LibreOffice-Suite-Base/C2/Add-Push-Button-to-a-form/Tamil
From Script | Spoken-Tutorial
(Redirected from LibreOffice-Suite-Base/C2/Add-Push-Button-to-a-form /Tamil)
Time | Narration |
---|---|
00:00 | LibreOffice Base குறித்த Spoken tutorial க்கு நல்வரவு! |
00:04 | இந்த tutorial இல், Push Button ஐ படிவத்தில் சேர்ப்பதை கற்போம். |
00:10 | கடைசி tutorialலில் பட்டியல் பெட்டி படிவ கட்டுப்படுத்தி ஒன்றை படிவத்தில் அமைப்பதை கற்றோம். |
00:17 | இந்த tutorial இல், Push Button களை படிவத்தில் சேர்ப்பதை கற்போம். |
00:25 | LibreOffice Base program திறந்து இல்லை எனில் அதை துவக்குவோம். <pause> |
00:36 | நம் Library தரவுத்தளத்தை திறப்போம். இப்போது இருப்பில் உள்ள தரவுத்தளத்தை திறப்பதை கற்றிருப்போம். |
00:45 | File menu வின் கீழ் Library database ஐ சொடுக்கி திறக்கலாம். |
00:52 | இப்போது Library database இல் இருக்கிறோம். |
00:56 | கடைசி tutorialலில் பார்த்த 'Books Issued to Members' form ஐ திறக்கலாம். |
01:04 | இதற்கு இடது panel இல் form icon ஐ சொடுக்கலாம். |
01:09 | பின் வலது panel இல் 'Books Issued to Members' form ல் வலது சொடுக்கி edit ஐ சொடுக்கவும். |
01:16 | Edit மீது சொடுக்குவோம். |
01:19 | இப்போது form design window வில் இருக்கிறோம். |
01:23 | Push button களை நம் form க்கு சேர்ப்பதற்கு முன், ஒரு List boxஐ உறுப்பினர் பெயர்களுக்கு அமைப்போம். |
01:34 | முந்தைய tutorial இல் இதை பயிற்சியாக கொடுத்தோம். |
01:41 | முதலில், Member Name label க்கு வலது பக்கம் உள்ள text boxஐ நீக்கலாம். |
01:50 | text boxயில் வலது சொடுக்கி கீழே உள்ள 'Cut' ஐ தேர்ந்தெடுக்கலாம். |
01:57 | text box போய்விட்டது. |
02:00 | அடுத்து, form element களை சீர் செய்வோம். |
02:04 | List boxகளுக்கு text boxகளை விட அதிக இடம் வேண்டும். ஆகவே இந்த form element களை படிவத்தில் கீழே கொண்டு போகலாம். |
02:15 | இப்படித்தான் செய்ய வேண்டும். |
02:17 | முதலில் Book title label க்கு கீழே எல்லா form element களையும் தேர்ந்தெடுக்கலாம். |
02:25 | இதற்கு, சொடுக்கி இழுத்து விடும் முறையை பயன்படுத்தலாம். |
02:32 | அடுத்து, தேர்ந்தெடுத்த இடத்தை சொடுக்கிப்பிடித்து, செங்குத்தாக கீழே இழுக்கலாம். |
02:39 | Book Title labelக்கு பக்கத்தில் இருக்கும் முதல் List boxக்கு போதிய இடம் இருக்கும்படியாக..... |
02:48 | இப்போது, அதை Member Name label க்கும் செய்வோம். |
03:05 | இப்போது, Member Name label க்கு இடது பக்கம் இருக்கும் இரண்டாம் List boxஐயும் அதே போல் சொடுக்கி இழுத்து விடுவோம். |
03:14 | அதை வலது பக்கம் கொண்டுப்போய், மற்ற form control களுடன் பொருந்துமாறு செய்யலாம். |
03:22 | விரைவு விசைகள் Control S ஐ பயன்படுத்தி மாறுதல்களை சேமிக்கலாம். |
03:33 | இப்போது, Push button களை படிவத்தில் சேர்க்க தயார்! |
03:39 | push button என்பது form control க்கு இன்னொரு உதாரணம். |
03:44 | நமக்கு OK, Cancel, next, மற்றும் Finish buttonகளை தெரியும். அவை Push button களுக்கு சிறந்த உதாரணங்கள். |
03:56 | Base இல், இந்த Push button களை நம் படிவத்தில் சேர்த்துவிட்டு அவற்றை சொடுக்கும்போது குறிப்பிட்ட செயல்களை செய்ய Base க்கு சொல்லலாம். |
04:07 | மேலும் Save, Undo, அல்லது Delete ஆகியன இன்னும் சில உதாரணங்கள். |
04:14 | எப்படி என பார்க்கலாம். |
04:17 | இப்போது நான்கு push button களை form க்கு சேர்க்கலாம்..... அனைத்து form element களுக்கும் கீழே.... இந்த படத்தில் தெரிவது போல..... |
04:29 | இதற்கு form design window க்கு போகலாம். |
04:35 | form control toolbar இல் Push button சின்னத்தின் மீது சொடுக்கவும். |
04:43 | இந்த சின்னம் Ok என்று எழுதிய button போல இருக்கிறது. |
04:50 | mouse pointer கூட்டல் குறி போல இருப்பதை கவனிக்க. |
04:57 | இப்போது, கீழே இடது பக்கம் நம் முதல் button ஐ வரையலாம். படிவத்தில் மற்ற elements க்கு கீழே அதை சொடுக்கி-இழுத்து-விடுங்கள். |
05:10 | தேவையான மறு அளவும் செய்யலாம். |
05:14 | இப்போது செய்த படியை இன்னும் 3 முறை செய்யலாம். <pause> |
05:27 | இப்போது, ஒரு கிடைக்கோட்டில் 3 பட்டன்கள் ஒழுங்காகி இருக்கின்றன. |
05:35 | படிவத்தில் பட்டன்களை வரைந்தாயிற்று; அவற்றின் labelகளை மாற்றலாம். |
05:43 | இதற்கு முதல் button மீது இரட்டை சொடுக்கு சொடுக்குவோம். |
05:49 | இப்போது Properties window ஐ பார்க்கிறோம். 'Label' இன் எதிரில் 'Save Record' என டைப் செய்யலாம். |
05:49 | இப்போது, இரண்டாம் button மீது இரட்டை சொடுக்கு சொடுக்குவோம். |
06:06 | properties window வில், Label' இன் எதிரில் 'Undo Changes' என டைப் செய்யலாம். |
06:15 | மூன்றாம் நான்காம் buttonகளுக்கு 'Delete Record' எனவும் |
06:25 | 'New Record' எனவும் முறையே type செய்யலாம். |
06:31 | இப்போது அவற்றின் செயல்களை நிர்ணயிக்கலாம். |
06:37 | இதற்கு, 'Save Record' button ஐ சொடுக்கலாம். |
06:43 | Properties window இல் ஸ்க்ரால் செய்து 'Action' label ஐ கண்டுபிடிக்கவும். |
06:51 | இங்கு கீழிறங்கும் list box இல் 'Save record' மீது சொடுக்கலாம். |
06:59 | இதே போல மீதி மூன்று button களுக்கும் செய்யலாம். |
07:05 | 'Undo Changes' buttonக்கு 'Undo changes' செயலை தேர்ந்தெடுக்கலாம். |
07:12 | 'Delete Record' buttonக்கு, 'Delete Record' செயலை தேர்ந்தெடுக்கலாம். |
07:18 | 'New Record' buttonக்கு, 'New Record' செயலை தேர்ந்தெடுக்கலாம். |
07:25 | ஆகவே, இப்போது push buttonகளை சேர்த்துவிட்டோம். |
07:29 | விரைவு விசை Control S ஆல் form ஐ சேமிப்போம். இந்த window வை மூடுவோம். |
07:40 | அடுத்த tutorial லில் நம் form க்கு இன்னும் மூன்றே மூன்று மாறுதல்களை செய்யலாம். |
07:48 | அதன் பின் form ஐ தரவு உள்ளீட்டுக்கும் மேம்பாட்டுக்கும் பயன்படுத்த இயலும். |
07:54 | உதாரணமாக, ஒரு நூலக உறுப்பினர் ஒரு புத்தகத்தை திருப்பும் போது இந்த form ஐ கொண்டு தரவுத்தளத்தை மேம்படுத்த இயலும். |
08:05 | உங்களுக்கான பயிற்சி இதோ: |
08:08 | படிவத்தில் ஐந்தாம் push button ஒன்றை நான்காம் பட்டனுக்கு அருகில் இடவும். சொடுக்கினால் அது form ஐ புதுப்பிக்க வேண்டும். |
08:18 | அடுத்த வரியில் 4 குறுகிய push buttonகளை இடவும். அவை பதிவேடுகளுக்குள் நகர உதவ வேண்டும். |
08:30 | இத்துடன் LibreOffice Base மீதான இந்த Spoken Tutorial முடிகிறது. |
08:35 | சுருங்கச்சொல்ல, form க்கு Push Button களை சேர்ப்பதை கற்றோம். |
08:40 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08:52 | இந்த திட்டம் http://spoken-tutorial.org ஆல் ஒருங்கிணைக்கப்படுகிறது. |
08:57 | மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
09:02 | தமிழாக்கம் கடலூர் திவா,
வணக்கம் |