LibreOffice-Suite-Base/C2/Add-List-Box-form-control-to-a-form/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:03 LibreOffice Base குறித்த Spoken tutorial க்கு நல்வரவு!
00:06 இந்த tutorial இல், எப்படி ஒரு படிவத்துக்கு ஒரு பட்டியல் பெட்டி படிவ கட்டுப்படுத்தியை அமைப்பது என கற்போம்.
00:14 கடைசி tutorial இல் Base ஐ பயன்படுத்தி ஒரு படிவத்தை மாற்றியமைப்பதை கற்றோம்.
00:20 கடைசி tutorial இல் உருவாக்கி மாற்றிய படிவத்தின் பிம்பத்தையும் பார்த்தோம்.
00:33 நாம் design ஐ மாற்றி அமைத்த பின் இப்படித்தான் அது தோன்றும்.
00:45 Books Issued அட்டவணையில் நம் முதல் பதிவை பார்க்கிறோம்.
00:52 நாம் காண்பது உண்மையான புத்தக் தலைப்புகளுடன் பட்டியல் பெட்டிகள்; புத்தக ஐடிகளும் உறுப்பினர் ஐடிகளும் அல்ல.
01:01 கீழே சில அழுத்தக்கூடிய buttonகள் உள்ளன. இவற்றால் பதிவுகளை சேமிக்கலாம், மாற்றங்களை செயல் நீக்கலாம். இது போன்ற பலவற்றையும் செய்யலாம்.
01:11 ஆகவே இந்த tutorial இல், எப்படி ஒரு பட்டியல் பெட்டி படிவ கட்டுப்படுத்தியை நம் படிவத்துக்கு சேர்ப்பது என நாம் கற்போம்
01:20 முதலில் LibreOffice Base நிரல் திறந்து இல்லை எனில் அதை துவக்குவோம்.
01:32 நம் Library தரவுத்தளத்தை திறப்போம்.
01:35 Base ஏற்கெனெவே திறந்து இருந்தால் நாம் Library தரவுத்தளத்தை இங்கிருந்து File menu விலிருந்து Open ஐ சொடுக்கி திறக்கலாம்.
01:45 அல்லது File menu வின் கீழ் Recent Documents ஐ சொடுக்கி திறக்கலாம்.
01:50 இப்போது நாம் Library database இல் இருக்கிறோம்.
01:54 நாம் கடைசி tutorial லில் உருவாக்கிய 'Books Issued to Members' படிவத்தை திறக்கலாம்.
02:01 இதை செய்ய, இடது பலகத்தில் உள்ள forms சின்னத்தை சொடுக்கலாம்.
02:07 பின் வலது பலகத்தில் 'Books Issued to Members' படிவத்தின் மீது வலது சொடுக்கி, பின் edit மீது சொடுக்கவும்.
02:17 நாம் இப்போது படிவ design window வில் இருக்கிறோம்.
02:21 முதலில் 'Book Title' label ஐ எடுத்துக்கொள்ளலாம்.
02:25 இங்குள்ள உரைப்பெட்டி BookId எண்களை மட்டுமே காட்டுகிறது. அது பார்க்க நன்றாக இல்லை.
02:34 நமக்கோ புத்தக் தலைப்புகளே உவப்பாக உள்ளன.
02:37 ஆகவே இந்த தலைப்புகளை காட்ட Base சில வழிகளை தருகிறது. அவற்றில் ஒன்றுதான் பட்டியல் பெட்டி படிவ கட்டுப்படுத்தி.
02:49 எப்படி என்று பார்க்கலாம்.
02:51 இதற்கு, முதலில் நாம் Book Title label பக்கத்தில் உள்ள உரைப்பெட்டியை எடுத்துவிடலாம்.
02:59 இதை செய்ய வழக்கமான பச்சை பெட்டிகளுடன் இருக்கும் உரைப்பெட்டியை சொடுக்கி தேர்ந்தெடுக்கலாம்.
03:09 பின் வலது சொடுக்கி கீழே உள்ள 'Cut' ஐ தேர்ந்தெடுக்கலாம்.
03:16 இதோ உரைப்பெட்டி போய்விட்டது.
03:20 இப்போது, ஒரு பட்டியல் பெட்டி படிவ கட்டுப்படுத்தியை இங்கு வைக்கலாம்.
03:26 இதை படிவ கட்டுப்படுத்தியின் கருவிப்பெட்டியில் அணுகலாம்.
03:31 View menu ஐ சொடுக்கி Form controls மீது சொடுக்கி இதை கொண்டுவரலாம்.
03:39 Base நமக்கு பல்வேறு படிவ கட்டுப்படுத்திகளை தருகிறது. நாம் cursor ஐ இவற்றின் மீது வைத்து tool tipகளை படித்து அவை என்ன செய்கின்றன என்று கண்டுபிடிக்கலாம்.
04:01 List box சின்னத்தை கண்டுபிடிக்கலாம்.
04:05 இதோ இருக்கிறது; இதன் மீது ஒரே ஒரு முறை சொடுக்குவோம்.
04:11 படிவத்துக்குள் நாம் சொடுக்கி நிலைக்காட்டியை கொண்டுவரலாம். அது ஒரு மெலிதான கூட்டல் குறி போல் ஆவதை காணலாம்.
04:21 இப்போது நாம் பட்டியல் பெட்டி படிவ கட்டுப்படுத்தியை நம் படிவத்தில் கொண்டுவரலாம்.
04:26 இதற்கு, நம் படிவத்தில் அதை சும்மா இழுத்துவிட்டால் போதும்.
04:34 நாம் உரைப்பெட்டியை வைத்து இருந்த அதே இடத்தில் இதை அமைக்கலாம்.
04:39 ஒரு புதிய 'List Box Wizard' என்னும் வழிகாட்டி படிவ design window வில் தெரிகிறது.
04:48 இப்போது, இந்த வழிகாட்டிதான் பட்டியல் பெட்டியை Book title label க்கு இணைக்க உதவப்போகிறது.
04:56 எப்படி என்று பார்க்கலாம்.
04:58 இந்த வழிகாட்டியில் நாம் முதலில் எந்த அட்டவணையில் இருந்து புத்தக தலைப்புகளை பெறலாம் என்று அமைக்க வேண்டும்.
05:07 நாம் பட்டியலில் இருந்து Books table தேர்ந்தெடுத்து Next button ஐ அழுத்தலாம்.
05:15 இப்போது, இந்த window வில் எந்த புலம் பட்டியல் பெட்டியில் காட்டப்படும் என தேர்ந்தெடுக்க வேண்டும்.
05:24 title புலம்தான் புத்தக தலைப்புகளை கொண்டு இருக்கும் என்று தெரியும்.
05:29 ஆகவே நாம் அடுத்த படிக்கு போகலாம்.
05:32 இந்த கடைசி window வில் நாம் மாயாஜாலம் நிகழ்த்துவோம்!
05:36 தொடர்புள்ள அட்டவணைகளையும் புலங்களையும் இணைப்போம்.
05:41 புலங்களின் பெயரை பாருங்கள். இடது பக்கம் உள்ள 'Fields in the Value table' இல் Books Issued அட்டவணை உள்ளது.
05:52 வலது பக்கம் 'Fields in the list table' இல் Books அட்டவணையில் உள்ள புலங்கள் உள்ளன.
05:59 book id தான் books அட்டவணையில் முக்கிய புலம் என்றும் நமக்குத்தெரியும். அது Books Issued அட்டவணையில் தென்படுகிறது.
06:10 ஆகவே நாம் இடது பக்கம் 'Field from the value table' என்று சொல்லும் பட்டியலில் book id மீது சொடுக்கலாம்.
06:20 வலது பக்கம் 'Field from the list table' என்று சொல்லும் பட்டியலில் book id மீது சொடுக்கலாம்.
06:29 Finish button ஐ அழுத்தி இந்த வழிகாட்டியை மூடலாம்.
06:34 இதோ தொடர்புள்ள அட்டவணைகளையும் புலங்களையும் இணைத்துவிட்டோம்.
06:40 இப்போது Base இந்த பட்டியல் பெட்டியில் தானியங்கியாக புத்தகங்களின் தலைப்பை காட்டும்.
06:46 இப்போது படிவத்தை சேமிக்கலாம்.
06:49 இந்த window வை மூடலாம்.
06:51 Base tutorial இன் அடுத்த பகுதியில் நாம் படிவ கட்டுப்படுத்திகளை படிவத்துக்கு சேர்த்தல் குறித்த மீதி பாகத்தை காணலாம்.
07:00 இதை செய்து முடித்த பின் நம் படிவம் இப்படித்தான் இருக்கும்.
07:06 இப்போது ஒரு பயிற்சி.
07:08 member Idகளை தவிர்த்து உறுப்பினர்களின் பெயரை காட்டும்படியாக ஒரு இரண்டாவது பட்டியல் பெட்டியை சேர்க்கவும்.
07:17 பட்டியல் பெட்டியை எங்கே வைப்பது என்று இப்போதைக்கு கவலை வேண்டாம். Member name label க்கு இடது புறம் வரையவும்.
07:27 நம் அடுத்த tutorial லில் அதை பொருத்தமாக Member Name label க்கு எதிரில் வைப்போம்.
07:34 இத்துடன் LibreOffice Base இல் பட்டியல் பெட்டி கட்டுப்படுத்திகளை அமைப்பது குறித்த tutorial முடிவுக்கு வருகிறது.
07:40 சுருங்கச்சொல்ல நாம் எப்படி பட்டியல் பெட்டி படிவ கட்டுப்படுத்தியை படிவத்துக்கு சேர்ப்பது என்று கற்றோம்.
07:47 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
07:58 இந்த திட்டம் http://spoken-tutorial.org ஆல் ஒருங்கிணைக்கப்படுகிறது.
08:04 மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
08:08 தமிழாக்கம் கடலூர் திவா, வணக்கம்

Contributors and Content Editors

Chandrika, Priyacst