GIMP/C2/Brushes/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:23 GIMP tutorial க்கு நல்வரவு. வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது.
00:32 கடைசி tutorialல் drawing tools பற்றி காட்டினேன். அப்போது apply Jitter button எப்படியோ காணாமல் போய்விட்டது..
00:43 அதை செய்வது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் editingன் போது போய்விட்டிருக்கவேண்டும்.
00:51 இங்கே சில கோடுகளை வரையும்போது, இது மிருதுவான ஓரங்களை கொண்டிருப்பதையும் இது pen ஆல் செய்யப்பட்டது போல இருப்பதையும் காண்க.
01:09 இப்போது apply jitter ஐ சொடுக்கி amount ஐ கிட்டதட்ட பாதி அல்லது அது போல அமைக்கவும். paint brush சற்று சீரற்று இருப்பதையும் ஓரங்கள் முன்பிருந்தது போல வழவழப்பாக இல்லை என்பதையும் காண்க.
01:29 amount ஐ அதிகரிப்போம். இப்போது மேகப்புள்ளிகள் நான் வரைந்த கோட்டை சுற்றி பரப்பப்பட்டிருப்பதைக் காணலாம்.
01:41 அதுதான் jitter buttonன் ரகசியம்.
01:55 செய்யவேண்டிய திருத்தம் மற்றொன்று உள்ளது.
02:00 pen அல்லது brush லிருந்து வித்தியாசமான முக்கியமான ஒன்றை eraser tool கொண்டுள்ளதாக Hansen எனக்கு எழுதினார்.
02:06 அதை செயலில் காண, transparency ல் foreground layerன் மீது ஏதேனும் சற்று வரையவும். அதாவது alpha channel ஐ on செய்து அதனுடன்.
02:15 ஒரு pen அல்லது brush தேர்ந்தெடுக்கப்பட்ட background நிறத்துடன் அந்த நிறத்தில் வரையும். ஆனால் eraser அந்த நிறத்தை நீக்கி transparent ஆக்கும்.
02:25 சரி அதை முயற்சிப்போம்.
02:27 கருப்பு என் foreground நிறம் மற்றும் ஆரஞ்சு என் background நிறம். layer பெயர் தடிமனாக இருப்பதைக் காண்க, அதாவது alpha channel இந்த படத்தில் இல்லை.
02:41 எனவே alpha channel ஐ on செய்கிறேன்.
02:47 எனவே eraser ஐ தேர்ந்தெடுப்போம்.
02:54 இங்கே என் foreground மற்றும் background நிறம் ஒன்றே. எனவே CTRL+click ஐ அழுத்துவதன் மூலம் ஆரஞ்சு நிறத்தை background நிறமாக எடுக்கிறேன்.
03:12 எனவே அடிப்படையில் background நிறத்துடன் வரைகிறோம். இப்போது layer ல் வலதுசொடுக்கி add alpha channel மூலம் alpha channel ஐ on செய்கிறேன். பெயர் தடிமனாக இல்லை என்பதைக் காணலாம். இப்போது eraser ஐ தேர்கிறேன்.
03:32 foreground மற்றும் background நிறம் அழிக்கப்பட்டதைக் காணலாம்.
03:41 இப்போது paint brushes பற்றியும் வரைவதற்காக தேர்ந்தெடுக்கக்கூடிய brushes பற்றியும் மேலும் சொல்கிறேன்.
04:01 எனவே இந்த GIMP tutorial ல் brushes பற்றி பேசலாம் .
04:07 Brushes... pencil லில் ஆரம்பித்து... நான் நினைக்கிறேன் dodge மற்றும் burn tool வரை பல toolகளால் பயன்படுத்தப்படுகிறது.
04:17 ink ஐ தவிர இந்த அனைத்து toolகளும் இடையில் brush ஐ பயன்படுத்துகின்றன.
04:24 எனவே இப்போது உதாரணமாக paint brushஐ தேர்கிறேன்.
04:30 brushes dialogமீது சொடுக்கியோ அல்லது tool box ல் paint brush ல் brush தேர்வை சொடுக்கியோ brushesஐ தேர்ந்தெடுக்கலாம். brushகளின் ஒரு தொகுப்பைப் பெறலாம்.
04:47 இங்கே சுற்றி சிறிய குறிகள் உள்ளன, இந்த brush இங்கே காட்டுவது போல சிறியது அல்ல என்பதை இந்த கூட்டல் குறி காட்டுகிறது. அதன் மீது சொடுக்கும் போது பெரிய brush ஐ காண்கிறோம்.
05:03 இந்த சிவப்பு முக்கோணம் animated brush ஆகும்.
05:18 இதை இங்கே முயற்சிக்கலாம்.
05:27 இது சற்று pencil drawing போன்று காணப்படுகிறது. இது pencil sketch எனப்படும்.
05:36 நீலத்தில் இருப்பவை parametric brushes ஆகும்.
05:41 இவை அடிப்படையில் mathametical mode ஆகும். அதை பின்னர் காட்டுகிறேன்.
05:49 இங்கே சில நிலையான brushes உள்ளன.
05:52 இந்த brush ல் கருப்பு பகுதி இங்கே foreground நிறத்தில் நிரப்பப்படுகிறது. இது கருப்பாக உள்ளது. இந்த நிலையான brushகளில் வெள்ளைப்பகுதி மாற்றப்படவில்லை. எனவே இங்கே வரையமுடியும்.
06:09 foreground ஐ சிவப்புக்கு மாற்றுகிறேன் எனில் பின் இந்த சிறிய படம் என் ஓவியத்தில் சிவப்பாகும். இந்த வெள்ளை background ஆகவே இருக்கும்.
06:29 இதுபோன்று சில மற்ற brushகளும் உள்ளன, Pepper color brush.
06:35 இங்கே ஒரு மிளகாயை வைக்க முடியும். இந்த மிளகாய்களின் ஒரு கோட்டையும் வரையலாம்.
06:52 இந்த brush மிக பயனுள்ளது அல்ல. ஆனால் உங்கள் சொந்த brushகளை உருவாக்க முடியும். அது மிக பயனுள்ளதாக இருக்கலாம்.
07:06 இங்கே ஒரு நல்ல brush உள்ளது.
07:10 இது vine. vineன் ஒரு கோட்டை வரையலாம். அது பார்க்க நன்றாக உள்ளது.
07:18 சிறிய அலங்காரத்திற்கு இதை பயன்படுத்தலாம்.
07:32 இந்த front clip boardல் வித்தியாசமான brush ஐ காணலாம்.
07:37 எனவே இப்போது ஏதேனும் வரைகிறேன். அதற்கு முன் கருப்பு மற்றும் வெள்ளையை என் நிறங்களாக பயன்படுத்த வேண்டும்.
08:01 எனவே இப்போது இந்த ஓவியத்தை சுற்றி ஒரு சதுர பகுதியை தேர்கிறேன். Ctrl+C ஐ பயன்படுத்தி இதை clipboard க்கு பிரதி எடுக்கவும்.
08:16 பிரதி எடுப்பதற்கு Edit,Copy க்கு செல்லலாம். அல்லது வலது சொடுக்கி copyக்கு செல்லலாம்.
08:33 இப்போது என் paint brushஐ இங்கே தேர்கிறேன். பின் clipboard dialog ஐ தேர்கிறேன் .
08:41 இது வேலை செய்யவில்லை என்பதைக் காணலாம்.
09:05 இந்த தேர்வில் மட்டுமே வரைய முடியும் ஏனெனில் இந்த பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி தேர்ந்தெடுக்கப்படவில்லை.
09:15 எனவே இதை Ctrl+Shift+A மூலம் தேர்ந்தெடுத்துள்ளேன். இப்போது வரைய முடியும்.
09:26 என் சிறிய பூ மேல்வருவதைக் காணலாம்.
09:30 சிறிய பூக்களின் கோட்டைக் கூட வரையலாம். அது நன்றாக இருக்காது. ஏனெனில் background உம் பிரதி எடுக்கப்படுகிறது. ஒவ்வொரு பூவும் மற்றொன்றின் மேலே வருகிறது.
09:48 ஒரு படத்தின் சிறுபகுதியை மட்டும் பிரதி எடுத்து பின் படத்தினுள் விரும்பும் இடத்தில் வரைந்தோமானால் இது நன்றாக இருக்கும்
09:59 உங்கள் சின்னங்களை முத்திரையிடவும் ஒருவரின் முகத்தை ஒழுங்கற்ற முறையில் ஒரு படத்தில் பதிக்கவும் இதை பயன்படுத்தலாம்.
10:24 இங்கே brushes பக்கத்தை திறக்கும்போது brushes பற்றி சற்று மாற்ற முடியும்.
10:31 இங்கே முதலாவது spacing. இன்னும் நான் தேர்ந்தெடுக்கப்பட்ட என் clipboard brush ஐ கொண்டுள்ளேன். 100% spacing உடன் செல்லும்போது, அழகான பூக்களின் கோட்டை வரையலாம்.
10:53 இந்த dialog ல் ஒரு புது brush ஐயும் உருவாக்கலாம், இங்கே முதல் தேர்வை சொடுக்குக. ஆனால் editing தேர்வு.
11:10 எனவே இரண்டாம் தேர்வை சொடுக்குக. இங்கே புது brush ஐ உருவாக்கலாம்.
11:20 shape ல் வட்டம், சதுரம் அல்லது சாய்சதுரத்தை தேர்ந்தெடுக்கலாம்.
11:27 சாய்சதுரத்தை எடுப்போம், இந்த radius ஐ மாற்ற முடியும். அதுபோல சில spikes ஐயும் இந்த brush க்கு சேர்க்கலாம்.
11:40 என் brush ன் hardness ஐ மாற்றி அதை மென்மையாகவோ கடினமாகவோ மாற்ற முடியும் என்பதைக் காணலாம்.
11:48 aspect ratio ஐயும் மாற்ற முடியும்.
12:03 brushன் angle ஐ மாற்றுவதன் மூலம், இதை சற்று சாய்க்க முடியும். spacingஐயும் மாற்ற முடியும்.
12:13 அதை இங்கே செய்வோம். இந்த சிறு நட்சத்திரத்துடன் spacing ஐ 200 அல்லது அதுபோல அதிகரிக்கவும்.
12:22 ஒரு புது brush ஐ உருவாக்குவதை இப்போது முடித்துவிட்டேன். இப்போது இதை Star என்போம்.
12:37 இப்போது brush dialog ல் உங்கள் புது star brush ஐ காணலாம்
12:43 இதை பயன்படுத்தும்போது இதுபோன்ற நட்சத்திரத்தைப் பெறலாம்.
12:49 இப்போது கருப்பால் இதை நிரப்ப வேண்டும்.
12:58 தங்கநிறத்தை foreground நிறமாக தேர்ந்தெடுக்கவும்.
13:02 அதிக அளவு jitter ஐ star brush க்கு பயன்படுத்தி இங்கே நட்சத்திரத்தைப் பதிக்கவும்.
13:18 jitter மிக அதிகமாக உள்ளது என நினைக்கிறேன். இது பார்க்க நன்றாக இல்லை.
13:27 இது ஒரு புது brush ஐ உருவாக்குவதற்கான விரைவான வழி ஆகும்.
13:33 முதல் தேர்வை தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்த brush ஐ edit செய்யலாம். angle ஐ சற்று மாற்றி திருப்பலாம். இப்போது இதை இங்கே பயன்படுத்தலாம்.
13:51 angle ஐ சற்று மாற்றியிருப்பதால் இது நன்றாக வேலை செய்கிறது.
13:58 புது brushஐ உருவாக்குவதன் மூலம் சொந்தமாக கணிதரீதியாக வரையறுக்கப்பட்ட brushகளையும் செய்யலாம்.
14:05 முதல் தேர்வு ஏதேனும் ஒன்றை clipboardனுள் பிரதிஎடுப்பது.
14:10 கடைசியாக இணையத்திலிருந்து brushகளை பெறுவதை இந்த tutorialல் நான் காட்ட விரும்புகிறேன். GIMP brushes என தேடுவதன் மூலம் இதை எளிமையாக செய்யலாம். Iceytina ன் deviantARTஐ இங்கே உதாரணமாக கொண்டுள்ளேன்.
14:49 இங்கே கிடைக்கக்கூடிய brushகள் உள்ளன. அவை Iceytina உருவாக்கியவை. இங்கே download ஐ தேர்ந்தெடுப்பதன் மூலம் அவற்றை தரவிறக்கலாம்.
15:05 அதை diskக்கு சேமிக்கிறேன்.
15:14 இதை என் diskல் தரவிறக்கியுள்ளேன். அவற்றை சற்று நேரத்தில் நிறுவுவேன்.
15:21 எனவே இந்த பக்கத்தைக் காணலாம். இந்த brushகள் creative commons licence ல் உரிமம் பெற்றது என காணலாம். இதனுடன் derivative வேலைகளை செய்ய எனக்கு அனுமதி இல்லை. எனவே இந்த brushகளை எடுக்க அனுமதி இல்லை. அவற்றை மாற்றி இணையத்தில் மீண்டும் இட முடியாது.
15:47 ஆனால் அவற்றை பயன்படுத்தலாம் அதனுடன் வேலை செய்யலாம். Iceytina க்கு மேற்கோளுடனும் மூல இணைப்புடனும் அவற்றை என் இணையத்தளத்தில் வெளியிடவும் முடியும்.
16:00 GIMP Brushes க்கு ஒரு இணைப்பு இருப்பதை இங்கே காணலாம். மற்ற இணையத்தளங்களில் மேலும் பல brushகளும் உள்ளன.
16:14 இது கடந்த 24 மணிநேரத்திலிருந்து புதிய மற்றும் பிரபலமான brushகளில் ஒன்று.
16:21 1 month ஐ தேர்கிறேன். இப்போது பல்வேறு brushகள் இருப்பதைக் காணலாம்.
16:36 நன்று இந்த Stardust and Twinkles ஐ எடுப்போம்.
16:49 ஆனால் இது முற்றிலும் ஆச்சரியமானது.
16:59 knux 57ன் KNUX’S spike brush pack .
17:04 நன்று. இதில் உரிமம் பற்றி தகவல் ஏதும் இல்லை. எனவே இதை தரவிறக்கி இதில் வேலை செய்ய முடியும்.
17:29 downloadல் சொடுக்குகிறேன்.
17:32 இங்கே GIMP 2.4 ல் brushes என்ற திறந்த folder ஐ காணலாம். இங்கே star.vbr ஐ காணலாம்.
17:44 vbr பற்றி எனக்கு தெரியாது. ஆனால் gbr என்பது GIMPலிருந்து நிலையான brushகள் ஆகும்.
17:54 இங்கே இவை அந்த இணையத்தளத்திலிருந்து Iceytina ஆல் உருவாக்கப்பட்ட brushகள் ஆகும்.
18:01 என் archive toolஉடன் அந்த folder ஐ திறக்கிறேன். அங்கே jpg ல் water colours மற்றும் README போன்ற மற்ற பல fileகளையும் காணலாம்.
18:20 எனவே அவை அனைத்தையும் தேர்ந்தெடுத்து அவற்றை brush directoryனுள் இழுக்கிறேன்.
18:35 இங்கே அவை உள்ளன.
18:37 knux spike brush packக்கும் அதையே செய்கிறேன்.
18:43 Archive manager உடன் அந்த folder ஐ திறக்கிறேன். இங்கே GIMP brush fileகளைக் காண்க.
18:52 எனவே அவை அனைத்தையும் தேர்ந்தெடுத்து அவற்றை brush directoryனுள் இழுக்கிறேன்.
19:05 இப்போது என் brush directory ல் அனைத்து brushகளையும் கொண்டுள்ளேன். எனவே என் Archive Manager ஐ மூடுகிறேன். இங்கே இந்த folder ஐயும் மூடுகிறேன். GIMPக்கு வருகிறேன்.
19:21 இங்கே ஒன்றும் மாறவில்லை என காணலாம். ஆனால் இந்த reload brushes ஐ தேர்ந்தெடுக்கலாம். இப்போது மேலும் பல brushகள் இருப்பதைக் காண்க. இந்த brushகள் iceytina விடமிருந்து பெற்றவை, இங்கே அவற்றை முயற்சிக்கலாம்.
19:46 இந்த brushகள் water colour போன்றவை.
19:50 எனவே இங்கே water colour box லிருந்து நிறத்தை தேர்ந்து வரையலாம்.
19:57 இந்த brushகள் முத்திரைபதிக்க மட்டுமே பயனாகும். வரைவதற்கு அல்ல
20:03 இந்த brushகள் தன்னகத்தே அதிக jitter கொண்டவை.
20:07 ஆனால் முதலில் background ஐ துடைக்கிறேன்
20:23 எனவே இந்த brushகள் தண்ணீர் நிறம் போன்று ஏதேனும் செய்ய உதவும் அல்லது படத்தை சுற்றி frame ஐ உருவாக்கவும் பயன்படுத்தலாம்.
20:36 எனவே இப்போது Knux brushes ஐ காண்போம்.
20:40 அவற்றை முன்னர் பார்க்கவில்லை. அதை முயற்சிப்போம்.
20:47 இந்த brushகள் பெரியவை, மீண்டும் இவை முத்திரைக்கானது.
20:53 முற்றிலும் வித்தியாசமானது. அவற்றுடன் வரையும்போது அந்தஅளவுக்கு நன்றாக இல்லை. ஆனால் spacing ஐ அதிகரித்து opacity ஐ குறைக்கும்போது அது நன்றாக இருக்கும்.
21:07 ஏதேனும் ஒன்றுக்கு சுற்றி ஓரங்கள் வேண்டுமானால் இது நன்றாக இருக்கும்.
21:13 ஆனால் இந்த brushகள் graphical artistகளுக்காக உருவாக்கப்பட்டவை. புகைப்படக்கார்களுக்கு பயனுள்ளதாக இருக்காது.
21:23 ஆனால் அநேகமாய் அவற்றை பயன்படுத்த ஒரு வழியை தேடலாம்.
21:27 brushகள் பற்றி பலவற்றை கூறியுள்ளேன் என நினைக்கிறேன். animated brush ஐ உருவாக்குவது, image hose மற்றும் இந்த colour brushகளை உருவாக்குவது ஆகியவற்றை மற்றொரு சிறிய edition ல் பார்ப்போம்.
21:44 மேலும் தகவல்களுக்கு http://meetthegimp.org க்கு செல்க. கருத்துக்களை info@meetthegimp.org க்கு அனுப்பவும்
21:56 இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Gaurav, Priyacst, Ranjana