Ruby/C3/Object-Oriented-Programming-Methods/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Rubyல் Object Oriented Programming – Methods குறித்த spoken tutorial க்கு நல்வரவு.
00:07 இந்த tutorial ல் நாம் பின்வருவனவற்றை பயன்படுத்த கற்போம், instance methods, class methods, accessor methods
00:15 இங்கு நாம் பயன்படுத்துவது : Ubuntu version 12.04
00:19 Ruby 1.9.3
00:22 இந்த tutorial ஐப் பின்தொடர , உங்களிடம் Internet வசதி அவசியம் இருக்கவேண்டும்.
00:27 உங்களுக்கு Linux commandகள், Terminal மற்றும் Text-editor பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.
00:31 தெரியவில்லையெனில், அதுசார்ந்த tutorial களுக்கு , எங்கள் இணையதளத்தைப் பார்க்கவும்.
00:36 தொடங்குவதற்குமுன், நாம் முன்பே ttt எனும் directory ஐ உருவாக்கினோம் என்பதை நினைவுகூரவும்.
00:41 அந்த directory க்குச் செல்வோம்.
00:44 பிறகுruby-tutorial க்குச் செல்வோம்.
00:47 oop-methodsஎனும் பெயரில் ஒரு directoryஐ உருவாக்கி, அதனுள் செல்வோம்
00:54 Instance methods என்றால் என்ன ?
00:56 Instance methods என்பவை ஒரு class ன் அனைத்து instance களுக்கும் உள்ள methods ஆகும்.
01:03 ஒரு classன்னுடைய objectsஅல்லது instances உருவாக்குவது எப்படி என முன்பே படித்திருக்கிறோம்.
01:09 அடிப்படை Ruby tutorials ல் காட்டியுள்ளபடி gedit ல் ஒரு புதிய file ஐ உருவாக்கவும் .
01:14 அதற்கு instance_methods.rb எனப் பெயரிடவும்.
01:19 என்னிடம் instance methods ஐ செயல்படுத்தக்கூடிய ஒரு செயல்உதாரணம் உள்ளது.
01:24 நீங்கள் இந்த tutorial ஐ இடைநிறுத்திவிட்டு இங்கு காட்டியவாறு code ஐ type செய்யவும்.
01:29 இங்கு Product என்ற class ஐ define செய்துள்ளேன்.
01:33 "name"மற்றும்"price"எனும் instance variables ஐ initialize செய்ய நான்ஒரு initialize method ஐ call செய்துள்ளேன்.
01:41 "name"மற்றும்"price"என்றுபெயரிடப்பட்ட instance methods ஐ யும் நான் define செய்துள்ளேன். .
01:47 அவை ஒவ்வொன்றும் முறையே "name" மற்றும் "price"எனும் instance variables ஐ திருப்பித்த்தரும்.
01:54 Instance methods என்பவை normal methods போல வரையறுக்கப்படுகின்றன.
01:58 Ruby ல் methods உருவாக்குவதை முன்பே படித்திருக்கிறோம்.
02:02 இந்த method களை அனைத்து instance களுக்கும் எப்படிப் பெறுவது என விரைவில் காணலாம்.
02:07 இப்போழுது , நம்மிடம் உள்ள logic ஐ செயல்படுத்துவோம்..
02:11 இங்கு நான் ஒரு Product object ஐத் initialize செய்து அதற்கு "product_object_1" என்று பெயரிட்டுள்ளேன்
02:18 நான் அதை ஒரு name value மற்றும் ஒரு price value உடன் initialize செய்துள்ளேன் .
02:24 initializer block ஆனது values களை "@name" மற்றும் "@price" எனும் instance variablesக்குக் கடத்துகிறது..
02:31 இப்பொழுது, இந்த product instance அல்லது object ஆனது name மற்றும் price எனும் instance methodகளைப் பயன்படுத்த முடியும்.
02:37 இந்த முறைகளை செயலாக்கும் பொழுது , நாம் value களை instance variablesல் சேமித்துப்பெற முடியும்.
02:43 இப்பொழுது நாம் இந்த code ஐ execute செய்வோம் .
02:46 terminalகுச் சென்று டைப் செய்க: ruby instance_methods.rb output ஐக் காண்பதற்கு Enter ஐ அழுத்தவும்.
02:56 இது object உடன் நீங்கள் initialize செய்த values ஐ அச்சிடுவதை காணலாம்..
03:02 அதாவது, "laptop" மற்றும் "35,000".
03:07 அடுத்ததாக , மற்றொரு instance அல்லது object ஐத் initialize செய்வோம்.
03:12 இந்த object ற்கு 'product_object_2 என்று பெயரிடுவோம்'.
03:18 இம்முறை, name மற்றும் priceற்கு வேறொரு value தொகுப்புகளைத் தருவோம்.
03:23 இப்பொழுது, "name" மற்றும் "price" எனும் instance methods ஐ இந்த object ற்கு call - செய்வோம்.
03:35 அடுத்ததாக , மீண்டும் terminal குச் சென்று, முன்பு போல் code ஐ இயக்கவும்.
03:41 அது வெற்றிகரமாக இயங்கி புதிய value களை அச்சிடுவதைக் காணலாம் .
03:48 இதன்மூலம் instance methods என்பவை ஒரு class Productன்'அனைத்து objectகளுக்கும் உள்ளது என்பது நிருபணமாகிறது.
03:55 இப்பொழுது உங்களால் சொந்தமாக instance methodsஐ எழுத முடியும்.
03:59 அடுத்ததாக , class methods என்பவை யாவை என காணலாம்.
04:04 Class methods என்பவை அதே class ற்கு மட்டும் கிடைக்கும் methods"' ஆகும்.
04:09 இந்த methods கள் அந்த class ன் instance களுக்கு கிடைக்காது.
04:14 பல வழிகளில் class methodsஐ define செய்யலாம்.
04:16 ஒரு உதாரணத்தைக் காண்போம்.
04:18 அடிப்படை Ruby tutorial களில் காட்டியபடி gedit ல் ஒரு புதிய file ஐ உருவாக்கவும்.
04:24 அதற்கு class_methods.rb என பெயரிடவும்.
04:28 என்னிடம் class methodsனுடைய ஒரு செயல் உதாரணம் உள்ளது.
04:32 நீங்கள் இந்த tutorial ஐ இடைநிறுத்திவிட்டு நாம் காணுமாறு code ஐ type செய்யவும்.
04:36 முன்பு போல ஒரு Product class ஐ define செய்துள்ளேன்.
04:40 முன்புபோல ஒரு initializerஐயும் call செய்துள்ளேன்.
04:44 எனினும், இம்முறை description எனும் ஒரு கூடுதல் argument ஐச் சேர்த்துள்ளேன்.
04:48 நான் class variablesinstance variablesபோல் அல்லாமல் value களை வைத்திருக்கவும் பயன்படுத்துகிறேன்,.
04:55 இந்த class உங்களுக்கு class methods ஐ வரையறுக்கும் மூன்று வெவ்வேறு வழிகளை விளக்குகிறது.
05:01 name ற்குரிய class method declarationஐ தேடவும் .
05:06 இங்கு , அது "Product" எனும் class name ஆல் define செய்யப்பட்டுள்ளது.
05:10 பிறகு , இரண்டாவது class methods குறிய declarationஐ தேடவும்.
05:14 இங்கு நான் 'self எனும் keyword ஐப் பயன்படுத்துகிறேன் .
05:18 அடுத்ததாக, class methods ஐ define செய்யும் முன்றாவது முறையைத் தேடவும்.
05:23 இப்பொழுது இந்த class methods ஐ செயல்படுத்தலாம்.
05:27 முதலில் முன்புபோல ஒரு Product னுடைய object ஐ initialize செய்யலாம்.
05:32 இம்முறை description ற்கும் ஒரு value அளிக்கிறோம்.
05:37 இப்பொழுது , இங்கு காண்பிக்கப்பட்டபடி class methodsஐ செயலாக்கம் செய்வோம்.
05:42 இப்பொழுது , code ஐ இயக்கி output ஐ ஆராயலாம்.
05:47 மீண்டும் terminal சென்று முன்புபோல code ஐ இயக்கவும்.
05:54 அது name, price மற்றும் description னுடைய value களை அச்சிடுவதைக்காண முடியும்.
05:59 இப்பொழுது உங்களால் சொந்தமாக class methodsஐ எழுத முடியும்.
06:03 அடுத்ததாக நாம் accessor methods என்றால் என்ன என பார்க்கலாம்..
06:07 class களுக்குள் define செய்யப்பட்ட dataஐ அணுக Ruby , accessor methodகளைப் பயன்படுத்துகிறது.
06:13 Accessor methods என்பது setter methods மற்றும் getter methods ஐக் கொண்டது.
06:18 Setter methods value களை நிர்ணயிக்கிறது.
06:22 Getter methods அந்த value களைப் பெறுகிறது.
06:24 இந்த method களை அறிவிக்க Ruby, attr_accessor எனும் வார்த்தையைப் பயன்படுத்துகிறது.
06:31 accessor methodsன் ஒரு உதாரணத்தைக் காண்போம் .
06:35 அடிப்படை Ruby tutorial களில் காட்டியபடி gedit ல் ஒரு புதிய file ஐ உருவாக்கவும்.
06:39 அதற்கு accessor_methods.rb என பெயரிடவும்
06:43 என்னிடம் accessor methodsஐ செயல்படுத்தக்கூடிய ஒரு செயல் உதாரணம் உள்ளது
06:47 நீங்கள் இந்த tutorial ஐ இடைநிறுத்திவிட்டு நாம் காணுமாறு code ஐ type செய்யவும்
06:52 இந்த உதாரணத்தில் நான் Product எனும் ஒரு class ஐ define செய்திருக்கிறேன்.
06:56 'name' மற்றும் ‘price'ற்கு attr_accessor ஐ declare செய்திருக்கிறேன்.
07:01 இவையே இந்த method களைப் பயன்படுத்துவதற்குத் தேவைப்படுவனவாகும்.
07:05 இப்பொழுது நாம் இதை செயல்படுத்தலாம் .
07:07 நான் Product object ஐ initialize செய்துள்ளேன்
07:10 பிறகு, நான் product object உடைய name மற்றும் price ஐ அமைத்துள்ளேன்.
07:14 attr_declaration ஆனது இயல்பாகவே value க்களை அமைப்பதற்கு method களை உருவாக்குவதால் இது சாத்தியமாகும்.
07:22 பிறகு நான் getter methodகளைப் பயன்படுத்தி 'name’ மற்றும் ‘price' ன் value களை அச்சிட முயன்றிருக்கிறேன்.
07:28 இந்த getter methodகளும் attr_accessor ன் declaration ஆல் உருவாக்கப்பட்டவை ஆகும்.
07:35 இப்பொழுது நாம் முன்புபோல் code ஐ இயக்கலாம்.
07:40 அது, அமைக்கப்பட்ட value களை அச்சிடுவதைக் காணலாம் .
07:44 இப்பொழுது, உங்களால் சொந்தமாக accessor method களை எழுத முடியும்.
07:50 accessor method கள் இயல்பாகவே, instance methodகள் என்பதைக் குறித்துக்கொள்ள வேண்டும்
07:55 இவ்வாறு class Product ன் வெவ்வேறு instance கள் மூலமாக அவற்றை அணுக முடியும் .
08:00 இந்த tutorial ல் நாம் கற்றவை: instance methods, class methods மற்றும் accessor methods.
08:06 பயிற்சியாக Temperature எனும் ஒரு class ஐ define செய்யவும்.
08:10 Ruby ன் accessor method syntax ஐப் பயன்படுத்தி ஒரு instance method ஐ எழுதவும்.
08:15 இந்த ‘method' ஆனது தரப்பட்ட Fahrenheit க்கு Celsius ஐக் கணக்கிட வேண்டும்.
08:20 கீழே கொடுக்கப்பட்டுள்ள link ல் இருக்கும் video வைப் பார்க்கவும்.
08:23 அது Spoken Tutorial project உடைய சுருக்கமாகும்.
08:26 உங்களிடம் நல்ல bandwidth இல்லையெனில், download செய்து பார்க்கவும்.
08:30 Spoken Tutorial project குழு: Spoken tutorial களை பயன்படுத்தி workshopகள் நடத்துகிறது
08:34 Online தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குகிறது.
08:38 மேலதிக விவரங்களுக்கு contact at spoken hyphen tutorial dot org க்கு மின்னஞ்சல் செய்யவும்.
08:44 Spoken Tutorial project ஆனது Talk to a Teacher ன் ஒரு பகுதி.
08:48 இது National Mission on Education through ICT, MHRD, Government of India ன்

ஆதரவு பெற்றது.

08:55 இந்த Mission பற்றிய கூடுதல் தகவல்கள் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro ல் உள்ளன..
09:03 இந்த tutorial ஐத் தமிழாக்கம் செய்தது சதீஷ், குரல் கொடுத்தது…... நன்றி..

Contributors and Content Editors

Priyacst