PHP-and-MySQL/C4/Sending-Email-Part-3/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:00 | "'Sendmail from not set in php dot ini" error ஐ எப்படி சரி செய்வது? |
00:11 | email யாரிடமிருந்து போகிறது என்று தீர்மானிக்கவில்லை.. |
00:18 | email ஐ அனுப்புவதற்கு இதை தீர்மானிக்க வேண்டும். |
00:23 | ஒரு "from" parameter போல இங்கு எதையும் அமைக்க மாட்டோம். |
00:29 | குறிப்பான headers ஐ அனுப்ப வேண்டும். |
00:32 | ஆகவே இங்கே ஒரு "headers" variable ஐ உருவாக்குவோம். அது "me @me.com" போல இராது. |
00:43 | standardised mail header உடன் நாம் வேலை செய்ய வேண்டும். அது "From:" மேலும் ஒரு colon; semi colon அல்ல. பின் சொல்வது, உதாரணமாக "php academy" |
00:54 | அல்லது "admin @php academy" போல எதையும் சொல்லி பின்னால் ".com" ஐ சேர்க்கலாம். |
01:02 | அந்த மாதிரி domain name இல்லை; ஆனால் சும்மா வைத்துக்கொள்வோம். |
01:08 | ஆகவே "From: admin @phpacademy.com". |
01:11 | நம் mail க்குள் இன்னொரு parameter ஐ சேர்க்க வேண்டும் அது "headers". |
01:18 | இங்கே type செய்யலாம், "Alex"... இங்கே "This is a test!" |
01:24 | "Send me this" ஐ சொடுக்க இன்னொரு error வருகிறது. |
01:27 | இப்போது நான் உண்மையில் கணினியில் mail server இயக்கவில்லை. |
01:33 | ஒரு mail server ஐ கணினியில் இயக்க விருப்பமிருந்தால், at mail free mail server என்று google செய்து பாருங்கள். இது உங்கள் கணினியில் mail server ஐ நிறுவும். நாம் இப்போது local host இல் இயக்குவது போல. |
01:46 | மேலும் local host இன் கீழ் ஒரு SMTP mail server உம் இயங்கும். |
01:54 | இப்போது என்னிடம் mail server இல்லை என்பதால், நான் university email system ஐ பயன்படுத்துவேன். இதுவே இங்கே என் university email DNS அல்லது "Domain Name Server" |
02:06 | அப்படித்தான் என் email... university வழியாக போகிறது. |
02:11 | உங்களுக்கு குறிப்பாக ஒர் DNS Server இல்லையெனில் ஒரு domain name இருந்தால், website இருந்தால் அது உங்களுக்குத் தெரியும். அல்லது கண்டுபிடிக்க முடியும்.. |
02:22 | அதன் வழியாக email அனுப்ப முடியும். |
02:27 | என் university email DNS server பெயர் "mailhost dot shef dot ac dot uk" என்று தெரியும். நான் இருப்பது Sheffield university இல் |
02:36 | ஆகவே அதை என் "php dot ini" இல் சேர்க்க வேண்டும். |
02:41 | அதற்கு நல்ல வழி இங்கே வந்து variables ஐ setup செய்வதே. |
02:46 | சரி நமக்கு 2 வேண்டும் - set SMTP in "php dot ini" |
02:59 | "php dot ini" file ஐ திறக்கமலேயே நான் "ini set" function ஐ பயன்படுத்துகிறேன். |
03:05 | variable name "SMTP". |
03:12 | நாம் edit செய்வது "php dot ini" file இல் இந்த வரியை. |
03:16 | Value ஆக mail host என type செய்கிறேன். |
03:20 | இங்கே சொல்வது echo "get ini" .. அது ஒரு குறிப்பிட்ட value ஐ பெறும். |
03:25 | அடுத்து சொல்வது SMTP அது script ஐ அங்கேயே நிறுத்தி விடும். |
03:30 | அது வேலை செய்வதைப் பார்க்கலாம். |
03:32 | "Alex" மற்றும் "Test" என்று சொல்லி "Send me this". ஐ சொடுக்க… |
03:40 | Oh! Sorry இதை முழுக்க தப்பாக type செய்தேன். பெரிய தவறு. அது "ini get" … refresh செய்யலாம். |
03:52 | "SMTP" ஐ "ini" file இல் "mail host dot shef dot ac dot uk" க்கு செட் செய்கிறோம். |
03:59 | பின் இதன் value ஐ echo out செய்வோம். |
04:03 | அது சொல்வது "mail host dot shef dot ac dot uk" க்கு செட் செய்யப்பட்டது. |
04:10 | mail host server அல்லது DNS server வேலை செய்தால் மீதி code வேலை செய்யும். |
04:17 | mail ஐ அனுப்பியதும் page ஐ அழிக்கிறேன். |
04:24 | உம்ம்ம் .. வேண்டாம். நான் page ஐ அழித்து விடுவேன். |
04:28 | பின்னே சென்று "Alex" மற்றும் "This is a test" எனலாம். |
04:36 | எல்லாம் சரியா என்று பார்க்கிறேன் "to", என் "subject", என் "headers" சொல்வது.... "From:admin@phpacademy.com". |
04:45 | மேலும் body இல் mail function ஐ இங்கே execute செய்கிறோம். |
04:51 | "Send me this" ஐ சொடுக்க ஒன்றும் நடக்கவில்லை. பிழை ஏதுமில்லை என்பதால் எல்லாம் சரியாக நடந்துள்ளது. |
04:58 | என் hotmail அல்லது email க்கு வந்து INBOX ஐ பார்த்தால் "admin @ phpacademy dot com" இடமிருந்து mail வந்துள்ளதை காணலாம். |
05:09 | அதை சொடுக்க நாம் set செய்த "Email from PHPAcademy" subject line ஆக இருக்கிறது. |
05:17 | மேலும் நாம் குறித்த from email address உம் சரியாக இருக்கிறது. |
05:22 | இதை from Alex அல்லது from phpacademy என அமைக்கலாம். |
05:27 | மேலும் இங்கே உள்ளது "This is an email from Alex" … இந்த name ஐ form இல் இங்கே கொடுத்தோம். |
05:35 | 2 line breaks உள்ளன. - 1 மற்றும் 2 |
05:40 | மேலும் "This is a test" இது நாம் உள்ளிட்ட text . |
05:46 | என் university இன் DNS mail server ஐ பயன்படுத்திய mail function இது. |
05:50 | உங்கள் INSP ஒரு DNS mail server ஐ கொண்டிருக்கும். |
05:55 | அதற்கு authentication தேவையிருக்கலாம். அது குறித்த tutorial விரைவில் வரும். |
06:00 | ஆகவே இது வேலை செய்யாவிட்டால் அந்த tutorial ஐ காணவும். அல்லது என்னை email அல்லது youtube மூலம் தொடர்பு கொள்ளவும். |
06:09 | பலருக்கும் இது உதவி இருக்குமென நம்புகிறேன்.. |
06:13 | subscribe செய்யுங்கள். |
06:15 | நன்றி. |