Java-Business-Application/C2/Java-servlets-and-JSPs/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Java Servletகள் மற்றும் JSPகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது:
00:09 Web server, Web container.
00:12 ஒரு எளிய Java Servlet மற்றும் JSP ஐ உருவாக்கவும் கற்போம்.
00:18 இங்கே நாம் பயன்படுத்துவது
00:20 உபுண்டு பதிப்பு 12.04
00:23 Netbeans IDE 7.3
00:27 JDK 1.7
00:29 Firefox web-browser 21.0.
00:33 உங்களுக்கு விருப்பமான எந்த web-browser பயன்படுத்தலாம்.
00:37 இந்த டுடோரியலைத் தொடர
00:41 Netbeans IDE ஐ பயன்படுத்தி Core Java மற்றும்
00:45 HTML பற்றிய அறிவு இருக்க வேண்டும்
00:47 இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் இணையத்தளத்தைக் காணவும்.
00:52 Servletகள் மற்றும் JSP க்கு செல்லும் முன் முதலில் ஒரு web server ஐ புரிந்து கொள்வோம்
00:58 ஒரு web server என்பது இணையம் வழியே உள்ளடக்கத்தை பயனாளிகளுக்கு கொண்டுசேர்க்கும் ஒரு அமைப்பு ஆகும்
01:05 இது Internet server எனவும் அழைக்கப்படுகிறது.
01:10 ஒரு web container என்பது Java servletகளுடன் தொடர்புகொள்ளும் web server ன் ஒரு அங்கமாகும்
01:18 இது servlet container எனவும் அழைக்கப்படுகிறது
01:22 servlet களை அதனுள் இயக்க servlet container அனுமதிக்கிறது.
01:28 இப்போது, ஒரு எளிய servlet ஐ எழுத கற்போம்
01:32 Netbeans IDEக்கு வருவோம்
01:35 IDE ன் இடப்பக்கமுள்ள Project tab மீது க்ளிக் செய்க
01:40 முன்னர் MyFirstProject என்ற ஒரு எளிய Project ஐ உருவாக்கினோம்
01:46 இங்கே IDE ன் இடப்பக்கம் அதை காணலாம்
01:50 இந்த project னுள் ஒரு எளிய servlet ஐ உருவாக்குவோம்.
01:55 எனவே MyFirstProject மீது right-click செய்க.
01:59 New க்கு சென்று Servlet மீது க்ளிக் செய்க
02:03 ஒரு New Servlet window திறக்கிறது.
02:05 Class Name MyServlet என டைப் செய்க
02:09 Package பெயரை org.spokentutorial என டைப் செய்க
02:16 பின் Next மீது க்ளிக் செய்க
02:18 Add information to deployment descriptor (web.xml) மீது க்ளிக் செய்க
02:23 Class Name org.spokentutorial.MyServlet என்பதை காணலாம்
02:30 Servlet Name உம் Class Name உம் ஒன்றே என காணலாம் அதாவது MyServlet.
02:37 URL pattern உம் Class Name உம் ஒன்றே என காணலாம் அதாவது MyServlet
02:45 இதை MyServletPath க்கு மாற்றலாம்
02:50 பின் Finish மீது க்ளிக் செய்க
02:53 MyServlet.java க்காக IDE ஆல் உருவாக்கப்பட்ட source code Source Editor Window ல் காணப்படுகிறது
03:01 MyServlet.java .... package org.spokentutorial ல் உருவாக்கப்படுகிறது என காண்கிறோம்
03:09 servlet ல் main method இல்லை என்பதை தவிர, ஒரு servlet என்பது மற்ற Java class போன்றதே என்பதை கவனிக்கவும்
03:19 இப்போது Glassfish server பற்றி கற்போம்
03:24 servlet ஒரு servlet container ல் deploy செய்யப்படுகிறது
03:28 நாம் server ஆக Glassfish ஐ பயன்படுத்துகிறோம்
03:32 servletகளுடன் தொடர்புகொள்ளும் Glassfish ன் ஒரு அங்கம் Servlet container ஆகும்.
03:39 இப்போது Netbeans IDE க்கு வருவோம்
03:42 MyServlet extends HttpServlet என்பதை கவனிக்கவும்
03:48 code ன் முடிவில் HttpServlet method களை காணலாம்
03:54 இந்த methodகளை காண இடப்பக்க கூட்டல் குறி மீது க்ளிக் செய்க.
03:59 methodகள் - doGet, doPost மற்றும் getServletInfo ஐ காண்கிறோம்.
04:09 இந்த methodகளை புறக்கணிக்கலாம்.
04:12 மேலே மேலும் ஒரு method processRequest இருப்பதைக் காணலாம்.
04:18 குழப்பத்தை தவிர்க்க processRequest மற்றும் getServletInfo method களை நீக்கலாம்.
04:25 எனவே இரு methodகள் doGet மற்றும் doPost மட்டும் கொண்டுள்ளோம்
04:31 இப்போதைக்கு doGet method ஐ காண்போம்
04:35 எந்த எளிய URLrequest க்கும் ஆன ஒரு முன்னிருப்பு method doGet ஆகும்.
04:41 எனவே doGet methodனுள் ஏதேனும் code டைப் செய்யலாம்
04:45 processRequest method ஐ ஏற்கனவே நீக்கிவிட்டோம்
04:49 எனவே processRequest methodக்கான method call ஐ நீக்குவோம்
04:54 doPost method ல் இருந்தும் அதை நீக்குவோம்
04:58 இப்போது doGet method க்கு வருவோம்
05:01 doGet methodக்கு அனுப்பப்படும் இரு parameterகளை காணலாம்
05:07 ஒன்று request object மற்றொன்று response object.
05:12 request object ஆனது HttpServletRequest type லும்
05:18 response object ஆனது HttpServletResponse type ல் இருப்பதையும் கவனிக்கவும்
05:22 client பக்கம் HTML response ஐ திரும்ப அனுப்ப response object ஐ பயன்படுத்துகிறோம்.
05:30 அதற்கு ஒரு PrintWriter object ஐ உருவாக்க வேண்டும்
05:35 PrintWriter class ஏற்கனவே import செய்யப்பட்டுள்ளதை கவனிக்கவும்.
05:40 எனவே doGet method னுள் டைப் செய்க PrintWriter space writer equal to responsedot getWriter அடைப்புகுறிகள் semicolon
05:57 Enterஐ அழுத்துக
05:59 அடுத்த வரியில் டைப் செய்க-
06:02 writer dot println அடைப்புகளில் இரட்டை மேற்கோள்களில் welcome.
06:09 பின் file ஐ சேமிக்க Ctrl Sஐ அழுத்துக.
06:14 இப்போது servletஐ இயக்குவோம்
06:17 எனவே இடப்பக்கம் Projects tab ல் MyServlet' dot java மீது ரைட்-க்ளிக் செய்க.
06:24 பின் Run File மீது க்ளிக் செய்க
06:27 Set Servlet Execution URI dialog box ஐ பெறுகிறோம்.
06:32 OK மீது க்ளிக் செய்க
06:35 browser window திறக்கும்போது, URL ஐ காணவும்.
06:39 இது localhost colon 8080 slash MyFirstProject slash MyServletPath.
06:47 இங்கே MyFirstProject என்பது context name மற்றும் MyServletPath என்பது URL Pattern இவை நாம் அமைத்தது.
06:55 browser ல் அச்சடிக்கப்பட்ட உரை welcome ஐ காண்கிறோம்.
07:00 இப்போது Netbeans IDE க்கு வருவோம்
07:03 println method ல் html code ஐ அனுப்பலாம்.
07:07 உதாரணமாக, welcome ஐ h3 tag ல் வைக்கவும்
07:12 இப்போது file ஐ சேமிக்கவும்.
07:14 இந்த servlet ஐ ஏற்கனவே deploy செய்ததால், இதை மீண்டும் run செய்யவேண்டியதில்லை.
07:20 web container இதை தானியங்கியாக கண்டறிகிறது.
07:23 எனவே, browser க்கு மீண்டும் போகலாம்.
07:28 Refresh. Welcome செய்தி வேறு வடிவில் இருப்பதைக் காணலாம்.
07:32 இப்போது IDEக்கு வருவோம்.
07:35 ஒரு servlet ஐ வெற்றிகரமாக உருவாக்கிவிட்டோம்
07:39 servletகளை பயன்படுத்தி எந்த ஒரு web application ஐயும் உருவாக்கலாம்
07:45 ஒரு HTML codeஐ காட்ட servlet ஐ பயன்படுத்தினோம்
07:49 Java codeனுள் HTML code ஐ வைத்தோம் என்பதை கவனிக்கவும்
07:54 இவ்வாறு செய்யமுடிந்தாலும், இதை பெரிய web applicationகளில் செய்வது கடினம்.
08:00 எனவே இது பயிற்சிக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை.
08:03 இதை JSP (Java Server Pages)ஐ பயன்படுத்தி செய்யலாம்
08:10 servletகள் மற்றும் JSPகளின் பயன்களை காண்போம்
08:13 content ல் இருந்து presentation ஐ பிரிக்க Servlet களும் JSP களும் ஒன்றாக பயன்படுகிறது.
08:20 Servlet கள் controller ஆகவும் JSPகள் view ஆகவும் செயல்படுகின்றன
08:25 Java codeனுள் HTML codeServletகள் கொண்டுள்ளன
08:30 HTML codeனுள் Java codeJSPகள் கொண்டுள்ளன
08:35 பின்வரும் டுடோரியல்களில் இவை பற்றி மேலும் கற்போம்.
08:39 இப்போது Netbeans IDE க்கு வருவோம்
08:42 இப்போது ஒரு JSP page ஐ உருவாக்குவோம்
08:47 எனவே MyFirstProjectமீது ரைட-க்ளிக் செய்க.
08:51 New க்கு சென்று JSP மீது க்ளிக் செய்க
08:54 ஒரு புதிய JSP window திறக்கிறது.
08:57 welcome என Filename ஐ டைப் செய்க.
09:01 பின் Finish மீது க்ளிக் செய்க
09:04 இடப்பக்கமுள்ள Projects tab மீது க்ளிக் செய்க
09:07 Welcome.jsp Web Pages folder க்கு கீழே காணலாம்.
09:13 இப்போது , editor ல், Hello WorldWelcome என மாற்றுக.
09:19 h1 tagகளினுள் Welcome இருப்பதை காண்க
09:23 இப்போது file ஐ சேமிக்கவும்.
09:25 browserக்கு வருவோம்
09:27 url ல் MyFirstProject slash க்கு பின் டைப் செய்க welcome.jsp
09:35 வெளியீடு Welcome ஐ காண்கிறோம்
09:38 எனவே presentation க்கு JSP சிறந்தது.
09:42 சுருங்கசொல்ல
09:44 இந்த டுடோரியலில் நாம் கற்றது
09:47 web server மற்றும் web container
09:49 ஒரு எளிய servlet ஐ உருவாக்குதல்
09:52 ஒரு எளிய JSP ஐ உருவாக்குதல்
09:55 மேலும் தொடர்வதற்கு முன் இந்த டுடோரியலை முடித்துவிட்டீர்களா என பார்க்கவும்.
10:01 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
10:04 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
10:08 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
10:13 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
10:19 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
10:22 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
10:28 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
10:32 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10:40 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
10:50 இந்த Library Management System ஆனது ஒரு முன்னனி மென்பொருள் பன்னாட்டு நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தால் பங்களிக்கப்பட்டது .
11:00 இந்த ஸ்போகன் டுடோரியலின் உள்ளடக்கமும் அவர்களால் மதிப்பிடப்பட்டது
11:04 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst