Ruby/C2/Hello-Ruby/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:00 Hello Ruby! மீதான ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:04 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
00:06 Ruby என்றால் என்ன?
00:09 அம்சங்கள், RubyGems மற்றும் Ruby க்கு உதவி
00:12 நிறுவுதல், Ruby code ஐ இயக்குதல்
00:15 Comment செய்தல், puts மற்றும் print க்கு இடையேயான வித்தியாசம்.
00:19 இங்கே நாம் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் பதிப்பு 12.04 Ruby 1.9.3
00:27 இந்த டுடோரியலை தொடர உங்களிடம் இணைய இணைப்பு இருக்க வேண்டும்.
00:30 லினக்ஸ் ல் டெர்மினல் மற்றும் டெக்ஸ்ட் எடிடரை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
00:37 இப்போது Ruby என்றால் என்ன என விளக்குகிறேன்.
00:40 Ruby என்பது ஒரு object-oriented, interpreted scripting language ஆகும்.
00:44 இது dynamic, open source programming language ஆகும்.
00:48 இயல்பாக படிக்கவும் எளிமையாக எழுதவும் ஏதுவான நேர்த்தியான syntax ஐ இது கொண்டுள்ளது.
00:54 இப்போது Ruby ன் சில அம்சங்களை காண்போம்.
00:57 Ruby மிகவும் எளிமையானது.
00:59 Ruby ப்ரோக்ராம் எந்த இயங்குதளத்திலும் இயங்கும்.
01:04 Smalltalk, BASIC அல்லது Python ல் உள்ளது போல Ruby ன் Variableகளுக்கு datatype இல்லை.
01:11 இது தானியங்கி memory management ஐ ஆதரிக்கிறது.
01:14 Ruby க்கு language format ஏதும் இல்லை.
01:17 உங்களால் எந்த வரி அல்லது column ல் இருந்தும் ப்ரோகிராமை எழுத ஆரம்பிக்க முடியும்.
01:21 Ruby Internet மற்றும் Intra-net applicationகளை உண்டாக்க பயன்படுகிறது.
01:26 Ruby ன் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று RubyGemsஆகும்.
01:31 RubyGems என்பது Ruby programming language க்கான ஒரு package manager ஆகும்.
01:36 இது Ruby ப்ரோகிராம்கள் மற்றும் libraryகளை விநியோகிக்க ஒரு நிலையான format ஐ தருகிறது.
01:42 நீங்கள் உங்கள் சொந்த gems ஐ உருவாக்கி வெளியிட முடியும்
01:46 RubyGems க்கான மேலும் விவரங்களும் பின்வரும் இணைப்பை காணவும்.
01:51 மேலும் Ruby க்கான உதவியை பெற காட்டப்படும் இணைப்புகளுக்கு செல்லவும்.
01:55 உபுண்டு சாப்ட்வேர் சென்டர் (Ubuntu Software Centre) ஐ பயன்படுத்தி Ruby ஐ நிறுவலாம்.
01:59 உபுண்டு சாப்ட்வேர் சென்டர் (Ubuntu Software Centre) பற்றி மேலும அறிய, எங்கள் இணையதளத்தில் உபுண்டு லினக்ஸ் டுடோரியல்களை காணவும்.
02:07 Ruby ஐ நிறுவுவதற்கான மற்ற வழிமுறைகளுக்கு காட்டப்படும் இணைப்புகளுக்கு செல்க.
02:12 'Ruby code ஐ 3 வழிகளில் இயக்கலாம்
02:16 Command line , Interactive Ruby
02:19 ஒரு'file ஆக. இயக்குவதற்கான ஒவ்வொரு வழிமுறையையும் காண்போம்.
02:23 முதலில் எவ்வாறு Hello World code ஐ command line மூலம் இயக்குவது என காண்போம்.
02:28 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினலை திறக்கவும்.
02:33 திரையில் ஒரு டெர்மினல் விண்டோ தோன்றுகிறது.
02:37 command ஐ டைப் செய்க
02:38 ruby space hyphen e space ஒற்றை மேற்கோள்களில் puts space பின் இரட்டை மேற்கோள்களில் Hello World
02:50 எண்டரை அழுத்துக
02:53 Hello World என வெளியீட்டை பெறுகிறோம்
02:56 puts command டெர்மினலில் வெளியீட்டை அச்சடிக்க பயன்படுகிறது
03:00 hyphen e flag ஒற்றை வரி code ஐ மட்டும் இயக்க அனுமதிக்கிறது.
03:06 பலவரி commandகளை இயக்க பல hyphen e flagகள் பயன்படுத்தப்படலாம்.
03:11 இதை முயற்சிக்கலாம்
03:13 இப்போது முந்தைய command ஐ பெற மேல் அம்பு விசையை அழுத்துக
03:18 டைப் செய்க space hyphen e space ஒற்றை மேற்கோள்களில் puts space 1+2
03:30 எண்டரை அழுத்துக
03:32 Hello World மற்றும் 3 ஐ வெளியீடாக பெறுகிறோம்
03:36 நம் slide க்கு வருவோம்
03:38 இப்போது Interactive Ruby பற்றி அறிவோம்
03:42 Interactive Ruby உடனடி பதிலுடன் Ruby commandகளின் இயக்கத்தை அனுமதிக்கிறது.
03:48 Ruby statementகளை இயக்கி வெளியீடு மற்றும் திருப்பப்படும் மதிப்புகளை ஆய்வுசெய்க.
03:53 Ruby ன் பழைய பதிப்பிற்கு irb ஐ தனியாக நிறுவவும்.
03:57 இப்போது Ruby code ஐ irb மூலம் இயக்கலாம். டெர்மினலுக்கு செல்க
04:03 Interactive Ruby ஐ துவக்க irb என டைப் செய்து எண்டரை அழுத்துக
04:09 டைப் செய்க puts space இரட்டை மேற்கோள்களில் Hello World பின் எண்டரை அழுத்துக
04:19 Hello World என வெளியீடை பெறுகிறோம்
04:22 nil என திருப்பப்படும் மதிப்பையும் பெறுகிறோம்
04:25 irb லிருந்து வெளியேற டைப் செய்கexit பின் எண்டரை அழுத்துக
04:31 ஒரு file ல் இருந்தும் Ruby ப்ரோகிராமை இயக்க முடியும்.
04:34 code ஐ எழுத உங்களுக்கு விருப்பமான எந்த டெக்ஸ்ட் எடிட்டரையும் பயன்படுத்தலாம்.
04:39 நான் gedit டெக்ஸ்ட் எடிட்டரை பயன்படுத்துகிறேன். gedit டெக்ஸ்ட் எடிட்டருக்கு வருகிறேன்
04:45 இப்போது டைப் செய்க puts space இரட்டை மேற்கோள்களில் Hello World
04:54 இப்போது பலவரி அல்லது ஒரு தொகுதி commentகளை எவ்வாறு சேர்ப்பது என கற்போம்.
04:59 puts command க்கு முன்
05:01 டைப் செய்க, equal to begin பின் எண்டரை அழுத்துக
05:06 'Equal to begin .... comment ஐ ஆரம்பிக்க பயன்படுகிறது.
05:10 நீங்கள் சேர்க்க விரும்பும் commentகளை டைப் செய்க.
05:13 நான் My first Ruby program என டைப் செய்கிறேன்
05:20 எண்டரை அழுத்துக
05:22 பின் This code will print helloworld என டைப் செய்து எண்டரை அழுத்துக
05:30 இப்போது டைப் செய்க equal to end
05:32 equal to end .... பலவரி commentகளை முடிக்க பயன்படுகிறது
05:37 Commentகள் ப்ரோகிராமின் போக்கை அறிந்துகொள்ள உதவுகின்றன.
05:41 ஆவணமாக்கலுக்கு இது பயன்படுகிறது.
05:45 Save பட்டனை க்ளிக் செய்வதன் மூலம் இப்போது இந்த file ஐ சேமிப்போம்.
05:50 அடிக்கடி file ஐ சேமிப்பது ஒரு நல்ல பழக்கம்.
05:53 திரையில் Save As dialog box தோன்றுகிறது.
05:57 file ஐ சேமிக்க விரும்பும் இடத்திற்கு செல்க.
06:01 'Desktop ல் rubyprogram என ஒரு folder ஐ உருவாக்குகிறேன்.
06:06 இந்த folder னுள் file ஐ சேமிப்போம்.
06:10 Name உரைப்பெட்டியில், சேர்க்க விரும்பும் பெயரை டைப் செய்க.
06:14 நான் hello.rb என டைப் செய்கிறேன்
06:17 Ruby file க்கு Dot rb நீட்சி கொடுக்கப்படுகிறது
06:21 பின் file ஐ சேமிக்க Save பட்டன் மீது க்ளிக் செய்க. எனவே இப்போது file சேமிக்ப்பட்டது.
06:28 இந்த code ஐ இயக்க, டெர்மினலுக்கு செல்க
06:32 முதலில் டெர்மினலை சுத்தம் செய்வோம்
06:35 உங்கள் Ruby file உள்ள directory ல் தான் நீங்கள் உள்ளீர்களா என உறுதிசெய்க.
06:39 home directory ல் நாம் உள்ளோம் என்பதை நினைவுகொள்க. நாம் துணைdirectory rubyprogram க்கு செல்ல வேண்டும்.
06:47 அதற்கு டைப் செய்க cd space Desktop/rubyprogram பின் எண்டரை அழுத்துக
07:00 file ஐ இயக்குவோம். டைப் செய்க ruby space hello dot rb பின் எண்டரை அழுத்துக
07:10 HelloWorld என வெளியீடை பெறுகிறோம்
07:13 இப்போது puts மற்றும் print statement க்கு இடையேயான வித்தியாசத்தைக் காட்டுகிறேன்.
07:18 irb ஐ பயன்படுத்தி இதை முயற்சிக்கிறேன்
07:22 அதற்கு முன் home directory க்கு திரும்ப செல்ல வேண்டும். அதற்கு டைப் செய்க cd பின் எண்டரை அழுத்துக
07:31 இப்போது Interactive Ruby ஐ துவக்க irb என டைப் செய்து எண்டரை அழுத்துக
07:39 டைப் செய்க puts space இரட்டை மேற்கோள்களில் Hello comma இரட்டை மேற்கோள்களில் World
07:50 இங்கே இரு puts commandகளை ஒன்றாக இணைக்க comma பயன்படுகிறது.
07:55 இப்போது எண்டரை அழுத்துக
07:57 Hello World என்ற வெளியீட்டை வெவ்வேறு வரிகளில் பெறுகிறோம்.
08:03 இப்போது print உடன் அதை திரும்ப முயற்சிப்போம்
08:06 முந்தைய command ஐ பெற மேல் அம்பு விசையை அழுத்துக
08:09 puts ஐ print என மாற்றி எண்டரை அழுத்துக
08:14 Hello World என்ற வெளியீடை ஒரே வரியில் பெறுகிறோம்.
08:19 keyword puts ஆனது வெளியீட்டின் கடைசியில் ஒரு புதுவரியை சேர்க்கிறது. keyword print அதை சேர்க்கவில்லை.
08:27 keyword print ஆனது நாம் கொடுத்ததை மட்டுமே வெளியீடாக தருகிறது.
08:31 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. நம் slideகளுக்கு மீண்டும் வருவோம்.
08:37 இந்த டுடோரியலில் நாம் கற்றது
08:39 Ruby
08:42 நிறுவுதல், Ruby code ஐ இயக்குதல்
08:44 =begin மற்றும் =end ஐ பயன்படுத்தி பலவரி comment ஐ சேர்த்தல்
08:50 puts மற்றும் print க்கு இடையேயான வித்தியாசம்.
08:53 பயிற்சியாக
08:55 உங்கள் பெயர் மற்றும் வயதை அச்சடிக்க ஒரு ப்ரோகிராம் எழுதுக
08:58 இந்த டுடோரியலில் பலவரி comment ஐ பயன்படுத்தினோம்
09:01 ஒற்றை வரி comment ஐ கொடுக்க முயற்சிக்கவும்.
09:04 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
09:07 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
09:10 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
09:15 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
09:20 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
09:24 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
09:30 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
09:34 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:41 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
09:45 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst