LibreOffice-Suite-Writer/C4/Creating-newsletter/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search

Resources for recording Creating Newsletter

TIME NARRATION
00:00 Writer இல் Multiple columns-உடன் newsletters உருவாக்குவது குறித்த tutorial க்கு நல்வரவு!
00:07 இதில் Writer இல் newsletter களை உருவாக்குவது; செய்யக்கூடிய சில வசதிகள் குறித்து கற்போம்.
00:17 இங்கு பயனாவது Ubuntu 10.04 மற்றும் LibreOffice Suite 3.3.4 .
00:27 newsletter என்பது subscriber களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் சுற்றுக்கு அனுப்பப்படும் வெளியீடாகும். உதாரணமாக periodical, pamphlet போல.
00:39 இதில் sectionகளாக பல column கள் உள்ளதால் படிப்போருக்கு வெவ்வேறு கட்டுரைகளை தேர்ந்து படிக்க உதவுகிறது.
00:47 Writer இல் சுலபமாகவும் வேகமாகவும் படிக்க newsletter களை உருவாக்கலாம்.
00:55 “File”, “New” மற்றும் “Text document” option இல் முறையே சொடுக்கி புதிய document-ஐ திறக்கலாம்.
01:03 இந்த document ஐ “Newsletter” என்ற பெயரில் சேமிக்கலாம்.
01:13 “Newsletter” என்னும் புதிய text document உள்ளது.
01:17 document இல் column களை உள்நுழைக்கலாம்.
01:20 menu bar இல் “Format” button மீதும், பின் “Columns” மீதும் சொடுக்குக.
01:27 ஒரு dialog box பல option களுடன் தோன்றுகிறது.
01:31 column களின் எண்ணிக்கையை தேர்ந்தெடுக்கவும்.
01:34 அகலம், இடைவெளியை அமைக்கவும்.
01:37 பிரிக்கும் கோடுகளின் பல properties-ஐயும் அமைக்கவும்.
01:42 column field இன் மதிப்பை “2” என மாற்றி அமைப்போம்.
01:49 column field இன் பக்கக்தில் உள்ள ஐந்து icon களும் கிடைக்கக்கூடிய ஒழுங்கின் முன் பார்வையை காட்டுகின்றன.
01:56 இரண்டாம் ஒழுங்கின் மீது சொடுக்கலாம்.
01:59 column களின் properties ஐ நிர்ணயிக்கும் மற்ற மதிப்புகளை default ஆக விடவும்.
02:05 “OK” -ஐ சொடுக்குக.
02:08 text பகுதியை இரண்டு column களாக காணலாம்.
02:12 முதல் column மில் ஒரு கட்டுரை எழுதலாம்.
02:15 அதற்கு “Nature” என தலைப்பிட்டு font ஐ தடிமனாக்கி அளவு 15 ஆக்குவோம்.
02:21 கீழே அது குறித்து ஒரு கட்டுரை எழுதுவோம்.
02:25 முதல் column மின் இறுதியை அடைந்ததும் cursor தானியங்கியாக அடுத்த column க்கு போவதை காணலாம்.
02:33 column மில் படத்தைக்கூட நுழைத்து மறு அளவு செய்து கொள்ளலாம்.
02:39 இந்த column மில் இடைவெளியை விட்டு அடுத்த கட்டுரையை எழுதலாம்.
02:46 அதற்கு முதலில் “Sports” என தலைப்பு தடிமனாக அளவு 15 இல் கொடுத்து அதன் கீழ் ஒரு கட்டுரை எழுதுவோம்.
02:56 ஆகவே column கள் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை சுலபமாக படிக்க உதவுகிறது.
03:02 சில வாக்கியங்களை நீக்கி, முதல் column மில் மட்டும் இருக்கும்படி செய்வோம்.
03:08 மேலும் column களை அணுக “insert” button பின் “Manual Break” மீது சொடுக்குக.
03:16 dialog boxஇல் “column break” button, பின் “OK” மீது சொடுக்குக
03:23 cursor அடுத்த column க்கு தானியங்கியாக செல்வதை காணலாம்.
03:27 இந்த column மில் எழுத ஆரம்பிக்கலாம்.
03:31 எல்லா ஒழுங்கு செய்யும் option கள்,
03:33 “Align left”, “Align right”,
03:36 text க்கு “Background Color” சேர்த்தல்,
03:38 text “Highlighting” போன்றனவும் இதர அம்சங்களும்
03:41 text ஐ அழகாக்க பயன்படும்.
03:44 உதாரணமாக, ஒரு text பகுதியை தேர்ந்தெடுத்து பின்புல நிறம் அமைக்க விரும்பலாம்.
03:51 toolbar இல் “Background Color” icon பின் “Green 4” மீது சொடுக்குக
03:59 தேர்ந்தெடுத்த text இன் Background Color இளம் பச்சை ஆகிறது.
04:05 அதே போல வெவ்வேறு நிறங்களை text இன் வெவ்வேறு பகுதிகளுக்கு அமைக்கலாம்.
04:10 newsletter க்கு bannerகளும் அமைக்கலாம். இதற்கு drawing toolbar... “Text” option இல் சொடுக்குக.
04:18 இப்போது text இல்லாத ஓரிடத்தில் text பெட்டி அமைக்கவும்.
04:24 இதில் எந்த text டையும் எழுத அது banner அல்லது விளம்பரமாக செயல்படும்.
04:30 ஆகவே எழுதுவோம், “This is a newsletter”.
04:35 இந்த text க்கு சில செயல்களை அமைக்கலாம்.
04:37 உதாரணமாக, text இன் மீது வலது சொடுக்கி “Text” option மீது சொடுக்குக.
04:45 ஒரு dialog box “Text”, “Text Animation” என்ற tab களுடன் தோன்றுகிறது.
04:50 “Text Animation” tab மீது சொடுக்குக
04:53 “Effects” field இல் பல option கள் உள்ளன.
04:58 newsletter ல் உள்ள text கண் சிமிட்ட “Blink” option மீது சொடுக்குக.
05:04 “OK” மீது சொடுக்குக.
05:07 “This is a newsletter” என்ற text கண் சிமிட்டுகிறது.
05:13 மேலும் சில விளைவுகளையும் graphics களையும் text க்கு கொடுக்கலாம்.
05:18 அடுத்து பக்கத்தில் புதிய கட்டுரை எழுத “insert” button-ஐ சொடுக்குக
05:25 பின் “Manual Break” option மீது சொடுக்குக.
05:29 dialog boxயில் “Page break” மீது சொடுக்குக.
05:34 “OK” மீது சொடுக்குக.
05:37 cursor அடுத்த பக்கத்துக்கு தானியங்கியாக செல்கிறது.
05:40 இங்கும் முந்தைய பக்கத்தின் அதே column ஒழுங்கு இருக்கிறது.
05:46 கட்டுரையின் சொற்களை எண்ண text யின் ஒரு பகுதியையோ அல்லது முழு document ஐ யோ தேர்ந்தெடுக்கவும்.
05:53 menu bar இல் “Tools” option மீது சொடுக்குக.
05:57 கீழிறங்கும் பெட்டியில் “Word Count” option மீது சொடுக்குக
06:02 dialog box-ல் text யின் பகுதி மற்றும் முழு document-ன் சொற்களின் எண்ணிக்கை காட்டப்படுகிறது
06:10 text யின் பகுதி மற்றும் முழு document-ன் மொத்த font க்களின் எண்ணிக்கையையும் அது காட்டுகிறது.
06:18 document ஐ எழுதும் போதும் spell checkerஐ தானியங்கியாக பயன்படுத்தலாம்.
06:23 toolbar இல் “AutoSpellcheck” icon-ஐ சொடுக்குக.
06:27 இப்போது கட்டுரை எழுத, தவறுகள் இருந்தால் Writer தானியங்கியாக அவற்றை கீழே சிவப்பு கோடிட்டு காட்டுகிறது.
06:37 உதாரணமாக, “Cat” என்ற சொல்லை “C -A- A -T” என எழுதி space-bar ஐ தட்டினால் அதன் கீழ் சிவப்பு கோடு காட்டப்படுகிறது.
06:48 சொல்லை திருத்தியதும் சிவப்பு கோடு காணாமல் போகிறது.
06:52 முன்னே tutorialகளில் பார்த்த எல்லா ஒழுங்கு செய்யும் option களும் செய்தி மடல்களுக்கும் பொருந்தும்.
07:01 இத்துடன் இந்த Tutorial முடிகிறது.
07:06 சுருங்கச்சொல்ல கற்றது: Writer இல் newsletter களை உருவாக்குவது;மற்றும் அதில் செய்யக்கூடிய சில வசதிகள்.
07:17 தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது
07:24 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணலாம்.
07:28 The Spoken Tutorial திட்டக்குழு
07:31 spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
07:34 இணையத்தில் பரிட்சை தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது
07:38 மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org
07:44 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
07:48 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
07:56 மேற்கொண்டு விவரங்களுக்கு
08:00 spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
08:07 தமிழாக்கம் கடலூர் திவா, நன்றி

Contributors and Content Editors

Nancyvarkey, Priyacst