K3b/C2/Creating-and-burning-CD-DVD-using-K3b/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 K3bல் CD/DVDஐ உருவாக்குதல் மற்றும் burn செய்தல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு..
00:08 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது, CDல் fileகளை burn செய்தல்.
00:14 settingsஐ மாற்றுதல்
00:17 project ஐ சேமித்தல் மற்றும் CDக்கு பெயரைக் கொடுத்தல்.
00:21 k3bஐ பயன்படுத்தி நாம் என்ன செய்யலாம்?
00:24 'CD/DVD'ல் fileகளை உருவாக்கவும் burn செய்யவும் K3b பயன்படுகிறது.
00:30 desktopல் இருந்து fileகளை 'CD/DVD'ன் உள் copy செய்வது burning files எனப்படும்.
00:37 k3b... audio, video அல்லது data போன்ற அனைத்து file formatகளையும் burn செய்ய ஆதரிக்கிறது.
00:44 இங்கு நாம் பயன்படுத்துவது k3b 2.0.2 மற்றும் Ubuntu Linux 12.04.
00:54 இந்த டுடோரியலைத் தொடர நீங்கள் ஒரு CD அல்லது DVD ஐ drive ல் உள்நுழைத்திருக்க வேண்டும்.
01:01 ஒரு audio fileஐயும் என் folder Myk3bCDல் வைத்துள்ளேன்.
01:09 இந்த folderஐ Ubuntu Desktopல் முன்னரே உருவாக்கி சேமித்துள்ளேன்.
01:16 இந்த folderல் ஒரு audio file "Learningk3b"ஐ சேர்த்துள்ளேன்.
01:21 உங்கள் விருப்பத்திற்கேற்ப எந்த audio fileஐயும் பயன்படுத்தலாம்.
01:26 முதலில் desktop ன் மேல் இடது மூலையில் உள்ள வட்டவடிவ Dash Home buttonஐ க்ளிக் செய்க.
01:35 Search box தோன்றுகிறது.
01:37 அதில் டைப் செய்க: "k3b".
01:40 k3b icon தோன்றுகிறது.
01:44 அந்த applicationஐ திறக்க அதன் மீது க்ளிக் செய்க.
01:47 k3b மூலம் ஒரு CDஐ உருவாக்கி burn செய்யலாம்.
01:52 அதற்கு, New Project iconல் க்ளிக் செய்க.
01:55 தோன்றும் drop-downல் New Data Projectஐ தேர்ந்தெடுக்கவும்
02:01 மேல் இடது panelல் Home folderஐ தேர்ந்தெடுக்கவும்.
02:05 இப்போது, fileகள் மற்றும் folderகளை Home folderல் காணலாம்.
02:11 அடுத்து Desktopல் க்ளிக் செய்க.
02:15 உங்கள் கணினியில் உள்ள ஏதேனும் folder அல்லது fileஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
02:20 இந்த செயல்விளக்கத்திற்கு Myk3bCD folderஐ தேர்ந்தெடுக்கிறேன்.
02:26 எனவே Myk3bCD folderஐ ரைட் க்ளிக் செய்து
02:31 Add to Project option ஐ தேர்ந்தெடுக்கவும்.
02:35 இப்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட folderஐ கீழ் panelல் காணலாம்.
02:41 அடுத்து, CDல் ஒரு folderஐ உருவாக்கி ஒரு fileஐ அதில் வைப்போம்'.
02:49 கீழ் இடது panelல் ரைட் க்ளிக் செய்க.
02:52 தோன்றும் தேர்வு பட்டியலில் New Folderஐ தேர்ந்தெடுக்கவும்.
02:58 ஒரு dialog boxஐ காணலாம்.
03:00 text boxல் டைப் செய்க: "FolderOne".
03:05 OKஐ க்ளிக் செய்க.
03:07 கீழ் panelல் Myk3bCDஐ தேர்ந்தெடுக்கவும்.
03:11 அடுத்து file Writer1ஐ தேர்ந்தெடுக்கவும்.
03:15 தேர்ந்தெடுக்கப்பட்ட file Writer1ஐ இழுத்து FolderOneல் வைக்கவும்.
03:21 file Writer1 பிரதி செய்யப்பட்டதா என காண, FolderOneல் க்ளிக் செய்வோம்.
03:28 இங்கே, file Writer1ஐ காணலாம்.
03:33 இப்போது, கீழ் panelல், Burn icon மீது க்ளிக் செய்க.
03:39 Data Project – k3b window தோன்றுகிறது.
03:44 அடுத்து, இந்த Data Project – k3b windowல் settings ஐ மாற்றுவோம்.
03:50 Writing tabஐ தேர்ந்தெடுத்து பின் இங்கே Writing Modeல் Autoஐ தேர்ந்தெடுப்போம்.
03:56 Auto ஆனது default setting என்பதை கவனிக்கவும்.
04:01 இப்போது Filesystem tabஐ தேர்ந்தெடுப்போம்.
04:05 அது default ஆக Linux/Unix+Windows என இருக்கும்.
04:11 எனவே இங்கு ஏதும் மாற்றவேண்டியதில்லை.
04:16 இப்போது Misc tabக்கு செல்வோம்.
04:20 இங்கே Multisessionல், Autoஐ தேர்ந்தெடுப்போம்.
04:24 இப்போது, dataஐ CDக்கு burn செய்ய Burnஐ தேர்ந்தெடுப்போம்.
04:30 burning process ஆரம்பிக்கிறது.
04:33 இங்கே, windowல் progress status barஐ காணலாம்.
04:38 burning முடிந்தவுடன் 'CD' தானாகவே வெளிவரும்.
04:43 இப்போது fileகள் CDக்கு copy செய்யப்பட்டது.
04:47 இதுதான் burning processன் முடிவு.
04:51 மற்றொரு 'CD'ல் audio fileகளை burn மற்றும் save செய்வோம்.
04:56 முதலில் புது CD உள்நுழைக்கப்பட்டு drive மூடியுள்ளதா என்பதை உறுதிசெய்யவும்.
05:03 முன்னர் போல, New Projectக்கு சென்று New Audio CD Projectஐ தேர்ந்தெடுக்கவும்.
05:09 இங்கே, மேல் இடது panel ல் Myk3bCD folderக்கு வருவோம்.
05:17 இப்போது, மேல் வலது panel ல் audio file "Learningk3b"ஐ தேர்ந்தெடுப்போம்.
05:25 அடுத்து, கீழ் வலது panelக்கு அந்த audio file ஐ இழுத்து விடுவோம்.
05:31 சரியான file ஐ இழுத்து விட்டுள்ளோமா என்பதை சோதிப்போம்.
05:35 கீழ் panel ல் file தகவல்களைக் காணலாம்.
05:40 இந்த fileன், Artist, Title மற்றும் File name தகவல்கள் காட்டப்படுவதைக் காணலாம்.
05:47 இப்போது, இந்த audio ஐ burn செய்ய கற்போம்.
05:52 அதற்கு, main toolbarல் Save மீது க்ளிக் செய்க.
05:56 Save As – k3b window தோன்றுகிறது.
06:00 text boxல் உங்கள் Project க்கு ஒரு பெயர் கொடுக்கவும்.
06:05 MyWork என டைப் செய்து Saveல் க்ளிக் செய்கிறேன்.
06:12 இப்போது Burnல் க்ளிக் செய்க.
06:15 இது Audio Project – k3b windowஐ திறக்கிறது.
06:20 இங்கே, default tab settingsஐ பயன்படுத்துவோம்.
06:24 இருப்பினும் உங்கள் தேவைக்கேற்ப tabகளில் நீங்கள் மாற்றம் செய்யலாம்.
06:30 மீண்டும் Burn மீது க்ளிக் செய்க.
06:34 progress status windowஐ காணலாம்.
06:37 burning முடிந்தவுடன் CD வெளிவருகிறது.
06:43 அதாவது audio fileஐ சேமித்து burn செய்வது முடிந்துவிட்டது.
06:49 k3b மூலம் CD/DVDஐ உருவாக்குதல் மற்றும் burn செய்தல் குறித்த இந்த டுடோரியல் இத்துடன் முடிகிறது.
06:57 இந்த டுடோரியலில் k3b interface பற்றி கற்றோம்.
07:02 மேலும் நாம் கற்றது: fileகளை நாமாக தேர்ந்தெடுத்தல்
07:07 வெவ்வேறு format fileகளை 'CD' ல் burn செய்தல்
07:10 projectஐ சேமித்தல் மற்றும்
07:12 'CD'க்கு பெயரிடுதல்.
07:15 பயிற்சியாக.
07:17 இரு audio fileகளை ஒரு 'CD'ல் burn செய்யவும்.
07:21 இந்த இணைப்பில் உள்ள video ஐ காணவும்
07:24 இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது
07:28 உங்கள் இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள்.
07:32 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
07:38 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
07:42 மேலும் அறிய மின்னஞ்சல் செய்யவும்.... contact at spoken hyphen tutorial dot org
07:48 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்
07:52 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
08:00 மேலும் விவரங்கள் இந்த இணைப்பில் உள்ளன : http://spoken-tutorial.org\NMEICT-Intro.
08:10 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி

Contributors and Content Editors

Priyacst