Java-Business-Application/C2/Creating-a-Java-web-project/Tamil
From Script | Spoken-Tutorial
| Time | Narration |
| 00:00 | ஒரு Java Web Project ஐ உருவாக்குவதற்கான ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
| 00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது: |
| 00:09 | ஒரு Java Web Project ஐ உருவாக்குதல் |
| 00:12 | Deployment Descriptor |
| 00:15 | web.xml file. |
| 00:19 | இங்கே நாம் பயன்படுத்துவது |
| 00:20 | உபுண்டு பதிப்பு 12.04 |
| 00:23 | Netbeans IDE 7.3 |
| 00:26 | JDK 1.7 |
| 00:28 | Firefox web-browser 21.0. |
| 00:32 | உங்களுக்கு விருப்பமான எந்த web-browser பயன்படுத்தலாம் |
| 00:35 | இந்த டுடோரியலைத் தொடர |
| 00:39 | Netbeans IDE ஐ பயன்படுத்தி Core Java மற்றும் |
| 00:42 | HTML பற்றிய அறிவு இருக்க வேண்டும் |
| 00:44 | இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் இணையத்தளத்தைக் காணவும். |
| 00:50 | இப்போது Netbeans IDE ஐ பயன்டுத்தி ஒரு எளிய Java Web Project ஐ உருவாக்க கற்போம். |
| 00:56 | அதற்கு Netbeans IDE க்கு வருவோம். |
| 01:01 | IDE ன் மேல் இடது மூலையில், File ல் க்ளிக் செய்து New Project மீது க்ளிக் செய்க |
| 01:08 | ஒரு New Project விண்டோ தோன்றுகிறது. |
| 01:12 | categories ல் Java Web மற்றும் Projects ல் Web Application ஐ தேர்ந்தெடுக்கவும் |
| 01:18 | பின் Next மீது க்ளிக் செய்க |
| 01:20 | திறக்கும் அடுத்த விண்டோவில், MyFirstProject என Project Name ல் டைப் செய்க |
| 01:27 | Project location மற்றும் project folder ஐ அவ்வாறே விடவும் |
| 01:31 | பின் Next ல் க்ளிக் செய்க |
| 01:35 | Server ஆக GlassFish server ஐ தேர்ந்தெடுக்கவும் |
| 01:39 | இங்கே Context Path ல் MyFirstProject என இருப்பதைக் காண்க. இதுவும் நம் Project பெயரும் ஒன்றே |
| 01:47 | இதை விரிவாக கற்போம். |
| 01:50 | இப்போது Next மீது க்ளிக் செய்து பின் Finish மீது க்ளிக் செய்க |
| 01:55 | Projects tab மீது க்ளிக் செய்க, |
| 01:58 | இங்கே சில nodeகள் இருப்பதையும் ஒரு web application My First Project உருவாக்கப்பட்டிருப்பதையும் காண்க |
| 02:08 | இப்போதைக்கு இங்குள்ள இந்த nodeகள் பற்றி கவலை இல்லை. |
| 02:11 | ஆனால் அதன் மீது க்ளிக் செய்து அதன் உள்ளடக்கதைக் காட்டுகிறேன். |
| 02:16 | இப்போது Deployment Descriptor பற்றி கற்போம் |
| 02:21 | ஒரு web application ன் deployment descriptor விவரிப்பது: |
| 02:25 | அந்த application ன் classகள், resourceகள் மற்றும் configuration |
| 02:31 | web server அவற்றை web requestகளுக்கு வேலை செய்ய எவ்வாறு பயன்படுத்துகிறது. |
| 02:37 | அந்த application க்காக ஒரு request ஐ web server பெறுகிறது. |
| 02:42 | request ன் URL ஐ map செய்ய deployment descriptor ஐ இது பயன்படுத்துகிறது. |
| 02:48 | இது request ஐ கையாள வேண்டிய code க்கு URL ஐ map செய்கிறது. |
| 02:52 | deployment descriptor என்பது web.xml என்ற ஒரு file ஆகும். |
| 02:57 | இப்போது மீண்டும் IDEக்கு வருவோம் |
| 03:00 | இங்குள்ள nodeகளில் web.xml file ஐ நம்மால் காண முடியவில்லை. |
| 03:07 | அதை காண, IDE ன் மேல் இடது பக்கம், File ல் New File மீது க்ளிக் செய்க. |
| 03:16 | Categories ல், Web ஐ தேர்ந்தெடுப்போம் |
| 03:19 | File Types ல் Standard Deployment Descriptor(web.xml) ஐ தேர்ந்தெடுப்போம் |
| 03:25 | பின் Next மீது க்ளிக் செய்வோம் |
| 03:27 | பின் Finish மீது க்ளிக் செய்வோம் |
| 03:30 | IDE ன் இடபக்கம் Files tab மீது க்ளிக் செய்க |
| 03:34 | Web node ன் WEB-INFfolder ல் web.xml உள்ளது என்பதை கவனிக்கவும். |
| 03:42 | இப்போது Source code ஐ காணலாம். |
| 03:46 | இங்கே ஒரு xml header உள்ளது. |
| 03:50 | ஒரு web-app node ம் உள்ளது. |
| 03:53 | இப்போது இந்த application ஐ இயக்க முயற்சிப்போம். |
| 03:57 | அதற்கு, MyFirstProject மீது ரைட்-க்ளிக் செய்க |
| 04:02 | Clean and Build மீது க்ளிக் செய்க |
| 04:04 | ஏற்கனவே compile செய்யப்பட்ட fileகளையும் மற்ற வெளியீடுகளையும் இது நீக்கும். |
| 04:10 | இது application ஐ மீண்டும் compile உம் செய்யும். |
| 04:14 | மீண்டும், MyFirstProject மீது ரைட்-க்ளிக் செய்து Run மீது க்ளிக் செய்க |
| 04:20 | எனவே server இயங்கி இது My first Project ஐ deploy செய்கிறது |
| 04:27 | ஒரு browser திறந்து Hello World என காட்டுகிறது |
| 04:32 | இது ஏனெனில் project ஐ இயக்கும்போது, web application காட்டப்படும் பக்கத்தை render செய்கிறது. |
| 04:39 | இங்கே இந்த பக்கத்தை render செய்த இந்த URL ஐ காண்போம். |
| 04:44 | அது localhost colon 8080 slash MyFirstProject. |
| 04:49 | எனவே MyFirstProject ஐ முன்னிருப்பாக நாம் இயக்கும்போது HelloWorld! என்னும் ஒரு JSP பக்கத்தை பெறுகிறோம் |
| 04:57 | இப்போது நம் IDE க்கு வருவோம். |
| 05:00 | WEB-INF folder ல் index.jsp இருப்பதைக் காணலாம் |
| 05:07 | index.jsp மீது டபுள்-க்ளிக் செய்க. |
| 05:10 | இங்கே source code ஐ காணலாம். |
| 05:12 | இது HTML tagகள் மட்டும் உள்ள ஒரு எளிய JSP page ஆகும். |
| 05:17 | இது JSP Page என்ற title ஐயும் Hello World என்ற heading ஐயும் கொண்டுள்ளது |
| 05:24 | web application ஐ இயக்கும்போது server முன்னிருப்பாக index.jsp ஐ கொடுக்கிறது. |
| 05:30 | நாம் முன்பு ContextPath என்பதை கடந்து வந்தோம் என்பதை நினைவுகொள்க. |
| 05:36 | MyFirstProject என்றே ContextPath ஐ அமைத்தோம். |
| 05:41 | இப்போது browser க்கு வருவோம் |
| 05:44 | URL ல் டைப் செய்க localhost colon 8080 எண்டரை அழுத்துக |
| 05:50 | Glassfish server ன் home page காட்டப்படுவதை காண்கிறோம். |
| 05:56 | கணினியில் எதில் server இயங்குகிறதோ அதன் முன்னிருப்பு course 8080 ஆகும். |
| 06:01 | இந்த Glassfish server instance ல் பல applicationகள் இயங்கலாம். |
| 06:08 | ஒரு குறிப்பிட்ட application ஐ அணுக URL ல் application பெயரை டைப் செய்க. |
| 06:15 | எனவே அந்த நிகழ்வில் (instance) deploy செய்யப்பட்ட குறிப்பிட்ட application ஐ டைப் செய்ய வேண்டும். |
| 06:21 | எனவே டைப் செய்வோம் slash MyFirstProject . Enter ஐ அழுத்துக |
| 06:27 | Hello World காட்டப்படுவதைக் காணலாம் |
| 06:32 | சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது |
| 06:35 | ஒரு எளிய Java Web project ஐ உருவாக்குதல் |
| 06:38 | web project ஐ இயக்குதல் |
| 06:41 | மற்றும் web.xml file. |
| 06:44 | ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி மேலும் அறிய |
| 06:46 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
| 06:50 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
| 06:54 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
| 06:58 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
| 07:04 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
| 07:07 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
| 07:13 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
| 07:17 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
| 07:23 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
| 07:34 | இந்த Library Management System ஆனது ஒரு முன்னனி மென்பொருள் பன்னாட்டு நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தால் பங்களிக்கப்பட்டது . |
| 07:44 | இந்த ஸ்போகன் டுடோரியலின் உள்ளடக்கமும் அவர்களால் மதிப்பிடப்பட்டது |
| 07:48 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |