Geogebra/C2/Introduction-to-Geogebra/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம். Introduction to Geogebra tutorial க்கு நல்வரவு! இதில் Geogebra வின் அடிப்படைக்கு அறிமுகம் செய்வோம்.
00:09 Geogebra என்பது ஒரு இலவச கணித மென்பொருள். இது www.geogebra.org தளத்தில் கிடைக்கும்.
00:17 Interactive ஆக இருப்பதால் கணினி சார் பயிற்சிக்குப் பயன்படுவதோடு, geometric figure களின் algebraic expressions ஐயும் மறுதலையாகவும் காணலாம்.
00:25 Geometry, Algebra, Calculas இவற்றை இது ஒருங்கிணைக்கிறது. ஆகவே geometric வரைபடங்களை வரையவும், சமன்பாடுகளை உள்ளிடவும் திசையன்கள், மாறிகள் உடன் வேலை செய்யவும் முடியும்.
00:35 Ubuntu Version 10.04 LTS, Geogebra Version 3.2.40.0 ஆகியவற்றை பயன்படுத்துகிறோம்.
00:47 ஏற்கெனவே geogebra நிறுவி இருந்தால் Ubuntu Menu Item Applications, education அல்லது science சென்று Geogebra Application மீது சொடுக்கவும்.
00:58 Geogebra வை நிறுவவில்லை எனில் System, Administration, Synaptic Package Manager சென்று நிறுவவும்.
01:08 Geogebra Window வை ஆராயலாம். இங்கே Menu Bar, Tool Bar மற்றும் tool view, graphic view மற்றும் algebra view குறித்துச் சுருக்கமாக சொல்வேன். கூடவே input bar, commands குறித்தும் கூறுகிறேன்.
01:20 geogebra window காண இப்படி இருக்கும். எல்லா window applications போலவே இதற்கும் Menu Bar இருக்கும்.
01:28 Tool Bar என்பது geogebra வின் compass box போல.
01:32 எந்த கருவி தேர்வாகி பயனுக்கு தயார் என Tool View காட்டும்.
01:36 Graphic View தான் Geogebra வின் drawing pad. இதில் வரைபடங்களை கட்டுமானம் செய்யலாம்.
01:42 இது தான் algebra view. Drawing pad இல் வரைந்த வரைபடங்களின் Algebraic expression ஐ இங்கு காணலாம்.
01:50 Input Bar algebra சமன்பாடுகளை உள்ளிட அனுமதிக்கிறது. அவற்றை drawing pad இலும் algebra view விலும் பார்க்கலாம்.
01:59 Input Bar இல் Geogebra ஆதரிக்கும் கட்டளைகள் இந்த கீழிறங்கும் menu வில் கிடைக்கும்.
02:05 Geogebra வில் drawing pad ஐ எப்போதும் காணலாம். அதை மூட முடியாது.
02:10 Drawing pad இல் grid ஐ பயன்படுத்த view சென்று grid option இல் குறியிடலாம்.
02:17 அதேபோல் பார்க்கவேண்டாம் எனில் axes ஐ குறி நீக்கலாம். இந்தப்பயிற்சிக்கு axes மற்றும் grid ஐ காட்சியில் வைக்கிறோம்.
02:25 Algebra View அல்லது Input Bar ஐ மூட விரும்பினால் view சென்று options ஐ குறி நீக்கவும். Input Bar ஐ இப்போது நீக்கலாம்.
02:38 tool bar இன்னும் அதிக விவரங்கள் உள்ள compass box. ஒரு tool ஐ பயன்படுத்த அதன் மீது சொடுக்கவும்.
02:47 Dark Blue Border ஒன்று Item சுற்றித் தெரிவது அது தேர்வாகி இருப்பதை காட்டும். பெயரையும், பயன்பாட்டு குறிப்புகளையும் toolview வில் காணலாம்.
02:59 Move Drawing Pad வலது கோடியில் உள்ள Tool Item. அதில் Click செய்து பின்னர் drawing pad இல் க்ளிக் செய்யவும். இடது பட்டனை அழுத்தி எடுத்துச் சென்று drawing pad ஐ தேவையான இடத்துக்கு நகர்த்தவும்.
03:13 compass box ல் பென்சிலுடன் துவக்கினால், geometry இல் பென்சிலால் ஒரு புள்ளி வரையலாம்.
03:19 இங்கே pencil கருவிகள் உள்ளன. Tool மூலையில் தெரியும் சின்ன சிவப்பு முக்கோணத்தை சொடுக்க, எல்லாப்பென்சில்கள் - point tools ஐயும் காணலாம்.
03:29 இதே போல் tool items இல் அடுத்த set கோடுகளுக்கானது. பின் இவை செங்குத்து கோடுகள், சமவெட்டி, பல்கோணம், வட்டங்கள் போன்றன.
03:42 இந்த டுடோரியலில் புள்ளிகள், வட்டப் பகுதி, இணை மற்றும் செங்குத்து கோடுகள் வரைவது, பொருட்களை அளப்பது, object properties ஐ மாற்றுவது மற்றும் file ஐ சேமிப்பது பற்றிக் கற்கலாம்.
04:01 புள்ளிகளை வரையலாம். new point தேர்வு செய்து drawing pad இல் எங்காவது சொடுக்க, புதிய புள்ளி கிடைக்கும்.
04:12 Point - drawing pad இல் மட்டுமின்றி algebra view விலும் தெரிவதைக் கவனிக்கவும்.
04:19 Drawing pad இல் வரையப்பட்ட tool items அனைத்தும், geogebra வில் object எனப்படும்.
04:24 புள்ளி A&B இரண்டும் free objects. அதாவது drawing pad இல் இருக்கும் மற்ற objectகளை சாராதவை.
04:32 segment between two points க்கு சென்று A&B என்றிருக்கும் இரு points ஐ பயன்படுத்தி ஒரு துண்டு கோட்டை வரையலாம். அல்லது drawing pad இல் எங்காவது சொடுக்கி இரண்டு புதிய புள்ளிகளையும் அவற்றின் இடையே உள்ள segment ஐயும் பெறலாம்.
04:51 அதே போல உங்களால் ஒரு புள்ளி ஐ குறியிட்டு ஒரு செங்குத்து கோடு வரைய முடியும். பின் அந்த கோடு, புள்ளிD வழியாக segment CD க்கு செங்குத்து ஆக இருக்கும்.
05:10 ஒரு இணை கோடு: இங்கு ஏதேனும் ஒரு புள்ளியை சொடுக்கி, AB ஐ தேர்வு செய்கிறேன். புள்ளி E வழியே AB க்கு இணை கோடு கிடைக்கிறது.
05:25 இப்போது இரு objects களின் வெட்டிக்கொள்ளும் புள்ளியை கண்டறிய, இங்குள்ள tool க்குச் சென்று intersect two objects ஐ சொடுக்கவும்.
05:32 சொடுக்கியை கோடுகள் வெட்டிக்கொள்ளும் இடத்தின் மீது வைத்து, இரு object களும் highlight ஆகும் நேரத்தில் சொடுக்க அவற்றின் intersection கிடைக்கிறது.
05:44 தூரத்தை அளக்க, tool bar இல் வலதிலிருந்து நான்காவதை சொடுக்கி Distance or length tool ஐ தேர்வு செய்க.
05:52 இரண்டு புள்ளிகளிடையே தூரத்தை அளக்க அவற்றை தேர்வு செய்யலாம். இங்கே DF ஐ தேர்வு செய்யலாம். அல்லது ஒரு முழு கோடு துண்டை தேர்வு செய்யலாம்.
06:02 Grid இல் units ஏதுமில்லை என கவனிக்க. இன்னமும் advanced topics கற்கையில் Units Name ஐ ஆராயலாம்.
06:12 அதற்கு முன், ஒவ்வொரு item களிலும் உள்ள label மற்றும் colour போன்ற properties ஐ மாற்றலாம்.
06:19 எதுவும் வரைய வேண்டாமெனில் இங்குள்ள arrow keys ஐ சொடுக்கவும். தவறாக முயன்றாலும் drawing pad இல் எதுவும் வரைய முடியாது.
06:30 இப்போது object properties ஐ மாற்ற, சொடுக்கியை object இல் நகர்த்தி, அது highlight ஆனதும் வலது சொடுக்கி, பின் object properties ஐ சொடுக்கவும்.
06:41 இப்போது சில basic properties ஐ கூறுகிறேன். மற்றவை வேறொரு advanced topic இல் வரும்.
06:48 பெயரை மாற்ற புதிய பெயர் type செய்யவும். ஒரு தலைப்பை type செய்யலாம். To show the object அல்லது not to show என்பதைத் தெரிவு செய்ய முடியும்.
07:02 ஆப்ஜெக்ட் ஐ காட்டவோ, label இல் ஏதேனும் ஒன்றை காட்டவோ தேர்வு செய்யலாம். Caption on ஆக இருக்கட்டும்.
07:11 colour Tab இல் கோட்டின் நிறத்தை மாற்றலாம்.
07:14 Style Tab இல் தடிமன் மற்றும் style ஐ மாற்றலாம்.
07:19 இதை மூடுகையில் கோடு புதிய தோற்றத்தில் கிடைக்கும்.
07:25 இடது கோடி tool item - move tool . கற்பிக்க மிகவும் பயனாவது. பாடங்களை dynamic மற்றும் interactive ஆக வைத்திருக்கும்.
07:34 எல்லா free objects ஐயும் நகர்த்தலாம்.
07:38 Free object ஐ நகர்த்துகையில் அவற்றைச் சார்ந்த - dependent objects உம் அவற்றின் property மாறாமல் நகரும்.
07:45 உதாரணமாக, நாம் points A அல்லது B யை நகர்த்தினால், இணை கோடு நகரும்; ஆனால் அது இன்னும் இணையாகவே இருக்கும்.
07:57 ஒரு File ஐ சேமிக்க, file தேர்வு செய்து, பின் Save As ....... Folder தேர்வு செய்ய.... . நான் Documents ... Geogebra வுக்குச் செல்கிறேன்... file பெயரை கொடுத்து save ஐ click செய்கிறேன்.
08:20 File பெயர் மேல் panel இல் தெரிவதோடு அது மற்ற geogebra file கள் போல .ggb file ஆக சேமிக்கப்பட்டிருக்கும்.
08:28 ஒரு File ஐ திறக்க ... File ஐ Click செய்து ..open ..., எந்த File ஆனாலும் திறக்கத் தெரிவு செய்யலாம்.
08:38 முடிவாக பயிற்சி.
08:44 பயிற்சியாக ஒரு செவ்வகம் வரைக. segment with two points கருவியை முதலில் கொண்டு...
08:53 பின் Parallel Line, perpendicular line ஐ பயன்படுத்துங்கள், Intersect two objects மற்றும் distance அல்லது length tool ஐயும் பயன்படுத்துங்கள்.
09:00 முடிவாக, move tool மூலம் வரைந்த செவ்வகத்தை சோதிக்கவும். free objects ஐ நகர்த்திப் பார்க்கவும்.
09:07 இந்த பயிற்சி ஏற்கெனவே என்னால் செய்யப்பட்டது. கோடு Segment AB யில் ஆரம்பித்து, ABED செவ்வகத்தை கட்டுமானம் செய்தேன்.
09:20 இப்போது நான் move tool item ஐ சொடுக்கி free object ஐ நகர்த்தினால், செவ்வகம் ABED எந்த நிலையிலும் செவ்வகமாகவே காணப்படும், அதாவது கட்டுமானம் சரியாக இருந்தால்.
09:37 Talk to a Teacher Project இன் அங்கமான Spoken Tutorial Project ஐ நான் நினைவு கூறுகிறேன்.
09:43 National Mission on Education through ICT, MHRD government of India ஆதரவுடன் இது நடைபெறுகிறது.
09:48 இந்தத் தளத்தில் மேலதிகத் தகவல்களை பெறலாம்.
09:53 மொழியாக்கம் ஸ்ரீரங்கத்திலிருந்து கீதா சாம்பசிவம். பதிவு செய்து நன்றி கூறி விடைபெறுவது ..... Geogebra ஐ ஆராய்ந்து மகிழுங்கள்.

Contributors and Content Editors

Gaurav, Priyacst, Sanmugam