Linux/C3/More-on-sed-command/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | வணக்கம். More on sed பற்றிய spoken tutorial க்கு உங்களை வரவேற்கிறோம். |
00:06 | இந்த டுடோரியலில் நாம் sed பற்றிய மேலும் சிலவற்றை உதாரணங்களின் மூலம் பார்ப்போம். |
00:13 | இந்த tutorial இல் நான் பயன்படுத்துவது |
00:15 | Ubuntu Linux version 12.04 Operating System |
00:20 | GNU BASH version 4.2.24. |
00:24 | GNU bash version 4 அல்லது அதற்கு மேல் உள்ள version களில் மட்டுமே இதை பயன்படுத்த முடியும். |
00:32 | இதை பயன்படுத்துவதற்கு |
00:34 | Linux terminal ன் அடிப்படையை அறிந்து கொள்ள வேண்டும். |
00:37 | sed tools பற்றி அறிந்திருக்க வேண்டும் |
00:40 | அதற்குறிய tutorial களுக்கு கொடுக்கப்பட்டுள்ள எங்கள் website ஐ அணுகவும்: http://spoken-tutorial.org |
00:46 | Sed முக்கியமாக substitution செய்வதற்கும் |
00:49 | ஒரு input இல் இருக்கும் patternஐ நமக்கு ஏற்றது போல் replace செய்வதற்கும் பயன்படுகிறது. |
00:55 | original file ஆன seddemo.txt ஐ முதலில் பார்ப்போம். |
01:01 | “Kumar" என்ற வார்த்தை நான்காவது வரிசையில் இரண்டு முறையும், ஆறாவது வரிசையில் ஒரு முறையும் வருவதை கவனியுங்கள். |
01:10 | “Kumar” என தோன்றும் இடங்களில் எல்லாம் “roy” என replace செய்ய |
01:16 | Terminal க்கு சென்று இப்படி type செய்யவும் |
01:18 | sed” பின் ஒரு space, Single quotes இன் இடையே ‘s front slash opening square bracket small k capital K closing square bracket umar slash Roy slash’ அதன் பின் ஒரு space அடுத்து seddemo.txt. |
01:40 | Enter ஐ அழுத்தவும். |
01:43 | நான்காவது வரியை கவனிக்கவும். |
01:46 | “Kumar" என முதலில் தோன்றும் இடத்தில் மட்டுமே "Roy" என்று மாறியுள்ளது, இரண்டாவது இடத்தில் இல்லை |
01:52 | ஆறாவது வரியில் "Kumar" என்ற வார்த்தை ஒரு முறை தோன்றி இருந்தது, இது இப்போது மாற்றப்பட்டது. |
01:57 | எனவே, வரிகளின் முதல் entry கள் மட்டும் மாற்றப்பட்டதைப் பார்க்கிறோம். |
02:03 | ஏனென்றால், அது default ஆகவே வரியின் முதலில் match ஆகும் entry களில் மட்டுமே substitute செய்யப்படுகிறது. |
02:11 | Match ஆகக்கூடிய அனைத்து entry களிலும் substitute செய்ய flag g option ஐ பயன்படுத்த வேண்டும். |
02:17 | Prompt ஐ clear செய்து type செய்க |
02:20 | sed” பின் ஒரு space, Single quotes இன் இடையே ‘s front slash opening square bracket small k capital K closing square bracket umar slash Roy slash g’ Single quotes ஐ அடுத்து ஒரு space அடுத்து seddemo.txt
Enter ஐ அழுத்தவும் |
02:43 | இப்போது, நான்காவது வரியின் இரண்டு entryகளும் மாற்றப்பட்டுள்ளன.
|
02:48 | அதேபோல், பல substitution களை ஒரே நேரத்தில் செய்யலாம்.
|
02:53 | நமது seddemo.txt file இல் electronics என்கிற வார்த்தையை electrical என்றும் |
02:58 | மற்றும் civil என்கிற வார்த்தையை metallurgy என்றும் replace செய்ய வேண்டும் என்று வைத்துக்கொள்வோம்.
|
03:04 | அதற்கு Prompt ஐ clear செய்து
|
03:07 | type செய்க: “sed” பின் ஒரு space hyphen e space Single quotes இன் இடையே’ s slash electronics slash electrical slash g’ அடுத்து ஒரு space hyphen e space மீண்டும் Single quotes ’s front slash civil slash metallurgy slash g’ singles quotes ஐ அடுத்து ஒரு space seddemo.txt |
03:37 | Enter ஐ அழுத்தவும். |
03:39 | வார்த்தைகள் மாறியதை பார்க்கிறோம் . |
03:43 | நமக்கு 'anirban' இன் stream ஐ "computers" ல் இருந்து , "mathematics" என்று மாற்ற வேண்டும். |
03:49 | இந்நிலையில் நாம் type செய்ய வேண்டியது |
03:54 | sed பின் ஒரு space Single quotes இன் இடையே front slash Anirban slash s அடுத்து slash computers slash mathematics slash g' singles quotes ஐ அடுத்து ஒரு space பின் seddemo.txt |
04:11 | Enter ஐ அழுத்தவும் |
04:14 | Stream மாறிவிட்டதை பார்க்கலாம். |
04:17 | நாம் கொடுத்த command என்ன என்பதை பார்ப்போம். |
04:21 | முதலில் நாம் sed என எழுதுவோம், பின் Single quotes இன் இடையே நாம் match செய்ய நினைக்கும் pattern ஐ தர வேண்டும். |
04:28 | அதுவே "anirban" ஆகும் |
04:30 | இப்போது slash ஐ அடுத்து வேண்டிய செயல்பாடு தரப்படும். |
04:34 | அதுவே s. S ஆனது substitution என்பதை குறிக்கும் என நாம் அறிவோம். |
04:41 | பின் நாம் மாற்ற வேண்டிய pattern ஐ குறிப்பிடுகிறோம். இங்கு இது computer. |
04:47 | அதற்கு பதிலாக புதியதாக mathematics என்கிற வார்த்தையை Substitute செய்கிறோம் |
04:53 | அதே போல் sedஐ, file களுல் வரிகளை சேர்க்க அல்லது நீக்குவதற்கு பயன்படுத்தலாம். |
05:00 | ஒருவேளை "electronics" என்று stream அல்லாத வரிகளை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் எனில், |
05:06 | அதற்காகவே flag d உள்ளது. |
05:10 | எனவே டைப் செய்க: sed பின் ஒரு space Single quotes இன் இடையே front slash “electronics” பின் slash d singles quotes ஐ அடுத்து ஒரு space விட்டு seddemo.txt மீண்டும் ஒரு space அடுத்து ஒரு greater than sign பின் space nonelectronics.txt. |
05:31 | Enter ஐ அழுத்தவும் |
05:33 | Content களை காண type செய்க: cat space nonelectronics.txt |
05:43 | File இன் தொடக்கத்தில் ஒரு வரியில் student information கொடுக்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். |
05:49 | அதற்காக நம்மிடம் flag i உள்ளது |
05:54 | type செய்க: sed ஒரு space விட்டு Single quotes இன் இடையே ‘1i space Student Information’ space விட்டு பின் seddemo.txt |
06:10 | பின் Enter ஐ அழுத்தவும். |
06:13 | அதற்கான output ஐ பார்க்கலாம். |
06:15 | உண்மையில், இதைப் போல பல வரிகளை சேர்க்கலாம். |
06:20 | இதேபோல் நாம் இரண்டு வரிகளை சேர்க்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். மேலே கொடுக்கபட்டதை போல் அதை செய்வோம். |
06:26 | Student information உடன் academics ஐ யும் அடுத்த ஆண்டிற்கான entry இல் சேர்க்க வேண்டும். |
06:33 | இதற்காக நாம் எழுத வேண்டியது sed ஒரு space விட்டு Single quotes இன் இடையே ‘1i space Student Information slash n2013’ பின் space விட்டு seddemo.txt |
06:55 | அதன் பின் Enter ஐ அழுத்தவும். |
06:57 | String இல் 'informations' மற்றும் '2013' இன் இடையே slash n வந்துள்ளதை ஐ கவனிக்கவும். |
07:05 | slash n ஆனது. ‘2013’ ஐ student information இற்கு அடுத்த வரியில் எடுத்து வருவதை பாருங்கள். |
07:12 | நமது டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம் . |
07:14 | நாம் இது வரை பார்த்ததை நினைவு கூர்வோம். |
07:17 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: |
07:19 | Substitution Replacement |
07:21 | மற்றும் insertion |
07:24 | உங்கள் பயிற்சிக்காக seddemo.txt file ஐ பயன்படுத்தி |
07:30 | Ankit" என்பதை "Ashish"என்று replace அல்லது substitute செய்ய முயற்சி செய்யுங்கள். |
07:35 | கீழே கொடுக்கப் பட்டுள்ள link இல் உள்ள வீடியோவை காணவும் |
07:39 | இதில் Spoken tutorial project ஐ பற்றிய தகவலை சுருக்கமாக பார்க்கலாம். |
07:42 | உங்களிடம் நல்ல bandwidth இல்லையெனில் இதை download செய்து பார்க்கலாம். |
07:47 | Spoken tutorial team ஆனது spoken tutorial கள் மூலம் Workshop களை நடத்துகிறது. |
07:53 | Online test களில் பங்கேற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு certificates வழங்குகிறது. |
07:57 | மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
08:04 | Spoken Tutorial Project ஆனது Talk to a Teacher project இன் ஒரு பகுதி ஆகும். . |
08:09 | இந்த project ஆனது National Mission on Education through ICT, MHRD, Government of India வின் மூலம் இயங்குகிறது. |
08:16 | இந்த mission ஐ பற்றிய மற்ற விவரங்களுக்கு இந்த website ஐ http://spoken-tutorial.org\NMEICT-Intro காணவும் . |
08:22 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது Shankar thiyagarajan குரல் கொடுத்தது சண்முகப்பிரியா. நன்றி!! |