LibreOffice-Suite-Base/C2/Create-queries-using-Design-View/Tamil
From Script | Spoken-Tutorial
| TIME | NARRATION |
| 00:00 | LibreOffice Base குறித்த Spoken tutorial க்கு நல்வரவு! |
| 00:04 | இந்த டுடோரியலில் கற்பது: |
| 00:06 | Design View வில் Query ஐ உருவாக்குதல். |
| 00:10 | Query Design window வில் table கள் சேர்த்தல். |
| 00:13 | field களை தேர்வு செய்தல்; aliases அமைத்தல்; field களை வரிசைப்படுத்துதல்; மற்றும் query க்கு search criteria அமைத்தல். |
| 00:23 | நமக்கு அறிமுகமான Library database உதாரணத்தை பார்க்கலாம். |
| 00:29 | நம் Library database இல் புத்தகங்கள் மற்றும் உறுப்பினர்கள் குறித்த தகவல்களை வைத்திருக்கிறோம். |
| 00:37 | மேலும், உறுப்பினர்களுக்கு தந்த புத்தகங்களை தொடர ஒரு table உள்ளது. |
| 00:45 | இப்போது உறுப்பினர்களுக்கு தந்த எல்லா புத்தகங்களையும் பட்டியலிட ஒரு Query ஐ உருவாக்குவோம். |
| 00:54 | வேறு வகையில் சொல்ல உறுப்பினர்களுக்கு தந்த புத்தகங்களின் வரலாற்றை எழுதுவோம். |
| 01:03 | Library database ஐ திறப்போம். |
| 01:07 | இடது panel லில் Queries icon இல் சொடுக்கலாம். |
| 01:13 | வலது panel லில் ‘Create Query in Design view’ மீது சொடுக்கலாம். Query Design window எனும் ஒரு புதிய window வை காணலாம். |
| 01:28 | மேலே Add table or Query என்னும் ஒரு பாப் அப் விண்டோவை காண்கிறோம். |
| 01:39 | இங்குதான் query க்கு data source ஐ காட்டுவோம். |
| 01:46 | உறுப்பினர்களுக்கு தந்த புத்தகங்களின் history ஐ உருவாக்க நமக்கு மூன்று tableகளும் தேவை. |
| 01:57 | இதை list இல் Books table இல் சொடுக்கி வலது popup window வில் Add button மீது சொடுக்கி செய்யலாம். |
| 02:11 | அதே போல் BooksIssued table மற்றும் Members table க்கும் செய்வோம். <pause> |
| 02:19 | query design window க்கு பின் field இல் இந்த மூன்று tables களும் தோன்றுவதை காணலாம். |
| 02:26 | popup window வை மூடுவோம். |
| 02:31 | இது Query design window வை முன்னே கொண்டு வருகிறது. |
| 02:39 | மூன்று tables களூம் window வின் மேல் பாதியில் உள்ளன. |
| 02:46 | இங்கே table களுக்கிடையில் கொஞ்சம் இடம் நுழைக்கலாம். |
| 02:53 | வலது கோடியில் Members table ஐ சொடுக்கி இழுத்து விடலாம். |
| 03:01 | BooksIssued table ஐ மையத்துக்கு சொடுக்கி இழுத்து விடலாம். |
| 03:11 | இப்போது இந்த tableகளை இணைக்கும் கோடுகள்.... இவை முன்னே நிறுவிய தொடர்புகள். |
| 03:22 | தொடர்பின் விவரத்தை காண கோட்டின் மீது இரட்டை சொடுக்கு சொடுக்கலாம். |
| 03:30 | இப்போதைக்கு Query design window வின் கீழ் பாதியை பார்க்கலாம். |
| 03:37 | பல வரிகள் cellகள் உள்ளன. query ஐ design செய்யும் போது இவற்றை பூர்த்தி செய்யலாம். |
| 03:48 | Field column ஐ சோதிப்போம். |
| 03:53 | இவை விடையில் காண குறிப்பிட வேண்டிய fieldகள். |
| 04:01 | இதற்கு, முதலில் window வின் மேல் பாதியில் Books table இல் Title field ஐ சொடுக்குவோம். |
| 04:12 | அடுத்து Members table இல் Name field. |
| 04:17 | பின்னர் BooksIssued table இல் Issue Date field. |
| 04:24 | அடுத்து, Return date, actual return date
கடைசியாக checked in field. |
| 04:34 | window வின் கீழ் பாதியில் முதல் row வில் உள்ள fieldகளை பாருங்கள். |
| 04:44 | மூன்றாம் row வில் பொருத்தமான table பெயர்களையும்.... |
| 04:50 | அடுத்து, இரண்டாம் row வில் உள்ள ‘Alias’ ஐ காணலாம். |
| 04:57 | இங்குதான் தேர்ந்தெடுத்த field களுக்கு விவரமான பெயர்களை கொடுக்கலாம். |
| 05:04 | படத்தில் காண்பது போல aliase களை type செய்யலாம்.<pause> |
| 05:11 | aliase களை முடித்துவிட்டோம். |
| 05:15 | அடுத்து, Sort row ஐ காணலாம். |
| 05:20 | விடையை அடுக்க வேண்டிய வரிசையை இங்கே குறிப்பிடலாம். |
| 05:26 | கொடுக்கப்பட்ட புத்தகங்களின் history வேண்டுமென்பதால் அதை நேர ஒழுங்கில் அமைப்போம். |
| 05:34 | அதாவது Issue Date வாரியாக ascending order இல் அமைப்போம். |
| 05:42 | இதற்கு Sort row வில் ஒரு காலி cell லை Issuedate field கீழ் சொடுக்குவோம். மேலும் ‘Ascending’ மீதும் சொடுக்குவோம். |
| 05:56 | அடுத்த row வுக்கு போகலாம். - ‘Visible’ |
| 06:02 | இங்கு தேர்ந்தெடுத்த field கள் காணப்படுமா என check அல்லது un-check செய்து அமைக்கலாம். |
| 06:11 | default ஆக எல்லாம் checked. |
| 06:17 | அடுத்து, ‘Function’ row வுக்கு போகலாம். இது complex queryகளை உருவாக்க பயன்படுகிறது. இப்போதைக்கு விட்டுவிடுவோம். |
| 06:27 | ‘Criterion’ row வுக்கு போகலாம். |
| 06:32 | இங்கேதான் விடையை simple அல்லது complex criteria set க்கு அமைக்கலாம். |
| 06:40 | உதாரணமாக, memberகள் எடுத்துப்போய் திருப்பாத புத்தகங்களை மட்டும் query செய்யலாம். |
| 06:49 | அதாவது இன்னும் checked in ஆகாதவை. |
| 06:54 | ஆகவே CheckedIn field கீழ் ஒரு காலி cell ஐ இந்த row வில் சொடுக்குவோம். ‘Equals Zero’ என டைப் செய்வோம். |
| 07:05 | அவ்வளவுதான். இப்போது query ஐ ஓடவிடுவோம். |
| 07:10 | keyboard shortcut F5 ஐ அழுத்தலாம் அல்லது window மேலே Edit menu வில் சொடுக்கி
கீழே வரும் ‘Run Query’ இல் சொடுக்கலாம். |
| 07:27 | window வின் மேல் பாதியில் வரும் dataவை காண முடிகிறதா? |
| 07:31 | இவைதான் நம் query க்கான விடைகள். |
| 07:36 | Issue Date வாரியாக அடுக்கிய member களுக்கு தந்த புத்தகங்களின் சரித்திரத்தை பார்க்கிறோம். இந்த புத்தகங்கள் எதுவுமே இன்னும் திருப்பப்படவில்லை என்பதை கவனிக்க. |
| 07:51 | இப்போது கீழே query design area வுக்குப்போய் விரும்பியபடி மாற்றலாம். |
| 08:00 | உதாரணமாக, Checked In criterion ஐ நீக்கிவிடலாம். <pause> |
| 08:07 | இப்போது F5 ஐ மீண்டும் அழுத்தி query ஐ ஓட்டலாம். |
| 08:15 | இம்முறை இன்னும் பெரிய data பட்டியல் திருப்பப்படுகிறது. |
| 08:23 | அடுத்து, இந்த query ஐ சேமிக்க Control, S ஐ அழுத்தலாம். சின்ன popup window திறக்கிறது. |
| 08:34 | நம் query க்கு இங்கு விவரமான பெயரை கொடுக்கலாம். |
| 08:38 | ‘History of Books Issued to Members’ என type செய்யலாம். |
| 08:46 | Ok சொடுக்கி பின் window ஐ மூடலாம். |
| 08:52 | main Base window வில் query பெயரை இரட்டை சொடுக்கு சொடுக்கி இதை திறக்க முடியும். |
| 09:01 | இப்படியாக வெற்றிகரமாக query ஐ Design View ஐ பயன்படுத்தி உருவாக்கிவிட்டோம். |
| 09:09 | இப்போது பயிற்சி: |
| 09:12 | member Nisha Sharma வுக்கு தந்த புத்தகங்களின் list ஒன்றை தயார் செய்யவும். இது Issue date வாரியாக நேரப்படி அடுக்கப்பட வேண்டும். |
| 09:24 | இத்துடன் LibreOffice Baseஇல் Creating Queries in Design View மீதான இந்த Spoken Tutorial முடிகிறது. |
| 09:31 | கற்றவை: |
| 09:33 | Design View வில் ஒரு query உருவாக்குதல்.
Query Design window வில் tables சேர்த்தல் fields ஐ தேர்ந்தெடுத்தல் |
| 09:41 | aliases - அமைத்தல்
sorting order அமைத்தல் query க்கு search criteria அமைத்தல். |
| 09:48 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. இது http://spoken-tutorial.org ஆல் ஒருங்கிணைக்கப்படுகிறது. மேற்கொண்டு விவரங்கள் இந்த இணைப்பில் கிடைக்கும்..... |
| 10:10 | தமிழாக்கம் கடலூர் திவா, நன்றி |