Netbeans/C2/Designing-GUI-for-Sample-Java-Application/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:02 வணக்கம். Netbeansஐ பயன்படுத்தி GUIகளை கட்டமைப்பது குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில், Netbeansன் மிக கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்றை காண்போம் , அது அதன் GUI Builder.
00:13 GUIஐ கட்டமைப்பதற்கு Netbeans தருவது என்ன?
00:16 நீங்கள் பார்ப்பதை designer ஆக பெறும் வசதியைத் தருகிறது.
00:21 உங்கள் layout ஐ உருவாக்க componentகளை இழுத்து வைக்கும் படியான சுலபமான interface ஐயும் தருகிறது.
00:27 AWT மற்றும் Swing componentகள் முன்னிருப்பாக நிறுவப்பட்டிருக்கும் Component Palette உடன் இது வருகிறது.
00:33 ஒரு சில நிமிடங்களில் முழு GUI application ஐ கட்டமைக்கக்கூடிய இந்த visual editor ஐ பயன்படுத்துவோம்.
00:39 இந்த செயல்விளக்கத்திற்கு நான் பயன்படுத்துவது
00:43 உபுண்டு 11.04
00:46 மற்றும் Netbeans IDE 7.1.1
00:50 நிறுவுதல் மற்றும் தேவைகள் குறித்து மேலும் அறிய முன் டுடோரியலைக் காணவும்.
00:56 இந்த டுடோரியலில் கற்கபோவது
00:58 Form Editor
01:00 Source Editor
01:02 Palette, Inspector, மற்றும் Properties features ஆகியவற்றை பயன்படுத்துதல்
01:05 event handlerகளை சேர்த்தல்
01:07 மற்றும் நம் application ஐ compile செய்து இயக்குதல்.
01:10 இந்த டுடோரியலில் ஒரு எளிய Account balance application ஐ உருவாக்கலாம்
01:15 இந்த application
01:18 accountக்கு credit செய்யப்பட்ட amount ஐயும்
01:21 account ல் இருந்து debit செய்யப்பட்ட amount ஐயும் input ஆக ஏற்று
01:24 கடைசி balance ஐ கணக்கிட வேண்டும்.
01:26 நம் application மேலும் வசீகரமாக இருக்க ஒரு படத்தையும் சேர்ப்போம்.
01:31 சுலபமாகவும் சீக்கிரமாகவும் அணுக மேலே ஒரு menu bar ஐ வைக்கலாம்.
01:35 இப்போது netbeans க்கு வந்து ஒரு புது project ஐ உருவாக்க துவங்கலாம்.
01:40 File menu ல் New Project பின் Java Application, அடுத்து Next ஐ அழுத்துக.
01:49 உங்கள் project பெயரை கொடுக்கவும்
01:51 நான் என் project க்கு Account balance என தருகிறேன்
01:58 ஒரு main class ஐ உருவாக்காமல் அதை main project என அமைப்போம்.
02:02 Finish' ஐ க்ளிக் செய்ய அது ஒரு புது project ஐ உங்கள் IDE ல் உருவாக்கும்
02:07 இப்போது File menu ல் New File ஐ தேர்ந்தெடுக்கவும்
02:15 Categories ல் Swing GUI forms ஐயும்
02:18 File Type ல் Jframe Form ஐயும் தேர்ந்தெடுக்கவும்
02:21 Next ஐ க்ளிக் செய்க
02:24 இதை நான் AccountBalance என்கிறேன்,
02:29 ஆனால் உங்கள் விருப்பத்திற்கேற்ப பெயரிடலாம்.
02:33 Finish ஐ க்ளிக் செய்தவுடன், main design areaக்கு செல்வீர்கள்.
02:39 இப்போது GUI builder பற்றி அறிந்து கொள்வோம்.
02:43 இங்கே வலப்பக்கம் palette
02:45 இது ஏற்கனவே நிறுவப்பட்ட Swing மற்றும் AWT componentகளை கொண்டுள்ளது.
02:49 palette க்கு கீழே இங்கே Properties window உள்ளது.
02:53 இது நாம் தேர்ந்தெடுக்கும் componentகளுக்கு properties ஐ காட்டுகிறது.
02:58 வலப்பக்கம் இங்கே navigator அல்லது inspector உள்ளது
03:01 இது frame க்கு சேர்க்கப்பட்ட componentகளை காட்டுகிறது.
03:05 இங்கே workspace... design modeல் உள்ளது
03:08 மேலே Source button
03:11 இதை க்ளிக் செய்யும் போது, source code திறக்கிறது.
03:15 designக்கு componentகளை சேர்க்கும் போது,
03:18 இது அதற்கான source code ஐ எடுத்து இங்கே இந்த source க்கு சேர்க்கிறது.
03:23 Design mode க்கு சென்று நாம் இப்போது பயன்படுத்தும் componentகளைக் காண்போம்.
03:28 நம் applicationகளை உருவாக்க palette ல் இருந்து சில componentகளை பயன்படுத்துவோம் அவை
03:31 Buttonகள், Labelகள், Panelகள், Tabbed pane போன்றவை
03:38 இப்போது Palette ல் இருந்து swing Containers ல் TabbedPane ஐ தேர்ந்தெடுப்போம்
03:45 Tabbed Pane ஐ தேர்ந்தெடுத்து பின் form ல் க்ளிக் செய்க
03:50 இது ஒரு Tabbed frame ஐ கொடுக்கும். உங்கள் mouse ஐ கொண்டு இதன் அளவை மாற்றலாம்.
03:58 இப்போது Palette க்கு சென்று Panel ஐ தேர்ந்தெடுப்போம்
04:02 மீண்டும் frame மீது க்ளிக் செய்க
04:06 அது ஒரு tab ஐ கொடுக்கும்.
04:09 மீண்டும் ஒரு Panel ஐ தேர்ந்தெடுத்து form ல் க்ளிக் செய்க
04:14 மொத்தமாக இரு tabகளைக் கொடுக்கும்
04:17 இப்போது tab மீது டபுள் க்ளிக் செய்து அதன் பெயரை மாற்றலாம் அல்லது அந்த tab மீது ரைட் க்ளிக் செய்து Edit Text தேர்வை பயன்படுத்தலாம்
04:29 முதல் tab ஐ Image எனவும் இரண்டாம் tab ஐ Balance எனவும் மாற்றுகிறேன்
04:37 இப்போது Palette க்கு சென்று swing Controls menu ல் இருந்து labelகளை சேர்ப்போம்
04:43 Swing Controls ல் இருந்து Label ஐ தேர்ந்தெடுத்து உங்கள் form க்கு சேர்க்கலாம்
04:48 நம் applicationக்கு 6 labelகள் தேவை.
04:54 இப்போது என் form க்கு ஆறு labelகளை சேர்த்துள்ளேன்
04:58 அவற்றின் மீது க்ளிக் செய்து அவற்றை தேவையான இடத்தில் வைக்கலாம்
05:02 mouse ஐ பயன்படுத்தி அவற்றை நகரத்தலாம்.
05:06 இப்போது label ல் உரையை மாற்றலாம்
05:08 அதற்கு அதன் மீது டபுள் க்ளிக் செய்யலாம் அல்லது ரைட் க்ளிக் செய்து
05:12 Edit Text ஐ தேர்ந்தெடுக்கலாம்
05:14 இப்போது labelகளின் பெயரை மாற்றலாம்
05:16 முதல் label ஐ Initial Amount என்கிறேன்
05:22 இரண்டாம் label Credit Amount.
05:30 மூன்றாம் label Debit amount
05:35 மற்றும் நான்காம் label Balance
05:41 ஆரம்பத்தில், initial amount ஐ Rs 5000 என அமைக்கிறேன்.
05:48 balance ஐ கணக்கிட்ட பின் அதை இந்த lebel ல் வைப்போம்
05:53 ஆனால் இப்போதைக்கு அதில் சில நட்சத்திரங்களை வைப்போம்
06:01 இப்போது, Palette க்கு சென்று TextField ஐ தேர்ந்தெடுப்போம். credit amount மற்றும் debit amountக்கு அடுத்து text fieldகளை வைப்போம்.
06:16 Textfield இடங்களை காலியாக விடவேண்டும்.
06:20 இங்கே text ஐ edit செய்து ஏற்கனவே உள்ள text ஐ நீக்குகிறேன்
06:27 mouseஐ பயன்படுத்தி அதன் அளவை மாற்றுகிறேன்
06:35 அதை செய்தபின், இப்போது palette க்கு சென்று Button ஐ தேர்ந்தெடுப்போம்
06:42 உங்கள் frame க்கு கீழே ஒரு button ஐ வைப்போம்
06:48 label ஐ மாற்ற அதன் மீது ரைட் க்ளிக் செய்து
06:53 Edit text தேர்வை தேர்ந்தெடுத்து Get Balance என மாற்றுகிறேன்
06:58 இப்போது இது நம் GUI!
07:01 இப்போது Image tab (tab1) க்கு சென்று ஒரு படத்தை சேர்ப்போம்.
07:05 அதற்கு Palette க்கு சென்று
07:08 மற்றொரு Labelஐ தேர்ந்தெடுத்து அதை panelல் வைப்போம்.
07:13 இப்போது palette க்கு கீழே Properties Window ல் இருந்து, icon property க்கு சென்று வலப்பக்கமுள்ள மூன்று புள்ளிகள் மீது க்ளிக் செய்க.
07:26 icons properties window திறக்கிறது
07:28 இங்கே External Image ஐ தேர்ந்தெடுத்து, பின் வலப்பக்கமுள்ள மூன்று புள்ளிகள் மீது க்ளிக் செய்க.
07:35 உங்கள் applicaton ல் சேர்க்க விரும்பும் படத்தை தேர்ந்தெடுக்கவும்
07:41 நான் படத்தை தேர்ந்தெடுத்துள்ளேன். OKஐ க்ளிக் செய்க
07:48 mouse ஐ பயன்படுத்தி அதன் இடத்தை மாற்றுவோம்.
07:51 இங்கே labelல் டபுள் க்ளிக் செய்து அந்த text ஐ நீக்குவோம்
07:59 இப்போது ஒரு படத்தை சேர்த்துள்ளோம்
08:02 அடுத்து நம் GUI க்கு ஒரு menu ஐ சேர்ப்போம்
08:05 palette க்கு சென்று swing menus ல் Menu bar ஐ தேர்ந்தெடுப்போம்
08:12 Menu Bar ஐ தேர்ந்தெடுத்து பின் panel ன் மேலே க்ளிக் செய்க.
08:17 முன்னிருப்பாக இது இரு Menu labelகளை கொண்டுள்ளது: File மற்றும் Edit.
08:22 Edit textஐ டபுள் க்ளிக் செய்து அதை Help என மாற்றுகிறேன்
08:28 Fileன் கீழ் ஒரு துணை menuஐயும் சேர்க்கலாம்.
08:32 இப்போது இடப்பக்கம் Inspector அல்லது navigator ல், JMenu1 மீது ரைட் க்ளிக் செய்க,
08:39 Add From Palette பின் Menu Item ஐ தேர்ந்தெடுக்கவும்.
08:45 இது ஒரு MenuItemஐ சேர்க்கும்
08:47 அதன் பெயரை Exit எனவும் மாற்றலாம்.
08:54 இப்போது file menu க்கு கீழே ஒரு துணை menu ஐ சேர்த்து அதன் பெயரையும் மாற்றியுள்ளோம்
09:00 இப்போது, நம் GUI கிட்டத்தட்ட முடிந்தது.
09:03 ஒரு preview ஐ காண்போம்.
09:05 மேலே 'Preview Design' button ஐ க்ளிக் செய்க
09:09 நாம் செய்திருப்பதன் ஒரு preview ஐ இது காட்டும்.
09:12 இங்கே, buttonகள் வேலை செய்யாது.
09:16 ஆனால் code ஐ சேர்த்தபின், அனைத்தும் வேலைசெய்யும்.
09:20 preview ஐ மூடுவோம்
09:22 இப்போது, codeஐ சேர்ப்பதற்கு முன், input textfieldகளுக்கு சரியான variable பெயர்களைக் கொடுப்போம்.
09:28 Balance tabக்கு சென்று, இங்கே இந்த text fieldகளுக்கு சரியான variable பெயர்களைக் கொடுப்போம்.
09:34 inspector ல் JTextfield1 மீது ரைட் க்ளிக் செய்க.
09:40 change variable name ஐ தேர்ந்தெடுக்கவும்.
09:43 variable பெயரை Credit amount என மாற்றுவோம்
09:50 Okஐ க்ளிக் செய்க
09:53 design mode ல் இங்கே textfield மீது ரைட் க்ளிக் செய்யலாம்
09:56 Change Variable Name ஐ தேர்ந்தெடுக்கவும்
10:00 variable ஐ debitAmount என மாற்றுக
10:04 OK ஐ க்ளிக் செய்க
10:08 இந்த கடைசி label அதாவது நட்சத்திரங்கள் உள்ள textfields label ஐ resultBalance என மாற்றுகிறேன்
10:16 Change variable name தேர்வை மீண்டும் தேர்ந்தெடுத்து variable ஐ resultBalance என மாற்றுகிறேன்
10:23 OKஐ க்ளிக் செய்க
10:25 application ஐ வேலைசெய்ய வைக்க இப்போது codeஐ காண்போம்.
10:30 இப்போது இது என் உதாரண code
10:32 creditAmount ல் இருந்து getText() உம்;
10:37 debitAmount ல் இருந்து getText() உம் வேண்டும்,
10:39 balance ஐ கணக்கிட்டு amount ஐ கடைசி resultBalanceல் வைக்க வேண்டும்
10:44 இங்கே code ஐ copy செய்து பின் IDEக்கு வருவோம்
10:51 இப்போது Get Balance button மீது ரைட் க்ளிக் செய்க.
10:55 Events, Action மற்றும் Action Performed ஐ தேர்ந்தெடுக்கவும்
11:00 இது code ன் பகுதிக்கு அழைத்துச்செல்லும்
11:03 இங்கே button ஐ அழுத்தும்போது நடக்கும் செயல்பாட்டிற்கான code ஐ எழுதலாம் அல்லது paste செய்யலாம்.
11:10 copy செய்யப்பட்ட code ஐ இங்கே paste செய்கிறேன்
11:17 இந்த codeஐ சேமித்து பின் Design modeக்கு செல்வோம்
11:22 இப்போது application ஐ exit செய்ய code ஐ சேர்ப்போம்.
11:25 MenuItem ல் Exitல் ரைட் க்ளிக் செய்து Events, Action மற்றும் Action Performed ஐ தேர்ந்தெடுக்கவும்
11:40 source mode க்கு சென்று application ஐ வெற்றிகரமாக exit செய்ய code ஐ எழுதுவோம்
11:46 அது System.exit(1).
11:53 இப்போது code ஐ சேமித்து பின் நம் design modeக்கு செல்வோம்.
11:57 Exit MenuItemக்கு ஒரு shortcutஐயும் அமைப்போம்
12:02 இங்கே shortcut மீது டபுள் க்ளிக் செய்க
12:07 திறக்கும் Window ல் key stroke ல் Q என கொடுத்து Ctrlல் குறியிடுக பின் OKல் க்ளிக் செய்க
12:14 எனவே இப்போது application ல் இருந்து வெளியேற keyboard shortcut ஆக Ctrl Qஐ அமைத்துள்ளோம்
12:20 இப்போது நம் application முடிந்துவிட்டது
12:23 keyboard ல் F6 ஐ அழுத்தி இப்போது நம் application ஐ இயக்குவோம்.
12:30 இயக்க வேண்டிய main class ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
12:33 OKல் க்ளிக் செய்க
12:37 இதோ வந்துவிட்டது. இது நம் GUI
12:40 இப்போது இதை சோதிப்போம்
12:43 balance tabக்கு சென்று, credit amount 300 எனவும்
12:47 debit amount 200 எனவும் கொடுப்போம். 'Get Balance' ல் க்ளிக் செய்க
12:53 இது balance ல் சரியான amount ஐ கொடுக்கிறது.
12:56 இப்போது applicationல் இருந்து வெளியேறுவோம்.
12:58 File menu க்கு சென்று Exitஐ க்ளிக் செய்கிறேன்
13:02 keyboardல் Ctrl Q ஐ அழுத்தியும் application ஐ மூடலாம்
13:08 application முடிந்தது, இப்போது உங்களுக்கான பயிற்சி.
13:14 ஒரு Temperature convertor application ஐ உருவாக்கவும்.
13:18 இது முன்னர் போல இரு tabகளை கொண்டிருக்க வேண்டும்
13:21 ஒன்று Celsiusஐ Fahrenheit ஆக மாற்றவும் மற்றொன்று Fahrenheit ஐ Celsiusஆகவும் மாற்றவும்.
13:27 இது ஒரு input temperature ஐயும் ஏற்கவேண்டும்.
13:30 பின் மாற்றப்பட்ட temperature ஐ காட்ட வேண்டும்
13:33 இது மேலே File மற்றும் Help தேர்வுகளை காட்டும் ஒரு menu bar ஐயும் கொண்டிருக்க வேண்டும்
13:38 file menu ல் ஒரு Exit itemஉம் application ஐ மூட ஒரு keyboard shortcut உம் இருக்க வேண்டும்
13:46 இந்த பயிற்சியை நான் ஏற்கனவே செய்து விட்டேன்
13:48 அது இவ்வாறு இருக்க வேண்டும்
13:50 என் பயிற்சியை இயக்குகிறேன் இது என் GUI
13:56 இப்போது input temperature ஐ -40 Celcius என கொடுத்து get Fahrenheit ல் க்ளிக் செய்கிறேன்
14:05 சரியாக மாற்றப்பட்ட output temperature ஐ application கொடுக்கவேண்டும்.
14:10 இப்போது application ஐ மூட shortcut key அதாவது Ctrl Xஐ முயற்சிப்போம்.
14:18 எனவே keyboard shortcut ஐ பயன்படுத்தி வெற்றிகரமாக application ல் இருந்து வெளியேறிவிட்டோம்
14:25 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
14:29 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது.
14:32 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்.
14:37 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
14:42 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
14:46 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
14:52 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
15:03 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
15:13 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst