KiCad/C2/Designing-printed-circuit-board-in-KiCad/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:02 வணக்கம். KiCadல் அச்சடிக்கப்பட்டcircuit boardஐ வடிவமைப்பது', குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது-
00:09 KiCadல், printed circuit boardஐ வடிவமைப்பது.
00:12 இந்த டுடோரியலுக்கு நாம் பயன்படுத்துவது, இயங்கு தளமாக, Ubuntu 12.04 உடன்
00:16 KiCad பதிப்பு 2011 hyphen 05 hyphen 25.
00:25 இந்த டுடோரியலுக்கு முன் நிபந்தனையாக, electronic circuit பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.
00:30 Userக்கு, KiCadல், circuit schematicஐ வடிவமைக்கவும்
00:35 Electric rule check செய்யவும்
00:37 Netlist generation செய்யவும்
00:39 Footprintகளுடன் componentகளை map செய்யவும் தெரிந்து இருக்க வேண்டும்.
00:43 அதற்கான டுடோரியல்களுக்கு, இந்த வலைத்தளத்தை பார்க்கவும்: http://spoken hyphen tutorial.org
00:50 KiCadஐ தொடங்க-
00:52 Ubuntu desktop திரையின், மேல் இடது மூலைக்கு செல்லவும்.
00:56 முதல் icon, அதாவது Dash homeஐ க்ளிக் செய்யவும்.
01:01 Search barல், எழுதுக: 'KiCad', பின் Enterஐ அழுத்தவும்.
01:09 இது, KiCad main windowஐ திறக்கும்.
01:12 'EEschema'ஐ திறக்க, மேல் panelக்கு செல்லவும். EEschema tabஐ க்ளிக் செய்யவும்.
01:19 Schematicஐ கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறும் ஒரு Info dialog-box தோன்றும்.
01:25 OKஐ க்ளிக் செய்யவும்.
01:28 முன்னர் உருவாக்கப்பட்ட, Astable multivibratorன் circuit schematicஐ நான் பயன்படுத்துகிறேன்.
01:35 இதைச் செய்ய- File menuவிற்கு சென்று, Openஐ க்ளிக் செய்கிறேன்.
01:42 File சேமிக்கப்பட்டிருக்கும் folderஐ தேர்வு செய்யவும்.
01:49 'Project1.sch'ஐ தேர்ந்தெடுத்து, Openஐ க்ளிக் செய்யவும்.
01:56 நான் Windowஐ resize செய்கிறேன்.
02:00 அதனால், நான் Openஐ க்ளிக் செய்கிறேன்.
02:06 இது circuit schematicஐ திறக்கும்.
02:08 Mouseன் scroll பட்டனை பயன்படுத்தி, அதை பெரிதாக்குகிறேன்.
02:13 இந்த circuitக்கு, netlistஐ நாம் ஏற்கெனவே உருவாக்கிவிட்டோம்.
02:16 தொடர்புடைய footprintகளுடன் componentகளை mapசெய்தும் விட்டோம்.
02:20 அடுத்த படி, printed circuit board layoutஐ உருவாக்குவது.
02:26 இதை தொடங்க, 'EESchema' windowவின் மேல் panelலில் இருக்கும், Run PCBnew பட்டனை க்ளிக் செய்யவும்.
02:36 இது 'PCBnew' windowஐ திறக்கும்.
02:39 'project1.brd'ஐ கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறும் ஒரு Info dialog-box தோன்றும்.
02:44 இந்த dialog -boxஐ மூட, OKஐ க்ளிக் செய்யவும்.
02:49 'PCBnew' windowவின் மேல் panelலில் இருக்கும், Read netlist பட்டனை க்ளிக் செய்வதன் மூலம், footprintகளைimport செய்யலாம்.
02:57 இங்கு Netlist window திறக்கும்.
03:01 முன்னிருப்பான settingகளை அப்படியே வைக்கவும்.
03:03 Browse Netlist Files பட்டனை க்ளிக் செய்யவும்.
03:07 இது Select Netlist windowஐ திறக்கும்.
03:13 சிறந்த பார்வைக்கு, இந்த Windowஐ resize செய்கிறேன்.
03:20 விரும்பிய directoryல் இருந்து, 'project1.net'ஐ தேர்வு செய்து, Openஐ க்ளிக் செய்யவும்.
03:27 Read Current Netlist பட்டனை க்ளிக் செய்யவும்.
03:30 அது, 'project1.cmp' காணவில்லை என்று எச்சரிக்கை தரும்.
03:35 OKஐ க்ளிக் செய்யவும்.
03:37 இப்போது, Close பட்டனை க்ளிக் செய்து, Netlist windowஐ மூடவும்.
03:42 எல்லா footprintகளும் import செய்யப்பட்டு, PCBnew windowவின் மேல் வலது மூலையில் வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
03:49 இப்போது, எல்லா footprintகளையும், 'PCBnew' windowவின் நடுவில் வைக்க வேண்டும்.
03:56 இதற்கு, 'PCBnew' windowவின் மேல் panelலில் இருக்கும், Manual and Automatic move and place of modules பட்டனை க்ளிக் செய்யவும்.
04:08 இப்போது, 'PCBnew' windowவின் நடுவில், ஒரு முறை ரைட்-க்ளிக் செய்யவும்.
04:14 Glob Move and Placeக்கு செல்லவும். பின், Move All Modulesஐ க்ளிக் செய்யவும்.
04:22 இது Confirmation window ஒன்றை திறக்கும்.Yesஐ க்ளிக் செய்யவும்.
04:28 சிறந்த பார்வைக்கு, என் mouseன் scroll பட்டனை பயன்படுத்தி, பெரிதாக்குகிறேன்.
04:35 Footprintகளின் terminalகளை இணைக்கும் வெள்ளை wireகளை நீங்கள் காணலாம் அல்லது காணாமலும் இருக்கலாம்.
04:39 அவை தெரியவில்லையெனில், PCBnew windowவின் இடது panelலில் இருக்கும், Show or Hide board ratsnest பட்டனை க்ளிக் செய்யவும்.
04:51 வெள்ளை wireகள், airwireகள் எனவும் அழைக்கப்படும்.
04:55 இப்போது, குறைந்தபட்ச எண்ணிக்கை உடைய airwireகள் ஒன்றுக்கொன்று குறுக்கே செல்லுமாறு, moduleகளை நாம் ஒழுங்குபடுத்துவோம்.
05:01 இப்போது, IC 555 footprint ஐ ரைட்-க்ளிக் செய்யவும்.
05:07 Footprint optionக்கு சென்று, பின் Moveஐ க்ளிக் செய்யவும்.
05:12 Footprint, cursorஉடன் கட்டப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம்.
05:16 பின்ணணியில் தெரியும் gridக்கு ஏற்றவாறு component நகர்வதை நீங்கள் காணலாம்.
05:25 இப்போது, வேண்டிய இடத்தில் componentஐ வைக்க ஒரு முறை க்ளிக் செய்யவும். நான் இங்கு வைக்கப் போகிறேன்.
05:33 'PCBnew' windowவின் மேல் panelலில் இருக்கும்,Grid options drop-down menuஐ பயன்படுத்தி, gridன் இடைவெளியை மாற்ற முடியும்.
05:44 இப்போதைக்கு, முன்னிருப்பான மதிப்பு, அதாவது, Grid 1.270உடன் தொடங்குவோம்.
05:53 நகரும் componentகளுக்கு, shortcut keyஆன, 'M'ஐயும் நீங்கள் பயன்படுத்தலாம்.
05:58 உதாரணத்திற்கு, capacitorஐ நகர்த்த கற்பிக்கிறேன்.
06:02 Cursorஐ capacitor மீது வைக்கவும்.
06:05 'M'ஐ அழுத்தவும். Module, cursorஉடன் கட்டப்பட்டும். அதை எங்கு வேண்டுமானாலும் நீங்கள் நகர்த்தலாம்.
06:14 Component ஐ வைக்க, ஒரு முறை க்ளிக் செய்யவும்.
06:17 Component ஐ சுழற்ற, 'R'ஐ அழுத்தவும்.
06:22 உதாரணத்திற்கு, resistor ஐ நான் சுழற்றுகிறேன். Cursorஐ resistor மீது வைத்து, 'R'ஐ அழுத்தவும்.
06:29 அதே போல், எல்லா componentகளையும் நீங்கள் ஒழுங்குபடுத்தலாம்.
06:32 Airwireகளுக்கு இடையே குறைந்தபட்ச சந்திப்பை பெற, நான் முன்பே footprintகளை அடுக்கிவிட்டேன். அது இங்கே காட்டப்பட்டுள்ளது.
06:41 இப்போது, இந்த airwireகளை உண்மையான trackகளாக உறுமாற்ற வேண்டும்.
06:46 'PCBnew' windowன் வலது பக்கத்தில் இருக்கும், Layer tabன் கீழ், Back layer, தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில், அதை தேர்ந்தெடுக்கவும்.Back layer, பச்சை வண்ணத்தால் குறிப்பிடப்படுகிறது.
07:01 தேர்ந்தெடுக்கப்பட்ட layer, சிறிய நீல அம்பினால் சுட்டிக் காட்டப்படுகிறது.
07:06 Trackகளை உருவாக்க, 'PCBnew' windowன் வலது panel லில் இருக்கும்,Add tracks and vias பட்டனை தேர்வு செய்யவும்.
07:17 இப்போது, 'R1'ன் ஏதேனும் ஒரு nodeஐ க்ளிக் செய்வோம்.
07:22 பின், wire இணைக்கப்பட வேண்டிய node 'R2'ஐ டபுள்-க்ளிக் செய்வோம்.
07:31 அதே போல், Resistor R3 மற்றும் capacitor C1க்கு இடையே, மேலும் ஒரு wireஐ இணைப்போம்.
07:38 'R3'ன் ஏதேனும் ஒரு nodeஐ க்ளிக் செய்வோம்.
07:41 Wireன் திசையை மாற்ற, ஒரு முறை க்ளிக் செய்யவும்.
07:46 பின், wire இணைக்கப்பட வேண்டிய node 'C1'ஐ டபுள்-க்ளிக் செய்யவும்.
07:51 உருவாக்கப்பட்ட பச்சை track, printed circuit boardன் மீது உருவாக்கப்பட்ட உண்மையான copper (தாமிர) பாதையை குறிக்கிறது.
07:59 Trackன் அகலத்தை மாற்றுவதும் சாத்தியமாகு்ம்.
08:02 'PCBnew' windowவின் menu barல் இருக்கும், Design Rules menu optionஐ க்ளிக் செய்வதன் மூலம் இதைச் செய்யலாம்.
08:11 Design Rulesஐ க்ளிக் செய்யவும்.
08:14 Trackன் அகலத்தை மாற்றக்கூடிய Design Rules Editor திறக்கும்.
08:19 Trackன் அகலத்தை 1.5க்கு மாற்றுவோம். இதைச் செய்ய, Track Widthன் மதிப்பு மீது டபுள்-க்ளிக் செய்யவும். டைப் செய்க: 1.5, பின் Enterஐ அழுத்தவும்.
08:34 Track ஐ உருவாக்க, keyboardன் 'X 'keyஐ பயன்படுத்தலாம்.
08:39 அதை நான் உங்களுக்கு காட்டுகிறேன். LED D1ன் ஏதேனும் ஒரு node மீது cursorஐ வைக்கவும். 'X 'keyஐ அழுத்தவும்.
08:48 பின், wire இணைக்கப்பட வேண்டிய node 'R3'ஐ டபுள்-க்ளிக் செய்யவும்.
08:54 Trackன் அகலம் அதிகரித்திருப்பதை நீங்கள் காணலாம். இந்த வழியில், borardன் வடிவமைப்பை நீங்கள் நிறைவு செய்யலாம்.
09:03 இந்த boardற்கான வடிவமைப்பை நான் முன்பே இங்கு நிறைவு செய்துவிட்டேன்.
09:08 நிறைவு செய்யப்பட்ட, design board fileஐ நான் திறக்கிறேன்.
09:19 இந்த வடிவமைப்பை நிறைவு செய்ய நாம் PCB முனைகளையும் வரைய வேண்டும்.
09:25 அதற்கு, 'PCBnew' windowன் வலது பக்கத்தில் இருக்கும், Layer tabல் இருந்து, PCB Edges optionஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
09:34 இப்போது, layout editor windowன் வலது panel லில் இருக்கும்,Add graphic line or polygon பட்டனை க்ளிக் செய்யவும்.
09:44 இப்போது, இந்த Printed circuit Boardஐ சுற்றி ஒரு செவ்வகத்தை உருவாக்குவோம்.
09:49 Layoutன் மேல் இடது பக்கம் மீது க்ளிக் செய்யவும்.
09:52 Cursorஐ கிடைமட்டமாக வலது பக்கம் நோக்கி நகர்த்தவும்.
09:56 வரியின் திசையை மாற்ற, ஒரு முறை க்ளிக் செய்யவும்.
10:00 Cursorஐ செங்குத்தாக கீழ் நோக்கி நகர்த்தவும்.
10:04 அதே போல், நாம் செவ்வகத்தை நிறைவு செய்ய முடியும்.
10:11 இந்த செவ்வகத்தை நான் நிறைவு செய்கிறேன்.
10:16 செவ்வகத்தை முடிக்க, இடது- mouse-பட்டனை டபுள்-க்ளிக் செய்யவும்.
10:24 இப்போது,File menuஐ க்ளிக் செய்து, பின் Save optionஐ க்ளிக் செய்வோம். இந்த file, '.brd' extensionஉடன் சேமிக்கப்படுவதை கவனிக்கவும்.
10:38 Astable multivibrator circuitற்கான board layoutஐ இது நிறைவு செய்கிறது.
10:44 இந்த டுடோரியலில், நாம், 'PCBnew'ஐ பயன்படுத்தி, KiCadல், printed circuit boardஐ வடிவமைக்கக் கற்றோம்.
10:50 இந்த இணைப்பில் உள்ள வீடியோவை காணவும்.
10:54 அது ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது.
10:56 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
11:00 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு:
11:03 ஸ்போகன் டுடொரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
11:06 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
11:10 மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்: contact at spoken hyphen tutorial dot org.
11:15 Spoken Tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
11:19 இதற்து ஆதரவு இந்திய அரசாங்கத்தின் National Mission on Education through ICT, MHRD மூலம் கிடைக்கிறது.
11:25 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்:
11:29 spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro.
11:35 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.
11:38 குரல் கொடுத்தது ..... நன்றி.

Contributors and Content Editors

Priyacst