LibreOffice-Suite-Base/C4/Indexes-Table-Filter-SQL-Command-window/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
00:00 | LibreOffice Base மீதான Spoken tutorial க்கு நல்வரவு |
00:03 | இந்த tutorial நாம் கற்கபோவது, Indexes, Table Filter மற்றும் SQL Command window |
00:14 | முதலில் Indexes ஐ அறிவோம் |
00:16 | Index என்றால் என்ன? |
00:18 | index என்பது database table க்குள் வேகமாக records ஐ கண்டுபிடிக்கவும் அடுக்கவும் செய்யும் ஒரு வழியே ஆகும் |
00:26 | records index செய்யப்பட வேண்டிய table லில் ஒன்று அல்லது பல field களை நாம் தேர்ந்தெடுக்க முடியும் |
00:36 | நாம் தேர்ந்தெடுத்த field அல்லது field கள் பொருத்து Index, records ன் இடத்தை சேமிக்கிறது |
00:43 | எனவே data ஐ பெற,Base, index ஐ பயன்படுத்தி நேரடியாக, data இடத்திற்கு நகரலாம் |
00:51 | மேலும் data ஐ கண்டுபிடுக்க அனைத்து recordகளையும் scan செய்வதை விட இது மிகவும் வேகமானது |
00:59 | table ன் primary key தானாக index செய்யப்படுகிறது |
01:03 | நம் உதாரண Library database க்கு ஒரு index ஐ உருவாக்கலாம். |
01:09 | Books table ல் Title column க்கு book title களில் தேடுதலை வேகப்படுத்தும் ஒரு index ஐ உருவாக்குவோம் |
01:18 | ஏற்கனவே நம் Library database திறந்தில்லை எனில் அதை திறப்போம் |
01:34 | Books table ஐ Edit mode ல் திறப்போம் |
01:39 | table design window ல், Tools menu க்கு சென்று Index Design ஐ தேர்வோம் |
01:48 | Indexes window ல், unique Index ஆக Primary Key ஏற்கனவே சேர்க்கப்பட்டிருப்பதைக் கவனிக்கவும் |
01:57 | நம் index ஐ உருவாக்க இடப்பக்க கடைசி icon ‘New Index’ ஐ சொடுக்குவோம் |
02:05 | வலப்பக்கம் Index field க்கு அடியில் drop down list ல் Title ஐ தேர்க |
02:14 | இங்கே Ascending அல்லது Descending order ஐயும் தேர்ந்தெடுக்கலாம் |
02:19 | இடப்பக்கம் மூன்றாவது icon ஐ சொடுக்கி இந்த index ஐ ‘IDX_Title’ என பெயர்மாற்றலாம். அதற்கு அடுத்துள்ள Save icon ஐ பயன்படுத்தி சேமிக்கவும் |
02:37 | எனவே title field ல் நம் index உள்ளது |
02:42 | இந்த வழியில் Base ஐ பயன்படுத்தி table க்கு index களை உருவாக்க, திருத்த, பெயர் மாற்ற, அல்லது நீக்கவும் முடியும் |
02:51 | இப்போது assignment |
02:54 | Members table ல் பெயர்களுக்கு index உருவாக்கி அதை ‘IDX_MemberName’ என அழைக்கவும் |
03:03 | அடுத்து Table Filter என்றால் என்ன என காணலாம் |
03:07 | Table Filter feature, Base database ல் tables ஐ மற்ற application களிடம் இருந்து மறைக்க அனுமதிக்கிறது |
03:15 | உதாரணமாக, Library database ல் Books table தவிற அனைத்து table களையும் மறைப்போம் |
03:22 | இப்போது, Table Filter, Tools menu ல் உள்ளது |
03:27 | இங்கே அனைத்தையும் குறிநீக்கி Books table ல் குறியிடவும் |
03:33 | அதாவது, Books table ஐ மட்டும் மற்ற application களுக்குத் தெரியுமாறு குறிக்கிறோம் |
03:39 | Ok button ஐ சொடுக்குவோம் |
03:43 | அடுத்து View menu ல் Refresh Tables ஐ சொடுக்குவோம் |
03:50 | Books table மட்டும் தெரிவதைக் கவனிக்கவும் |
03:54 | மேலும் LibreOffice Writer அல்லது Calc ல் இருந்து இந்த database ஐ அணுகும்போது இங்கே Books table ஐ மட்டும் தான் பார்க்க முடியும் |
04:04 | மற்றொரு assignment: |
04:06 | 1. LibreOffice Writer ஐ திறந்து, Library database ஐ அணுகி, இருக்கும் table களை குறியிடவும் |
04:14 | 2. Base ல் அனைத்து table களையும் மீண்டும் பார்வைக்கு கொண்டுவரவும் |
04:19 | 3. Tables மீண்டும் இருக்கிறதா என சரிபார்க்க LibreOffice Writer ஐ மீண்டும் திறக்கவும் |
04:26 | கடைசியாக SQL command window பற்றி அறியலாம் |
04:31 | Tools menu ல் SQL ஐ தேர்வதன் மூலம் SQL command window அணுகப்படுகிறது |
04:41 | database க்கு SQL statement களை கொடுக்க இந்த window ஐ பயன்படுத்தலாம் |
04:47 | SQL query களை இயக்க Queries ஐயும் பயன்படுத்தலாம், ஆனால் நம்மால் database ல் இருந்து data ஐ கேட்க மட்டுமே முடியும். |
04:59 | அதாவது நம்மால் SELECT statementகளை மட்டுமே கொடுக்கமுடியும் |
05:04 | data மற்றும் data structures ஐ மாற்றும் அல்லது புது tableகளை இங்கே உருவாக்கும் SQL statementகளை இயக்க முடியாது |
05:14 | SQL command window, data manipulation மற்றும் data definition statements அல்லது language போன்றவற்றை பயன்படுத்த உதவுகிறது |
05:24 | Data Manipulation Language, அல்லது எளிய DML க்கு உதாரணங்கள் |
05:31 | INSERT, UPDATE மற்றும் DELETE data. |
05:37 | Data Definition Language, அல்லது எளிய DDLக்கு சில உதாரணங்கள் |
05:45 | CREATE TABLE, DROP TABLE மற்றும் ALTER statements. |
05:51 | முதலில் ஒரு DML உதாரணத்தைக் காணலாம் |
05:55 | Base window ல், Tools menu ல் SQL Command Window ஐ திறப்போம் |
06:02 | “Command to execute” text area: ல் பின்வருமாறு எழுதி ஒரு புது record ஐ Books table ல் உள்நுழைப்போம் |
06:12 | INSERT INTO "Books" ( "Title", "Author", "PublishYear", "Publisher", "Price") VALUES ('The Hobbit', 'J.R.R Tolkien', 2002, 'Oxford', 500); |
06:45 | Execute button ஐ சொடுக்குமுன், அந்த command ஐ நன்கு உற்றுநோக்குவோம் |
06:52 | INSERT statement, table மற்றும் field பெயர்களை பட்டியலிடுகிறது. பின் புது record க்கு போக வேண்டிய Values |
07:03 | table மற்றும் field பெயர்கள் இரட்டை மேற்கோள்களில் இருப்பதை கவனிக்கவும் |
07:11 | Base, case sensitive என தெரியும். Base பெயர்களை நாம் உருவாக்கியது போலவே ஏற்கும் என்பதை இரட்டை மேற்கோள்கள் உறுதிப்படுத்திகிறது |
07:22 | இந்த மேற்கோள்களைப் பயன்படுத்தவில்லை எனில், Base தானாக எல்லா பெயர்களையும் upper case ல் மாற்றிவிடும் |
07:31 | data type TEXT எனில் அதன் மதிப்பை சொல்ல ஒற்றை மேற்கோள்களைப் பயன்படுத்த வேண்டும் |
07:37 | NUMERIC field களுக்கு மேற்கோள்கள் தேவையில்லை |
07:43 | மேலும் AutoNumber field ஆக உள்ள BookId field ஐ சேர்க்கவேண்டியதில்லை |
07:51 | Base அந்த எண்களை தானாக உருவாக்கிக்கொள்ளும் |
07:56 | SQL ஐ இயக்கலாம். ‘Command successfully executed’ என்பதைக் கவனிக்கவும் |
08:05 | நாம் எழுதிய SQL லில் ஏதேனும் பிழை எனில், Base அதை சுட்டிக்காட்டும் |
08:12 | நாம் உள்நுழைத்த புது record ஐ காண Books table ல் double click செய்வோம் |
08:18 | அது கடைசி row ல் சேர்க்கப்பட்டுள்ளது |
08:23 | அடுத்து DDL உதாரணத்தைப் பார்க்கலாம் |
08:27 | AuthorId, Author மற்றும் Country என்ற field களுடன் Authors என்ற புது table ஐ உருவாக்குவோம் |
08:36 | SQL command window ல், திரையில் தெரிவதை எழுதுவோம்: |
08:43 | பின் இயக்குவோம் |
08:47 | மீண்டும் Tables list க்கு சென்று View menu ல் Refresh tables ஐ சொடுக்குவோம் |
08:54 | அங்கு நாம் உருவாக்கிய புது Authors table உள்ளது |
08:59 | DML பற்றி மேலும் அறிய, திரையில் காணும் தளத்திற்கு செல்லவும் |
09:06 | DDL பற்றி மேலும் அறிய திரையில் தெரியும் Wikipedia தளத்திற்கு செல்லவும் |
09:13 | இப்போது மற்றொரு assignment |
09:16 | 1. BookId 3 என உள்ள புத்தகத்தின் விலையை ரூ. 300 என அமைக்க UPDATE statement ஐ பயன்படுத்தவும் |
09:26 | 2. ‘'The Hobbit' என்ற தலைப்புடைய புத்தகத்தை நீக்கவும் |
09:30 | 3. author name ‘J.R.R. Tolkien’, மற்றும் country ‘England’ என்ற புது record ஐ Authors table லில் நுழைக்கவும் |
09:41 | 4. DROP statement ஐ பயன்படுத்தி database ல் இருந்து Authors table ஐ நீக்கவும் |
09:47 | இத்துடன் LibreOffice Base மீதான இந்த tutorial முடிகிறது |
09:52 | இதில் நாம் கற்றது, Indexes, Table Filter மற்றும் SQL Command window |
10:01 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
10:22 | மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் பிரியா. நன்றி. |