LibreOffice-Impress-on-BOSS-Linux/C2/Viewing-a-Presentation-Document/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:00 | Impress ல் Presentation ஐ பார்த்தல் குறித்த tutorial க்கு நல்வரவு! |
00:05 | இதில் நாம் கற்கப்போவது காட்சி தேர்வுகள் அவற்றின் பயன்கள்.... Master பக்கங்கள் ஆகியன. |
00:13 | இங்கு பயனாவது GNU Linux மற்றும் LibreOffice தொகுப்பு பதிப்பு 3.3.4 |
00:22 | “Sample Impress” presentation ஐ திறக்கலாம். |
00:27 | Impress.... நாம் இன்னும் நல்ல presentation தயாரிக்க பல காட்சி தேர்வுகளை கொண்டுள்ளது. |
00:34 | முன்னிருப்பாக LibreOffice Impress ஐ நாம் துவக்கும்போது அது இப்படி காண்கிறது. |
00:41 | இது Normal view எனப்படும். |
00:43 | presentation இல் வேறு எந்த காட்சியில் இருந்தாலும், |
00:48 | normal காட்சிக்கு Normal கீற்றை அழுத்தி வந்துவிடலாம். |
00:53 | அல்லது View பின் Normal இல் சொடுக்கலாம். |
00:57 | normal காட்சியில், நீங்கள் slide களை உருவாக்கலாம், திருத்தலாம். |
01:02 | உதாரணமாக slideகளின் design ஐ மாற்றலாம். |
01:05 | இதை செய்ய Overview என தலைப்பிட்ட slide க்கு செல்லவும். |
01:09 | வலது பக்கத்தில், Tasks பலகத்தில், Master Pages தொகுதியில், Used in This Presentation ன் கீழ் இந்த slide design prs strategy என்பதை காணலாம். |
01:21 | இதன் கீழ் நாம் காணக்கூடியது Recently Used மற்றும் Available for Use slide designs. |
01:27 | விருப்பமான ஒன்றன் மீது சொடுக்கவும். |
01:30 | Workspace பலகத்தில் slide design மாறிவிட்டதை காணலாம். |
01:34 | slide design ஐ மாற்றுவது எவ்வளவு சுலபம் பார்த்தீர்களா? |
01:39 | உங்கள் slideகளுக்கு நீங்களே தயாரித்த design களையும் பின் புலமாக பயன்படுத்தலாம். |
01:45 | அடுத்து Outline காட்சியை பார்க்கலாம். |
01:47 | இந்த காட்சிக்கு செல்ல ஒன்று, View பின், Outline இல் சொடுக்கலாம். |
01:53 | அல்லது Outline கீற்று மீது சொடுக்கலாம். |
01:57 | இந்த காட்சியில், புத்தக அட்டவணை போல slide கள் ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கப்பட்டுள்ளதை காணலாம். |
02:05 | இவை Slide தலைப்புகள். |
02:08 | Overview என தலைப்பிட்ட slide முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளது என கவனிக்கவும். |
02:12 | ஏனெனில் நாம் Outline கீற்றை தேர்ந்தெடுத்த போது Overview slide இல்தான் இருந்தோம். |
02:18 | இந்த சின்னங்கள் bullet புள்ளிகள் போல இருப்பதை பார்க்கலாம். |
02:23 | இந்த bullet புள்ளிகள் மீது சொடுக்கியை கொண்டு போக அது கை போல மாறுவதை காணலாம். |
02:29 | பின் இந்த வரிகளை மேலோ கீழோ இழுத்து slide க்குள் இட மாற்றம் செய்யலாம். |
02:38 | அல்லது வரிகளுக்கிடையேயும். |
02:40 | CTRL மற்றும் Z ஐ அழுத்தி இந்த மாற்றங்களை நீக்கலாம். நம் presentation பழையபடி இருக்கட்டும். |
02:49 | Slide Sorter காட்சி ஐ slide களை சரியாக இடம் அமைக்க பயன்படுத்துகிறோம். |
02:53 | Slide Sorter காட்சிக்கு View பின் Slide Sorter மீது சொடுக்கி போகலாம். |
03:00 | அல்லது Slide Sorter கீற்று மீது சொடுக்கலாம். |
03:04 | இந்த காட்சி slide களை நாம் விரும்பும் வரிசையில் அமைக்க பயன்படுகிறது. |
03:08 | உதாரணமாக- slide எண் 9 ஐயும் 10 ஐயும் பரஸ்பரம் இட மாற்ற, slide எண் 10 மீது சொடுக்கவும்; அதை slide எண் 9க்கு முன் இழுக்கவும். |
03:18 | இப்போது சொடுக்கி button ஐ விடவும். |
03:22 | slide கள் இடமாற்றமாகி விட்டன! |
03:26 | Notes காட்சியில், presentation போது உங்களுக்கு உதவக்கூடிய குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்ளலாம். |
03:31 | Notes காட்சிக்கு போக, முறையே View, Notes Page மீது சொடுக்கவும். |
03:36 | நீங்கள் Notes கீற்று மீதும் சொடுக்கலாம். |
03:39 | Slides பலகத்திலிருந்து ‘Development up to present’ slide ஐ தேர்ந்தெடுக்கவும். |
03:44 | எதேனும் உரையை notes பகுதியில் Type செய்யவும். |
03:49 | slide களை projector மூலம் காட்டிக்கொண்டு இருந்தால், நீங்கள் கணினியில் குறிப்புகளை படிக்கலாம், ஆனால் பார்வையாளர்களுக்கு அவை தெரியா. |
03:58 | இப்போது Normal கீற்று மீது சொடுக்கவும். |
04:01 | நாம் presentation இன் இட அமைப்பை வலது பக்கமுள்ள Tasks பலகத்தில் Layout தொகுதி இல் மாற்றலாம். |
04:08 | Tasks பலகத்தை காட்டவோ மறைக்கவோ, |
04:12 | முறையே View பின் , Task pane மீது சொடுக்கவும் |
04:14 | இது Tasks பலகத்தை காட்டவோ மறைக்கவோ செய்யும். |
04:18 | இந்த Layout தொகுதியை slide இன் இட அமைவுக்கு பயன்படுத்துவோம். |
04:23 | Development up to present என பெயரிட்ட slide ஐ தேர்ந்தெடுப்போம். |
04:26 | Layout தொகுதியில் இருந்து >> Title content over content ஐ தேர்ந்தெடுக்கலாம். |
04:33 | இது slide இன் இட அமைவுகளை மாற்றுகிறது. |
04:37 | இத்துடன் இந்த டுடோரியல் முடிவுக்கு வருகிறது. |
04:40 | சுருங்கச்சொல்ல நாம் கற்றது: - காட்சி தேர்வுகள், அவற்றின் பயன்கள், Master பக்கங்கள். |
04:46 | இந்த பயிற்சியை செய்து பாருங்கள். |
04:49 | ஒரு புதிய presentation ஐ உருவாக்குக. |
04:52 | ஆழ்ந்த நீல பின்புலம், வெளிர் நீல தலைப்பு இடம் கொண்ட master ஸ்லைடை தயாரிக்கவும். |
04:58 | இந்த தொடுப்பில் உள்ள விடியோவை காணவும். |
05:02 | அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. |
05:05 | இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள். |
05:09 | spoken tutorial களை பயன்படுத்தி spoken tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
05:15 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
05:19 | மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் எழுதவும். contact@spoken-tutorial.org |
05:26 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
05:30 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
05:38 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
05:49 | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |