PHP-and-MySQL/C4/User-Password-Change-Part-3/Tamil
From Script | Spoken-Tutorial
| Time | Narration |
|---|---|
| 0:03 | இது “change password” tutorial இன் மூன்றாம் பகுதி. இந்த பகுதியில் நாம் password ஐ database இல் மாற்றுவோம். |
| 0:11 | ஏற்கெனெவே database உடன் இணைந்தாயிற்று. |
| 0:14 | மீண்டும் connect செய்ய அவசியமில்லை. command ஏற்கெனெவே மீண்டும் தரப்பட்டுவிட்டது. |
| 0:23 | ஒரு புதிய query ஐ உருவாக்குவேன்.. அதன் பெயர் “query change” . அது “mysql query" function க்கு சமம். |
| 0:30 | இப்போது, இது புதிய code துணுக்கு. ஆகவே நீங்கள் சுலபமாக காண scroll down செய்கிறேன். |
| 0:36 | இது “UPDATE”. சொல்வது “UPDATE users” - அதுதான் நம் table - நம் "users" table ஐ update செய்வோம். |
| 0:44 | சொல்வது “SET password equal to new password” |
| 0:51 | இங்கே மேற்க்கோளகள் இருப்பதை உறுதிசெய்க. |
| 0:56 | பின் சொல்வது WHERE username is equal to ... நடப்பு பக்கத்திலுள்ள "user" variable |
| 1:03 | இப்போது எதற்கு சமம்? |
| 1:07 | இந்த column இல் இங்கே உள்ளதற்கு. |
| 1:12 | ஏற்கெனெவே நம் php session ஐ ப்ராசஸ் செய்து விட்டதால்... |
| 1:18 | அது equal to "Alex". |
| 1:21 | இந்த code பகுதி அடிப்படையில் சொல்வது “table ஐ update செய், password ஐ user உள்ளிட்ட புதிய password க்கு மாற்று –இதுவே அவர்கள் விரும்பும் password . |
| 1:32 | மற்றும் இது Alex க்கு சமம் ஆகையால் “where” .. Alex. |
| 1:40 | ஆகவே, இந்த password மாற்றப்படும். ஏனெனில் இந்த username Alex க்கு சமம். |
| 1:45 | ஆகவே இது 900 இல் ஆரம்பிக்கிறது. மேலும் இதை மாற்றியவுடன் refresh செய்து சோதிக்க இது மாறிவிட்டது. |
| 1:56 | இன்னும் கொஞ்சம் சிலது சேர்க்கலாம். |
| 2:03 | இதை இங்கே மீண்டும் இடலாம். |
| 2:06 | “die” என்று சொல்லி பக்கத்தை நிறுத்துகிறேன். மற்றும் சொல்வது “Your password has been changed”. |
| 2:15 | இடுவது ஒரு link ... “return” அது main page க்கு கொண்டு போகும். |
| 2:23 | மேலும் அது “index.php”. |
| 2:27 | page ஐ நிறுத்துமுன் நான் அமர்வை முடிக்க வேண்டும். |
| 2:31 | ஆகவே “session destroy”. |
| 2:33 | காரணம் என்னவென்றால் user... password ஐ மாற்றியவுடன் இந்த link அவர்களை main page க்கு கொண்டுபோய்விட்டு session ஐ முடிக்க வேண்டும். |
| 2:42 | ஆகவே புதிய password ஐ பயன்படுத்தி அவர்கள் மீண்டும் login செய்ய வேண்டும். |
| 2:59 | இதை சோதிக்க... இங்கே, என் நடப்பு password .. "abc" அதன் md5 900 இல் துவங்கியது. |
| 3:00 | இங்கே திரும்பிப்போக என் பழைய password ஐ எழுதுகிறேன்- "abc", என் புதிய password "123" மற்றும் “change password” ஐ சொடுக்க, எல்லா validation உம் சோதிக்கப்பட்டது. நம் password மாற்றப்பட்டது. மேலும் main page க்கு திரும்பும்படி செய்தி வந்தது. |
| 3:18 | இப்போது member page க்கு போகப்பார்த்தால் நாம் log in செய்ய வேண்டும்; session முடிந்துவிட்டது. “session destroy” function ஐ இங்கே பயன்படுத்தினோம் இல்லையா? |
| 3:32 | சரி, நான் login செய்ய "abc" என password ஐ தருகிறேன். அது என பழைய password; கிடைக்கும் செய்தி “Incorrect password” |
| 3:43 | "123" ஐ முயற்சிக்கலாம். உள்ளே போய்விட்டேன். சான்று இங்கே. |
| 3:50 | பின்னே போய் “browse” ஐ சொடுக்க... scroll down செய்து பார்க்க password மாற்றப்பட்டுவிட்டது ... 900 இலிருந்து 202 ஆகிவிட்டது. |
| 3:59 | ஆகவே இது முற்றிலும் புதிய hash மற்றும் முற்றிலும் புதிய password. |
| 4:06 | ஆகவே எல்லாமே சரி. எளிதுதான் என்று அறிவீர்கள். |
| 4:11 | "sql" queries ஐ சரியாக அறிந்திருந்தால் போதுமானது. அதற்கும் tutorial கள் உள்ளன. |
| 4:18 | பழைய password ஐயும் புதிய passwords ஐயும் சோதிப்பதை தர்க்க ரீதியாக யோசிக்க வேண்டும். |
| 4:24 | நாம் registration ஐ செய்த போது password எவ்வளவு பெரிதாக இருக்கலாம் என்று வரையரை வைத்து இருந்தோம். |
| 4:31 | 6 முதல் 25 characterகள் வரை அது இருப்பதை சோதிப்பதை உங்களுக்கு விட்டுவிடுகிறேன். |
| 4:42 | நீங்கள் செய்யக்கூடிய சோதனைகள் ஏராளமாக உள்ளன. ஆனால் mysql database உடன் php ஐ பயன்படுத்தி password ஐ மாற்ற இது அடிப்படை வழியாகும். |
| 4:53 | இது உங்களுக்கு பிடித்து இருக்குமென நம்புகிறேன். விமர்சனங்கள், கேள்விகள் இருந்தால் தெரிவியுங்கள். |
| 5:01 | தமிழாக்கம் கடலுர் திவா. குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி |