GIMP/C2/Triptychs-In-A-New-Way/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:23 GIMP tutorial க்கு நல்வரவு.
00:25 வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது.
00:30 New York ல் Jeson இடமிருந்து Rolf steinort ஒரு மின்னஞ்சலை பெற்றார். அவர் Triptychsஐ செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னரே Jeson, Triptychs ஐ செய்வதற்கான மாற்று வழியை கண்டறிய அதை பற்றிய நிகழ்ச்சியை நிறுத்திவிட்டார்
00:45 Jeson... layer mask ஐ பயன்படுத்தி ஒரு மாற்றுவழியைக் கண்டறிந்தார்.
00:50 அதை இந்த tutorialலில் காட்ட நினைக்கிறேன்.
00:57 Triptychs க்காக Jeson பயன்படுத்திய படத்தை என்னால் காட்ட முடியாது. ஏனெனில் அவை இலவசமாக கிடைப்பவை அல்ல. எனவே என்னால் அதை பயன்படுத்த முடியாது
01:10 Triptychs ஐ செய்ய layer mask ஐ பயன்படுத்துவது மிக சுலபம். layer mask ஐ பயன்படுத்துவது பற்றிய அவரது கோட்பாட்டை சற்று நான் மாற்றியுள்ளேன்.
01:21 எனக்கு ஏன் அந்த யோசனை வரவில்லை என திகைக்கிறேன்.
01:25 இங்கே இந்த மூன்று காட்சிகளுடன் triptych செய்ய விரும்புகிறேன்.
01:31 இந்த படத்தை இடப்பக்கம் வைக்க விரும்புகிறேன், இரண்டாவது நடுவில்... இது வலப்பக்கத்தில்.
01:42 இந்த சதுர frameகளை இந்த படத்துக்கு பொருந்துமாறு வேறு ஒன்றுக்கு மாற்ற விரும்புகிறேன்.
01:49 இது எவ்வாறு வேலை செய்கிறது என பார்ப்போம்
01:53 இப்போது இங்கே இந்த படங்களுடன் Triptychs செய்ய ஆரம்பிக்கலாம். என் tool box window ஐ மேலே கொண்டுவர tab ஐ அழுத்துகிறேன்.
02:05 File ல் சொடுக்கி புது படத்தை உருவாக்க New ஐ தேர்க. width க்கு 3400 மற்றும் heightக்கு 1200 என முன்னிருப்பு மதிப்புகளை பெறுகிறோம்.
02:19 1000 x 1000 கொண்ட 3 படங்களை வைத்துள்ளேன். அவற்றிற்கு இடையே 100 pixels border உள்ளன.
02:31 அது எவ்வாறு வேலை செய்கிறது என பார்க்கலாம்
02:36 புது படத்தினுள் இந்த படத்தினை பெற, இந்த படத்தின் background layer ஐ toolbox லிருந்து இங்கே என் புது படத்துக்கு இழுக்கிறேன். இங்கே background பிரதியை பெறுகிறோம்.
02:54 இது என் இடப்பக்க படமாக இருந்தது, எனவே இதை Left என மறுபெயரிடுகிறேன். type செய்த பிறகு enter ஐ அழுத்துக
03:04 எனவே இந்த படம் இடப்பக்கத்தில் இருக்க வேண்டும்.
03:08 அடுத்த படம் வலப்பக்கத்தில் இருக்க வேண்டும், எனவே அவ்வாறே படத்தை இழுத்து அதற்கேற்றவாறு பெயரிடுகிறேன் Right.
03:32 இது மூன்றாவது படம். இது என் மைய window ஆக மாறும், எனவே இந்த படத்தை புது படத்துக்கு மேலே இழுத்து இந்த layer ஐ Center என மறுபெயரிடுகிறேன்.
03:49 right மற்றும் center layerகளை மறைய செய்கிறேன். இப்பொது left layer அளவை சற்று குறைக்கிறேன். 10% என சிறிதாக்கும் போது இந்த layer ன் ஓரங்களை காணலாம். படத்தின் முழு frame உம் காணக்கிடைக்கிறது.
04:16 இப்போது move tool ஐ தேர்கிறேன். அதன்மூலம் இந்த படத்தை சற்று நகர்த்தி சரிசெய்ய முடியும்.
04:26 இந்த படம் நகருவதில்லை. ஏனெனில் center layer ஐ தேர்ந்தெடுத்துள்ளேன்.
04:33 எனவே இப்போது left layer ஐ தேர்ந்தெடுத்து அதை நகர்த்தி பாட்டிலை நிலையில் வைக்கவும்.
04:39 இந்த layer ஐ சற்று குறைக்க விரும்புகிறேன். எனவே tool box லிருந்து scale tool ஐ தேர்ந்தெடுக்கிறேன். tool info க்கு சென்று aspect ratio ஐ சொடுக்குக. preview ல் image option ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
04:59 இப்போது layer னுள் சொடுக்கி, info window ஐ ஒரு பக்கமாக இழுத்து மூலையிலிருந்து அதை குறைக்கவும்.
05:09 அதிகம் அல்லது சற்று குறைவு என நினைக்கிறேன்.
05:15 இந்த படத்தை பிடித்து நான் விரும்பும் இடத்தில் வைக்க முடியும். இங்கே சில guidelines ஐ நான் வைத்திருக்க வேண்டும்.
05:30 100% க்கு படத்தை பெரிதாக்குகிறேன். மேல் இடது மூலைக்கு செல்கிறேன்.
05:38 guidelines களுக்கு இப்போது rulers கீழே இழுக்கிறேன்
05:43 rulerஐ என்னால் ஏன் நகர்த்த முடியவில்லை என திகைத்தேன். இங்கே ஒரு option உள்ளது move the active layer, இதை தேர்ந்தெடுப்பதன் மூலம் நடப்பு layer ஐ நகர்த்தலாம்.
06:01 layerகளை பாதுகாக்க இது நல்ல option. இடப்பக்கத்தில் frame ன் அளவை 100 என தேர்கிறேன். பின் கீழே சென்று அதை 1100 என அமைக்கிறேன். இடப்பக்கத்தில் இதை 1100 என அமைக்கிறேன்.
06:31 இதுதான் என் படத்தின் frame.
06:34 Shift + Ctrl + E முழு படத்தை கொடுக்கிறது. இப்போது active layer option ஐ தேர்கிறேன்.
06:43 zoom ratio ல் 10% ஐ தேர்கிறேன்.
06:48 13% ஐ தேர்ந்தெடுக்க வேண்டும் என நினைக்கிறேன். அது போதுமானது.
06:59 scale tool ல் சொடுக்கி aspect ratio ஐ வைத்துக்கொள்க. இந்த scale window ஐ frame ஐ விட்டு வெளியே இழுக்கவும்.
07:10 இப்போது இந்த படத்தை அளவிடவும்.
07:14 இப்போது இந்த படத்தை எங்கு வைக்க விருமபுகிறேனோ அந்த frame உள்ளது.
07:21 இதை சற்று சிறிதாக்க வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில் இங்கே படத்தில் glassன் நிழல் எனக்கு வேண்டும்.
07:40 இப்போது scale ல் சொடுக்கி என் அளவிடப்பட்ட படத்தை பெறுகிறேன்.
07:49 படத்தை சுற்றி frame ஐ பெறுவதற்கு layer mask ஐ சேர்கிறேன்.
08:01 என் layer mask ஐ black ஆக்குகிறேன். அது full transparency.
08:07 add ல் சொடுக்குக.
08:13 எனவே இப்போது ஓரங்களுக்கு உள்ளே ஒரு செவ்வகத்தை தேர்க. செவ்வகத்தை வெள்ளை உடன் நிரப்புக.
08:23 வெள்ளை நிறத்தை இங்கே இழுக்கிறேன். பாட்டில் காணக்கிடைத்தைக் காணலாம். இங்கே frame ஐ முடிப்பதற்கு அதை பெரிதாக்குகிறேன்.
08:36 layer mask ல் ஒழுங்கற்ற strokes உடன் வெள்ளையுடன் வரைவோம்.
08:44 அதை செய்ய brush tool ஐ தேர்கிறேன், இங்கே dialog சென்று வரைவதற்கு ஒரு மிருதுவான brushஐ தேர்கிறேன்.
09:01 வரைவதற்கு முன் Shift + Ctrl + A ஐ அழுத்தி நான் தேர்ந்தெடுத்ததை நீக்கவேண்டும், இப்போது வெள்ளையுடன் வரைய ஆரம்பிக்கலாம்.
09:13 வெள்ளை தேர்ந்தெடுக்கப்படுகிறது.
09:16 இப்போது இங்கே சுற்றி வெள்ளையுடன் வரைகிறேன். layer mask ல் வெள்ளையை வரையும் போது, கீழே படத்தை வெளிப் படுத்துகிறேன் என்பதைக் காணலாம்.
09:28 வரைவது ஒழுங்கற்றது. ஆனால் பரவாயில்லை.
09:40 இப்போது வேறு brush ஐ தேர்ந்தெடுக்கிறேன். இது பரவாயில்லை என நினைக்கிறேன்.
09:49 தெளிவில்லாத ஓரங்களைப் பெறுகிறேன்.
09:52 படத்தை 100% பெரிதாக்கவேண்டும். அப்போது தான் இதை பார்க்கலாம்
10:04 இங்கே ஒரு வகையான தெளிவில்லா ஓரத்தைப் பெறுகிறேன். அதன் மேலே இரு முறை வரைவதன் மூலம் மேலும் தெளிவில்லாமல் ஆக்குகிறேன்.
10:16 இப்போது ஓரங்கள் மேலும் ஒழுங்கற்று இருப்பதைக் காணலாம்.
10:22 அநேகமாக இங்கு இது சரியான tool இல்லை. ஆனால் பல்வேறு toolகளை பயன்படுத்த முடியும். இப்போது இந்த படத்தை கூர்மையாக்க விரும்புகிறேன்
10:35 இன்னும் layer maskல் தான் வேலை செய்துகொண்டிருக்கிறேனா என்பதை சோதிக்கலாம்.
10:41 இங்கே அதை சோதிக்கலாம்.
10:43 இங்கே layer mask வெள்ளையுடன் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
10:47 எனவே Filters, Blur, Gaussian blur ல் சொடுக்கி அதிக blur எண்ணிக்கையை இங்கே தேர்கிறேன். இது போதும் என நினைக்கிறேன்.
11:03 இப்போது உண்மையிலேயே தெளிவில்லா ஓரங்களை இங்கே சுற்றிலும் கொண்டுள்ளேன்.
11:10 எனவே முழு படத்தில் காணலாம். Shift + Ctrl + E
11:17 என் tryptych ன் முதல் பகுதியை வைத்துள்ளேன். அதே வழியில் மற்றவற்றையும் செய்கிறேன்.
11:26 மற்ற படங்களுடன் முடித்திருக்கிறேன். இங்கே பார்க்கலாம் rulerகளுக்கு வெளியேயும் வரைந்துள்ளேன். அதை இங்கேயும் செய்யலாம்.
11:39 இப்போது rulerகளை நீக்க விரும்புகிறேன். அதை செய்வதற்கான புதிய வழி Image க்கு சென்று, Guides ல் இங்கே remove all guides.
11:54 இங்கே புது guide செய்யமுடியும் என கண்டறிந்தேன். position ஐ எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்கலாம்.
12:03 இந்த optionகளை கொண்டிருப்பது மிகவும் சிறந்தது.
12:08 அனைத்தையும் நினைவில் கொண்டிருக்க முடியாத பல optionகளை GIMP கொண்டுள்ளது.
12:14 View க்கு சென்று show layer Boundry ஐ தேர்வு நீக்கவும்.
12:18 மூலையினுள் சற்று மேலே இந்த பாட்டில் இருக்க விரும்புகிறேன்.
12:23 இங்கே மேலும் அதிக இடம் உள்ளது என நினைக்கிறேன். இங்கே சற்று குறைவு.
12:30 வலது மற்றும் மைய படங்கள் இங்கே வலது மூலையில் உள்ளன.
12:36 ஆனால் இந்த பாட்டில் அங்கே மேலே போக வேண்டும் என நினைக்கிறேன்.
12:41 எனவே முழு திரை பாங்குக்கு செல்கிறேன்.
12:45 center மற்றும் right layer ஐ தேர்வு நீக்கி left layer ல் கவனத்தை செலுத்துகிறேன்.
12:54 இப்போது வழிகாட்டலுக்கு rulerகள் தேவை.
12:58 எனவே Image, Guides, New guide ல் சொடுக்கி Horizontal position ல் 100 ஐ இடுக.
13:10 மீண்டும் Image, Guides, New guide சென்று vertical position ஐ தேர்ந்து 100 என்க.
13:20 இப்போது என் move tool ஐ தேர்ந்தெடுக்கிறேன். optionsக்கு சென்று, move the active layer ஐ தேர்ந்து இதை இங்கே சற்று மேலே நகர்த்துக.
13:37 ஒரு தவறு செய்தேன் என நினைக்கிறேன். எனவே Ctrl + z ஐ அழுத்தி இந்த படியை undo செய்கிறேன். இங்கே அந்த mask தேர்வாகியிருப்பதைக் காணலாம்.
13:49 இந்த layer ஐ நகர்த்த விரும்புகிறேன்.
13:51 எனவே இப்போது படத்தை தேர்ந்து அதை சற்று மேலே இழுக்கிறேன். அதனுடன் mask நகருகிறது.
13:58 mask ஐ தக்கவைக்க ஒரு வழியையும் நான் கண்டறியவில்லை. ஆனால் அதை சரிசெய்யலாம்.
14:04 layer mask ஐ தேர்ந்து மீண்டும் layer mask ஐ இங்கே மூலைக்கு இழுக்கவும்.
14:13 இப்போது இது பரவாயில்லை என நினைக்கிறேன்.
14:19 இப்போது New York ல் Jesonன் உதவியுடன் இந்த படம் முடிக்கப்படுகிறது .
14:28 இல்லை. இந்த படம் முடிக்கப்படவில்லை.
14:32 சாதாரணமாக நான் மறக்கமாட்டேன். ஆனால் எப்போதும் பதிவுசெய்யும்போது மறக்கிறேன். ஏனெனில் என் படத்தை உருவாக்குவதை விட மற்ற விஷயங்களைப் பற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது.
14:47 மீண்டும் அதை சேமிக்க மறந்தேன்.
14:56 jaegermeister.xcf என சேமிக்கவும், xcf அனைத்து layer தகவல்களையும் கொண்டுள்ளது. இணையத்திற்காக மறுஅளவாக்குதல் பற்றிய அனைத்தையும் நீக்குகிறேன்.
15:08 இந்த file க்கு இணைப்பை... காட்டப்படும் குறிப்பில் காணலாம். meetthegimp.org. உங்கள் கருத்துக்களை அளிக்க விரும்பினால் செய்யலாம்.
15:18 இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Gaurav, Priyacst, Ranjana