PERL/C2/Arrays/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Perl ல் Arrayகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது
00:09 array ன் Index
00:11 ஒரு array ன் நீளம்
00:13 ஒரு array ன் elementகளை அணுகுதல்
00:16 ஒரு array ன் மீது loop செய்தல்
00:18 தொடர்ச்சியான Array
00:20 மற்றும் Array ஐ வெட்டுதல்
00:22 இங்கே நான் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் 12.04 இயங்குதளம் மற்றும் Perl 5.14.2
00:30 gedit Text Editor ஐயும் பயன்படுத்துவேன்.
00:34 உங்களுக்கு விருப்பமான எந்த text editor ஐயும் பயன்படுத்தலாம்.
00:37 Perl ல் Variableகள், Commentகள் மற்றும் Data Structureகள் குறித்த அறிவு இருக்க வேண்டும்
00:43 loopகள் மற்றும் conditional statementகள் குறித்தும் தெரிந்திருப்பது நன்று.
00:48 அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் இணையத்தளத்தில் காணவும்.
00:54 எந்த data type elementகளையும் கொண்டிருக்கும் Array ஒரு எளிய data structure.
00:59 Array index எப்போதும் பூஜ்ஜியத்திலேயே ஆரம்பிக்கும்.
01:03 Perl ல், ஒரு array ன் நீளத்தை declare செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
01:08 Array ன் நீளம் elementகளை சேர்த்தல் அல்லது நீக்குதலின் போது அதற்கேற்றவாறு விரியும் அல்லது சுருங்கும்.
01:15 ஒரு array ஐ declare செய்வதற்கான syntax -
01:18 @myArray equal to அடைப்புகளில் 1 comma 2 comma 3 comma ஒற்றை மேற்கோள்களில் abc comma 10.3 semicolon
01:31 ஒரு array ன் கடைசி index ஐ இந்த command மூலம் காணலாம் -
01:35 $#myArray
01:38 இதை உதாரண ப்ரோகிராமின் உதவியுடன் புரிந்துகொள்ளலாம்.
01:42 டெர்மினலைத் திறந்து டைப் செய்க
01:44 gedit arrayIndex dot pl space ampersand
01:50 எண்டரை அழுத்துக
01:52 இது geditor ல் arrayIndex dot pl file ஐ திறக்கும்
01:57 திரையில் காணப்படும் code ன் பகுதியை டைப் செய்க
02:02 இங்கே 5 elementகளை கொண்ட ஒரு array ஐ declare மற்றும் define செய்துள்ளோம்.
02:07 array index பூஜ்ஜியத்தில் ஆரம்பிப்பதால், கடைசி index மதிப்பு 4 ஆகும்
02:14 அதாவது elementகளின் எண்ணிக்கை, அது 5 minus 1.
02:18 file ஐ சேமிக்க Ctrl+S ஐ அழுத்துக.
02:22 இப்போது டெர்மினலுக்கு வந்து Perl script ல் இயக்க டைப் செய்க
02:26 perl arrayIndex dot pl
02:30 எண்டரை அழுத்துக
02:32 டெர்மினலில் காட்டப்படுவது போல வெளியீடு இருக்கும்
02:37 இப்போது, Perl ல் ஒரு array ன் நீளத்தை எவ்வாறு பெறுவது என காண்போம்.
02:41 ஒரு array ன் நீளத்தை கண்டறிய பல வழிகள் உள்ளன.
02:46 array ன் Index + 1 அதாவது $#array + 1
02:53 PERL ன் உள்ளடங்கிய scalar function ஐ பயன்படுத்துதல்; அதாவது scalar அடைப்புகளில் @array
03:02 Array ஐ ஒரு scalar variable க்கு assign செய்தல் அதாவது $arrayLength = @array
03:09 ஒரு உதாரண ப்ரோகிராமை பயன்படுத்தி array ன் நீளத்திற்கான விளக்கத்தைக் காண்போம்.
03:14 டெர்மினலுக்கு வந்து டைப் செய்க -
03:18 gedit arrayLength dot pl space ampersand
03:24 எண்டரை அழுத்துக
03:27 திரையில் காட்டப்படும் பின்வரும் code ன் பகுதியை டைப் செய்க-
03:32 இங்கே 5 elementகளை கொண்ட ஒரு array ஐ declare மற்றும் define செய்துள்ளோம்.
03:38 எனவே, வெளியீடு 5 காட்டப்படும்.
03:41 முன்னிலைப்படுத்தப்பட்டவை Perl ல் array ன் நீளத்தைக் கண்டுபிடிப்பதற்கான 5 வழிகள் ஆகும்.
03:47 print statement ல் comma ஐ பயன்படுத்தி வெளியீட்டை சேர்த்துள்ளோம் என்பதை கவனிக்கவும்.
03:53 file ஐ சேமிக்க Ctrl + S ஐ அழுத்துக.
03:57 இப்போது script ஐ இயக்குவோம்.
03:59 டெர்மினலுக்கு வந்து டைப் செய்க -
04:02 perl arrayLength dot pl எண்டரை அழுத்துக
04:07 டெர்மினலில் காட்டப்படுவது போல வெளியீடு இருக்கும்.
04:12 இப்போது, ஒரு array ல் தனி element ஐ எவ்வாறு அணுகுவது என பார்ப்போம்.
04:18 array ன் element களை அணுக Indexing பயன்படுகிறது.
04:22 பின்வரும் இருப்புகளில் உள்ள element களை அணுக உதாரணத்தைக் காண்போம் -
04:27 முதல் இருப்பு, கடைசி இருப்பு
04:29 எந்த இருப்பில் இருந்தாலும்
04:32 டெர்மினலுக்கு வந்து டைப் செய்க -
04:35 gedit perlArray dot pl space ampersand
04:42 எண்டரை அழுத்துக
04:45 காட்டப்படும் code ன் பகுதியை டைப் செய்க.
04:49 myArray @ குறியுடன் declare செய்யப்படுகிறது என்பதை கவனிக்க.
04:54 ஆனால், ஒரு array element ஐ அணுக $ (dollar) குறியை பயன்படுத்த வேண்டும்.
04:59 எந்த இருப்பிலும் உள்ள element ஐ அணுக, array க்கு index ஐ அனுப்ப வேண்டும்
05:07 இங்கே, myArray ன் முதல் element ஐ அணுக,
05:11 பூஜ்ஜியம் index ஆக அனுப்பபடுகிறது
05:16 myArray ன் கடைசி element ஐ அணுக, myArray ன் கடைசி index ஐ அனுப்பியுள்ளோம்
05:24 இது பற்றி நாம் ஏற்கனவே கற்றுள்ளோம் என்பதை நினைவுகொள்க.
05:28 file ஐ சேமிக்க Ctrl + S ஐ அழுத்துக.
05:30 டெர்மினலுக்கு வந்து script ஐ இயக்க டைப் செய்க -
05:36 perl perlArray dot pl
05:41 எண்டரை அழுத்துக
05:43 டெர்மினலில் காட்டப்படுவது போல வெளியீடு இருக்கும்
05:47 இப்போது, array ன் ஒவ்வொரு element மீதும் எவ்வாறு loop செய்வது என காண்போம்.
05:52 ஒரு array மீது loop செய்ய இரு வழிகள் உண்டு -
05:56 for loop ஐ பயன்படுத்துதல்
05:58 foreach loop ஐ பயன்படுத்துதல்
06:01 ஒரு array ன் மீது இந்த loop களை iterate செய்வதை உதாரண ப்ரோகிராம் மூலம் கற்போம்.
06:07 அதற்கு டெர்மினலுக்கு வந்து டைப் செய்க
06:11 gedit loopingOverArray dot pl space ampersand
06:17 எண்டரை அழுத்துக
06:20 திரையில் காட்டப்படும் code ன் பகுதியை டைப் செய்க
06:24 இஙகே index ஐ iterate செய்வதன் மூலம் array ன் ஒவ்வொரு element ஐயும் அச்சடிக்கிறோம்.
06:31 i variable ன் மதிப்பு array ன் கடைசி index ஐ அடையும் வரை for loop இயங்கும் .
06:38 இங்கே, array ன் ஒவ்வொரு element க்கும் foreach loop இயக்கப்படுகிறது.
06:46 array அதன் கடைசி element ஐ அடைந்தவுடன், அது foreach loop ஐ முடிக்கும்.
06:53 கவனிக்க: for மற்றும் foreach loopகள் பற்றி உங்களுக்கு தெரியவில்லை எனில், அதற்கான ஸ்போகன் டுடோரியல்களுக்கு ஸ்போகன் டுடோரியல் வளைத்தளத்தைக் காணவும்.
07:04 இப்போது, file ஐ சேமிக்க Ctrl + S ஐ அழுத்துக.
07:07 பின் டெர்மினலுக்கு வந்து script ஐ இயக்க டைப் செய்க -
07:12 perl loopingOverArray dot pl
07:15 எண்டரை அழுத்துக
07:19 டெர்மினலில் காட்டப்படுவது போல வெளியீடு இருக்கும்.
07:24 Perl ல், ஒரு தொடர் array ஐ பின்வருமாறு declare செய்யலாம்-
07:28 @alphaArray = அடைப்புகளில் a புள்ளி புள்ளி d semicolon
07:37 அதாவது alphaArray... elementகள் 'a', 'b', 'c' மற்றும் 'd' ஐ கொண்டிருக்கும்
07:44 அதேபோல, @numericArray equal to அடைப்புகளில் 1 புள்ளி புள்ளி 5 semicolon ஆனது

@numericArray equal to அடைப்புகளில் 1 comma 2 comma 3 comma 4 comma 5 க்கு சமம்

08:03 Perl... array ஐ வெட்டவும் செய்கிறது.
08:06 array ன் ஒரு பகுதியை எடுத்து அதை ஒரு புதிய array னுள் போடுவதுதான் இது.
08:13 @array = அடைப்புகளில் 19 comma 23 comma 56 comma 45 comma 87 comma 89 semicolon
08:27 @newArray = @array சதுர அடைப்புகளில் 1 comma 4 semicolon
08:38 வெட்டியபின் newArray பின்வருமாறு இருக்கும்
08:42 @newArray = அடைப்புகளில் 23 comma 87 semicolon
08:52 சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது -
08:55 உதாரண ப்ரோகிராமை பயன்படுத்தி ஒரு array ன் index ஐ கண்டறிதல்
08:57 ஒரு array ன் நீளத்தை கண்டறிதல்
08:59 ஒரு array ன் element களை அணுகுதல்
09:01 ஒரு array ன் மீது loop செய்தல்
09:03 தொடர் Array
09:05 Array ஐ வெட்டுதல்.
09:07 இங்கே உங்களுக்கான பயிற்சி -
09:10 வானவில் நிறங்களின் ஒரு array ஐ declare செய்யவும்
09:13 இந்த array ன் நான்காம் element ஐ அச்சடிக்கவும்
09:16 இந்த array ன் நீளம் மற்றும் கடைசி index ஐ அச்சடிக்கவும்
09:19 for மற்றும் foreach loopகளை பயன்படுத்தி array ன் ஒவ்வொரு element ன் மீதும் loop செய்க
09:25 @myArray = அடைப்புகளில் 1..9 semicolon என ஒரு array ஐ declare செய்து பின் array ஐ வெட்டுதலை பயன்படுத்தி அந்த array ல் இருந்து ஒற்றைப்படை எண்களின் ஒரு array ஐ உருவாக்குக.
09:41 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
09:44 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
09:48 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
09:53 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
09:58 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
10:02 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
10:09 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
10:13 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10:20 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
10:31 இந்த டுடோரியல் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம்.
10:35 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst