Java/C2/Arithmetic-Operations/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Java ல் Arithmetic Operationகள் குறித்த tutorialக்கு நல்வரவு.
00:06 இதில் கற்க போவது Arithmetic Operationகளான கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் மற்றும் அவற்றை பயன்படுத்துதல்.
00:16 இதற்கு பயனாவது Ubuntu 11.10, JDK 1.6 மற்றும் Eclipse 3.7.
00:24 இந்த tutorial ஐ தொடர உங்கள் கணினியில் eclipse ஐ நிறுவியிருக்க வேண்டும்
00:28 மேலும் Eclipse ல் file ஐ உருவாக்க சேமிக்க இயக்க தெரிந்திருக்க வேண்டும்
00:33 இல்லையெனில் அதற்கான tutorial ஐ எங்கள் தளத்தில் காணவும்.
00:43 இங்கே operatorகளின் பட்டியல் மற்றும் அவற்றின் கணித செயல்பாடுகள் உள்ளன கூட்டலுக்கு கூட்டல் குறி கழித்தலுக்கு கழித்தல் குறி பெருக்கலுக்கு நட்சத்திரம் வகுத்தலுக்கு முன்சாய்வு குறி
00:55 அவை ஒவ்வொன்றையும் விரிவாக காணலாம்.
01:05 இங்கே Eclipse IDE மற்றும் மீதி codeக்கான அமைப்பும் உள்ளன
01:11 Arithmetic Operations என்ற class ஐ உருவாக்கி அதில் main method ஐ சேர்த்துள்ளோம்.
01:17 சில variableகளை சேர்ப்போம்.
01:22 int x = 5;
01:27 'int y = 10; int result
01:35 x மற்றும் y operands ஆகும். result.... செயல்பாட்டின் வெளியீட்டைச் சேமிக்கும்.
01:42 அவற்றைக் கூட்டி முடிவை அச்சடிப்போம். Result= x+y; system. out. println ' parantesisனுள் result
02:10 Control S ஐ அழுத்தி சேமித்து control F11 ஐ அழுத்தி இயக்குக
02:17 கூடுதலின் வெளியீடு சேமிக்கப்பட்டு மதிப்பு அச்சடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்
02:25 இப்போது மதிப்புகளை மாற்றலாம். x=75,y = 15
02:38 சேமித்து இயக்குக
02:43 அதற்கேற்றவாறு வெளியீடு மாறியிருப்பதைக் காணலாம்
02:48 இப்போது எதிர்மறை மதிப்புகளை முயற்சிக்கலாம். 'y = -25.
02:57 சேமித்து இயக்குக
03:02 75 plus -25 ன் வெளியீடு அச்சடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்
03:11 இப்போது கழித்தலை முயற்சிக்கலாம். 'y = 5. x+y ஐ x-y ஆக்குக
03:25 சேமித்து இயக்குக
03:32 75-5 ன் வெளியீடு அச்சடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்
03:39 இப்போது பெருக்கலை முயற்சிக்கலாம். minus asterisk ஆக்குக
03:47 சேமித்து இயக்குக
03:52 asterisk ஐ பயன்படுத்தி பெருக்கமுடியும் என காணலாம் 75*5. .
03:59 இப்போது வகுத்தலை முயற்சிக்கலாம். asterisk ஐ நீக்கி slash ஐ இடுக
04:08 சேமித்து இயக்குக
04:14 எதிர்பார்த்த வெளியீட்டைக் காணலாம்.
04:18 இப்போது எதிர்பார்த்த முடிவு தசம எண்ணாக இருக்கும்போது என நடக்கிறது என காணலாம்
04:24 510 ஆக்குக
04:28 முடிவு 7.5ஆக இருக்க வேண்டும்.
04:30 எனவே result ஐ float ஆக மாற்றுவோம்.
04:43 இதை சேமித்து இயக்குவோம்
04:51 எதிர்பார்த்த முடிவு 7.5 ஆக இருந்தாலும் பெறும் வெளியீடு 7.0 என காண்க
04:57 ஏனெனில் வகுத்தலில் ஈடுபடும் இரு operandகளும் integers.
05:02 y ஐ float ஆக்குவோம். y=10f
05:16 சேமித்து இயக்குக.
05:22 இப்போது எதிர்பார்த்த முடிவைக் காணலாம்.
05:25 எதிர்பார்த்த முடிவு float ஆக இருக்க, எதிர்பார்த்த வெளியீட்டைப் பெற அதில் ஒரு operand... float ஆக இருக்க வேண்டும் என்பதை மனதில் நிறுத்துக.
05:33 இப்போது ஒன்றுக்கும் மேற்ப்பட்ட operatorகள் இருப்பின் நடப்பதைக் காணலாம். அனைத்து operandகளையும் நீக்குக
05:48 int result= 8+4-2. சேமித்து இயக்குக
06:09 வெளியீடு நாம் எதிர்பார்த்தது
06:13 இப்போது minus slash ஆக மாற்றுவோம்
06:20 இப்போது கூடுதல் வகுத்தலுக்கு முன் நடைப்பெற்றால் வெளியீடு 6 ஆக இருக்கும்
06:25 அல்லது வகுத்தல் கூடுதலுக்கு முன் நடைப்பெற்றால் அது 10 ஆக இருக்கும்
06:30 இயக்கி வெளியீட்டைக் காண்போம்.
06:38 பார்ப்பதுபோல கூடுதலுக்கு முன் வகுத்தல் நடைப்பெற்று வெளியீடு 10. ஏனெனில் வகுத்தல் operator ஆனாது கூட்டல் operatorஐ விட அதிக முன்னுரிமைக் கொண்டுள்ளது.
06:50 அச்சமயங்களில், முன்னுரிமையை மீற வேண்டுமெனில், parenthesesகளை பயன்படுத்துகிறோம்.
07:04 parenthesesகளை சேர்ப்பதன் மூலம், வகுத்தலுக்கு முன் கூட்டலை செய்ய java க்கு அறிவுறுத்துகிறோம்.
07:10 இப்போது file ஐ இயக்குவோம்.
07:16 கூட்டல் முதலில் செயல்படுத்தப்பட்டு எதிர்பார்த்த வெளியீடு 6 ஐ காண்கிறோம்.
07:23 விதிப்படி, செயல்பாடுகளின் வரிசை தெளிவாக இல்லையெனில் paranthesisகளை பயன்படுத்த நினைவில் கொள்க.
07:37 இத்துடன் இந்த tutorial முடிகிறது
07:41 நாம் கற்றது java ல் அடிப்படை கணித செயல்பாடுகளை எவ்வாறு செயல்படுத்துவது
07:44 operator முன்னுரிமை மற்றும்,
07:46 அதை மீறுதல்
07:49 பயிற்சியாக modulo operator என்றால் என்ன எனவும் அது என்ன செய்கிறது எனவும் கண்டறிக
07:58 மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
08:03 இது spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது
08:06 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
08:11 Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
08:18 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
08:25 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
08:35 மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
08:39 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, Pratik kamble, Priyacst