Java/C3/Using-final-keyword/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம். Using final keyword. குறித்த spoken-tutorialக்கு நல்வரவு.
00:05 இந்த tutorialஇல், நாம் கற்கப் போவது, final keyword மற்றும் அதன் செயலாக்கம்.
00:11 final variables , final methods மற்றும் final classes
00:18 இந்த tutorialஐ பதிவு செய்ய, நான் பயன்படுத்தியிருப்பது:

Ubuntu Linux version 12.04 , JDK 1.7 , Eclipse 4.3.1

00:30 இந்த tutorialஐ தொடர Java மற்றும் Eclipse IDE தெரிந்திருக்க வேண்டும்
00:36 மேலும் Subclassing மற்றும் Method overriding அறிந்திருத்தல் வேண்டும்.
00:41 தெரியாவிட்டால், அதற்கான Java tutorials ஐ, எங்கள் வலைதளத்தில் காணவும்
00:46 முதலில் final keywordஐப் பற்றி அறிவோம்
00:50 final என்பது keyword, அல்லது Javaவில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வார்த்தை எனலாம்.
00:55 இதனை variables, methods அல்லது classesஇல் செயல்படுத்தலாம்
01:01 இப்போது final variableஐக் கற்போம்.
01:05 final variable என்ற variableஇன் மதிப்பை மாற்ற முடியாது. அதாவது அது constantஆகவே இருக்கும்.
01:13 இப்போது Eclipse IDE க்கு செல்கிறேன். முந்தைய tutorialஇல் MyProject என்ற பெயரில் ஒரு projectஐ உருவாக்கி இருக்கிறேன்.
01:22 எனவே இப்போது projectஇன் Employee class க்கு நேரடியாக செல்வோம்.
01:26 name என்ற variable க்கு வரவும்.
01:30 name variableக்கு முன்பு final keywordஐ சேர்க்கவும். name என்ற variableஐ final ஆக்கியுள்ளோம்
01:40 name என்ற variableக்கு, "sneha" என்ற மதிப்பை initialize செய்வோம்.
01:45 Programஐ Save செய்து Run செய்யலாம் .
01:48 The final field Employee.name cannot be assigned எனும் தொகுப்பு பிழை காண்பிக்கப்படுகிறது
01:55 ஏனென்றால் name எனும் final variable ஏற்கனவே declare செய்யப்பட்டு, initialize செய்யப்பட்டும் உள்ளது
02:05 final variableஐ, ஒரு முறை தான் initialize செய்ய முடியும்
02:08 எனவே, name variable ஐ திருத்தம் செய்யும், setName method ஐ comment செய்து செயலிழப்பு செய்வோம்
02:14 classஐ Save செய்யவும்.
02:16 இப்போது TestEmployee classக்கு வரவும்.
02:19 main methodஇல் சென்று, manager.setName("Nikkita Dinesh"); என்ற வரியை comment செய்து செயலிழப்பு செய்யவும்.
02:26 இந்த வரியை செயலிழப்பு செய்ததன் காரணம், இது setName methodஇன் உதாரணமாகும்.
02:31 நாம் ஏற்கனவே Employee c lassஇல், setName methodஐ comment செய்து செயலிழப்பு செய்துள்ளோம்.
02:35 இப்போது classஐ Save செய்து, programஐ Run செய்யலாம்.
02:38 நன்று! நமக்கு இவ்வாறு output கிடைத்துள்ளது, Name: Sneha ,Email: abc@gmail.com Manager of: Accounts .
02:47 நமக்கு இந்த output கிடைத்ததன் காரணம், நாம் ஏற்கனவே variablesஐ, இந்த மதிப்புடன் TestEmployee class மற்றும் Employee classஇல் initialize செய்து இருக்கிறோம்.
02:58 இப்போது Employee classஇன் final variable ஆன nameற்கு வரவும் .
03:02 final variable name, initialize செய்யப்பட்டிருப்பதை நீக்கவும். அதாவது “sneha” என்பதை அகற்றவும்.
03:08 setName method ஐ Uncomment செய்து செயலாக்கம் செய்யவும்.
03:12 programஐ Save செய்து Run செய்யவும்.
03:14 The final field Employee.name cannot be assigned என்பது பிழையாகக் காட்டப்படுகிறது.
03:20 ஏனென்றால், final variable முன்னரே initialize செய்யப்படாமல் இருந்தால், constructor கொண்டு மட்டுமே அதனை initialize செய்ய முடியும்.
03:28 அதாவது program இல் வேறு எங்கும் அதனில் மாற்றம் செய்ய முடியாது
03:33 இதற்கு, Employee classஇல் ஒரு constructor ஐ உருவாக்கலாம். constructor குறித்து நாம் முன்பே கற்றுள்ளோம்.
03:43 constructor இன் name, classஇன் name ஆகவே இருக்கும் என்பதை அறிவோம்..
03:47 எனவே type செய்க: Employee, parentheses, open and close curly brackets . மேலும் curly bracketகளுக்குள், name variableஐ, sneha எனும் மதிப்புடன் initialize செய்து, semicolonஐ கொடுக்கவும்.
04:08 setName methodஐ comment செய்து செயலிழப்பு செய்யவும்.
04:12 Programஐ Saveசெய்து Runசெய்யவும்.
04:15 நமக்கு தேவையான output கிடைத்துள்ளது.
04:17 final variable constructorஇல் வெற்றிகரமாக initialize செய்யப்பட்டுள்ளது.
04:22 இப்போது final static variables குறித்து கற்கலாம்
04:26 Employee classஇல் final variable க்கு வரவும்.
04:30 final keyword முன்பு static keyword என்பதை இணைக்கவும். இப்போது final variablestatic ஆக்கியுள்ளோம்.
04:38 Programஐ Saveசெய்து Runசெய்யவும்.
04:40 The final field Employee.name cannot be assigned என்பது பிழையாகக் காட்டப்படுகிறது.


04:46 ஏனென்றால் static final variables constructorஇல் துவக்க முடியாது
04:53 அவற்றை அறிவிக்கும் போதே ஒரு மதிப்பை கொடுக்க வேண்டும். அல்லது ஒரு static blockஇல் அவற்றை அறிவிக்க வேண்டும்.
05:01 static variableகள் ஒரு classஇன் அனைத்து objectsஇலும் பகிர்ந்து காணப்படும்.
05:06 ஒரு புதிய objectஐ உருவாக்கும் போது static variable மாறுபடும். ஆனால் static variablefinalஆக்கும் போது இது ஏற்படாது.
05:14 Eclipse IDEக்குத் திரும்பவும்
05:17 எனவே இப்போது static blockஐ உருவாக்குவோம்
05:20 அதற்கு, Employee classஇல், நாம் உருவாக்கிய constructor க்கு வருவோம்
05:26 இங்கு Employee parenthesisக்கு பதிலாக , static என type செய்வோம். இவ்வாறு static blockஐ உருவாக்கி இருக்கிறோம்.
05:35 இப்போது Programஐ Saveசெய்து Runசெய்யலாம்.
05:38 நமக்கு தேவையான output கிடைத்துள்ளது. static final variableஐ வெற்றிகரமாக initialize செய்திருக்கிறோம்.
05:46 இப்போது final variableஐ, methodஇன் parameter ஆக பயன்படுத்தலாம்.
05:52 Employee' classஇன் setEmail method க்கு வரவும்.
05:55 String newEmailக்கு முன்பு final keyword ஐ சேர்க்கவும். நாம் finalஐ parameter ஆக்கியுள்ளோம்.
06:03 Programஐ Saveசெய்து Runசெய்யவும்
06:06 நமக்கு தேவையான output கிடைத்துள்ளது
06:09 இப்போது setEmail methodக்கு வரவும். methodஇனுள், type செய்க: newEmail is equal to abc@gmail.com semicolon
06:28 நாம் newEmail எனும் final variableஐ மாற்றியுள்ளோம்
06:32 இன்னொரு முறை Programஐ Saveசெய்து Runசெய்யலாம்
06:35 The final local variable newEmail cannot be assigned என பிழை காட்டப்படுகின்றது
06:42 ஏனென்றால் final variableஐ ஒரு method இன் parameter ஆக்கும் போது, அந்த methodஇனால் அதில் மாற்றம் ஏற்படுத்த முடியாது.
06:50 எனவே variableஇல் ஏற்படுத்திய மாற்றத்தை நீக்குவோம்
06:54 இப்போது final methodஐ கற்கலாம். employee classஇல் உள்ள getDetails methodக்கு வரவும்
07:01 getDetails method முன்பு final keyword ஐ சேர்க்கவும். நாம் இந்த methodஐ final ஆக்கியுள்ளோம்.
07:08 Programஐ Save செய்து Run செய்யலாம்.
07:10 class Manager overrides final method getDetails() எனும் பிழை காட்டப்படுகின்றது
07:16 Manager classஇல் getDetails() methodக்கு வரவும்.
07:21 இது ஏனென்றால் ஒரு methodfinal ஆக்கும் போது, அதனை override செய்ய முடியாது.
07:29 Employee class இல் உள்ள getDetails methodManager class method getDetails override செய்கிறது.
07:36 final method privateஆக இருந்தால் என்ன செய்வது?
07:39 private method களிலிருந்து child class எதனையும் பெறாது
07:43 எனவெ, getDetails() எனும் method ஐ child classஇல் சேர்க்கலாம். இதனை ஒரு பயிற்சியாக நீங்கள் முயற்சி செய்யலாம்
07:51 Eclipse IDEக்கு திரும்பவும்
07:54 Employee classஇல், getDetails method க்கு முன்னிருக்கும் final keyword ஐ நீக்கவும்.
08:03 final variable ஆன nameக்கு முன்னிருக்கும் static keyword ஐ நீக்கவும்.
08:10 இப்போது constructor ஐ, final என declare செய்வது சாத்தியமா, இல்லையா என கற்போம்.
08:15 அதற்கு constructorஐ மறுபடியும் உருவாக்குவோம். எனவே static என்பதற்கு பதிலாக, type செய்க: Employee parentheses.
08:26 constructorக்கு முன்பு, final keyword ஐ சேர்க்கவும்.
08:31 Programஐ Save செய்து runசெய்யலாம்
08:36 Illegal modifier for the constructor in type Employee என்பது பிழையாகக் காட்டப்படுகின்றது
08:42 ஏனென்றால், constructors ஐ அடைய முடியாது என்பதால் constructor ,final ஆகவும் முடியாது.
08:50 constructorக்கு முன்பிருக்கும் final keyword ஐ நீக்குவோம்.
08:54 இப்போது final classஐ கற்போம்
08:57 Employee class க்கு முன்பு, final keyword ஐ சேர்த்து, அதனை final ஆக்கவும்.
09:03 Programஐ Save செய்து run செய்யவும்.
09:06 The method setEmail is undefined for the type Manager என்பது பிழையாகக் காட்டப்படுகிறது.


09:12 உண்மையான பிழையை அறிய, TestEmployee classக்கு வந்து, தகுந்த வரிகளை comment செய்து செயலிழப்பு செய்யலாம்.
09:21 manager.setEmail("abc@gmail.com"); manager.setDepartment("Accounts");
09:28 Classஐ Save செய்து, programஐ run செய்யலாம்.
09:31 The type manager cannot subclass the final class Employee என்பதே உண்மையான பிழையாகும்
09:40 இங்கு, Manager class, Employee classஐ extend செய்கிறது
09:45 எனவே, Employee classக்கு சென்று, final keywordஐ நீக்கலாம். Classஐ Save செய்யவும்.
09:54 TestEmployee classக்கு வரவும். manager.setEmail("abc@gmail.com"); manager.setDepartment("Accounts"); எனும் வரிகளை Uncomment செய்து செயலாக்கம் செய்யவும்
10:06 Classஐ Save செய்து, programஐ run செய்யவும்
10:09 நமக்கு தேவையான output கிடைத்துள்ளது.
10:12 இப்போது சுருக்கமாகப் பார்ப்போம். இந்த tutorialஇல், நாம் கற்றது:

final keywordஐ எப்போது செயலாக்கம் செய்வது , மேலும் final variables, final methods மற்றும் final classes

10:27 ஒரு பயிற்சியாக, Using final keyword tutorialஐ மீண்டும் வழி தொடர்ந்து, முந்தைய tutorialஇல் பயிற்சி செய்த Bike மற்றும் Vehicle classஇல் உபயோகிக்கவும்.
10:37 Java'வில், final class களாக ஆக உள்ள classகளை எழுதவும்.
10:41 கீழே காணும் தொடுப்பின் மூலம், Spoken Tutorial திட்டம் குறித்து சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம்.
10:47 Spoken Tutorial திட்டக்குழு,

spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது, இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org


10:56 இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித் திட்டம், Spoken Tutorial திட்டத்திற்கு ஆதரவு தருகிறது. இந்த tutorial இத்துடன் நிறைவடைகிறது.. இதனை பயன்படுத்தியதற்கு நன்றி. இந்த டுடோரியலைத் தமிழாக்கம் செய்தது ஐஸ்வர்யா குரல் கொடுத்தது சண்முகபிரியா.

Contributors and Content Editors

Aishwarya raman, Priyacst