Python/C2/Saving-plots/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:00 ஹலோ, "Saving plots" குறித்த tutorial க்கு நல்வரவு!
00:04 இந்த டுடோரியலின் இறுதியில், உங்களால் வருவனவற்றை செய்ய இயலும்,
  1. savefig() function ஐ பயன்படுத்தி plot களை சேமித்தல்.
  2. plot களை வித்தியாசமான ஒழுங்குகளில் சேமித்தல்.
00:13 இந்த tutorial ஐ தொடரும் முன் "Using plot interactively" tutorial ஐ முடிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
00:19 இப்போது, IPython interpreter ஐ கட்டளை ipython hyphen pylab <Pause>

ஆல் துவக்கவும்.

00:30 இது உங்கள் IPython interpreter ஐ ப்லாட் செய்து சேமிக்க தேவையான python module களுடன் துவக்கும் என அறிவீர்கள்.
00:36 துவக்கத்துக்கு minus 3 pi to 3 pi க்கு ஒரு sine wave ஐ plot செய்யலாம்.
00:43 plot க்கு தேவையான புள்ளிகளை கணக்கிடலாம்.
00:45 இதை linspace ஆல் செய்யலாம். எப்படி எனில்,
00:51 x = linspace அடைப்பு குறிகளுக்குள் minus 3 into pi comma 3 into pi comma 100 என Type செய்க.
00:59 x இல் தேவையான புள்ளிகளை சேமித்துவிட்டோம்.
01:03 இப்போது plot statement ஆல் ப்லாட்டின் புள்ளிகளை வரையலாம்.
01:18 முடிந்தது!
01:19 அடிப்படையான sine plot ஒன்றை நாம் உருவாக்கி விட்டோம். இதை பின்னால் பயன்படுத்த, நம் அறிக்கைகளில் உள்பொதிய, எப்படி சேமிப்பது என்று பார்க்கலாம்.
01:32 plot ஐ சேமிக்க நாம் பயன்படுத்த வேண்டியது savefig() function.
01:36 இதற்கு முனையத்துக்கு பக்கத்திலேயே ப்லாட் சாளரத்தை திறந்து வைக்கலாம்.
01:40 statement என்ன என்றால், savefig அடைப்பு குறிகளுக்குள் ஒற்றை மேற்கோள் குறிகளில் slash home slash fossee slash sine dot png
01:52 குறித்துக்கொள்ளுங்கள்: savefig function ஒரு தரு மதிப்பை ஏற்கிறது, அது அந்த file இன் பெயர்; இதில் . க்கு அடுத்த கடைசி 3 எழுத்துருக்கள் பைல் வகையை குறிக்கும் பின்னொட்டு. இது நீங்கள் சேமிக்க விரும்பும் ஒழுங்கை நிர்ணயிக்கிறது.
02:10 மேலும், பைலை சேமிக்க வேண்டிய இடத்துக்கு நாம் முழுமையான பாதை அதாவது absolute path ஐ கொடுத்தோம் என்பதையும் குறித்துக்கொள்ளுங்கள்.
02:18 இங்கு நாம் கொடுத்த நீட்சி dot png; அதாவது நாம் பைலை சேமிக்க விரும்புவது PNG file ஆக.
02:25 இப்போது சற்று முன் நாம் சேமித்த file sine dot png ஐ எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கலாம்.
02:32 file ஐ சேமித்தது slash home slash fossee ; ஆகவே நாம் பைல் உலாவி மூலம் slash home slash fossee க்கு செல்லலாம்.
02:49 ஆம், file sine dot png இங்கு இருக்கிறது.
02:52 அதை நாம் திறந்து பார்க்கலாம்.
02:57 ஆகவே ஒரு plot ஐ சேமிக்க நாம் savefig function ஐ பயன்படுத்துகிறோம்.
03:05 .savefig என்பது plot ஐ பல ஒழுங்குகளில் சேமிக்க முடியும். pdf - portable document ஒழுங்கு, ps - post script, eps - encapsulated post script, svg - scalable vector graphics, ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட png - portable network graphics போன்ற பல.
03:24 விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்தபின் தொடரவும்.
03:29 LaTeX ஆவணங்களில் உட்பொதியக்கூடிய வகையில் sine plot ஐ EPS ஒழுங்கில் சேமிக்கவும்.
03:37 sine plot நம்முடன் இன்னும் இருக்கிறது; ஆகவே நாம் அதை sine dot eps என சேமிக்கலாம்.
03:49 இப்போது, நாம் plot ஐ சேமிப்பது savefig function ஆல். ஆகவே savefig அடைப்பு குறிகளுக்குள் ஒற்றை மேற்கோள் குறிகளில் slash home slash fossee slash sine dot eps என type செய்து enter செய்யவும்.
04:04 இப்போது நாம் slash home slash fossee க்கு சென்று புதிய file உருவானதை பார்க்கலாம்.
04:13 ஆமாம், புதிய file sine dot eps இங்கே இருக்கிறது.
04:18 விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்தபின் தொடரவும்.
04:23 sine plot ஐ PDF, PS மற்றும் SVG ஒழுங்குகளில் சேமிக்கவும்.
04:31 இத்துடன் tutorial முடிவுக்கு வருகிறது.
04:34 tutorial லில் நாம் கற்றது: plot களைsavefig() function ஐக்கொண்டு சேமித்தல்.
04:38 பின் - plot களை வெவ்வேறு ஒழுங்குகள் - pdf - ps - png - svg – eps போன்றவற்றில் சேமித்தல்.
04:45 சில சுய பரிசோதனை கேள்விகள்
04:48 1. ஒரு plot ஐ சேமிக்க எந்த கட்டளை பயனாகிறது? saveplot() savefig() savefigure() saveplt()
04:59 2. savefig('sine.png') ப்லாட்டை இந்த மாதிரி சேமிக்கிறது.
05:04 root directory / ( GNU/Linux, Unix அடிப்படையிலான கணினிகள்), c colon slash (windows இல்).
05:14 இரண்டாம் தேர்வு. முழுப்பாதை கொடுக்கப்படாததால் தோல்வி அடையும்.
05:18 மூன்றாவது. நடப்பு வேலையில் உள்ள directory.
05:21 மற்றும் கடைசி தேர்வு முன்னேயே தேர்வு செய்த directory /documents போன்றது.
05:26 இப்போது பதில்கள்
05:28 1. plot ஐ சேமிக்க நாம் savefig() function ஐ பயன்படுத்துகிறோம்.
05:33 2. எப்போது ஒரு file ஐ சேமித்தாலும் அது நடப்பு வேலை செய்யும் directory இல் சேமிக்கப்படும்.
05:38 tutorial யனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறோம்.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst