Java/C3/Static-Variables/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:01 Static Variables பற்றிய spoken tutorials இற்கு வருகை தருக.
00:05 இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது: static variables என்பவை யாவை
00:10 static variables ஐ உருவாக்குதல் மற்றும் அதனை எவ்வாறு பயன்படுத்துதல்.
00:17 இங்கே, நான் பயன்படுத்துவது: Ubuntu 12.04 JDK 1.7 மற்றும் Eclipse 4.3.1
00:27 இந்த டுடோரியலைப் பின்பற்ற, java மற்றும் Eclipse IDE இன் அடிப்படைகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
00:35 Java வில் classes, objects மற்றும் instance variableஆகியவற்றை அறிந்திருக்க வேண்டும்.
00:42 இல்லையெனில், தொடர்புடைய java tutorialகளுக்கு, காட்டப்பட்டுள்ள website ஐ பார்வையிடவும்.
00:49 static variable ஆனது ஒரு முழு class யுடன் தொடர்புடையதாகும்.
00:55 இது class variable என்றும் அழைக்கப்படுகிறது.
00:58 இது static keyword ஐ பயன்படுத்தி declare செய்யப்படுகிறது.
01:02 நாம் முன்டுடோரியலில் static variable பற்றி சுருக்கமாக பார்த்தோம்.
01:08 இந்த டுடோரியலில், அதை விரிவாக பார்ப்போம்.
01:11 இப்போது, ​​நாம் eclipse இற்கு மாறுவோம், static variable demo 'என்கிற புதிய project ஐ உருவாக்குவோம்.
01:18 இந்த project இன் உள்ளே, static variable பயன்பாட்டை நிரூபிக்க தேவையான class களை நாம் உருவாக்குவோம்.
01:26 எனவே, src' folder இல் right click செய்து, New > Class என்பதை கிளிக் செய்து, அந்த class ன் பெயரை StudentEnroll' என type செய்து Enter என அழுத்தவும்.
01:37 static variable பயன்பாட்டின் உதாரணத்தை இப்போது விளக்குவோம்.
01:42 class என்பது ஒரு organization இல் student enrollments ஐ represent செய்வதற்காக உருவாக்கப்பட்டது என எடுத்துகொள்வோம்.
01:49 இந்த class இல் enroll செய்யப்பட்ட மாணவர்களின் Name, Id , Branch மற்றும் Total Count ஆகியன உள்ளன.
01:56 இப்போது, ​​மாணவர் enroll செய்யப்படும் போது என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.
02:02 Default ஆக Total Count என்பது 0, முதல் student இன் பெயர் ‘‘‘ADIL’’’
02:09 Id என்பது IT101, Branch என்பது IT
02:14 இப்போது Total Count என்பது 1 என மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
02:18 இதேபோல், இரண்டாவது மாணவர் AMAL சேர்ந்தால், Total Count 2 ஆக புதுப்பிக்கப்படும்.
02:25 மூன்றாவது மாணவர் CAROL சேர்ந்தால், Total Count 3 ஆக புதுப்பிக்கப்படும்.
02:32 இப்போது variable ஆன Total Count அனைத்து object களுக்கும், பொதுவானதாகவும் ஒரே ஒரு value வை கொண்டிருப்பதாகவும் அடையாளம் காணலாம்.
02:40 எனவே, இந்த Total Count variable ஐ static variable எனவும் குறிப்பிடப்படலாம்.
02:45 Name, Id மற்றும் Branch ஆகிய ஒவ்வொரு variable உம் தன் object இற்கு உரிய copies ஐ கொண்டுள்ளன என்பதை நாம் காணலாம்.
02:54 ஒவ்வொரு object இற்கும் குறிப்பிட்ட value க்களை அவை பெற்றிருக்கும்.
02:59 எனவே, இந்த variable கள் instance variable எனக் கருதப்படலாம்.
03:04 இப்போது, ​​ student enrollment class ஐ குறிக்கும் code ஐ பார்க்கலாம்.
03:09 instance variable கள் id, name மற்றும் branch என declare செய்யப்படுகின்றன.
03:16 variable count ஆனது static என declare செய்யப்படுகிறது, ஏனெனில் இது ஒட்டுமொத்த class இற்கும் பொதுவானது.
03:22 ஒரு class load செய்யப்படும் பொழுது, static variable ஒரு fixed memory location ஐ பெறுகிறது.
03:28 ஆனால் instance variable இன் ஒவ்வொரு object உம் தனித்தனி memory locations களை ஆக்கிரமிக்கின்றன.
03:35 இப்போது source ஐ click செய்து Generate Constructor using Fields ஐ தேர்ந்தெடுக்கவும்.
03:41 உருவாக்கப்பட்ட code இல் இருந்து super keyword ஐ நீக்கவும்.
03:45 இந்த constructor ஆனது id, name மற்றும் branch ஆகிய field களின் value க்களை initialize செய்யும்.
03:51 'ஒவ்வொரு object உம் உருவாகும் பொழுது, variable இன் count ஐ அதிகப்படுத்த வேண்டும்.
03:59 எனவே, constructor இன் உள்ளே, type செய்க:count ++ semicolon.
04:05 இப்போது நாம் இந்த class இற்கு showData( ) என்கிற method ஐ பயன்படுத்தி எல்லா variable களின் valueகளையும் print செய்திடுவோம்.
04:13 எனவே type செய்க: public void showData( ) அடைப்புகுறிகளின் உள், id, name, branch, மற்றும் total number of students enrolled ஆகியவற்றை print செய்திட பின்வரும் code ஐ டைப் செய்க,
04:27 இப்போது default package ஐ right click செய்து, பின் New > class என்பதைக் கிளிக் செய்து, Demo என பெயரை type செய்யுங்கள்.
04:36 இந்த class இன் உள்ளே main method ஐ வைப்போம்.
04:39 எனவே, main என type செய்து ctrl + space என அழுத்த main method generate ஆகும்.
04:46 இப்போது நாம் Student Enrollment data வை print செய்திட வேண்டும்.
04:50 Students enrollments ஐ represent செய்ய StudentEnroll class க்கான சில object களை உருவாக்குவோம்.
04:57 எனவே, பின்வரும் code ஐ type செய்யுங்கள்: StudentEnroll s1 equals new StudentEnroll.
05:04 இப்போது நாம் வெவ்வேறு argument களின் value களை pass செய்ய முடியும்.
05:08 Bracket க்குள், id IT101 எனவும், nameADIL எனவும் மற்றும் branch IT எனவும் type செய்யவும்.
05:17 enrollment விவரங்களை print செய்திட ShowData method ஐ invoke செய்வோம்.
05:22 எனவே, type செய்க:s1.showData( ). இப்போது Demo program ஐ Run செய்வோம்.
05:29 s1 உடன் தொடர்புடைய instance variable களின் value க்கள் print செய்யப்படுவதை நாம் காணலாம்.
05:36 Number of student enrollment இன் value 1 என்பது குறிப்பிடத்தக்கது.
05:42 ஏனென்றால் நாம் ஒரே ஒரு object ஐ மட்டுமே உருவாக்கினோம்..
05:47 இன்னொரு object s2 ஐ உருவாக்குவதற்கு பின்வரும் code ஐ type செய்யுங்கள்.
05:52 s2 ஐ பயன்படுத்தி ShowData முறையை மீண்டும் அழைக்கலாம்.
05:56 மீண்டும் demorun செய்யுங்கள்.
05:59 S2 உடன் தொடர்புடைய instance variable களின் valueக்கள் print ஆவதை நாம் காணலாம்.
06:06 மேலும், s1 மற்றும் s2 இற்குரிய number of students enrollment, 2 ஆக புதுப்பிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.
06:14 இப்போது இன்னொரு object s3 ஐ உருவாக்கவும்.
06:18 s3 ஐ பயன்படுத்தி ShowData methodஐ மீண்டும் செயல்படுத்துவோம்.
06:23 இப்போது Demo program ஐ மீண்டும் Run செய்வோம்.
06:26 'S3' உடன் தொடர்புடைய instance variable களின் value க்கள் print செய்யப்பட்டதை நாம் காணலாம்.
06:32 Students enrollments number இப்போது அனைத்து இடங்களிலும் 3 ஆக புதுப்பிக்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்க.
06:41 இப்போது நாம் students enrollment number இற்கான value க்கள் அனைத்து object களுக்கும் பொதுவானது என்று புரிந்து கொள்ள முடிகிறது.
06:48 இனி slides இற்கு வருவோம்.
06:51 static modifier, final modifier உடனும் பயன்படுத்தப்படுகிறது.
06:56 இது மொத்த class இற்கும் பொதுவான constant ஐ வரையறுக்க உதவி செய்கிறது.
07:01 வழக்கமாக, இதுபோன்ற constant variable களின் பெயர்கள் uppercase letter களால் உச்சரிக்கப்படுகின்றன.
07:08 இப்போது eclipse இற்கு திரும்ப வருக.
07:11 Student Enroll class ஐ திறந்து, variable declaration இல் இவ்வாறு type செய்க:- public static final String ORG_NAME = “IITB”;
07:23 உதாரணமாக, அனைத்து மாணவர்களும் ஒரே நிறுவனமான IITB இல் சேர்கிறார்கள், என்று வைத்து கொள்ளவும்.
07:31 ORG_NAME மாதிரியான constant static variable ஐப் பயன்படுத்துவதன் மூலம் இதை குறிப்பிடப்படலாம்.
07:38 Nameல் ஒன்றுக்கும் மேற்பட்ட வார்த்தைகள் இருந்தால் அவை ஒரு underscore ஆல் பிரிக்கப்படுகின்றன.
07:44 பொதுவாக அத்தகைய constants களை public visibility யோடு நாம் declare செய்கிறோம்.
07:49 இப்போது Demo class இற்கு சென்று, பின்வரும் code ஐ type செய்திடவும்.
07:55 இங்கே StudentEnroll என்கிற class ஐ பயன்படுத்தி ORG_NAME ஐ அணுகலாம் என்பதை பார்க்க முடியும்.
08:03 மீண்டும் demorun செய்யுங்கள்..
08:06 ORGANIZATION இன் பெயர் IITB என print செய்யப்பட்டு வருவதை நாம் காணலாம்.
08:11 சுருக்கமாக, இந்த டுடோரியலில், நாம் இதுவரை பார்த்தவை:
08:17 * static variable மற்றும் அதை எப்போது பயன்படுத்துவது
08:21 static variable களை எவ்வாறு உருவாக்குவது மற்றும் செயல்படுத்துவது.
08:25 பயிற்சியாக, ஒரு car service stationஐ represent செய்ய ஒரு class CarService வடிவமைக்கவும்.
08:32 இந்த class பின்வரும் விவரங்களை தெரிவுப்படுத்த variable களை கொண்டிருக்க வேண்டும்:உதாரணத்திற்கு service stationன் Name.
08:39 * service இற்காக இருக்கும் Car களின் make, model மற்றும் register number -
08:44 * service இற்காக உள்ள No. of Cars
08:47 இதில் instance variables மற்றும் static variablesஐ அடையாளம் காண்க.
08:51 பொருத்தமான keywordகளைப் பயன்படுத்தி அவற்றை declare செய்க.
08:55 Car ன் make, model மற்றும் register numberன் value க்களை ஐ செயல்படுத்த ஒரு constructor ஐ define செய்யவும்.
09:01 அனைத்து variable களின் value க்களையும் print செய்ய show( ) method ஐ define செய்யவும்.
09:07 மேலும், முடிவுகளைச் சரிபார்க்க Main method ஐ கொண்ட Demo classஐ உருவாக்கவும். அதாவது CarService இற்குரிய object களை உருவாக்கவும்.
09:16 இந்த object களை பயன்படுத்தி show( ) method ஐ செயல்படுத்தவும்.
09:20 மேலும், class இன் பெயரைப் நேரடியாக பயன்படுத்தி static variable ஐ அணுகவும்.
09:25 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருக்கமாக காட்டும். தயவு செய்து அதைப் பார்க்கவும்..
09:32 spoken tutorial திட்டக்குழுவானது: spoken tutorial களைப் பயன்படுத்தி workshop களை நடத்துகிறது மற்றும் online exam களை நடத்தி தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ்களை அளிக்கிறது..
09:41 மேலும் விவரங்களுக்கு, இந்த மின்னஞ்சலிற்கு மெயில் எழுதுங்கள்.
09:45 spoken tutorial திட்டம் NMEICT, MHRD, இந்திய அரசால் நிதியளிக்கப்படுகிறது.
09:51 இந்த திட்டம் பற்றிய மேலும் தகவல்கள் காட்டப்பட்டுள்ள இணைப்பில் கிடைக்கிறது.
09:56 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது சங்கர் தியாகராஜன். குரல் கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Venuspriya