LibreOffice-Suite-Impress/C2/Creating-a-presentation-document/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:00 Impress இல் presentation தயாரித்தல், அடிப்படை ஒழுங்கு செய்தல் குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00:08 நாம் கற்கப்போவது Impress சாளரத்தின் பகுதிகள், slide ஐ உள்நுழைப்பது, பிரதி எடுப்பது, எழுத்துரு, எழுத்துருவை ஒழுங்கு செய்வது.
00:21 இங்கு பயனாவது Ubuntu Linux 10.04 மற்றும் LibreOffice தொகுப்பு பதிப்பு 3.3.4
00:29 முன்னே நாம் உருவாக்கிய “Sample Impress” presentation ஐ திறப்போம்.
00:35 திரையில் உள்ளதை சுற்றிப்பார்க்கலாம்.
00:39 நடுவில் உள்ள ‘Workspace’ இல்தான் நாம் வேலை செய்கிறோம்.
00:44 காண்பது போல “Workspace” இல் “View buttons” எனும் 5 கீற்றுகள் உள்ளன.
00:49 இப்போது “Normal” கீற்று செயலில் உள்ளது.
00:52 தனி slide களை உருவாக்க இதுவே முதன்மை காட்சி.
00:55 “Outline” காட்சி, தலைப்புகளையும், ஒவ்வொரு slide க்கும் புல்லட்டுடன் எண்ணிட்ட வரைகோடு ஒழுங்கில் பட்டியலை காட்டும்.
01:03 “Notes” காட்சியில் குறிப்புகளை எழுதலாம்; அவை presentation இல் தோன்றா.
01:10 “Handout” காட்சி slide களை, அச்சிட்டு வினியோகிக்க.
01:14 இங்கே ஒரு பக்கத்தில் எத்தனை slide களை அச்சிடலாம் என்று தேர்வுசெய்யலாம்.
01:19 “Slide Sorter” காட்சி slide களின் சிற்றுருக்களை காட்டும்.
01:23 “Normal” காட்சி button மீது சொடுக்கலாம்.
01:26 திரையில் இடது பக்கம் “Slides” பலகத்தை காணலாம். அதில் presentation slide களின் சிற்றுருக்கள் தெரிகின்றன.
01:34 வலது பக்கம் “Tasks” பலகத்தில் 5 தொகுதிகள் உள்ளன.
01:40 Layouts தொகுதியில் முன்தொகுத்த இட அமைவுகள் உள்ளன.
01:43 அவற்றை அப்படியே அல்லது தேவைக்கு தகுந்தபடி மாற்றி பயன்படுத்தலாம்.
01:48 இந்த tutorial வரிசையில் மேலே இந்த தொகுதி விவரங்களை பார்க்கலாம்.
01:53 ஒரு slide ஐ உள்நுழைப்பதை பார்க்கலாம். “Slides” பலகத்தில் இரண்டாம் slide மீது சொடுக்கி தேர்ந்தெடுக்கலாம்.
02:02 “Insert” பின் “Slide” மீது சொடுக்குக.
02:05 இரண்டாம் slide க்கு அடுத்து புதிய வெற்று slide நுழைக்கப்பட்டது.
02:10 slide க்கு தலைப்பிட ‘Click to add Title’ உரை பட்டை மீது சொடுக்குக.
02:17 ‘Short Term Strategy’ என type செய்து உரைப் பெட்டிக்கு வெளியே சொடுக்கலாம்.
02:23 இப்படியாக தலைப்பை சேர்க்கலாம்.
02:26 slide ஐ பிரதி எடுக்க இரண்டு வழிகள் உள்ளன.
02:30 முதல் வழியாவது; “Insert”, பின் “Duplicate Slide” மீது சொடுக்குவது.
02:35 முந்தைய படியில் உருவாக்கிய slide போலவே இன்னொன்றுக்கு நுழைக்கப் பட்டது.
02:42 மாற்றாக, “Workspace” பலகத்தில் slide sorter காட்சியை “Slide Sorter” கீற்றில் சொடுக்கி தேர்க.
02:50 7 ஆம் slide ஐ வலது சொடுக்க வரும் context menu வில் “Copy” ஐ சொடுக்கி அதை பிரதி எடுக்கலாம்.
02:58 கடைசி slide மீது வலது சொடுக்கி Paste மீது சொடுக்குக >>
03:01 ‘After’ ஐ தேர்ந்தெடுத்த பின் ‘OK’ மீது சொடுக்குக.
03:04 slide இன் ஒரு பிரதியை presentation இன் கடைசியில் உருவாக்கி விட்டோம்!
03:10 எழுத்துருக்களையும் அவற்றை ஒழுங்கு செய்வதையும் பார்க்கலாம்.
03:15 ‘Long term goal’ என தலைப்பிட்ட slide மீது இரட்டை சொடுக்கி தேர்ந்தெடுக்கவும்.
03:20 “Body” உரைப்பெட்டி மீது சொடுக்கி, உரை முழுதும் தேர்ந்தெடுத்து, நீக்கவும்.
03:26 பின் type செய்யலாம் : reduce costs , reduce dependence on few vendors, develop customized applications
03:37 எழுத்துருவின் வகை, அளவு ஆகியன மாற்றுவது LibreOffice Writer போலவே.
03:43 உரை வரியை தேர்ந்தெடுக்கவும். “Text Format” tool bar இல் எழுத்துரு வகையை “Albany” இலிருந்து “Arial Black” க்கு மாற்றவும்.
03:52 எழுத்துரு அளவு “32” இலிருந்து “40” க்கு மாற்றவும்.
03:56 உரைப்பெட்டிக்கு வெளியே எங்காவது சொடுக்குக.
03:59 எழுத்துரு மாறிவிட்டது.
04:02 எழுத்துருவை மாற்ற main menu வில் முறையே Format, Character தேர்வில் சொடுக்கியும் செய்யலாம்.
04:09 திறக்கும் உரையாடல் பெட்டியில் எழுத்துரு, அதன் பாங்கு, அளவு ஆகியவற்றை தேவைக்கேற்ப அமைக்கலாம்.
04:16 உரையாடல் பெட்டியை மூடலாம்.
04:19 எழுத்துரு நிறம் மாற்ற, ‘Development up to present’ என தலைப்பிட்ட slide ஐ தேர்ந்தெடுக்கலாம்.
04:25 உரைப்பெட்டி மீது சொடுக்கி உரை முழுதும் தேர்ந்தெடுக்கவும்.
04:30 font colour Icon க்கு அடுத்துள்ள கீழ் அம்புக்குறி மீது சொடுக்கி. விரும்பும் நிறத்தை தேர்ந்தெடுக்கவும்.
04:37 உரைப்பெட்டிக்கு வெளியே எங்கேனும் சொடுக்குக.
04:40 நிறத்தில் மாறுதலை காணலாம்.
04:43 தடிமன், சாய் எழுத்து, கீழ் கோடு போன்றவைகளும் Writer ஆவணங்களைப் போலவே.
04:50 ‘Recommendations’ என தலைப்பிட்ட slide ஐ தேர்ந்தெடுக்கவும்.
04:53 “Body” உரைப்பெட்டி மீது சொடுக்கி, ஒரு வரி உரை தேர்ந்தெடுக்கவும்.
04:58 தடிமன், சாய் எழுத்து, கீழ் கோடு சின்னங்கள் மீது சொடுக்குக.
05:03 உரைப்பெட்டிக்கு வெளியே சொடுக்குக.
05:06 உரையில் மாற்றங்களை பாருங்கள்.
05:08 இத்துடன் இந்த டுடோரியல் முடிவுக்கு வருகிறது.
05:11 நாம் கற்றது Impress சாளரத்தின் பாகங்கள்; slide களை உள்நுழைப்பது, slide களை பிரதி எடுப்பது, எழுத்துருக்கள், எழுத்துருக்களை ஒழுங்கு செய்வது.
05:24 இந்த பயிற்சியை செய்து பாருங்கள்.
05:28 புதிய presentation ஒன்று உருவாக்குக.
05:30 3ஆம் 4 ஆம் slide களுக்கு இடையில் ஒரு slideஐ உள்நுழைக்கவும்.
05:35 presentation இன் இறுதியில் நான்காம் slide இன் பிரதி ஒன்றை உருவாக்கவும்.
05:40 2 ஆம் slide இல் ஒரு உரைப்பெட்டியை உருவாக்கவும். அதில் உரையை Type செய்க.
05:45 உரை ஒழுங்கை 32 எழுத்துரு அளவாக்கவும்.
05:49 உரையை தடிமன், சாய் எழுத்து, கீழ் கோடிட்டது, நீல நிறம் என மாற்றவும்.
05:56 கீழ் வரும் தொடுப்பில் உள்ள விடியோவை காணவும்.
05:59 அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
06:02 இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள்.
06:07 spoken tutorial களை பயன்படுத்தி spoken tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
06:12 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
06:16 மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் எழுதவும். contact@spoken-tutorial.org
06:23 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
06:27 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
06:35 மேலும் விவரங்களுக்கு. http://spoken-tutorial.org/NMEICT-Intro
06:46 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

Chandrika, Nancyvarkey, Priyacst