Health-and-Nutrition/C2/Junk-food/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:00 | ஜங்க் உணவுகள் குறித்த ஸ்போகன் டுட்டோரியலுக்கு நல்வரவு. |
00:04 | இந்த டுட்டோரியலில் நாம் கற்க போவது. |
00:07 | ஜங்க் உணவில் உள்ளடிங்கியவை. |
00:09 | ஜங்க் உணவுகளால் ஏற்படும் தீமைகள். |
00:14 | எந்த ஒரு உணவும் மூன்று காரணிகளால் ஜங்க் உணவாக கருதப்படுகிறது. |
00:20 | முதல் இரண்டு காரணிகள் அதில் உள்ளடங்கிய பொருட்கள். |
00:23 | சமைக்கும் முறை. |
00:26 | உணவின் ஊட்டச்சத்து உள்ளடக்கம் மூன்றாவது காரணியாகும். |
00:32 | ஜங்க் உணவுகள், அதிக அளவிலான சர்க்கரை, உப்பு, சுத்திகரிக்கப்பட்ட கொழுப்பு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவை கொண்டுள்ளன. |
00:41 | பெரும்பான்மையான ஜங்க் உணவுகள் பொறித்தல் அல்லது பேக்கிங் செய்யப்படுகின்றன |
00:48 | பல செயற்கையான வண்ணங்கள், சுவைகள் மற்றும் பதப்படுத்தும் பொருட்கள் இந்த உணவில் சேர்க்கப்படுகின்றன. |
00:56 | உணவின் சுவை, தோற்றம் மற்றும் நீண்ட நாள் கெடாமல் இருக்கும் தன்மை ஆகியவற்றை அதிகரிக்க இவை சேர்க்கப்படுகின்றன. |
01:03 | ஜங்க் உணவுகள் கலோரிகள் அதிகம் நிறைந்தவை |
01:07 | இவை ப்ரோடீன், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்களை மிகக் குறைந்த அளவில் கொண்டுள்ளன. |
01:15 | பொதுவாக உட்கொள்ளப்படும் ஜங்க் உணவுகள், பொறித்த, அதிக உப்பு நிறைந்த உணவுகள் ஆகும். |
01:22 | பெரும்பான்மையான துரித உணவுகளும் ஜங்க் உணவுகளாகும். |
01:27 | எடுத்துக்காட்டாக: pizza, burgers, french fries, noodles, puff pastry, samosa, இன்னும் பல |
01:39 | சில பானங்கள் ஜங்க் உணவாக கருதப்படுகின்றன |
01:43 | எடுத்துக்காட்டாக: குளிர் பானங்கள், பழ ரசங்கள் மற்றும் செயற்கை சுவை கொண்ட பானங்கள். |
01:51 | காபி தேயிலை பானங்கள், சோடா மற்றும் உற்சாக பானங்கள் ஆகியவையும் இவற்றில் அடங்கும். |
01:57 | இனிப்பு வகைகள், பொறித்த இனிப்புகள், jamகள், jellyகள், sauce, ketchup ஆகியவையும் ஜங்க் உணவுகளாகும். |
02:07 | Biscuit, cake, chocolate, மிட்டாய், ice cream ஆகியவை இன்னும் சில எடுத்துக்காட்டுகளாகும். |
02:14 | நம் உடம்பில் ஜங்க் உணவுகளின் விளைவுகளை பார்ப்போம். |
02:18 | சர்க்கரை அளவு அதிகம் உள்ள ஜங்க் உணவுகள், நம் ரத்தத்தின் சர்க்கரை அளவை உடனடியாக அதிகப்படுத்துகின்றன. |
02:24 | இதன் விளைவாக pancreas இன்சுலினை ரத்தத்தில் வெளியிடுகிறது |
02:30 | இன்சுலின் என்பது செல்களை திறக்கக்கூடிய ஒரு சாவியாக வேலை செய்யும் ஹார்மோன் ஆகும் |
02:35 | செல்கள் ரத்தத்தில் இருந்து சர்க்கரையை உறிஞ்சி நமக்கு ஆற்றலை கொடுக்கிறது |
02:42 | அதிகப்படியான சர்க்கரை கொழுப்பாக உடம்பில் சேமிக்கப்படுகிறது |
02:48 | அதிக சர்க்கரை உணவுகளை வழக்கமாக எடுத்துக்கொள்ளும் பொழுது இன்சுலின் எதிர்ப்பை விளைவிக்கிறது. |
02:54 | இன்சுலின் எதிர்ப்படையும் வேலையில் நம் உடம்பு இன்சுலினை உபயோகிக்க முடிவதில்லை. |
03:02 | இதனால் ரத்தத்திலிருந்து சர்க்கரையை நம் செல்களால் எடுக்க முடிவதில்லை. |
03:07 | இதன் விளைவாக இன்சுலின் அளவு மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. |
03:14 | அதிக இன்சுலின் அளவு, பசி உணர்வை மூளைக்கு அனுப்புகிறது |
03:20 | நம் உடம்பிற்கு பசிக்கவில்லை என்றால் கூட அதிக உணவு உட்கொள்ள தூண்டுகிறது |
03:26 | இது ஒரு சுழற்சியாக மாறி அதிகப்படியான உண்ணும் பழக்கத்தை விளைவிக்கிறது. |
03:32 | இதை ஒரு எடுத்துக்காட்டுடன் புரிந்து கொள்வோம். |
03:35 | ஒரு பிஸ்கட் அல்லது லட்டுவை உண்ணும் பொழுது நம்மால் ஒன்றோடு நிறுத்திக்கொள்ள முடிவதில்லை. |
03:42 | இன்னும் அதிகமாக உண்ண தோன்றுகிறது |
03:45 | ஒரே நேரத்தில் ஒரு முழு பிஸ்கட் பாக்கெட் அல்லது நிறைய லட்டுகளையும் உண்கிறோம் |
03:52 | இது மூளைக்கு செல்லப்படும் பசி உணர்வின் விளைவாகும் |
03:57 | சர்க்கரை கூட ரத்த அழுத்தத்தை பாதிக்கிறது |
04:02 | அதிக சர்க்கரை மற்றும் உப்பு நிறைந்த உணவை உண்ணும் பொழுது, நமது சோடியம் அளவு அதிகரிக்கிறது |
04:08 | சர்க்கரையானது, சிறுநீரகம் சோடியத்தை உறிஞ்சுவதை அதிகரிக்கிறது |
04:14 | இதன் விளைவாக, சோடியுமானது நம் உடம்பில் தேக்கம் அடைகிறது |
04:18 | இதன் காரணமாக, நம் உடம்பில் ரத்த அழுத்தம் மற்றும் தண்ணீர் தேக்கம் அதிகரிக்கிறது |
04:25 | இதனால் கைகள் மற்றும் கால்களில் வீக்கத்தைக் காணலாம். |
04:30 | வேறொரு எடுத்துக்காட்டை கூறுகிறேன் |
04:34 | சிப்ஸ் உண்டவுடன் நமக்கு தாகம் ஏற்படுகிறது |
04:38 | ஏனெனில், உப்புள்ள உணவு உண்பதால் ரத்தத்தில் சோடியத்தின் அளவு அதிகரிக்கிறது. |
04:45 | மூளை, நமக்கு தாக உணர்வை ஏற்படுத்துவதால் நாம் தண்ணீர் குடிக்கிறோம். |
04:51 | தண்ணீர் குடிப்பதன் மூலம் சோடியத்தின் அளவு நம் உடம்பில் கரைக்கப்படுகிறது |
04:56 | ஆனால், பழ ரசம் அல்லது குளிர் பானங்கள் நம் உடம்பில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் |
05:03 | இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் |
05:07 | சர்க்கரை மற்றும் உப்பு அல்லது சுத்திகரிக்கப்பட்ட மாவு கூட ஜங்க் உணவாகும் |
05:14 | சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவு பொதுவாக உபயோகிக்கபடுகிறது |
05:18 | இந்த சுத்திகரிக்கப்பட்ட மாவுகளில் நார்ச்சத்து மற்றும் தேவையான ஊட்டச்சத்து குறைவாக இருக்கிறது |
05:24 | நார்ச்சத்து நம் உடம்பில் முக்கிய பங்கு வகிக்கிறது |
05:28 | இது மெதுவாக ஜீரணம் ஆகக்கூடியது |
05:31 | இதனால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். |
05:35 | நாம் குறைந்த நார்ச்சத்துள்ள ஜங்க் உணவுகளை உண்பதால் விரைவில் ஜீரணம் ஆகிறது. |
05:42 | நம் வயிறு சீக்கிரம் காலியாகி மீண்டும் பசி எடுக்கிறது |
05:47 | நார்ச்சத்தின் மற்றொரு முக்கியமான பலன் ஆரோக்கியமான குடலை மேம்படுத்துவது ஆகும் |
05:53 | நமது குடல் நல்ல மற்றும் தீய பேக்டீரியாக்களை கொண்டுள்ளது |
05:58 | நார்ச்சத்து நல்ல பேக்டீரியாக்கள் வளர உதவி புரிகிறது |
06:02 | இதன் மூலம் சரியான ஜீரணம் மற்றும் சத்துக்களை உறிஞ்ச உதவிபுரியும் |
06:08 | மேலும் சில பலன்கள் பலமான எதிர்ப்பு சக்தி |
06:11 | ஆரோக்யமான சருமம் மற்றும் குறைந்த வீக்கம் |
06:15 | நம் மலத்திற்கு தேவையான தண்ணீரை கொடுப்பதற்கு நார்ச்சத்து அவசியம் |
06:21 | இது மலத்தை இலகுவாகவும் பருமனாகவும் ஆக்குகிறது |
06:25 | இதனால் மலம் எளிதாக குடலின் வழியே செல்கிறது |
06:31 | ஜங்க் உணவுகளில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால், வழக்கமாக அதை உண்ணுதல் மலச்சிக்கலை உண்டாகும். |
06:38 | ஜங்க் உணவுகளின் மேலும் ஒரு கெடுதல், குடலின் நல்ல பேக்டீரியாக்களை அழிக்கிறது. |
06:45 | இதன் விளைவாக வீக்கம் ஏற்படுகிறது |
06:47 | மேலும் பல வியாதிகள் உண்டாகிறது |
06:50 | சில ஜங்க் உணவுகளில் transfatகள் நிறைந்திருக்கின்றன |
06:56 | Cake, biscuit, bake செய்த உணவுகள் பதப்படுத்தப்பட்ட வெண்ணெய், வனஸ்பதி இவை அனைத்திலும் transfatகள் உள்ளன |
07:05 | Transfatகள் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது |
07:08 | நல்ல கொழுப்பின் அளவை குறைக்கிறது |
07:11 | கொலஸ்ட்ரால் என்பது நம் ரத்தத்தில் உள்ள ஒரு வகையான கொழுப்பாகும் |
07:16 | நல்ல கொழுப்பானது மூளை, சருமம் மற்றும் இதயம் சரியாக வேலை செய்வதற்கு உதவுகிறது |
07:23 | அதிக அளவிலான கெட்ட கொழுப்பு நம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கானது |
07:28 | பெரும்பாலான ஜங்க் உணவுகள் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த எண்ணெயிலேயே செய்யப்படுகின்றன |
07:35 | எடுத்துக்காட்டாக சூரியகாந்தி எண்ணெய், குசமபப்பூ எண்ணெய், சோயாபீன் எண்ணெய் |
07:41 | சோள எண்ணெய் மற்றும் பருத்தி விதை எண்ணெயும் கூட இதில் அடங்கும் |
07:46 | இந்த எண்ணெய்களில் உள்ள ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள், நம் உடம்பில் கெட்ட கொழுப்புகளின் அளவை அதிகரிக்கின்றன. |
07:52 | அதிகப்படியான கெட்ட கொழுப்புகள் நம் ரத்த குழாய்களின் சுவற்றில் படிகின்றன |
07:58 | அதிகப்படியான ஒமேகா 6 கொழுப்பு உடம்பில் வீக்கத்தையும் அதிகரிக்கிறது |
08:06 | இதன் விளைவாக இன்சுலின் அளவின் குறைபாடு மற்றும் இதய நோய்கள் ஏற்படுகின்றன |
08:12 | அதிக அளவிலான ஜங்க் உணவினை உண்ணுவதால் பல தீமைகள் ஏற்படுகின்றன |
08:17 | உடல் பருமன், ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய் ஆகியவை பொதுவானவை |
08:23 | மேலும், கெட்ட கொழுப்பின் அதிகப்படியான அளவு மற்றும் இதய நோய்க்கான ஆபத்தையும் விளைவிக்கிறது |
08:30 | தூக்கமின்மை அல்லது கருப்பை நீர்க்கட்டி கூட ஏற்படலாம் |
08:37 | அதிகப்படியான ஜங்க் உணவுகள் உண்ணுவதால் வயிற்றில் கோளாறு ஏற்படலாம். |
08:42 | குமட்டல், வாந்தி மற்றும் பசியின்மை ஆகிவையும் ஏற்படும் |
08:48 | ஜங்க் உணவினால் ஏற்படும் மற்ற விளைவுகள் பல் பூச்சிகள், ஒவ்வாமை மற்றும் புற்றுநோய் |
08:54 | ஜங்க் உணவுகளில் நம் உடம்புக்கு தேவையான நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடையாது |
08:59 | இதனால் ஜங்க் உணவுகளை அதிகமாக உண்பதால் நமது நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது |
09:05 | அதன் விளைவாக நாம் அடிக்கடி சோர்வாகவும் மற்றும் பலவீனமாகவும் உணர்கிறோம் |
09:09 | பொதுவாக ஜங்க் உணவினால் நம் உடலுக்கு ஏற்படும் தீமையை நாம் அறிவதில்லை |
09:14 | யோசிக்காமல் நாம் இதை வழக்கமாக அதிக அளவில் உண்கிறோம் |
09:20 | ஆதலால், நாம் உண்ணும் உணவை கவனமாக தேர்வு செய்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும் |
09:27 | இத்துடன் இந்த டுட்டோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம்.
இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஆர்த்தி. நன்றி |