Health-and-Nutrition/C2/Personal-Hygiene-needed-for-handling-baby-food/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:00 குழந்தையின் உணவை, தனிப்பட்ட சுகாதாரமான முறையில் கையாளுதல் குறித்த spoken tutorialக்கு நல்வரவு
00:08 இந்த tutorial லில் நாம் கற்க போவது
00:11 தனிப்பட்ட சுகாதாரம்
00:13 குழந்தையின் உணவை தயாரிக்கும் பொழுதும், உணவூட்டும் பொழுதும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்
00:19 குழந்தையின் உணவை கையாளுகையில், தனிப்பட்ட சுகாதாரம் ஏன் தேவை என்பதை புரிந்து கொள்வோம்
00:25 இங்கே, குழந்தையின் உணவென்பது, வீட்டில் சமைக்கப்பட்ட சத்தான கூடுதல் உணவாகும்
00:33 இம்மாதிரி உணவுகள், 6-24 மாத குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் சேர்த்துக் கொடுக்கப்பட வேண்டும்
00:41 இந்த வயதில், குழந்தையின் நோய்எதிர்ப்பு திறன் பெரியவர்களைப் போல் உருவாக்கப்பட்டிருக்காது
00:50 அவர்கள், எளிதில் நோய்த்தொற்று மற்றும்
00:53 உணவு மூலம் ஏற்படும் வியாதிகளால் பாதிக்கப்படலாம்
00:57 தூய்மையாக இல்லையென்றால்,
01:00 கூடுதல் உணவு குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும்
01:04 பின்வரும் நோய்த்தொற்றுக்களை உண்டாக்கலாம்
01:07 வயிற்றுப்போக்கு
01:09 வாந்தி, சளி மற்றும் இருமல்
01:13 ஆதலால், குழந்தையின் உணவை சுகாதாரமான முறையில் தயார் செய்து,
01:18 சமைத்து, சேமித்து
01:20 பின் கொடுக்கப்பட வேண்டும்
01:22 குழந்தையின் உணவை கையாளுகையில், தனிப்பட்ட சுகாதாரத்தை எப்படி கடைபிடிப்பது என்பதை கற்போம்
01:29 குழந்தையின் உணவை தயாரிக்கும்,
01:31 சாப்பிடும் மற்றும் உணவை வைக்கும் இடங்கள் அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும்
01:38 இந்த இடங்களில் தும்முதல், இருமுதல்
01:40 புகைபிடித்தல், chewing gumமை மெல்லுதல்
01:42 துப்புதல் அல்லது சாப்பிடுதல் கூடாது
01:46 மேலும், குழந்தையின் அரையாடையை இங்கு மாற்ற வேண்டாம்
01:53 எப்பொழுதும் சுத்தமான உடைகளை உடுத்தவும்
01:56 தலைமுடியை பின்புறம் நன்கு கட்டிக்கொள்ளவும்
02:00 நகங்களை சுத்தம் செய்வதற்கு எளிதாக, சிறியதாக வைத்துக்கொள்ளவும்
02:05 nail polish உணவில் கலந்து விட வாய்ப்புள்ளதால், அதை தவிர்க்கவும்
02:11 கைகள் மற்றும் விரல்களில் நகைகளைத் தவிர்க்கவும்
02:17 துணிகள் மற்றும் தனிப்பட்ட உடமகைகளை, உணவு தயாரிக்கும் மற்றும் வைக்கும் இடத்திலிருந்து தள்ளி வைக்கவும்
02:25 உடம்பில் புண் அல்லது வெட்டுக்காயம் இருந்தால், அதன் மீது துணி மற்றும் பாத்திரங்கள் படாமல் பார்த்துக்கொள்ளவும்
02:32 உபயோகிக்காத துணி அல்லது bandageஐ பயன்படுத்தி அவற்றை சுற்றி கட்டவும்
02:41 துணி அல்லது bandageன் மீது ஈரம் படாமல் பார்த்துக்கொள்ளவும்
02:46 அவற்றை அடிக்கடி, முக்கியமாக உணவைத் தொடுவதற்கு முன்பு மாற்றவும்
02:53 உடல்நிலை சரியில்லை என்றால் உணவைத் தொட வேண்டாம்
02:57 குழந்தையின் உணவின் மீது தும்மவோ இருமவோ கூடாது
03:02 நோய்த்தொற்றைத் தவிர்க்க, கைகளைக் கழுவுவது மிகவும் எளிதான மற்றும் பயனுள்ள வழியாகும்
03:10 உணவை, கிருமிகள் தாக்குவதையும் இது குறைக்கிறது
03:15 கைகளை சுத்தமாக கழுவ, சோப்பு மற்றும்
03:18 வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தவும்
03:22 சோப்பின் நுரையை கைகளுக்குப் பின்னால்,
03:26 நகங்களுக்கு உள்ளே மற்றும் விரல்களுக்கிடையே
03:30 10-15 வினாடிகளுக்கு நன்கு தேய்க்கவும்
03:36 கைககளைக் கழுவிய உடனேயே துடைக்கவும்
03:40 எப்பொழுதும் சுத்தமான துணியினால் துடைக்கவும்
03:45 கைகள் முழுமையாக உலர்ந்ததை உறுதிப்படுத்திக் கொள்ளவும்
03:51 கைகளைத் துடைக்க தினமும் உபயோகிக்கும் துண்டு
03:54 சமையல் அறை துணி அல்லது
03:56 உங்கள் உடையை பயன்படுத்த வேண்டாம்
03:59 கைகளைக் கழுவ குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்
04:03 குளியல் அறை அல்லது கை கழுவும் இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்
04:08 அவர்கள் கை கழுவும் 10-15 வினாடிகளுக்கு ஒரு சிறிய பாடலை பாடுங்கள்
04:15 அப்படி செய்வது, குழந்தைகள் அந்த 10-15 வினாடிகள் கைகளை தேய்த்து கழுவ ஊக்கபடுத்தும்
04:23 ஒரு நல்ல உதாரணமாக இருங்கள்
04:25 நீங்களும் அவர்களுடன் சேர்ந்து கைகளை கழுவுங்கள்
04:28 கைகளை கழுவுதலின் முக்கியத்துவத்தை அந்நேரத்தில் அவர்களுக்கு எடுத்துரையுங்கள்
04:34 சரியான நேரத்தில் கைகளை கழுவுவதும் மிகவும் முக்கியம்
04:40 குழந்தையை தொடுவதற்கு முன்பும், உணவை சமைப்பதற்கு மற்றும் ஊட்டுவதற்கு முன்பும்
04:45 கைகளைக் கழுவி உலர்த்திக் கொள்ளுங்கள்
04:49 உணவை சமைக்கும் பொழுது அடிக்கடி கழுவி உலர்த்திக் கொள்ளுங்கள்
04:55 சில நேரங்களில், குழந்தையின் உணவை சமைக்கும் பொழுது அல்லது ஊட்டும் பொழுது இடைவெளி எடுத்துக்கொள்வீர்கள்
05:01 அச்சமயங்களில், கைகளைக் கழுவி
05:04 பின்பு தொடருங்கள்
05:06 உணவை சமைத்து முடித்த பின்பும் கழுவுங்கள்
05:10 சமைக்கப்படாத உணவுகள் மற்றும் குப்பைகளை கையாண்ட பிறகு
05:14 கைகளை கழுவுதல் அவசியமானது
05:17 மேலும், கழிப்பறை உபயோகத்தின் பிறகு,
05:20 மூக்கு சிந்திய பிறகு
05:22 புகை பிடித்த பிறகு
05:24 விலங்குகள் மற்றும்
05:26 உடல் நலம் சரியில்லாத குழந்தை அலல்து நபரை தொட்ட பிறகு
05:29 மறுபடியும் கைகளை கழுவுங்கள்
05:32 மேலும், கழுவ வேண்டிய நேரம் காது,
05:36 மூக்கு, வாய்
05:38 அல்லது வேறு எந்த உடல் உறுப்பை தொட்டாலோ மறுபடியும் கழுவவும்
05:41 எப்பொழுதும் குழந்தையின் அரையாடையை சரிபார்த்த பின்பு அல்லது அதை மாற்றிய பின்பு கைகளை கழுவவும்
05:47 இந்த தனிப்பட்ட சுகாதாரம் குழந்தையின் உணவை கையாளும் பொழுது கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்
05:53 மேலும், குழந்தையின் உணவை பாதுகாக்கும் முக்கிய வழிமுறைகள் உள்ளன
06:00 அவைகளை குழந்தையின் உணவை சமைத்தல்,
06:03 ஊட்டுதல் மற்றும் சேமித்தலின் பொழுது பின்பற்ற வேண்டும்
06:07 அவை இதே தொடரின் வேறொரு டுட்டோரியலில் விளக்கப்பட்டுள்ளது
06:13 இத்துடன் இந்த டுட்டோரியலின் முடிவுக்கு வந்து விட்டோம். இந்த டுட்டோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஆர்த்தி. நன்றி

Contributors and Content Editors

Arthi