Java/C2/Nested-if/Tamil
From Script | Spoken-Tutorial
| Time | Narration |
| 00:02 | Java-ல் Nested-If மற்றும் Ternary Operator குறித்த spoken tutorial-க்கு நல்வரவு |
| 00:07 | இந்த tutorial-லில் நாம் கற்கபோவது: Nested-If Statements மற்றும் Ternary operators. Java program-ல் அவற்றை பயன்படுத்துதல். |
| 00:17 | இந்த tutorial-க்கு நாம் பயன்படுத்துவது: Ubuntu 11.10, JDK 1.6,மற்றும் EclipseIDE 3.7.0 |
| 00:27 | இந்த tutorial-ஐ தொடர, , |
| 00:29 | relational மற்றும் logical operators மற்றும். |
| 00:33 | if...else control flow statements-ன் பயன்பாடுகளைத் தெரிந்திருக்க வேண்டும். |
| 00:36 | இல்லையெனில் அதற்கான tutorial-களை எங்கள் வலைத்தளத்தில் காணவும். |
| 00:41 | ஒரு If statement மற்றொரு if statement-னுள் இருப்பது nested-if statement எனப்படும். |
| 00:49 | syntax. |
| 00:53 | condition 1 உண்மையெனில், condition 2-க்கு சோதிக்கிறது. |
| 00:59 | மற்றொரு If statement-ஐ பயன்படுத்தி Condition 2 கொடுக்கப்பட்டுள்ளது. |
| 01:03 | condition 2 உண்மையெனில், Statement அல்லது block 1-ஐ இயக்குகிறது. |
| 01:09 | இல்லையெனில் Statement அல்லது block 2-ஐ இயக்குகிறது. |
| 01:13 | condition 1 பொய் எனில், நேரடியாக அதன் else statement-க்கு தாவும். அதாவது block 3-க்கு. |
| 01:24 | உதாரணத்தை முயற்சிக்கலாம். |
| 01:28 | eclipse IDE மற்றும் மீதி code-க்கு தேவையான அமைப்பும் உள்ளது. |
| 01:32 | class NesedIfDemo-ஐ உருவாக்கி அதற்கு main method-ஐ சேர்த்துள்ளோம். |
| 01:37 | கொடுக்கப்பட்ட எண் ஒற்றைப்படையா இரட்டைப்படையா என சோதிக்கலாம். |
| 01:42 | nested-if-ஐ பயன்படுத்தி எதிர்ம எண்களையும் கையாளலாம். |
| 01:46 | main method-னுள் எழுதுக |
| 01:49 | int n = minus 5; |
| 01:54 | எதிர்ம எண்ணை சேமிக்க variable n-ஐ உருவாக்கியுள்ளோம். |
| 01:58 | if conditions-ஐ எழுதுவோம். |
| 02:01 | அடுத்த வரியில் எழுதுக |
| 02:02 | if (n < 0) |
| 02:07 | open curly bracket. enter செய்க |
| 02:10 | System.out.println (“Negative number”); |
| 02:22 | முதலில் அந்த எண் எதிர்ம எண் தானா என பார்க்கலாம். |
| 02:25 | ஆம் எனில் ஒற்றைப்படையா இரட்டைப்படையா என சோதிக்க மாட்டோம். |
| 02:29 | எண் எதிர்ம எண் இல்லையெனில், ஒற்றைப்படையா இரட்டைப்படையா என சோதிப்போம். |
| 02:34 | அடுத்த வரியில் எழுதுக else { } enter செய்க |
| 02:42 | இப்போது இயக்கம் else பகுதிக்கு வந்துள்ளது. |
| 02:45 | அதாவது அந்த எண் எதிர்ம எண் அல்ல. |
| 02:48 | ஒற்றைப்படையா இரட்டைப்படையா என்பதை else பகுதியினுள் சோதிப்போம். |
| 02:53 | if (n modulus 2 double equal to 0) { enter செய்க |
| 03:03 | System.out.println(“Even number”); } else { enter செய்க System.out.println(“Odd number”); } |
| 03:29 | எனவே ஒற்றை இரட்டைப்படை சோதிப்புக்கு எதிர்ம எண்களைக் கருத்தில் கொள்ளவில்லை. |
| 03:34 | இப்போது code-ஐ செயலில் பார்ப்போம். |
| 03:37 | file-ஐ சேமித்து இயக்குவோம். வெளியீடு “negative number” என பெறுகிறோம். |
| 03:43 | இப்போது நேர் எண்ணை முயற்சிப்போம். |
| 03:46 | n = -5 ஐ n = 5 ஆக்குவோம் |
| 03:53 | file-ஐ சேமித்து இயக்குவோம் |
| 03:57 | பார்ப்பது எதிர்பார்த்ததுபோல வெளியீடு odd number. ஒரு இரட்டைப்படை எண்ணை முயற்சிக்கலாம் |
| 04:04 | n = 5 ஐ n = 10 ஆக்குவோம். |
| 04:09 | file-ஐ சேமித்து இயக்குவோம் |
| 04:12 | பார்ப்பது எதிர்பார்த்ததுபோல வெளியீடு “even” number. |
| 04:17 | ஓர் if statement-னுள் மற்றொன்றை சேர்க்கும் இந்த செயல்முறை nested-if எனப்படும். |
| 04:22 | nesting எண்ணிக்கைக்கு எல்லையே இல்லை. |
| 04:25 | ஆனால் 3 நிலைகளுக்கு மிகாமல் இருப்பது நல்ல நடைமுறை. |
| 04:31 | இப்போது ternary operator-ஐ பார்க்கலாம். |
| 04:33 | முதலில் Main method-னுள் இருப்பதை நீக்கலாம். |
| 04:37 | ஒரு எண்ணை இரண்டால் வகுக்கும் program-ஐ எழுதுவோம் |
| 04:40 | இது ஒரு சிறிய program. ஆனால் ஒற்றைப்படை எண் பிரித்தலில்தான் சிக்கல் வருகிறது. |
| 04:45 | 7 ஐ 2 ஆல் வகுக்கும்போது, 3 ஐ பெறுகிறோம். |
| 04:48 | ஆனால் முடிவு முழுமையாக வேண்டுமானால்.... |
| 04:50 | அதாவது, 7 ஐ 2 ஆல் வகுக்கும் போது 4 ஐ பெறுகிறோம் 3 அல்ல |
| 04:56 | அதாவது, அடுத்த எண் தேவை. |
| 05:01 | main method-னுள் எழுதுக int n, nHalf ; |
| 05:08 | எண்ணை n-லும்... பாதி எண்ணை nHalf-லும் சேமிப்போம் |
| 05:13 | அடுத்த வரியில் n = 5; |
| 05:18 | அடுத்து if (n % 2 == 0) { enter செய்க |
| 05:28 | எழுதுக nHalf = n / 2; } else { nHalf = (n + 1) / 2; } |
| 05:50 | எண் ஒற்றைப்படையா இரட்டைப்படையா என கண்டறிந்து அதற்கேற்றாற்போல வகுப்போம். |
| 05:55 | program-ஐ செயலில் காண print statement சேர்ப்போம் |
| 05:59 | System.out.println(nHalf); |
| 06:11 | file-ஐ சேமித்து இயக்குவோம் |
| 06:14 | பார்ப்பது போல நம் நோக்கத்தை நிறைவேற்றி வெளியீடு 3 ஐ பெறுகிறோம் 2 அல்ல |
| 06:21 | நாம் செய்யும் அனைத்தும், condition-ஐ பொருத்து variable-க்கு மதிப்பை அமைக்கிறோம். |
| 06:27 | நம் program-ல் logic-ஐ விட syntax அதிகம். |
| 06:31 | இது ternary operator... code-ஐ சுலபமாக்கும்போது. |
| 06:35 | Ternary Operator... conditional operator... nested-if-க்கு ஒத்த முடிவைத் தருகிறது. |
| 06:40 | இது ஒரு குறுகிய syntax-ஐ தருகிறது மேலும் ஒரு கேள்விக்குறியால் குறிக்கப்படுகிறது. |
| 06:45 | இது ஒரே நேரத்தில் 3 operandகளை எடுக்கிறது. |
| 06:48 | Ternary Operator-ன் syntax-ஐ காண்போம். |
| 06:53 | அந்த expression... சோதிக்கப்படவேண்டிய condition. |
| 06:56 | condition உண்மையெனில் Operand 1 என்பது variable Result-ன் மதிப்பு. |
| 07:03 | condition பொய்யெனில் Operand 2 என்பது மதிப்பு. |
| 07:09 | அதை நம் program-ல் பயன்படுத்துவோம். |
| 07:12 | முதலில் if-else statement-ஐ நீக்குவோம். |
| 07:17 | எழுதுக nHalf = n % 2 == 0 ? n / 2 : (n + 1) / 2 semi-colon |
| 07:41 | இந்த statement சொல்வது, |
| 07:43 | n இரட்டைப்படை எனில், nHalf என்பது n by 2 ,இல்லையெனில், அது n plus 1 by 2. |
| 07:50 | இதை செயலில் பார்ப்போம். |
| 07:52 | file-ஐ சேமித்து இயக்கவும். Ctrl S மற்றும் Ctrl F11 |
| 07:59 | எதிர்பார்த்தது போல வெளியீடு உள்ளது. |
| 08:02 | இவ்வாறு, ternary operator... code-ல் ஒழுங்கீனத்தைக் குறைத்து படிக்க எளிமையாக்குகிறது. |
| 08:09 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
| 08:11 | நாம் கற்றது: |
| 08:13 | Nested-If Statements மற்றும் Ternary Operator |
| 08:15 | Java -ல் அவற்றை பயன்படுத்துதல் |
| 08:23 | இப்போது பயிற்சி பின்வருவனவற்றிற்கு java program எழுதுக |
| 08:28 | ஒரு எண் இரட்டைப்படையா எனவும் 11-ன் மடங்கா எனவும் சோதிக்கவும். |
| 08:34 | Ternary operator பயன்படுத்தி கொடுக்கப்பட்ட இரு எண்களில் பெரியதைக் கண்டறியவும். |
| 08:40 | மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது |
| 08:45 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
| 08:52 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
| 08:57 | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
| 09:07 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
| 09:17 | மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
| 09:26 | தமிழாக்கம் பிரியா. நன்றி |