Linux-Old/C2/Desktop-Customization-14.04/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம். Desktop Customization பற்றிய spoken tutorial க்கு நல்வரவு.
00:08 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது

Launcher பற்றி Application களை Launcher இல் சேர்ப்பது மற்றும் நீக்குவது பல desktopகளை பயன்படுத்துவது Internet connectivity Sound settings Time and Date settings மற்றும் பிற user accounts க்கு மாறுவது பற்றி

00:27 இந்த டுடோரியலுக்காக நான் பயன்படுத்துவது Ubuntu Linux OS 14.04
00:34 Launcher இல் இருந்து தொடங்கலாம்
00:36 இயல்பாக Ubuntu Linux desktop இன் இடது பக்கம் இருக்கும் panelLauncher, இது சில default applicationகளைக் கொண்டிருக்கும்
00:44 அடிக்கடி பயன்படுத்தப்படும் applicationகளை எளிதாக அணுக Launcher உதவுகிறது
00:49 எனவே, Launcher இல் ஒரு program ன் desktop shortcutஐ கிளிக் செய்வதன் மூலம் அதை தொடங்கலாம்.
00:56 Defaultஆக சில applicationகளை Launcher கொண்டுள்ளது
01:00 நமது தேவைக்கேற்ப Launchercustomize செய்ய கற்றுக்கொள்வோம்
01:06 எனது அன்றாட பணிக்கு எனக்கு

Terminal, LibreOffice Writer, Gedit போன்ற applicationகள் தேவை.

01:15 இந்த applicationகளை Launcher இல் சேர்க்கலாம்
01:19 அதை செய்வதற்கு முன் எனக்கு தேவை இல்லாத applicationகளை நீக்கலாம்
01:25 VLC applicationஐ நீக்க வேண்டும் என்று வைத்து கொள்வோம்
01:30 VLC application ஐகானில் ரைட் கிளிக் செய்து Unlock from Launcherஐ தேர்ந்தெடுக்கவும்
01:37 VLC application ஐகானானது Launcher லிருந்து நீக்கப்பட்டது என்பதை நீங்கள் காணலாம்.
01:43 அதேபோல், நாம் அடிக்கடி பயன்படுத்தாத எல்லா shortcutகளையும் நீக்கலாம்.
01:49 எனது Desktop Launcherல் இருந்து சில applicationகளை நான் நீக்கியுள்ளதை நீங்கள் காணலாம்
01:55 இப்பொழுது நான் Terminal shortcutஐ Launcher இல் சேர்க்கிறேன்
02:00 Dash Home ஐ கிளிக் செய்யவும்
02:02 search bar இல் terminal என்று டைப் செய்யவும்
02:05 அதைத் திறக்க Terminal ஐகானை கிளிக் செய்யவும்
02:09 Launcher இல் Terminal ஐகானை நீங்கள் காணலாம்.
02:13 Terminal ஐகானை Launcher இல் சேர்க்க முதலில் ரைட் கிளிக் செய்யவும்.
02:18 பிறகு Lock to Launcher ஐ கிளிக் செய்யவும்
02:21 Launcher இல் application shortcutகளை சேர்க்க மற்றொரு வழி, இழுத்து விடுதல்ஆகும். நான் இப்போது இதை விளக்குகிறேன்
02:30 Dash Home ஐ திறந்து search bar இல் LibreOffice என டைப் செய்யவும்
02:37 LibreOffice ஐகானை Launcher குள் இழுக்கவும்
02:42 நாம் அவ்வாறு செய்யும்போது, "Drop to Add application" என்று கூறி உதவி உரை தோன்றும். எந்த உதவி உரை தோன்றவில்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம்.
02:51 இப்போது, Launcher ல் LibreOffice ஐகானை விட வேண்டும்.
02:55 Launcher ல் shortcut இப்போது சேர்க்கப்பட்டதை நீங்கள் காணலாம்.
03:00 இவ்வாறு Launcher ல் shortcut களைச் சேர்க்கலாம்.
03:04 Ubuntu Linux OS இல் அடுத்த முக்கிய அம்சம் multiple desktop அல்லது Workspace Switcher ஆகும்.
03:12 சில நேரங்களில் நாம் பல application களில் வேலை செய்வோம்
03:17 அப்பொழுது நாம் ஒரு application இலிருந்து வேறொரு application க்கு மாற கடினமாக இருக்கலாம்
03:22 இதை மிகவும் எளிதாக மாற்ற Workspace Switcher ஐ நாம் பயன்படுத்தலாம்
03:27 மீண்டும் Launcher ற்கு வருவோம்
03:30 Launcher இல் Workspace Switcher ஐகானை கண்டறிந்து அதை கிளிக் செய்யவும்
03:36 இது நான்கு பாகங்களை கொண்ட 4 Desktops ஐ காட்டும்
03:40 Default ஆக மேல் லெப்ட் Desktop தேர்ந்தெடுக்க பட்டிற்கும்
03:44 அந்த Desktop இல் தான் இப்பொழுது நாம் வேலை செய்து கொண்டிருக்கிறோம்
03:48 தற்பொழுது இரண்டாவது Desktop ஐ கிளிக் செய்து அதைத் தேர்ந்தெடுப்போம்
03:53 Launcher லிலுள்ள ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் இங்கே Terminal ஐத் திறப்பேன்.
03:59 இப்பொழுது Workspace Switcher ஐ மீண்டும் கிளிக் செய்யவும்
04:02 இரண்டாவது Workspace Switcher இல் Terminalஐயும் முதலாவதில் Desktop ஐயும் நீங்கள் காணலாம்.
04:09 இந்த வழியில், நீங்கள் multiple Desktops இல் வேலை செய்யலாம்.
04:12 முதல் Desktop இற்கு மீண்டும் வருவோம்.
04:15 Trash ஆனது Launcher இலுள்ள மற்றொரு முக்கிய ஐகான்.
04:19 நீக்கப்பட்ட fileகள் மற்றும் folderகள் அனைத்தும் Trash இல் இருக்கும்
04:23 ஒரு file ஐ நாம் தற்செயலாக நீக்கினால் அதை மீண்டும் Trashஇல் இருந்து மீட்கலாம்
04:28 இதை விளக்க, நான் என் Desktop இல் இருக்கும் DIW fileஐ நீக்குகிறேன்
04:33 அந்த fileஇல் ரைட் கிளிக் செய்து Move to Trash என்ற தேர்வை கிளிக் செய்யவும்
04:38 அதை மீண்டும் பெற, Launcher இல் உள்ள Trash ஐகானைக் கிளிக் செய்க.
04:43 Trash folder திறக்கிறது
04:46 fileஐ தேர்ந்தெடுத்து ரைட் கிளிக் செய்து Restore ஐ கிளிக் செய்க
04:50 Trash விண்டோவை மூடிவிட்டு Desktop இற்கு மீண்டும் வரவும்
04:54 முன்பு நாம் நீக்கிய file ஐ இப்போது மீண்டும் பெற்றிருப்பதைக் காணலாம்
04:59 உங்கள் கணினியிலிருந்து நிரந்தரமாக ஒரு file ஐ நீக்க, முதலில் அதைத் தேர்ந்தெடுத்து, Shift + Delete ஐ அழுத்தவும்.
05:07 நீங்கள் நிரந்தரமாக DIW ஐ நீக்க வேண்டுமா என்று ஒரு dialog box தோன்றும். Delete ஐ கிளிக் செய்க
05:15 Trash ஐகானை மீண்டும் கிளிக் செய்யவும்
05:18 நமது கணினியில் இருந்து அது நிரந்தரமாக நீக்கப்பட்டதால் அந்த file ஐ Trash folderல் நம்மால் காண முடியாது
05:24 இப்போது, Desktop ன் மேல் வலது மூலையில் உள்ள சில applicationsஐ பார்ப்போம்
05:31 முதலாவது Internet connectivity
05:34 நீங்கள் Lan அல்லது wifi network குடன் இணைக்கப்பட்டிருந்தால் இணைப்பு நிறுவப்படும்.
05:39 நீங்கள் இதை இங்கே காணலாம்.
05:42 உங்களுக்கு access செய்ய விரும்பும் networkஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
05:46 network ஐ Enable / Disable செய்வதற்கு Enable Networking option ஐ check/uncheck செய்க
05:52 Edit connections optionஐ பயன்படுத்தி networks ஐ நாம் edit செய்யலாம்
05:57 அடுத்த option Sound. அதை கிளிக் செய்க
06:00 நீங்கள் இங்கே ஒரு ஸ்லைடர் பார்க்க முடியும். இது நமது விருப்பப்படி, ஆடியோ நிலைகளை அதிகரிக்க அல்லது குறைக்க உதவுகிறது.
06:07 Sound Settings ஐ கிளிக் செய்வதன் மூலம் நமது கணினியின் ஒலி நிலைகளை மேலும் சரிசெய்யலாம்.
06:14 இந்த விண்டோ வில் உள்ள அமைப்புகளை நீங்களே ஆராய்நது பாருங்கள்
06:17 அடுத்த ஐகான் Time & Date
06:20 இந்த ஐகானில் கிளிக் செய்தால், calendar திறக்கும். தற்போதைய தேதி, மாதம் மற்றும் ஆண்டை இங்கே காணலாம்.
06:29 அம்பு குறிகள், நமது விருப்பப்படி மற்ற மாதங்களுக்கு மற்றும் ஆண்டுகளுக்கு செல்ல அனுமதிக்கின்றன.
06:35 Time & Date Settingsஐ கிளிக் செய்வதன் மூலம் தேதி மற்றும் நேரத்தை திருத்தலாம். இந்த option ஐ மேலும் நீங்களே ஆராய்நது பாருங்கள்.
06:44 அடுத்து wheel ஐகானில் கிளிக் செய்க
06:47 இங்கு நாம் Log Out மற்றும் Shut Down போன்ற சில shortcut optionகளைப் பார்க்கலாம்.
06:53 நமது கணினியில் உள்ள அனைத்து User accounts களையும் காணலாம்.
06:59 அந்த குறிப்பிட்ட userஐக் கிளிக் செய்வதன் மூலம் நாம் விரும்பும் user account க்கு மாறலாம்.
07:05 மொத்த சுருக்கம் காண்போம்
07:07 இந்த tutorialஇல் நாம் கற்றது

Launcher பற்றி Launcher இல் உள்ள applicationகளை நீக்குவது மற்றும் சேர்ப்பது multiple desktops பயன்படுத்துவது Internet connectivity Sound settings Time & Date settings மேலும் மற்ற user account களுக்கு மாறுவது.

07:26 இந்த இணைப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது
07:32 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
07:39 மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும்
07:42 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
07:53 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது சந்தோஷ். குரல் கொடுத்தது சண்முகப்ரியா. நன்றி

Contributors and Content Editors

Nancyvarkey, Priyacst