per second” ஐ அமைப்பதை உறுதிசெய்க. |
06:02 | இந்த parameterக்கு 2 frames per second நல்ல setting. animation videoகளுக்கு, 15 முதல் 20 frames per second வரை ஏதேனும் அமைக்கவும். |
06:12 | “Encoding on the Fly” தேர்வு recordMyDesktop ஐ capture ன் போது encode செய்ய தூண்டுகிறது. |
06:19 | முன்னிருப்பாக, இது செயலில் இல்லை. அதிக fps தேவையில்லாத போது, அல்லது சிறு பகுதியை capture செய்யும்போது இது பயனுள்ளதாகும். |
06:28 | ஆனால் மிக சிறிய பகுதி அல்லாதவற்றின் செம்மையான பதிவு தேவையெனில் இந்த தேர்வை தேர்வு நீக்க வேண்டும். |
06:34 | முன் சொன்னதுபோல, இந்த தேர்வை பயன்படுத்தும்போது, audio மற்றும் video quality இரண்டும் 100%க்கு அமைக்கப்பட வேண்டும். |
06:42 | “Zero Compression” tab... cacheன் compression ஐ கட்டுப்படுத்துகிறது . “Quick Subsampling”... colorspace மாற்றத்தின் தரத்தை கவனிக்கிறது. அவற்றை அவ்வாறே விட்டுவிடுவோம். |
06:55 | “Full shots At Every Frame” முழு captures ஐ செயலாக்குகிறது. முன்னிருப்பாக, இது செயலில் இல்லை. |
07:02 | மூன்றாவது tab Sound. “Channels”தேர்வு ... முடிவு audio stream ல் channelகளின் எண்ணிக்கையை அமைக்கிறது. |
07:10 | 1 (mono) அல்லது 2(stereo) ஆக இருக்கலாம். microphone லிருந்து பதிவு செய்யும்போது, ஒன்றைவிட அதிகமான channelகளை தேர்ந்தெடுப்பது முற்றிலும் தேவையில்லாதது. இது உங்கள் output file ன் அளவை மட்டுமே அதிகரிக்கும். |
07:24 | “Frequency” அமைப்பு, அநேகமாய் பதிவின் audio தரத்தை வரையறுக்கும் காரணி ஆகும். |
07:30 | முன்னிருப்பு 22050, இது பேச்சுக்கானதை விட அதிகம். ஆனால் இசையை பதிவு செய்கிறோம் எனில், 44100 தேவைப்படலாம். |
07:40 | “Device” “plughw:0,0” க்கு அமைக்கப்பட வேண்டும். இதனால் channels மற்றும் frequency மதிப்புகளின் துல்லியமான கட்டுப்பாட்டை பெறலாம். |
07:54 | அதன்பின் தான் எந்த தடைகள் அல்லது தாவல்கள் இல்லாது audio சரியாக இயங்கும். சிறிய எழுத்துகளில் “default” என எழுதுவதும் வேலை செய்கிறது. |
08:05 | பதிவு செய்ய external jack ஐ பயன்படுத்தினால், இந்த box ஐ குறியிடவும். |
08:11 | channels, frequency மற்றும் device fieldகள் செயல் நீக்கப்படும். இந்த settingகள் இப்போது Jack server ஆல் வழங்கப்படும். |
08:19 | Jack captureஐ செயல்படுத்தும் முன், Jack server இயங்குகிறதா என உறுதி செய்ய வேண்டும். |
08:25 | கடைசி tab Miscellaneous. இங்கு அடிக்கடி பயன்படுத்தப்படாத பல தேர்வுகள் உள்ளன. |
08:34 | இங்கே ஒரு முக்கியமான தேர்வு Follow Mouse . இது குறியிடப்படும்போது capture பகுதி... cursor திரையில் எங்கு நகர்ந்தாலும் அதை பின்தொடரும். |
08:43 | குறி நீக்கப்படும்போது, cursor இயங்கும் நிலையிலும் capture பகுதி நிலையாக இருக்கும். இதை விரைவில் செய்து காட்டுகிறேன். |
08:53 | outline capture area on screenஐயும் குறியிடுகிறேன். |
08:58 | இப்போது இந்த window ஐ மூடுவோம். நினைவுகொள்க, இந்த window ஐ மூடியவுடன் அனைத்து settings உம் சேமிக்கப்படும். |
09:06 | display panel ன் preview window ல் நம் உதாரண பதிவிற்கு capture பகுதியை வரையலாம் |
09:14 | இடது mouse button ஐ அழுத்தி இழுக்கவும். button ஐ விடுவிக்கவும். |
09:20 | preview window ல் சிறிய செவ்வகத்தையும் உங்கள் திரையில் பெரிய செவ்வகத்தையும் காணலாம். இதுதான் உண்மையான capture பகுதி . |
09:30 | இந்த செவ்வகத்தினுள் வரும் அனைத்து செயல்பாடுகளும் சோதனை பதிவில் பதிவுசெய்யப்படும். இப்போது, சோதனை பதிவு செய்கிறேன். |
09:39 | record icon ஐ சொடுக்குகிறேன். Hello and welcome to the demo recording using recordMyDesktop. |
09:48 | This is a demo recording to demonstrate how easy it is to create a spoken tutorial. |
09:54 | Click on Applications – Choose office - wordprocessor. Let me type DEMO here. பதிவை நிறுத்த சதுர icon ஐ சொடுக்குக. |
10:16 | recordMyDesktop இப்போது encode செய்து ஒரு movie ஐ 'ogv' format ல் உருவாக்குகிறது. |
10:24 | open office writer ஐ மூடுகிறேன். encoding முடிந்து movie இப்போது தயாராக உள்ளது. அதை சோதிக்கலாம். |
10:31 | output 'ogv' file ஐ Home Folder ல் காணலாம். home folder மீது சொடுக்குக, இங்கே உள்ளது, இது நம் சோதனை பதிவு. இதை இயக்குகிறேன். |
11:14 | எனவே, உங்கள் கணினியில் recordMyDesktop ஐ பயன்படுத்த இந்த tutorial லில் கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன் |
11:21 | audio-video tutorialகள் மற்றும் online visual learning moduleகளை நீங்களே உருவாக்க இந்த இலவச கட்டற்ற மென்பொருட்களை நிறுவி பயன்படுத்துக |
11:30 | Spoken tutorial செயல்பாடு ‘Talk to a Teacher’ திட்டத்தின் ஒரு முயற்சி ஆகும். இது IIT Bombay ஆல் உருவாக்கப்பட்டு http://spoken-tutorial.org மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறத. |
11:42 | இந்திய அரசாங்கத்தின் ICT, MHRD மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே இத்திட்டத்திற்கு நிதி உதவி கிடைக்கிறது. |
11:51 | மேலும் விவரங்களுக்கு இங்கு செல்லவும் http://spoken-tutorial.org/NMEICT-Intro. |
12:01 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி |