Git/C2/Inspection-and-Comparison-of-Git/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:01 Gitன் மேற்பார்வை மற்றும் ஒப்பிடுதல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: git diff, git show, git blame மற்றும் git help commandகள்.
00:17 இந்த டுடோரியலுக்கு, நான் பயன்படுத்துவது, Ubuntu Linux 14.04, Git 2.3.2 மற்றும் gedit Text Editor.
00:29 உங்களுக்கு விருப்பமான editorஐ பயன்படுத்தலாம்.
00:33 இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, terminal-லில் Linux command களை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
00:40 இல்லையெனில், அதற்கான Linux டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும்.
00:46 git diff commandஉடன் தொடங்குவோம்.
00:50 இந்த command, fileகளின் தற்போதைய நிலைமையின் மாற்றங்களை காட்டும்.
00:55 இப்போது, அதன் செயல்பாட்டை காணலாம். Terminalஐ திறக்க, Ctrl+Alt+Tஐ ஒன்றாக அழுத்தவும்.
01:03 நாம் முன்னர் உருவாக்கிய, Git repository mywebpageக்கு செல்வோம்.
01:09 டைப் செய்க: cd space mywebpage , பின் Enter ஐ அழுத்தவும்.
01:15 செயல் விளக்கத்திற்கு, html fileகளையே தொடர்ந்து பயன்படுத்துகிறேன்.
01:20 உங்களுக்கு விருப்பமான எந்த file வகையையும் பயன்படுத்தலாம்.
01:24 முதலில், செயல்விளக்க நோக்கத்திற்கு, history.html என்ற fileஐ உருவாக்கி, அதை commit செய்கிறேன்.
01:32 டைப் செய்க: gedit space history.html space ampersand , பின் Enter ஐ அழுத்தவும்.
01:41 Writer documentல் முன்னதாக சேமித்து வைத்திருந்த சில codeகளை copy- paste செய்கிறேன்.
01:48 File-ஐ சேமித்து மூடவும்.
01:51 ஒரு fileஐ, நீக்கவோ அல்லது சேர்க்கவோ செய்தால், commit செய்ய நினைவில் கொள்ளவும்.
01:58 staging areaவிற்கு fileஐ சேர்க்க, டைப் செய்க: git space add space history.html, பின் Enter ஐ அழுத்தவும்.
02:08 commit செய்ய, டைப் செய்க: git space commit space hyphen m space இரட்டை மேற்கோள்களில் “Added history.html” , பின் Enter ஐ அழுத்தவும்.
02:21 Git logஐ பார்க்க, டைப் செய்க: git space log, பின் Enter ஐ அழுத்தவும்.
02:28 தற்போது, நமது repositoryல், இரண்டு commitகள் உள்ளன.
02:33 mypage.html மற்றும் history.html fileகளை திறக்க, டைப் செய்க: gedit space mypage.html space history.html space ampersand
02:47 இங்கு, mypage.html என்ற file, நாம் முந்தைய டுடோரியலில் உருவாக்கிய file ஆகும். இப்போது, Enterஐ அழுத்தவும்.
02:56 இந்த fileகளினுள், சில வரிகளை சேர்ப்போம் மற்றும் நீக்குவோம்.
03:01 பிறகு fileகளை சேமித்து மூடவும்.
03:05 சில தருணங்களில், நம் fileகளில் என்ன மாற்றங்கள் செய்தோம் என்று நினைவிருக்காது.
03:11 Git status ஐ பார்க்க, டைப் செய்க: git space status , பின் Enter ஐ அழுத்தவும்.
03:19 அது, மாற்றியமைக்கப்பட்ட fileகளின் பெயர்களை காட்டும். ஆனால், வேறு எந்த விவரங்களையும் நாம் பெற முடியாது.
03:26 இந்த fileகளின் உண்மையான மாற்றங்களைக் காண
03:35 டைப் செய்க: git space diff, பின் Enter ஐ அழுத்தவும்.
03:40 இந்த command, fileன் தற்போதைய நிலைமையை, சமீபத்திய commitஉடன் ஒப்பிடும்.
03:46 இங்கு, history.html fileன் இரண்டு versionகளை காண்பீர்கள்.
03:51 a slash history.html என்பது கடைசி commitன் version ஆகும். அது minus குறியினால் காட்டப்படுகிறது.
04:00 b slash history.html என்பது தற்போதைய நிலைமையின் version ஆகும். அது plus குறியினால் காட்டப்படுகிறது.
04:09 ஆதலால், இங்கு minus குறி கொண்ட சிகப்பு நிற வரி, பழைய version ஆகும்.
04:15 மற்றும், plus குறி கொண்ட பச்சை நிற வரி, புதிய version ஆகும்.
04:20 மேலும் பார்க்க, down arrow key ஐ அழுத்தவும்.
04:23 நாம் புதிய versionல் சேர்த்த வரிகள் இவை தான்.
04:28 மேலும், mypage.html fileலில் செய்யப்பட்ட மாற்றங்களை காணலாம். down arrow keyஐ அழுத்தவும்.
04:35 வெளியேறுவதற்கு, q keyஐ அழுத்தவும்.
04:38 இங்கு, output பல நிறங்களில் காட்டப்படுகிறது.
04:42 வரிகள் பல நிறங்களில் தெரியவில்லையெனில், டைப் செய்க: git space config space hyphen hyphen global space color dot ui space true, பின் Enterஐ அழுத்தவும்.
04:57 நிறங்கள் தெரிய வேண்டாம் என்றால், இந்த commandல், trueக்கு பதிலாக,false ஐ பயன்படுத்துங்கள்.
05:03 டைப் செய்க: git space diff , பின் Enterஐ அழுத்தவும். இப்போது, output, நிறங்கள் இன்றி தெரியும்.
05:13 அடுத்து, ஒரு குறிப்பிட்ட fileலின் மாற்றங்களைக் காணலாம்.
05:18 டைப் செய்க: git space diff space history.html , பின் Enter ஐ அழுத்தவும்.
05:25 இங்கு, history.html fileலில் செய்யப்பட்ட மாற்றங்களை மட்டுமே காண முடியும்.
05:31 இப்போது, staging areaவிற்கு fileகளை சேர்ப்போம். டைப் செய்க: git space add space history.html space mypage.html , பின் Enter ஐ அழுத்தவும்.
05:45 Git diff ஐ மீண்டும் சரிபார்க்க, டைப் செய்க: git space diff, பின் Enter ஐ அழுத்தவும்.
05:52 இம்முறை, நமக்கு output ஏதும் கிடைக்காது, ஏனெனில், நமது file கள் staging area விற்கு சேர்க்கப்பட்டுவிட்டன.
05:59 அந்நேரங்களில், டைப் செய்க: git space diff space hyphen hyphen staged, பின் Enter ஐ அழுத்தவும்.
06:08 இப்போது, git diff commandல் கிடைத்த output போலவே, ஒரு outputஐ காண முடியும்.
06:15 அதே முடிவைப் பெற, hyphen hyphen staged க்கு பதிலாக, hyphen hyphen cached ஐ பயன்படுத்தலாம்.
06:23 தற்போதைய நிலைமையை முந்தைய commit உடன் எப்படி ஒப்பிடுவது?
06:28 முதலில், Git log ஐ காண, டைப் செய்க: git space log space hyphen hyphen oneline, பின் Enter ஐ அழுத்தவும்.
06:38 இப்போது, தற்போதைய நிலைமையை, Initial commit உடன் ஒப்பிட வேண்டும் என்று வைத்துக் கொள்வோம்.
06:43 டைப் செய்க: git space diff space, பிறகு, Initial commitன், commit hash ஐ, copy மற்றும் paste செய்க, பின் Enter ஐ அழுத்தவும்.
06:52 இங்கு வேறுபாட்டை நாம் காணலாம்.
06:55 இவ்வாறு நம் repositoryல் தற்போதைய நிலைமையுடன் ஒரு முந்தைய commitஐ ஒப்பிடலாம்.
07:02 இவ்வழியில், git diff command ஐ பயன்படுத்தி, மாற்றியமைக்கப்பட்ட fileகளில் உள்ள மாற்றங்களைக் காணலாம்.
07:09 commit செய்வதற்கு முன்பு, என்ன மாற்றங்கள் செய்தோம் என்பதை உறுதிப்படுத்த, இது உதவி செய்யும்.
07:15 இவ்விடத்தில், நமது வேலையை freeze செய்வோம்.
07:19 commit செய்ய, டைப் செய்க: git space commit space hyphen m space இரட்டை மேற்கோள்களில் “Added colors”, பின் Enterஐ அழுத்தவும்.
07:30 அடுத்து, இரண்டு commitகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டை காணக் கற்போம்.
07:35 Git log ஐ சரி பார்க்க, டைப் செய்க:git space log space hyphen hyphen oneline, பின் Enter ஐ அழுத்தவும்.
07:44 டைப் செய்க: git space diff space , பிறகு, ” Initial commit” ன், commit hash ஐ, copy மற்றும் paste செய்க space இப்போது, Added colors ன் , commit hash ஐ, copy மற்றும் paste செய்க, பின் Enter ஐ அழுத்தவும்.
07:58 இரண்டு commitகளுக்கும் உள்ள வேறுபாட்டை காணலாம்.
08:03 அடுத்து, கடைசி revisionயும், இரண்டாவது கடைசி revisionயும் ஒப்பிடலாம்.
08:08 டைப் செய்க: git space diff space HEAD space HEAD tilde , பின் Enter ஐ அழுத்தவும்.
08:16 HEAD' என்பது, “Added colors” என்ற commit message ஐ கொண்ட, கடைசி revsion ஆகும்.
08:22 HEAD tilde என்பது, “Added history.html” என்ற commit message ஐ கொண்ட, இரண்டாவது கடைசி revision ஆகும்.
08:30 HEAD என்பது சமீபத்திய revision ஆகும். HEAD tilde என்பது, சமீபத்திய minus 1 revision ஆகும்.
08:39 அதே போல், சமீபத்திய minus 2 revision, HEAD tilde 2, சமீபத்திய minus 3 revision HEAD tilde 3.
08:50 terminalலுக்கு வருவோம்.
08:53 இப்போது, commitன் முழு விவரங்களை அறிய உதவி செய்யும், git show command பற்றிக் கற்போம்.
09:00 டைப் செய்க: git space show , பின் Enterஐ அழுத்தவும்.
09:04 repositoryல் சமீபத்திய commitன் விவரங்களை இது காட்டும்.
09:10 commitன் விவரங்களுடன், fileகளின் மாற்றங்களையும் அது காட்டும்.
09:16 கூட்டாக வேலை செய்யும் போது, இந்த சிறப்பியல்பு உதவியாக இருக்கும்.
09:20 இப்போது, Git log ஐ பார்க்க, டைப் செய்க: git space log space hyphen hyphen oneline, பின் Enterஐ அழுத்தவும்.
09:30 Initial commitன் விவரங்களைக் காண, டைப் செய்க: git space show space, பிறகு, Initial commitன், commit hashஐ, copy மற்றும் paste செய்க, பின் Enter ஐ அழுத்தவும்.
09:42 இங்கு, Initial commitன் விவரங்களைக் காணலாம்.
09:46 இதே முறையில், நமது repositoryல் இருக்கும் எந்த commitன் விவரங்களையும் காணலாம்.
09:51 அடுத்து, ஒரு fileலின் முழு வரலாற்றை காணக் கற்போம்.
09:56 mypage.htmlன் முழு வரலாற்றை காண, டைப் செய்க: git space blame space mypage.html , பின் Enterஐ அழுத்தவும்.
10:07 இங்கு, mypage.htmlன் முழு வரலாற்றை காணலாம், அதாவது, அதை உருவாக்கிய நிலையிலிருந்து தற்போதைய நிலை வரை.
10:17 இதே முறையில், உங்கள் repositoryயின் எந்த fileன் முழு விவரங்களையும் காணலாம்.
10:22 இறுதியாக, Gitலிருந்து எப்படி உதவி பெறுவது எனக் காண்போம்.
10:27 உதவி பெற, கீழ்கண்ட syntaxஐ பின்பற்றவும்- git help <verb> அல்லது git <verb> hyphen hyphen help அல்லது man git <verb>
10:40 உதாரணத்திற்கு, git help show.
10:44 இதை செய்துகாட்டுகிறேன். terminalலுக்கு திரும்பி வந்து, டைப் செய்க: git space help space show, பின் Enterஐ அழுத்தவும்.
10:55 இங்கு, show commandன் கையேட்டை காணலாம்.
10:59 இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்து விட்டோம்.
11:04 சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் , நாம் கற்றது: git diff, git show, git blame மற்றும் git help commandகள்.
11:15 பயிற்சியாக, கீழ்கண்ட commandகளை ஆய்வு செய்யவும்: git reflog, git diff HEAD tilde HEAD, git show HEAD மற்றும் man git diff.
11:29 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
11:37 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
11:48 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் அளிக்கிறது.
11:55 மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
12:00 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst