Health-and-Nutrition/C2/Importance-of-Folate/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:00 Folateஇன் முக்கியத்துவம் குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00:05 இந்த tutorialலில் நாம் கற்க போவது:
00:09 நம் உடலில் folate இன் பங்கு
00:12 Folate குறைபாட்டின் விளைவுகள்
00:15 வெவ்வேறு வயதினருக்கான folate இன் தேவைகள்
00:20 Vitamin B9 நீரில் கரையக்கூடிய ஒரு முக்கியமான B vitamin ஆகும்
00:25 இதில் 2 வகை உள்ளது: folate மற்றும் folic acid
00:30 Folate என்பது இயற்கையான வடிவானது, உணவில் இயற்கையாக கிடைக்க்கூடியதாகும்
00:35 நம் உடலில் உள்ள bacteriaக்களாலும் folate உருவாக்கப்படுகிறது
00:41 மாறாக, folic acid என்பது செயற்கையானதாகும்
00:45 ரசாயனம் நிறைந்த உணவுகளில் இது காணப்படுகிறது
00:51 Folate ஐ காட்டிலும் folic acid நம் உடலினால் மிக எளிதாக உறிஞ்சப்படுகிறது
00:58 நம் உடலில் folate இன் பங்கையும்
01:02 அதன் குறைபாட்டினால் ஏற்படும் விளைவுகளையும் இப்பொழுது பார்ப்போம்
01:05 Folateநம் உடம்பில் பல்வேறு செயல்பாட்டிற்கு தேவைப்படுகிறது
01:09 நம் உடம்பிற்கான வளர்ச்சி, பழுதுபார்த்தல், புதிய உணரணுக்களை உருவாக்குதல் மற்றும் பிரித்தல் ஆகியவற்றிக்கு தேவைப்படுகிறது
01:18 Homocysteine இன் அளவை குறைக்க folate உதவுகிறது
01:23 Homocysteine என்பது புரதத்தை உருவாக்கக்கூடிய ஒரு வகையான amino acid ஆகும்
01:29 அதிகப்படியான homocysteineஇன் அளவு அறிவாற்றலின் வளர்ச்சியை பாதிக்கிறது
01:34 இதயத்தின் இரத்த குழாய்களையும் சேதம் செய்கிறது
01:39 இது இதய நோய்களுக்கான ஆபத்தை அதிகரிக்கிறது
01:43 ஆதலால், folate இதயம் மற்றும் அறிவாற்றலை மேம்படுத்துகிறது
01:48 ஆரோக்யமான பிரசவத்திற்கும்
01:51 Neural tubeஐ மூடுவதற்கும் இது தேவை
01:55 Neural tube ஆனது குழந்தையின் மூளை மற்றும் முதுகுத்தண்டில் வளர்கிறது
02:01 Neural tubeமூடாமல் இருப்பதினால் neural tube குறைபாடுகள் ஏற்படலாம்
02:07 Neural tube குறைபாடு என்பது மூளை மற்றும் முதுகுத்தண்டில் ஏற்படும் பிறப்பு குறைபாடுகள் ஆகும்
02:13 Anencephaly மற்றும் spina bifida ஆகிய இரண்டும் பொதுவான neural tubeகுறைபாடுகள் ஆகும்
02:20 Anencephaly யில் குழந்தையின் ஒரு பகுதி மூளை மற்றும் மண்டை ஓடு சரியாக அமைவதில்லை
02:27 Spina bifida வில் குழந்தையின் முதுகுத்தண்டு சரியாக அமைவதில்லை
02:33 ஆதலால், குழந்தைகளுக்கு உடல் குறைபாடுகள் இருக்கலாம்
02:38 அவர்களுக்கு கால்களில் தசை பலவீனம் மற்றும் முடக்குவாதம் ஏற்படலாம்
02:43 வளைந்த முதுகுத்தண்டு மற்றும் சிறுநீர்ப்பை கட்டுப்பாடு இழப்பு வேறு சில அறிகுறிகள்
02:49 உண்ணுவது மற்றும் விழுங்குவதில் சிரமம் ஏற்படுவது கூட பொதுவானவை
02:55 அவர்களுக்கு கற்பதில் சிரமம் மற்றும் கவனக்குறைபாடு கூட இருக்கலாம்
03:00 Neural tubeஆனது கருவுற்றதில் இருந்து 28 நாட்களுக்குள் மூடுகிறது
03:06 இதற்குள், அந்த பெண் கர்பம் அடைந்ததை கூட அவள் உணராமல் இருக்கலாம்
03:12 அவள் அதை அறிவதற்குள், இந்த குறைபாடுகளை தடுக்க முடியாமல் போகலாம்
03:18 அனைத்து பெண்களும், குறிப்பாக கர்பம் தரிக்கும் வயதில் இருக்கும் பெண்கள், போதுமான அளவு folate நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்
03:25 Neural tube குறைபாடுகளை தவிர்க்க folate டுடன் சேர்த்து மற்ற ஊட்டச்சத்துக்களும் அவசியம்
03:32 எடுத்துக்காட்டாக: vitamin B12 மற்றும் choline
03:39 கர்ப காலத்தின் போது folate இன் தேவை அதிகரிக்கிறது
03:45 இந்த காலத்தில் போதுமான அளவு எடுத்துக் கொள்ளாததால் folate குறைபாடு ஏற்படுகிறது
03:51 உடலில் folate இன் மோசமான உறிஞ்சுதல் குறைபாட்டை ஏற்படுத்தலாம்
03:58 அதிகப்படியான மது அருந்துதல் கூட இதையே விளைவிக்கிறது
04:03 Vitamin B12 இன் மறைமுகமான குறைபாடு, folate இன் குறைபாட்டினை விளைவிக்கிறது
04:09 நம் உடலில் folate இருந்தாலும் அதன் செயல்பாட்டினை அது மேற்கொள்ள முடியாது
04:16 ஏனனெனில், folateஐ செயல்பட வைக்க vitamin B12 இன் அவசியம் ஏற்படுகிறது
04:24 ஆதலால், folate டுடன் போதுமான அளவு vitamin B12 ஐ எடுத்துக்கொள்வதும் அவசியமானது
04:31 முட்டை, கோழி, ஆட்டுக்கறி மற்றும் பால் பொருட்களில் vitamin B12 நிறைந்துள்ளது
04:39 சிப்பி மீன், கல்லீரல், இதயம், சிறுநீரகம் மற்றும் மூளை வேறு சில உதாரணங்கள் ஆகும்
04:47 மரபணு சார்ந்த இரத்த சோகை உள்ளவர்களுக்கு folate குறைபாட்டின் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது
04:54 மரபணு சார்ந்த இரத்த சோகைக்கான உதாரணங்கள் sickle cell இரத்த சோகை மற்றும்
04:58 மற்றும் thalassemia ஆகும்
05:01 இம்மாதிரியான நிலைமைகளில் சிவப்பு இரத்த அணுக்கள், உருவாவதை விட விரைவாக அழிக்கப்படுகிறது
05:08 ஆதலால், இந்த நிலைமைகளில் போதுமான அளவு folate ஐ எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது
05:14 எந்தவித மாத்திரை எதுத்துக்கொள்ளும் முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்துக் கொள்ளுங்கள்
05:19 அடுத்து, folate குறைபாட்டின் விளைவுகளைப் பார்ப்போம்
05:24 இந்த அறிகுறிகள், ஆண்கள் மற்றும் பெண்களிளும் தென்படும்
05:29 புண் மற்றும் சிவந்த நாக்கு மற்றும் உதடு, ஆரம்ப அறிகுறிகள் ஆகும்
05:35 சோர்வு,
05:38 எரிச்சல், தூக்கமின்மை
05:41 மற்றும் கவலை வேறு அறிகுறிகள் ஆகும்
05:43 வாய் மற்றும் வயிற்றில் புண்கள் ஏற்படலாம்
05:47 நீண்ட கால குறைபாடு நிறைவற்றலின்மை மற்றும் கவனக்குறைவை ஏற்படுத்தலாம்
05:53 கர்பிணிப் பெண்களில் folateஇன் குறைபாடு சிசுவிற்கு மோசமான விளைவை ஏற்படுத்தும்
05:59 எடுத்துக்காட்டாக: சிசுக்களில் neural tube குறைபாடு,
06:03 cleft lip மற்றும் palate
06:07 Cleft என்பது மேல் உதடு அல்லது மேல் வாயில் ஏற்படும் இடைவெளி அல்லது பிளவு ஆகும்
06:13 கரு வளர்ச்சியின் போது திசுக்கள் ஒன்றாக இணையததால் இது ஏற்படுகிறது
06:20 Folate அல்லது vitamin B12 இன் குறைபாடு macrocytic anemia வை விளைவிக்கிறது
06:27 இது எவ்வாறு ஏற்படுகிறது என்பதை விளக்குகிறேன்
06:30 இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களுமே உயிரணுக்கள் வளர்வதற்கும் மற்றும் பிரிவதற்கும் தேவைப்படுகிறது
06:36 அவைகள் குறையாக இருந்தால், சிவப்பு இரத்த அணுக்கள் சரியாக முதிர்ச்சி அடைந்து பிரிவதில்லை
06:43 அதன் விளைவாக, நிறைய முதிர்ச்சி அடையாத சிவப்பு அணுக்கள் குறைந்த அளவில் உருவாகிறது
06:51 Hemoglobin இவைகளில் மிகக் குறைந்த அளவில் இருப்பதால் அவை சரியாக வேலை செய்வதில்லை
06:59 Hemoglobin திசுக்களுக்கும் உயிரணுக்களுக்கும் oxygen இன் போக்குவரத்துக்கு உதவுகிறது
07:06 ஆதலால் குறைந்த hemoglobin இரத்த சோகையை விளைவிக்கிறது
07:11 வெவ்வேறு வயதினருக்கான folateஇன் ஒரு நாள் தேவையை பார்ப்போம்
07:18 1-3 வயது குழந்தைகளுக்கு 90 microgram தேவைப்படுகிறது
07:24 4-9 வயது குழந்தைகளுக்கு 110-142 microgram தேவைப்படுகிறது
07:32 10-15 வயது குமரப் பருவத்தினருக்கு 180-204 microgram தேவைப்படுகிறது
07:42 16 வயதிற்கு மேற்பட்ட குமரப் பருவத்தினருக்கு 200 microgram மிற்கு மேல் தேவைப்படுகிறது
07:50 ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 200-250 microgram தேவைப்படுகிறது
07:58 கர்பிணிப் பெண்களுக்கு 500 microgram தேவைப்படுகிறது
08:02 தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு 300 microgram தேவை
08:07 முற்காலத்தில் குழந்தை பிறவிக்குறைபாடு இருந்த பெண்களுக்கு அதிக அளவிலான folate அவசியம்
08:15 அவர்கள் கர்பம் தரிப்பதற்கு முன்பும் கர்ப காலம் முழுவதும் 500 microgram எடுத்துக் கொள்ளவேண்டும்
08:22 கர்பம் தரிக்க முடிவெடுக்கும் பெண்கள் போதுமான அளவு folate ஐ எடுத்துக்கொள்ள வேண்டும்
08:29 உணவின் மூலம் folate இன் தேவையை பூர்த்தி செய்யலாம்
08:33 பீன்ஸ் folate இன் சிறந்த மூலமாகும்
08:36 30 கிராம் அல்லது ½ கப் சமைக்கப்படாத பீன்ஸில் சுமார் 80-120 microgram folate உள்ளது
08:46 காராமணி, சிவப்பு காராமணி, தட்டை பயிறு மற்றும் சோயாபீன்கள் சில எடுத்துக்காட்டுகளாகும்
08:53 கொண்டைக்கடலை, அவரை, கொள்ளு, பட்டாணி ஆகியவையிலும் நிறைந்துள்ளன
09:00 கீரை காய்கறிகளிலும் folate நிறைந்துள்ளன
09:04 உதாரணமாக: பாலக்கீரை, சிறு கீரை சேப்பங்கிழங்கு கீரை மற்றும் அகத்து கீரை
09:11 50 கிராம் அல்லது 1 கப் சமைக்கப்படாத பாலக்கீரை சுமார் 70 microgram folateஐ தருகிறது
09:19 1 தேக்கரண்டி முருங்கை இலைப்பொடி சுமார் 10 microgram folateஐ தருகிறது
09:27 Folate நிறைந்த வேறு காய்கறிகள் பிஞ்சு அவரைக்காய், பீன்ஸ் மற்றும் பீட்ரூட்
09:35 காலிபிளவர், வெண்டைக்காய் மற்றும் முருங்கைக்காயிலும் மிதமான folate உள்ளன
09:43 சூரியகாந்தி விதை, கடுகு மற்றும் கருஞ்சீரகத்திலும் சிறிய அளவு folate உள்ளது
09:50 1 மேசைக்கரண்டி அளவு விதைகளின் பொடியில் 15-20 microgram folate உள்ளது
09:59 அசைவ உணவுகளில் கோழியின் கல்லீரல் மற்றும் அனைத்து கடல் உணவுகளிலும் நிறைந்துள்ளது
10:06 60 கிராம் கோழியின் கல்லீரல் சுமார் 600 microgram folateஐ தருகிறது
10:13 100 gram கடலுணவு 700 க்கும் அதிகமாக தருகிறது
10:20 அதிகப்படியான வெப்பம் மற்றும் நீர், folate இன் ஊட்டச்சத்து அளவை குறைக்கிறது
10:26 ஆதலால், அதிக நேரம் சமைத்தல் மற்றும் உணவை மீண்டும் மீண்டும் சூடு செய்தலை தவிர்க்கவும்
10:33 காய்கறிகளை கொதிக்க வைப்பதற்கு பதிலாக வதக்கலாம் அல்லது வேக வைக்கலாம்
10:38 பருப்பு வகைகளை முந்தைய நாள் இரவே தண்ணீரில் ஊறவைக்கவும்
10:43 முழு பயிர்களை முளைக்கட்டுவது மற்றும் சமைப்பதினால் அதன் ஊட்டச்சத்து அளவு அதிகரிக்கிறது
10:49 நொதிப்பது மற்றும் வருப்பத்தினால் folate இன் உறிஞ்சுதல் மேம்படுத்தப்படுகிறது
10:56 நம் உடல் ஆரோக்கியத்திற்கு போதுமான அளவு folate ஐ எடுத்துக்கொள்ள வேண்டும்
11:01 இத்துடன் இந்த டுட்டோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம்.

இந்த டுட்டோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஆர்த்தி. நன்றி

Contributors and Content Editors

Arthi