LibreOffice-Suite-Base/C2/Add-Push-Button-to-a-form/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:00 LibreOffice Base குறித்த Spoken tutorial க்கு நல்வரவு!
00:04 இந்த tutorial இல், Push Button ஐ படிவத்தில் சேர்ப்பதை கற்போம்.
00:10 கடைசி tutorialலில் பட்டியல் பெட்டி படிவ கட்டுப்படுத்தி ஒன்றை படிவத்தில் அமைப்பதை கற்றோம்.
00:17 இந்த tutorial இல், Push Button களை படிவத்தில் சேர்ப்பதை கற்போம்.
00:25 LibreOffice Base program திறந்து இல்லை எனில் அதை துவக்குவோம். <pause>
00:36 நம் Library தரவுத்தளத்தை திறப்போம். இப்போது இருப்பில் உள்ள தரவுத்தளத்தை திறப்பதை கற்றிருப்போம்.
00:45 File menu வின் கீழ் Library database ஐ சொடுக்கி திறக்கலாம்.
00:52 இப்போது Library database இல் இருக்கிறோம்.
00:56 கடைசி tutorialலில் பார்த்த 'Books Issued to Members' form ஐ திறக்கலாம்.
01:04 இதற்கு இடது panel இல் form icon ஐ சொடுக்கலாம்.
01:09 பின் வலது panel இல் 'Books Issued to Members' form ல் வலது சொடுக்கி edit ஐ சொடுக்கவும்.
01:16 Edit மீது சொடுக்குவோம்.
01:19 இப்போது form design window வில் இருக்கிறோம்.
01:23 Push button களை நம் form க்கு சேர்ப்பதற்கு முன், ஒரு List boxஐ உறுப்பினர் பெயர்களுக்கு அமைப்போம்.
01:34 முந்தைய tutorial இல் இதை பயிற்சியாக கொடுத்தோம்.
01:41 முதலில், Member Name label க்கு வலது பக்கம் உள்ள text boxஐ நீக்கலாம்.
01:50 text boxயில் வலது சொடுக்கி கீழே உள்ள 'Cut' ஐ தேர்ந்தெடுக்கலாம்.
01:57 text box போய்விட்டது.
02:00 அடுத்து, form element களை சீர் செய்வோம்.
02:04 List boxகளுக்கு text boxகளை விட அதிக இடம் வேண்டும். ஆகவே இந்த form element களை படிவத்தில் கீழே கொண்டு போகலாம்.
02:15 இப்படித்தான் செய்ய வேண்டும்.
02:17 முதலில் Book title label க்கு கீழே எல்லா form element களையும் தேர்ந்தெடுக்கலாம்.
02:25 இதற்கு, சொடுக்கி இழுத்து விடும் முறையை பயன்படுத்தலாம்.
02:32 அடுத்து, தேர்ந்தெடுத்த இடத்தை சொடுக்கிப்பிடித்து, செங்குத்தாக கீழே இழுக்கலாம்.
02:39 Book Title labelக்கு பக்கத்தில் இருக்கும் முதல் List boxக்கு போதிய இடம் இருக்கும்படியாக.....
02:48 இப்போது, அதை Member Name label க்கும் செய்வோம்.
03:05 இப்போது, Member Name label க்கு இடது பக்கம் இருக்கும் இரண்டாம் List boxஐயும் அதே போல் சொடுக்கி இழுத்து விடுவோம்.
03:14 அதை வலது பக்கம் கொண்டுப்போய், மற்ற form control களுடன் பொருந்துமாறு செய்யலாம்.
03:22 விரைவு விசைகள் Control S ஐ பயன்படுத்தி மாறுதல்களை சேமிக்கலாம்.
03:33 இப்போது, Push button களை படிவத்தில் சேர்க்க தயார்!
03:39 push button என்பது form control க்கு இன்னொரு உதாரணம்.
03:44 நமக்கு OK, Cancel, next, மற்றும் Finish buttonகளை தெரியும். அவை Push button களுக்கு சிறந்த உதாரணங்கள்.
03:56 Base இல், இந்த Push button களை நம் படிவத்தில் சேர்த்துவிட்டு அவற்றை சொடுக்கும்போது குறிப்பிட்ட செயல்களை செய்ய Base க்கு சொல்லலாம்.
04:07 மேலும் Save, Undo, அல்லது Delete ஆகியன இன்னும் சில உதாரணங்கள்.
04:14 எப்படி என பார்க்கலாம்.
04:17 இப்போது நான்கு push button களை form க்கு சேர்க்கலாம்..... அனைத்து form element களுக்கும் கீழே.... இந்த படத்தில் தெரிவது போல.....
04:29 இதற்கு form design window க்கு போகலாம்.
04:35 form control toolbar இல் Push button சின்னத்தின் மீது சொடுக்கவும்.
04:43 இந்த சின்னம் Ok என்று எழுதிய button போல இருக்கிறது.
04:50 mouse pointer கூட்டல் குறி போல இருப்பதை கவனிக்க.
04:57 இப்போது, கீழே இடது பக்கம் நம் முதல் button ஐ வரையலாம். படிவத்தில் மற்ற elements க்கு கீழே அதை சொடுக்கி-இழுத்து-விடுங்கள்.
05:10 தேவையான மறு அளவும் செய்யலாம்.
05:14 இப்போது செய்த படியை இன்னும் 3 முறை செய்யலாம். <pause>
05:27 இப்போது, ஒரு கிடைக்கோட்டில் 3 பட்டன்கள் ஒழுங்காகி இருக்கின்றன.
05:35 படிவத்தில் பட்டன்களை வரைந்தாயிற்று; அவற்றின் labelகளை மாற்றலாம்.
05:43 இதற்கு முதல் button மீது இரட்டை சொடுக்கு சொடுக்குவோம்.
05:49 இப்போது Properties window ஐ பார்க்கிறோம். 'Label' இன் எதிரில் 'Save Record' என டைப் செய்யலாம்.
05:49 இப்போது, இரண்டாம் button மீது இரட்டை சொடுக்கு சொடுக்குவோம்.
06:06 properties window வில், Label' இன் எதிரில் 'Undo Changes' என டைப் செய்யலாம்.
06:15 மூன்றாம் நான்காம் buttonகளுக்கு 'Delete Record' எனவும்
06:25 'New Record' எனவும் முறையே type செய்யலாம்.
06:31 இப்போது அவற்றின் செயல்களை நிர்ணயிக்கலாம்.
06:37 இதற்கு, 'Save Record' button ஐ சொடுக்கலாம்.
06:43 Properties window இல் ஸ்க்ரால் செய்து 'Action' label ஐ கண்டுபிடிக்கவும்.
06:51 இங்கு கீழிறங்கும் list box இல் 'Save record' மீது சொடுக்கலாம்.
06:59 இதே போல மீதி மூன்று button களுக்கும் செய்யலாம்.
07:05 'Undo Changes' buttonக்கு 'Undo changes' செயலை தேர்ந்தெடுக்கலாம்.
07:12 'Delete Record' buttonக்கு, 'Delete Record' செயலை தேர்ந்தெடுக்கலாம்.
07:18 'New Record' buttonக்கு, 'New Record' செயலை தேர்ந்தெடுக்கலாம்.
07:25 ஆகவே, இப்போது push buttonகளை சேர்த்துவிட்டோம்.
07:29 விரைவு விசை Control S ஆல் form ஐ சேமிப்போம். இந்த window வை மூடுவோம்.
07:40 அடுத்த tutorial லில் நம் form க்கு இன்னும் மூன்றே மூன்று மாறுதல்களை செய்யலாம்.
07:48 அதன் பின் form ஐ தரவு உள்ளீட்டுக்கும் மேம்பாட்டுக்கும் பயன்படுத்த இயலும்.
07:54 உதாரணமாக, ஒரு நூலக உறுப்பினர் ஒரு புத்தகத்தை திருப்பும் போது இந்த form ஐ கொண்டு தரவுத்தளத்தை மேம்படுத்த இயலும்.
08:05 உங்களுக்கான பயிற்சி இதோ:
08:08 படிவத்தில் ஐந்தாம் push button ஒன்றை நான்காம் பட்டனுக்கு அருகில் இடவும். சொடுக்கினால் அது form ஐ புதுப்பிக்க வேண்டும்.
08:18 அடுத்த வரியில் 4 குறுகிய push buttonகளை இடவும். அவை பதிவேடுகளுக்குள் நகர உதவ வேண்டும்.
08:30 இத்துடன் LibreOffice Base மீதான இந்த Spoken Tutorial முடிகிறது.
08:35 சுருங்கச்சொல்ல, form க்கு Push Button களை சேர்ப்பதை கற்றோம்.
08:40 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
08:52 இந்த திட்டம் http://spoken-tutorial.org ஆல் ஒருங்கிணைக்கப்படுகிறது.
08:57 மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
09:02 தமிழாக்கம் கடலூர் திவா,

வணக்கம்

Contributors and Content Editors

Chandrika, Pravin1389, Priyacst