Geogebra/C2/Symmetrical-Transformation-in-Geogebra/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Symmetrical Transformation குறித்த Geogebra tutorial க்கு நல்வரவு.
00:06 இதில் நாம் பின் வரும் Symmetrical transformations ஐ கற்போம்.
00:11 Line symmetry, Rotation symmetry
00:13 மேலும் ஒரு படத்தை அளவு, இடம் பொருத்து பெரிதாக்குவோம்.
00:17 Geogebra வின் அடிப்படை அறிவு இருக்குமெனெ நம்புகிறேன்.
00:21 இல்லையானால் தேவையான tutorial களுக்கு எங்கள் வலைத்தளத்தை பாருங்கள்.
00:26 நாம் பயன்படுத்துவது Ubuntu Version 11.10 LTS மற்றும் Geogebra Version 3.2.47.0
00:35 பின் வரும் Geogebra கருவிகளை பயன்படுத்துவோம்.
00:37 Reflect Object about Line
00:39 Rotate Object around Point by Angle
00:42 Dilate object from a Point by Factor
00:45 Semi circle through Two points
00:47 Regular Polygon மற்றும்
00:49 Perpendicular bisector
00:53 ஒரு வடிவியல் படத்தின் சமச்சீர் உருமாற்றம் என்பது -
00:57 ஆயத்தொலைவு தளத்தில் அதன் இடம், அளவு, உரு ஆகியவற்றில் ஒரு மாற்றம்.
01:02 மூல படம் 'Object' எனப்படும்.
01:04 உருமாற்றம் செய்த படம் 'Image' எனப்படும்.
01:07 பிரதிபலிக்கும் சமச்சீர்மை
01:09 இதை கோட்டு சமச்சீர்மை எனலாம்.
01:11 ஒரு பாதி இன்னொரு பாதியின் பிரதிபலிப்பாக இருக்கும்.
01:15 படத்தை மடித்தால் அவை ஒன்றன் மீது ஒன்று மிகச்சரியாக பொருந்தும்.
01:20 சமச்சீர்மை கோடு என்பது படம் எந்த கோட்டை ஒட்டி பிரதிபலிக்குமோ அதுவாகும்.
01:24 GeoGebra window வுக்கு போகலாம்.
01:27 இதற்கு முறையே சொடுக்குக: Dash home, Media Applications. Type இல், Education, Geogebra.
01:37 Algebric view வை தேர்ந்தெடுக்கிறேன்.
01:40 Algebric view வில் Close button ஐ அழுத்தவும்.
01:47 “Line of symmetry” உடன் துவங்கலாம்.
01:50 முதலில் ஒரு சமச்சீர் முக்கோணத்தை வரையலாம்.
01:53 Toolbar இல் “Regular Polygon” கருவியை தேர்ந்தெடுக்கிறேன்.
01:57 drawing pad இல் புள்ளிகள் 'A' ,'B', ஐ வரைக. பக்கங்களின் எண்ணாக 3 என எழுதுக.
02:08 சமச்சீர் முக்கோணம் 'ABC' வரையப்படும்.
02:11 முக்கோணத்தின் ஒரு பக்கம் செங்குத்து இருசமவெட்டியை வரைவோம்.
02:15 “Perpendicular Bisector Tool” ஐ தேர்ந்து பக்கம் AC மீது சொடுக்கவும்
02:26 Point கருவியால் முக்கோணத்தினுள் ஒரு புள்ளி இடவும்.
02:31 புள்ளி D ஐ ஒரு கோண உச்சி பக்கம் நகர்த்துக.
02:38 புள்ளி D மீது வலது சொடுக்கி Trace ON ஐ தேர்க
02:43 tool bar இலிருந்து “Reflect Object about Line” கருவியை தேர்க
02:48 புள்ளி D மீது சொடுக்கவும்.
02:49 இது புள்ளி D ஐ முன்னிலை படுத்தும்.
02:52 செங்குத்து இருசமவெட்டி மீது சொடுக்கவும்.
02:55 செங்குத்து இருசமவெட்டியின் மறு புறம் image D' உருவாக்கப்படும்.
03:01 D' புள்ளி 'D' இன் பிரதிபலிப்பு உருவம் ஆகும்.
03:04 புள்ளி D' க்கு Trace On ஐ அமைக்கவும்.
03:08 Move கருவியால் புள்ளி D ஐ முக்கோணத்தினுள் நகர்த்துக
03:11 Toolbar இல் Move tool இன் முதல் தேர்வை சொடுக்குக.
03:22 படத்தின் மீது சொடுக்கவும்
03:25 அதை முக்கோணத்தின் மீது இழுக்கவும்.
03:28 சொடுக்கி button ஐ விடவும்.
03:32 என்ன பார்த்தோம் ? இங்கே செங்குத்து இருசமவெட்டிதான் சமச்சீர்மை கோடு
03:36 D தான் object D' தான் image
03:39 கோட்டை ஒட்டி ஒரு பாதிவட்டத்தை பிரதிபலிக்கலாம்.
03:44 பாதிவட்டத்தை வரையலாம். “Semicircle through Two points” கருவி மீது சொடுக்கவும். புள்ளி E பின் F ஐ குறிக்கலாம்
03:56 segment Between two points மீது சொடுக்கவும்
04:02 புள்ளிகள் G, H ஐ குறிக்கலாம். ஒரு கோடு வரையப்படும்
04:06 கோட்டின் property ஐ மாற்றலாம்.
04:08 line Object properties மீது வலது சொடுக்கி Style மீது சொடுக்கி அதை மாற்றலாம்.
04:21 toolbar இலிருந்து “Reflect Object about Line” கருவியை தேர்க.
04:27 EF பாதி வட்டத்தை சொடுக்கவும்
04:31 கோடு GH ஐ சொடுக்கவும்
04:34 கோடு GH இன் மறுபுறம் image E'F' உருவாகிறது. படம் இப்போது எப்படி காண்கிறது? ஒரு வட்டம் போல்....
04:45 file ஐ சேமிக்கலாம்.
04:47 சொடுக்கவும்...“File”>> "Save As"
04:50 file பெயரை "Line-symmetry" எனக்கொடுத்து “Save” ஐ சொடுக்குகிறேன்.
05:05 அடுத்து “Rotate the Object around a Point by Angle” ஐ கற்கலாம்.
05:12 சுழற்சியின் வரையறை
05:15 சுழற்சி என்பது ஒரு நிலையான புள்ளியை சுற்றி ஒரு கோணத்தில் படத்தை சுழற்றும் மாற்றமாகும்.
05:21 அப்போதும் படம் மாறாமல் இருந்தால் அது சுழற்சி சமச்சீர்மை கொண்டுள்ளதாக சொல்லப்படும்.
05:29 object ஐ நீங்கள் எவ்வளவு பாகைகளும் சுழற்றலாம். வலஞ்சுழியாகவோ இடஞ்சுழியாகவோ...
05:39 புதிய Geogebra window வை திறக்கலாம்
05:41 சொடுக்குக: “File” >> New
05:47 ஒரு சதுரத்தை வரையலாம்
05:49 toolbar இல் “Regular Polygon” கருவியை தேர்க
05:55 drawing pad மீது சொடுக்கவும்
05:57 புள்ளிகள் 'A' மற்றும் 'B' ஐ குறிக்கலாம்
06:01 OK வை சொடுக்கவும்
06:03 சதுரம் 'ABCD' வரையப்படும்
06:05 “Rotate Object around a Point by Angle” கருவி மீது சொடுக்கவும்
06:13 சதுரம் 'ABCD' மீது சொடுக்கவும்
06:16 இது சதுரத்தை முன்னிலை படுத்தும்
06:18 அடுத்து ஏதேனும் ஒரு கோண உச்சி மீது சொடுக்கவும்
06:20 நான் 'A' மீது சொடுக்குகிறேன்.
06:23 ஒரு உரையாடல் பெட்டி தோன்றும்
06:25 Angle field இல் “60” என Type செய்க.
06:30 முதல் drop down list இல் டிகிரி ஐ தேர்க
06:35 தேர்வு “clockwise” ஐ தேர்க. OK மீது சொடுக்கவும்
06:40 இது சதுரத்தை தேர்ந்தெடுத்த புள்ளியில் 60° வலஞ்சுழியாக சுற்றும்.
06:44 சுழற்றப்பட்ட image 'A` B` C` D` ' உருவாகிறது
06:49 Move கருவியால் இதை ஒரு பக்கம் தள்ளுவோம்.
07:00 அடுத்து “Dilate or enlarge object from point by factor”
07:09 Dilation
07:11 விரிவாக்கம் அல்லது பெரிதாக்கல் என்ற உருமாற்றத்தில்... படம்.... ஒரு அளவு காரணியால் மாற்றப்படும்.
07:23 “Polygon” கருவியால் ஒரு முக்கோணம் வரையலாம்.
07:28 E , F , G ... மீண்டும் E முக்கோணம் பூர்த்தியாகிறது.
07:36 New point கருவி மீது சொடுக்கி
07:40 புள்ளி 'H' ஐ குறிக்கலாம்
07:44 “Dilate Object from Point by Factor” கருவி மீது சொடுக்கவும்
07:51 முக்கோணம் 'EFG'
07:54 இது முக்கோணத்தை முன்னிலைப்படுத்தும்.
07:55 புள்ளி 'H' மீது சொடுக்கவும்
07:57 ஒரு உரையாடல் பெட்டி தோன்றும்
08:00 number field இல் 2 என Type செய்க.
08:04 OK மீது சொடுக்கவும்
08:09 இது object ஐ இரு மடங்கு பெரிதாக்குகிறது.
08:16 Segment Between two points மீது சொடுக்கி புள்ளிகள் H,E,E' ஐ சேர்க்கவும்
08:33 புள்ளிகள் H,G,G' ஐ சேர்க்கவும்
09:01 புள்ளிகள் H,F,F' ஐ சேர்க்கவும்
09:15 இங்கே H தான் விரிவாக்கத்தின் புள்ளி எனக்காணலாம்.
09:21 நீங்கள் object ஐ Factor இன் எண்னை டைப் செய்து எவ்வளவு பெரிதாக வேண்டுமானாலும் ஆக்கலாம்.
09:28 file ஐ சேமிக்கலாம்
09:30 சொடுக்குக... “File”>> "Save As"
09:33 file பெயரை "Dilate-triangle" எனத்தருகிறேன்
09:48 “Save” மீது சொடுக்கவும். இத்துடன் இந்த tutorial முடிகிறது
09:55 சுருங்கச்சொல்ல
09:58 இந்த tutorial லில் கற்றது...
10:00 ஒரு கோட்டை ஒட்டிய பிரதிபலிப்பு
10:02 ஒரு புள்ளியை ஒட்டி ஒரு object இன் சுழற்சி
10:05 ஒரு object ஐ அளவு காரணியால் மாற்றுவது
10:09 முடிவாக பயிற்சி.
10:12 ஒரு ஐங்கரம் வரைக. Regular Polygon tool ஐ பயன்படுத்துக. குறிப்பு: பக்கங்கள் 5
10:17 ஐங்கரத்தின் ஒரு பக்கம் செங்குத்து இருசமவெட்டியை வரைக.
10:21 ஐங்கரத்தின் உள்ளே ஒரு புள்ளி வரைக.
10:25 புள்ளிக்கு trace On அமைக்கவும்
10:27 செங்குத்து இருசமவெட்டியை ஒட்டி புள்ளியின் பிரதிபலிப்பை பெறுக
10:31 image புள்ளிக்கு trace On அமைக்கவும்
10:34 ஐங்கரத்தை Trace செய்து தேர்ந்தெடுத்த சமச்சீர்மை கோடு சரிதானா என உறுதி செய்க
10:44 மூல ஐங்கரத்தை ஒரு புள்ளியை ஒட்டி இடஞ்சுழியாக 135 பாகைகள் சுழற்றுக
10:49 ஐங்கரத்தை ஒரு புள்ளியை ஒட்டி 3 முறை விரிவாக்குக.
10:56 பயிற்சி இறுதியில் இப்படி இருக்கும்.
11:03 இந்தURL இல் வீடியோ காட்சிகளைப் பார்க்கவும்
11:06 இந்த இணைப்பில் இருக்கும் வீடியோ Spoken Tutorial project பற்றி சுருங்க கூறுகிறது. நல்ல bandwidth இல்லையானால் தரவிறக்கி காண்க.
11:12 Spoken Tutorial திட்டக்குழு... செய்முறை வகுப்புகளை நடத்துகிறது. இணைய வழி பரிட்சையில் தேருவோருக்கு சான்றிதழ் அளிக்கிறது.
11:20 மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.org
11:26 Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும். National Mission on Education through ICT, MHRD government of India ஆதரவுடன் இது நடைபெறுகிறது
11:35 இந்தத் தளத்தில் மேலதிகத் தகவல்களை பெறலாம்.
11:39 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி!

Contributors and Content Editors

Gaurav, Priyacst