Inkscape/C3/Create-an-A4-Poster/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00.01 | Inkscapeல் “ A4 Posterஐ உருவாக்குதல்” குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.. |
00.07 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது |
00.10 | Document propertiesஐ மாற்றுதல் |
00.12 | A4 posterஐ வடிவமைத்தல் |
00.14 | posterஐ pdf ஆக சேமித்தல். |
00.17 | இந்த டுடோரியலுக்காக நான் பயன்படுத்துவது |
00.19 | Ubuntu Linux 12.04 |
00.22 | Inkscape பதிப்பு 0.48.4 |
00.26 | Inkscapeஐ திறப்போம் |
00.28 | Fileக்கு சென்று Newஐ க்ளிக் செய்க |
00.32 | இவை முன்னிருப்பு canvas அளவுகள் ஆகும். |
00.37 | என் canvas முன்னிருப்பாக A4 sizeல் உள்ளது. |
00.41 | அதை அவ்வாறே விடுகிறேன். |
00.44 | உங்கள் கணினியில் அவ்வாறு இல்லையெனில் A4 sizeஐ தேர்ந்தெடுக்கவும். |
00.49 | இப்போது சில settingsஐ மாற்றுவோம். |
00.51 | File ல் Document properties க்ளிக் செய்வோம் |
00.54 | பல்வேறு tabகள் மற்றும் தேர்வுகளுடன் ஒரு dialog box திறக்கிறது. |
00.59 | அவற்றை ஒவ்வொன்றாக கற்போம். |
1.03 | முதல் tab Page ல், Default units drop down list ஐ க்ளிக் செய்க. |
1.08 | ஒவ்வொன்றாக நான் க்ளிக் செய்கையில் rulerன் unit மாறுவதைக் கவனிக்கவும். |
1.13 | unitஐ pixels என வைக்கிறேன் |
1.16 | Background தேர்வு, transparencyஐயும் பின்புல நிறத்தை மாற்றவும் உதவுகிறது. |
1.21 | அதை க்ளிக் செய்யும் போது ஒரு dialog box தோன்றுகிறது. |
1.24 | RGB sliderகளை இடப்பக்கமும் வலப்பக்கமும் நகர்த்துவோம். |
1.29 | canvasல் பின்புல நிறத்தை காண, alpha sliderஐ வலப்பக்கமாக நகர்த்துவோம். |
1.35 | இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட RGB மதிப்புகளுக்கு transparency மாறுகிறது. |
1.40 | இவற்றை நகர்த்தும் போது Document properties window ல் உள்ள background தேர்வின் நிறம் மாறுவதைக் கவனிக்கவும். |
1.47 | alpha sliderஐ இடப்பக்கத்திற்கு கொண்டுவந்து பின் dialog boxஐ மூடுவோம். |
1.52 | Page sizeல் பல தேர்வுகளைக் காணலாம். |
1.55 | இந்த தேர்வுகளைப் பயன்படுத்தியும் canvasன் அளவை மாற்றலாம். |
2.00 | நான் க்ளிக் செய்கையில் canvas அளவில் மாற்றத்தைக் கவனிக்கவும். |
2.04 | page sizeஐ A4 என மாற்றுகிறேன். |
2.08 | Orientation ஐ Portrait ஆகவோ Landscape ஆகவோ மாற்றலாம் |
2.12 | இரு தேர்வுகளையும் க்ளிக் செய்து canvasல் மாற்றத்தைக் கவனிக்கவும் |
2.17 | Width மற்றும் Height parameterகளை பயன்படுத்தி canvasன் அகலத்தையும் உயரத்தையும் மாற்றலாம். |
2.23 | Units drop down listஐ க்ளிக் செய்க. இங்கே தேவைக்கேற்ப unitsஐ மாற்றலாம். |
2.31 | units ஐ pixels என்போம் |
2.34 | Resize page to content தேர்வை க்ளிக் செய்க. |
2.37 | இங்கே பல்வேறு தேர்வுகளை காண்கிறோம் |
2.41 | அனைத்து பக்கங்களுக்கும் இங்கே marginகளை அமைக்கலாம். |
2.45 | marginகளை அமைத்த பின், Resize page to drawing or selection பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். |
2.51 | அடுத்தது Border தேர்வு. இங்கே மூன்று check-box தேர்வுகள் உள்ளன. |
2.57 | இவற்றை விளக்க, இவ்வாறு ஒரு வட்டத்தை வரைவோம். |
3.03 | முதல் தேர்வு, page border அதாவது canvasன் borderஐ தெரியவைக்கிறது. |
3.08 | இந்த தேர்வை குறிநீக்கி borderகள் மறைவதைக் காண்க. |
3.13 | மீண்டும் அந்த தேர்வை குறியிட்டு borderகள் மீண்டும் தோன்றுவதைக் காண்க. |
3.18 | இரண்டாம் தேர்வு வட்டத்திற்கு மேலே borderஐ அமைக்கிறது, இதனால் அது தெளிவாக தெரிகிறது. |
3.25 | மீண்டும் இந்த தேர்வை குறியிட்டும் குறிநீக்கியும் canvasன் மாற்றத்தைக் கவனிக்கவும். |
3.31 | மூன்றாம் தேர்வு canvasன் வலது மற்றும் கீழ்பக்கத்திற்கு நிழலைக் காட்டுகிறது. |
3.36 | வலது மற்றும் கீழ் borderகள் மற்றவற்றை விட தடிமனாக இருப்பதைக் காண்க. |
3.42 | மூன்றாம் தேர்வை குறிநீக்கி நிழல் மறைவதைக் கவனிக்கவும். |
3.47 | இந்த அனைத்து தேர்வுகளையும் உங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். |
3.52 | Border color தேர்வானது borderன் நிறத்தை மாற்ற அனுமதிக்கிறது. |
3.57 | முன்னிருப்பு நிறத்தை அவ்வாறே விடுவோம். |
4.01 | அடுத்து Guides tabல் க்ளிக் செய்வோம் |
4.03 | Guides canvasல் text மற்றும் graphic objectகளை align செய்ய உதவுகிறது. |
4.08 | இங்கே ruler guidesஐ உருவாக்கலாம். |
4.12 | vertical rulerஐ க்ளிக் செய்து ஒரு guidelineஐ நகர்த்துக. |
4.15 | இப்போது முதல் தேர்வு Show Guidesஐ குறியிடவும் பின் குறிநீக்கவும் |
4.19 | canvasல் guideline தோன்றுவதையும் மறைவதையும் கவனிக்கவும். |
4.25 | Guide color என்பது guidelineன் நிறம். |
4.28 | Highlight color என்பது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு guideline ஐ நகர்த்தும் போது வருவது. |
4.33 | guide மற்றும் highlightன் முன்னிருப்பு நிறங்கள் இங்கே உள்ளன. |
4.37 | தேவைக்கேற்ப அவற்றை மாற்றலாம். |
4.41 | முன்னிருப்பு நிறங்களை அவ்வாறே விடுவோம். |
4.44 | objectகள் அல்லது bounding boxஐ இழுக்கும் போது பக்கத்தில் உள்ள guidelinesக்கு snap செய்ய Snap guides while dragging தேர்வு உதவுகிறது |
4.52 | அடுத்து Grids tabஐ க்ளிக் செய்வோம். |
4.54 | இந்த தேர்வு மூலம், canvasல் வேலைகளுக்கு பின்னால் grid ஐ அமைக்கலாம் . |
5.00 | canvasல் objectகளை நிலையில் வைக்க Grids உதவுகிறது ஆனால் அவை அச்சடிக்கப்படுவதில்லை. |
5.07 | drop down listஐ க்ளிக் செய்க. |
5.09 | Rectangular grid மற்றும் Axonometric grid என இருவகை gridகள் உள்ளன. |
5.16 | Rectangular gridஐ தேர்ந்தெடுத்து New பட்டனை க்ளிக் செய்வோம். |
5.20 | உடனடியாக canvasன் பின்புலத்தில் ஒரு grid உருவாக்கப்படுகிறது. |
5.25 | இங்குள்ள தேர்வுகள் மூலம் நமக்கு தேவையானபடி grid properties ஐ அமைக்கலாம். |
5.31 | அடியில் உள்ள Remove பட்டனை க்ளிக் செய்வதன் மூலம் gridஐ நீக்கலாம். |
5.36 | அதேபோல, Axonometric gridக்கும் முயற்சிக்கலாம். |
5.41 | அடுத்த 3 tabகளின் தேர்வுகள் பின்வரும் டுடோரியல்களில் விளக்கப்படும். |
5.47 | இப்போது posterஐ உருவாக்க ஆரம்பிக்கலாம். |
5.50 | முதலில் இந்த வட்டம் மற்றும் guidelineஐ நீக்குகிறேன். |
5.53 | நம் posterக்காக, முதலில் ஒரு பின்புலத்தை வடிவமைப்போம். |
5.58 | Rectangle toolஐ க்ளிக் செய்வோம் |
6.00 | canvasஐ மூடுமாறு ஒரு பெரிய செவ்வகத்தை வரைவோம் |
6.06 | அதற்கு light blue gradientஐ கொடுப்போம். |
6.08 | அடுத்து, Bezier tool மூலம் canvas ல் மேலே தலைப்பு பகுதியையும் |
6.16 | கீழே அடிக்குறிப்பு பகுதியையும் வரைவோம் |
6.23 | அதற்கு நீல நிறம் கொடுப்போம். |
6.25 | இப்போது Spoken Tutorial logoஐ import செய்வோம். |
6.28 | இந்த logo, Code Files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. |
6.32 | எனவே டுடோரியலை இடைநிறுத்தி, Code Filesல் க்ளிக் செய்து zip fileஐ தரவிறக்கவும். |
6.39 | இப்போது folderஐ unzip செய்து உங்கள் கணினியில் தேவையான இடத்தில் அதை சேமிக்கவும். |
6.45 | நம் Inkscape documentக்கு வருவோம். |
6.47 | File menu க்கு சென்று Importஐ க்ளிக் செய்வோம் |
6.51 | logo உள்ள folderக்கு செல்வோம். |
6.54 | Spoken Tutorial logoஐ தேர்ந்தெடுத்து Openஐ க்ளிக் செய்வோம் |
6.59 | புது dialog box திறக்கிறது. OKஐ க்ளிக் செய்க |
7.03 | logo நம் canvasல் import செய்யப்படுகிறது. |
7.06 | அதன் அளவை 100×100 pixels ஆக்குவோம். |
7.09 | தலைப்பு பகுதியின் மேல் இடப்பக்க மூலையில் அதை வைப்போம். |
7.14 | டைப் செய்க “Spoken Tutorial”. |
7.18 | அதை Bold ஆக்குவோம் |
7.20 | text font அளவை 48 ஆக்குவோம். |
7.24 | அதை logoன் வலப்பக்கம் வைப்போம். |
7.27 | அதன் பின் டைப் செய்க “partner with us...help bridge the digital divide”. |
7.35 | font அளவை 20 ஆக்குவோம். |
7.39 | அடுத்து சில textஐ சேர்ப்போம். |
7.42 | என் கணினியில் LibreOffice Writer documentல் ஏற்கனவே text ஐ சேமித்துள்ளேன். |
7.47 | அந்த உதாரண text file Code Filesல் கொடுக்கப்பட்டுள்ளது. |
7.51 | நீங்கள் சேமித்த folderல் அதை காணலாம். |
7.54 | இப்போது என் posterன் காலி இடத்தில் இந்த text ஐ copy paste செய்கிறேன். |
8.00 | font அளவை 28 ஆக்கலாம். |
8.04 | line spacingஐ அமைக்கலாம். |
8.06 | bulletகளை உருவாக்கி ஒவ்வொரு வாக்கியத்தின் முன்பும் வைப்போம். |
8.10 | அதற்கு கீழே இரு imageகளை வைப்போம். |
8.13 | முன்புபோல அவற்றை ஒவ்வொன்றாக import செய்வோம். |
8.17 | அவற்றை images folderல் சேமித்துள்ளேன். |
8.20 | இந்த imageகள் Code Filesல் கொடுக்கப்பட்டுள்ளது. |
8.24 | நீங்கள் folderல் அவற்றை காணலாம். |
8.27 | imageகளை தேரந்தெடுத்து அளவுமாற்றுவோம். |
8.30 | posterன் கீழ் பகுதிக்கு அவற்றை நகர்த்துவோம். |
8.33 | அடிக்குறிப்பு பகுதியில் தொடர்பு விவரங்களை எழுதுவோம். |
8.37 | மீண்டும், LibreOffice Writer document ல் இருந்து text ஐ copy-paste செய்கிறேன். |
8.42 | font அளவை 18 ஆக்குகிறேன். |
8.45 | இப்போது நம் poster தயார். |
8.47 | அடுத்து இதை pdf formatல் சேமிக்க கற்போம். |
8.51 | Fileக்கு சென்று Save Asல் க்ளிக் செய்க |
8.55 | ஒரு dialog box தோன்றுகிறது. |
8.58 | fileஐ சேமிக்க folderஐ தேர்ந்தெடுக்கவும். |
9.00 | நான் Desktopஐ தேர்ந்தெடுக்கிறேன். |
9.02 | dialog boxன் கீழ் வலப்புற drop-down list ஐ க்ளிக் செய்து formatஐ pdf என மாற்றுவோம். |
9.09 | Name fieldல் டைப் செய்க Spoken-Tutorial-Poster.pdf |
9.16 | Save பட்டனை க்ளிக் செய்க. |
9.18 | நம் poster, Desktopல் சேமிக்கப்படுகிறது. |
9.21 | Desktopக்கு சென்று நம் posterஐ காண்போம். |
9.25 | இங்கே pdf format ல் poster உள்ளது. |
9.28 | சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது |
9.32 | Document propertiesஐ மாற்றுதல் |
9.34 | A4 posterஐ வடிவமைத்தல் |
9.36 | posterஐ pdfஆக சேமித்தல் |
9.38 | உங்களுக்கான பயிற்சியாக |
9.40 | Spoken Tutorial Projectக்கான ஒரு A4 poster ஐ உருவாக்கவும். |
9.44 | நீங்கள் செய்து முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும். |
9.48 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. அதை காணவும். |
9.54 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் அளிக்கிறது |
10.01 | மேலும் தகவல்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
10.04 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசின் MHRD,NMEICT மூலம் கிடைக்கிறது. |
10.10 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும். |
10.14 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
10.16 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |