KTurtle/C3/Common-Errors-in-KTurtle/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 KTurtle ல் பொதுவான பிழைகள் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது
00:10 Syntax பிழைகள்
00:12 Runtime பிழைகள் மற்றும்
00:14 Logical பிழைகள்
00:17 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது,
00:20 உபுண்டு லினக்ஸ் OS பதிப்பு 12.04.
00:25 KTurtle பதிப்பு 0.8.1 beta.
00:31 KTurtle ல் வேலைசெய்ய அடிப்படை அறிவு உங்களுக்கு இருப்பதாகக் கொள்கிறோம்
00:36 இல்லையெனில், அதற்கான டுடோரியலுக்கு, எங்கள் தளத்திற்கு செல்லவும். http://spoken-tutorial.org
00:42 முதலில் பிழை என்றால் என்ன என்பதை வரையறுப்போம்
00:46 தவறான அல்லது எதிர்பாராத விடையைத் தரும் ஒரு ப்ரோகிராமில் உள்ள ஒரு தவறு... பிழை எனப்படும்.
00:55 முதலில் பிழைகளின் வகைகளை விளக்குகிறேன்
01:00 ஒரு கணினி மொழி க்கான இலக்கண விதிகளை மீறுவது Syntax பிழை ஆகும்.
01:09 ஒரு ப்ரோகிராமில் Syntax பிழைகள் இருந்தால் Compile ஆவது தோல்வியடையும்.
01:15 Syntax பிழைகளை கண்டறிவதும் சரிசெய்வதும் சுலபம்.
01:23 உதாரணமாக: பொருந்தாத அடைப்புகள், சதுர அடைப்புகள் மற்றும் curly braceகள்
01:29 declare செய்யப்படாத variable ஐ பயன்படுத்துதல்
01:34 stringகளில் மேற்கோள்கள் விடுபடுதல்.
01:38 ஒரு புதிய KTurtle Application ஐ திறப்போம்.
01:42 Dash home ல் சொடுக்குக. Search bar ல் டைப் செய்க KTurtle.
01:48 KTurtle ஐகான் மீது சொடுக்குக.
01:51 சில வகை syntax பிழையுடன் டுடோரியலை ஆரம்பிக்கலாம்.
01:58 ஒரு text editor ல் நான் ஏற்கனவே ப்ரோகிராமைக் கொண்டுள்ளேன்.
02:02 இந்த ப்ரோகிராமில் பிழையை விளக்க code ன் பகுதியை comment செய்கிறேன்.
02:09 இங்கே $a=ask இரட்டை மேற்கோள்களில் "enter any number and click Ok" என்ற வரியை comment செய்கிறேன்
02:19 இந்த வரியை comment செய்ய hash(#) குறியைப் பயன்படுத்துகிறேன்.
02:23 text editor ல் இருந்து ப்ரோகிராமை பிரதி எடுத்து KTurtle editor இனுள் ஒட்டுகிறேன்.
02:31 டுடோரியலை இடைநிறுத்தி ப்ரோகிராமை உங்கள் KTurtle editor இனுள் டைப் செய்க.
02:37 ப்ரோகிராமை டைப் செய்த பின் டுடோரியலை மீண்டும் தொடரவும்
02:42 ப்ரோகிராமை இயக்க Run பட்டன் மீது சொடுக்கவும்.
02:47 Compiler பின்வரும் பிழையைக் காட்டுகிறது,
02:50 variable "$a" was used without first being assigned to a value.
02:57 இங்கே வரி எண் 4 ல் அந்த பிழை உள்ளது.
03:02 இது ஒரு syntax பிழை. variable 'a' declare செய்யப்படவில்லை என்பதால் இது வந்தது.
03:10 எனவே வரி எண் 2 க்கு சென்று, comment ஐ நீக்குகிறேன்.
03:14 text editor ல் இருந்து ப்ரோகிராமை பிரதி எடுத்து KTurtle editor இனுள் ஒட்டுகிறேன்.
03:23 ப்ரோகிராமை இயக்க Run பட்டன் மீது சொடுக்கவும்.
03:27 a மதிப்பிற்கு 6 ஐ கொடுத்து OK ல் சொடுக்குக
03:31 ப்ரோகிராம் பிழைகள் இல்லாமல் இயங்குகிறது.
03:35 KTurtle editor ல் இருந்து நடப்பு ப்ரோகிராமைத் துடைக்கிறேன்.
03:38 clear command ஐ டைப் செய்து... canvas ஐ துடைக்க Run ஐ சொடுக்குக.
03:43 அடுத்து மற்றொரு பிழையைக் காண்போம்.
03:46 நான் text editor ல் ஏற்கனவே ப்ரோகிராமைக் கொண்டுள்ளேன்.
03:50 இங்கே KTurtle ல் "pi" ன் மதிப்பு ஏற்கனவேdefine செய்யப்பட்டுள்ளது.
03:54 ப்ரோகிராமில் "$" குறியை நீக்குவோம்.
03:58 text editor ல் இருந்து code ஐ பிரதி எடுத்து KTurtle editor இனுள் ஒட்டுகிறேன்.
04:05 டுடோரியலை இடைநிறுத்தி ப்ரோகிராமை உங்கள் KTurtle editor இனுள் டைப் செய்க.
04:11 ப்ரோகிராமை டைப் செய்த பின் டுடோரியலை மீண்டும் தொடரவும்
04:16 ப்ரோகிராமை இயக்க Run பட்டன் மீது சொடுக்கவும்.
04:19 Compilier பின்வரும் பிழையைக் காட்டுகிறது,
04:22 you cannot put “=” here
04:26 இந்த பிழை வரி எண் 2 ல் உள்ளது.
04:30 இது ஒரு syntax பிழை. variable ன் container இல்லை என்பதால் இது வந்துள்ளது
04:37 ப்ரோகிராமிற்கு மீண்டும் வந்து $ குறியை சேர்ப்போம்.
04:41 text editor ல் இருந்து code ஐ பிரதி எடுத்து KTurtle editor இனுள் ஒட்டுகிறேன்.
04:49 ப்ரோகிராமை இயக்க Run பட்டன் மீது சொடுக்கவும்.
04:53 கோண மதிப்பிற்கு 45 என கொடுத்து OK ல் சொடுக்குக
04:57 பிழைகள் இன்றி ப்ரோகிராம் இயங்குகிறது.
05:00 இப்போது string ன் ஒரு மேற்கோளை நீக்குவோம்.
05:05 text editor ல் இருந்து code ஐ பிரதி எடுத்து KTurtle editor இனுள் ஒட்டுகிறேன்.
05:12 ப்ரோகிராமை இயக்க Run பட்டன் மீது சொடுக்கவும்.
05:15 Complier பின்வரும் பிழையைக் காட்டுகிறது,
05:18 Text string was not properly closed, expected a double quote “ ” to close the string.
05:25 இங்கே வரி எண் 2 ல் பிழை உள்ளது.
05:29 வரி எண் 2 க்கு சென்று மேற்கோளை சேர்க்கிறேன்.
05:34 text editor ல் இருந்து code ஐ பிரதி எடுத்து KTurtle editor இனுள் ஒட்டுகிறேன்.
05:41 ப்ரோகிராமை இயக்க Run பட்டன் மீது சொடுக்கவும்.
05:44 கோண மதிப்பிற்கு 45 என கொடுத்து OK ல் சொடுக்குகிறேன்.
05:49 பிழைகள் இன்றி ப்ரோகிராம் இயங்குகிறது.
05:52 இவ்வாறு பிழை உள்ள வரியை கண்டறிந்து அதை சரி செய்ய முடியும்.
05:59 இப்போது runtime பிழைகள் பற்றி கற்போம்.
06:04 Run-time பிழை ப்ரோகிராம் இயங்கும் போது ஏற்படுகிறது.
06:10 அதை இயக்கும்போது அது ப்ரோகிராமை சிதைக்கலாம்.
06:15 பொதுவாக Runtime பிழைகள் பயனாளியிடமிருந்து தவறான உள்ளீட்டை பெறுவதால் ஏற்படுகிறது.
06:23 இந்த பிழைகளைஎ Compiler' ஆல் கண்டுபிடிக்க முடியாது.
06:27 உதாரணமாக:
06:29 மதிப்பு ஏதும் இல்லாத ஒரு variable ஆல் வகுக்க முயற்சி செய்க.
06:33 ஒரு terminating condition அல்லது increment மதிப்பு இல்லாமல் ஒரு loop ஐ இயக்குக.
06:43 editor ல் இருந்து நடப்பு ப்ரோகிராமை துடைக்கிறேன் .
06:47 clear command ஐ டைப் செய்து... canvas ஐ துடைக்க Run ஐ சொடுக்கவும்.
06:52 text editor ல் ஏற்கனவே நான் ப்ரோகிராமைக் கொண்டுள்ளேன்.
06:56 இந்த ப்ரோகிராம் இரு எண்களை வகுக்கிறது.
07:00 'a' வகுபடும் variable மற்றும் 'r' வகுக்கும் variable
07:04 text editor ல் இருந்து code ஐ பிரதி எடுத்து KTurtle editor இனுள் ஒட்டுகிறேன்.
07:11 டுடோரியலை இடைநிறுத்தி ப்ரோகிராமை உங்கள் KTurtle editor இனுள் டைப் செய்க.
07:16 ப்ரோகிராமை டைப் செய்த பின் டுடோரியலை மீண்டும் தொடரவும்
07:20 ப்ரோகிராமை இயக்க Run பட்டன் மீது சொடுக்கவும்.
07:24 'a' க்கு 5 என கொடுத்து OK ல் சொடுக்குக
07:29 'r' க்கு 0 என கொடுத்து OK ல் சொடுக்குக
07:33 இங்கே ஒரு runtime பிழையை பெறுகிறேன் ,
07:36 you tried to divide by zero
07:39 இந்த பிழை வரி எண் 4 ல் உள்ளது.
07:43 ஒரு எண்ணை பூஜ்ஜியத்தால் வகுக்க முடியாது என்பதால் இந்த பிழை வந்துள்ளது.
07:49 மீண்டும் இயக்குவோம்.
07:51 a க்கு 5 என கொடுத்து OK ல் சொடுக்குக
07:54 'r' க்கு 2 என கொடுத்து OK ல் சொடுக்குக
07:58 ப்ரோகிராம் பிழைகளின்றி இயங்குகிறது.
08:01 KTurtle editor ல் இருந்து நடப்பு ப்ரோகிராமைத் துடைக்கிறேன்.
08:05 clear command ஐ டைப் செய்து canvas ஐ துடைக்க Run ஐ சொடுக்குக.
08:10 அடுத்து logical பிழைகள் பற்றி கற்போம்.
08:14 தவறான அல்லது எதிர்பாராத விடையைத் தரும் ஒரு ப்ரோகிராமின் source code ல் உள்ள தவறு Logical பிழை ஆகும்.
08:26 உதாரணமாக,
08:28 தவறான variable க்கு ஒரு மதிப்பை Assign செய்வது
08:32 கூட்டுதலுக்கு பதிலாக இரு எண்களை பெருக்குதல்.
08:36 text editor ல் ஏற்கனவே ப்ரோகிராமைக் கொண்டுள்ளேன்.
08:39 text editor ல் இருந்து code ஐ பிரதி எடுத்து KTurtle editor இனுள் ஒட்டுகிறேன்.
08:47 டுடோரியலை இடைநிறுத்தி ப்ரோகிராமை உங்கள் KTurtle editor இனுள் டைப் செய்க.
08:52 ப்ரோகிராமை டைப் செய்த பின் டுடோரியலை மீண்டும் தொடரவும்
08:57 இப்போது ப்ரோகிராமை இயக்க Run பட்டன் ஐ சொடுக்குக.
09:01 ஒரு dialog box தோன்றுகிறது, OK மீது சொடுக்கவும்.
09:05 Loop ஒரு முடிவில்லா loop னுள் செல்கிறது.
09:08 “while” loop எண்களை 31 லிருந்து அச்சடிக்க ஆரம்பித்து இன்னும் அச்சடித்துக்கொண்டிருக்கிறது.
09:15 இது logical பிழை ஆகும்.
09:18 “while” condition ல் x ஆனது 20 ஐ விட பெரியது,
09:23 ஆனால் variable x எப்போது 20 ஐ விட பெரியது
09:28 எனவே இந்த loop எப்போதும் முடிவடையாது
09:31 இந்த செயல்முறையை நிறுத்த Abort பட்டன் மீது சொடுக்குகிறேன்.
09:36 $x=$x+1 ஐ $x=$x-1 ஆக மாற்றுக.
09:44 text editor ல் இருந்து code ஐ பிரதி எடுத்து KTurtle editor இனுள் ஒட்டுகிறேன்.
09:51 ப்ரோகிராமை இயக்க Run பட்டன் மீது சொடுக்குக.
09:55 ஒரு dialog box தோன்றுகிறது. OK ல் சொடுக்குக.
09:59 29 லிருந்து 20 வரை மதிப்புகளை அச்சடித்த பின் Loop முடிகிறது
10:05 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
10:10 சுருங்க சொல்ல.
10:12 இந்த டுடோரியலில் நாம் கற்றது, பிழைகள் மற்றும் பிழைகளின் வகைகளான
10:18 declare செய்யப்படாத variable ஐ பயன்படுத்துதல்
10:23 stringகளில் மேற்கோள்கள் விடுபடுதல்
10:27 Runtime பிழைகள் மற்றும்
10:30 Logical பிழைகள்.
10:33 பயிற்சியாக கொடுக்கப்பட்ட ப்ரோகிராம்களில் உள்ள பிழைகளை கண்டறியவும்
10:46 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What is a Spoken Tutorial
10:50 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
10:54 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
10:59 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:
11:01 ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
11:05 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
11:09 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
11:17 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
11:23 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
11:31 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro
11:37 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst