GChemPaint/C3/Orbital-Overlap/Tamil
From Script | Spoken-Tutorial
| Time | Narration |
| 00:01 | வணக்கம். ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) ல் ஆர்பிட்டால் மேற்படிவு (Orbital Overlap) குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.. |
| 00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது |
| 00:08 | வெவ்வேறு வகை ஆர்பிட்டால்கள் |
| 00:11 | ஆர்பிட்டால்களை சுழற்றுதல் மற்றும் மறுஅளவாக்குதல் |
| 00:14 | ஆர்பிட்டால் மேற்படிவுகளின் வகைகள் |
| 00:17 | இங்கே நான் பயன்படுத்துவது, உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் பதிப்பு 12.04 |
| 00:21 | ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) பதிப்பு 0.12.10. |
| 00:26 | இந்த டுடோரியலை பின்தொடர, உங்களுக்கு, |
| 00:31 | ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) வேதியியல் அமைப்பு திருத்தி பற்றி தெரிந்திருக்க வேண்டும். |
| 00:34 | இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும். |
| 00:38 | முதலில் அணுவின் ஆர்பிட்டால் என்றால் என்ன என காண்போம். |
| 00:42 | ஒரு அணுவின் ஆர்பிட்டால் என்பது ஒரு கணித செயல்பாடு. |
| 00:46 | இது ஒரு அணுவில் உள்ள ஒரு எலக்ட்ரானின் அலைபோன்ற நடத்தையை விவரிக்கிறது. |
| 00:52 | ஒரு எலக்ட்ரானை கண்டுபிடிப்பதற்கு அதிகப்பட்ச வாய்ப்புள்ள ஒரு இடத்தின் பகுதி ஒரு ஆர்பிட்டால் ஆகும் |
| 00:58 | இது ஒரு's' ஆர்பிட்டால். |
| 01:00 | இது கோள வடிவில் உள்ளது. |
| 01:03 | இங்கே வெவ்வேறு அச்சுக்களில் 'p' ஆர்பிட்டால்கள் உள்ளன. |
| 01:06 | 'p' ஆர்பிட்டால்கள் "இருகோள" வடிவமானவை. |
| 01:09 | அடுத்து, வெவ்வேறு அச்சுக்களில் 'd' ஆர்பிட்டால்கள் உள்ளன. |
| 01:13 | 'd' ஆர்பிட்டால்கள் இரட்டை இருகோள" வடிவமானவை. |
| 01:17 | ஒரு புதிய ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) அப்ளிகேஷனை திறந்துள்ளேன். |
| 01:20 | முதலில் ஆர்பிட்டால்கள் பற்றி கற்போம். |
| 01:24 | Add or modify an atomic orbital tool மீது க்ளிக் செய்க. |
| 01:28 | Orbital property விண்டோ திறக்கிறது. |
| 01:30 | இந்த விண்டோ பின்வரும் புலங்களை கொண்டுள்ளது- Coefficient, Rotation மற்றும் Type. |
| 01:36 | முதலிலி Type உடன் ஆரம்பிக்கிறேன். |
| 01:40 | முன்னிருப்பாக, 's' ஆர்பிட்டால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. |
| 01:42 | p, d xy மற்றும் d z square ஆர்பிட்டால் ரேடியோ பட்டன்கள் மீது க்ளிக் செய்வோம். |
| 01:50 | அருகே ஆர்பிட்டால் வடிவங்கள் காட்டப்படுவதைக் காண்க. |
| 01:54 | அடுத்து Coefficient மற்றும் Rotation propertyகளை காண்போம். |
| 01:59 | Coefficient property -1லிருந்து 1 வரை மதிப்புகளை கொண்டுள்ளது. |
| 02:04 | Coefficient புலத்தின் மதிப்புகள் மூலம், ஆர்பிட்டாலின் அளவை மாற்றலாம். |
| 02:10 | அருகே ஆர்பிட்டாலின் அளவு மாறுவதை கவனிக்கவும். |
| 02:15 | Rotation property -180 லிருந்து 180 வரை மதிப்புகளை கொண்டுள்ளது. |
| 02:20 | ஆர்பிட்டால்களை வலஞ்சுழி அல்லது இடஞ்சுழியாக சுழற்ற முடியும். |
| 02:25 | மேல் அல்லது கீழ்நோக்கு அம்புகள் மூலம் மதிப்புகளை மாற்றலாம். |
| 02:30 | நேர்மறை மேற்படிவுகளின்(Positive overlaps) வெவ்வேறு வகைகளைக் காட்ட ஆர்பிட்டால்களை எவ்வாறு பயன்படுத்துவது என காண்போம். |
| 02:36 | இங்கே வெவ்வேறு ஆர்பிட்டால்களின் நேர்மறை மேற்படிவுகள் (Positive overlap) உள்ளன. |
| 02:40 | 's-s' மேற்படிவு, 's-p' மேற்படிவு, 'p-p' மேற்படிவு மற்றும் 'p-p' பக்கவாட்டு மேற்படிவு. |
| 02:51 | காட்சி பகுதியில் ஹைட்ரஜன் மூலக்கூறை வரைவோம். |
| 02:55 | விசைப்பலகையில் H ஐ அழுத்துக. |
| 02:58 | Co-efficient மதிப்பில் 1 ஐ அமைக்கவும். |
| 03:01 | Add or modify an atom tool மீது க்ளிக் செய்க. |
| 03:04 | Add a bond tool மீது க்ளிக் செய்க. |
| 03:07 | bond length கிட்ட தட்ட 130 உள்ளதா என உறுதிசெய்க. |
| 03:11 | காட்சி பகுதியின் மீது க்ளிக் செய்க. |
| 03:14 | ஹைட்ரஜன் மூலக்கூறு உருவாக்கப்பட்டது. |
| 03:17 | 's-s' முடிவு மேற்படிவு உடன் ஆரம்பிக்கலாம். |
| 03:20 | Add or modify an atomic orbital tool மீது க்ளிக் செய்க. |
| 03:24 | 's' ஆர்பிட்டால் மீது க்ளிக் செய்க, |
| 03:28 | பின் ஹைட்ரஜன் மூலக்கூறின் ஹைட்ரஜன் அணுக்களின் மீது க்ளிக் செய்க. |
| 03:33 | 's-s' முடிவு மேற்படிவை கவனிக்கவும். |
| 03:35 | இப்போது 'p-p' முடிவு மேற்படிவு. |
| 03:38 | விசைப்பலகையில் F ஐ அழுத்துக. |
| 03:42 | Add or modify an atom tool மீது க்ளிக் செய்க. |
| 03:45 | Add a bond tool ஐ க்ளிக் செய்க. |
| 03:49 | bond length கிட்டத்தட்ட 200 ஆ என காண்க. |
| 03:53 | காட்சி பகுதியில் க்ளிக் செய்க. |
| 03:56 | ப்ளூரின் (Fluorine) மூலக்கூறு உருவாக்கப்பட்டது. |
| 03:59 | Add or modify an atomic orbital tool மீது க்ளிக் செய்க. |
| 04:02 | 'p' ஆர்பிட்டால் மீது க்ளிக் செய்க. |
| 04:05 | 'p-p' முடிவு மேற்படிவை உருவாக்க, நமக்கு கிடைமட்டமாக 'p' ஆர்பிட்டால்கள் தேவை. |
| 04:11 | Rotation மதிப்பை 90 ஆக உயர்த்துவோம். |
| 04:15 | 'p' ஆர்பிட்டால் மீது க்ளிக் செய்க. |
| 04:18 | ஒரு ப்ளூரின் (Fluorine) அணு மீது க்ளிக் செய்க. |
| 04:21 | அதேபோல, இந்த செயல்முறையை திரும்பசெய்து 'p' ஆர்பிட்டாலை '-90' க்கு சுழற்றவும். |
| 04:27 | மற்றொரு ப்ளூரின் (Fluorine) அணு மீது க்ளிக் செய்க. |
| 04:30 | ஆர்பிட்டாலை சரியாக பார்க்க முடியவில்லை எனில், ஆர்பிட்டாலின் அளவை மாற்றலாம். |
| 04:36 | அதை செய்ய, Coefficient மதிப்பை மாற்ற வேண்டும். |
| 04:40 | ஆர்பிட்டால் மீது ரைட் க்ளிக் செய்து, Orbital ஐ தேர்ந்தெடுத்து பின் Properties மீது க்ளிக் செய்க. |
| 04:46 | Orbital properties dialog box திறக்கிறது. |
| 04:50 | சரியான மேற்படிவை நீங்கள் காணும்வரை Coefficient மதிப்பை குறைக்கவும். |
| 04:54 | Close பட்டன் மீது க்ளிக் செய்க |
| 04:57 | இதே செயல்முறையை மற்றொரு ஆர்பிட்டாலுக்கும் செய்கிறேன் |
| 05:01 | 'p-p' முடிவு மேற்படிவைக் காண்க. |
| 05:04 | இப்போது 'dz^2' ஆர்பிட்டாலை பயன்படுத்தி 'd-d' முடிவு மேற்படிவைக் காண்போம். |
| 05:09 | காட்சி பகுதிக்கு வந்து விசைப்பலகையில் capital F ஐ அழுத்துக. |
| 05:14 | பட்டியலில் Fe ஐ தேர்ந்தெடுக்கவும். |
| 05:17 | Add or modify an atom tool மீது க்ளிக் செய்க. |
| 05:20 | காட்சி பகுதியில் க்ளிக் செய்க. |
| 05:23 | Add a bond tool மீது க்ளிக் செய்க. |
| 05:26 | ஒரு பிணைப்பை உருவாக்க இரும்பு அணு(Fe) மீது க்ளிக் செய்க. |
| 05:29 | Add or modify an atomic orbital tool மீது க்ளிக் செய்க. |
| 05:32 | 'dz^2' ஆர்பிட்டால் ரேடியோ பட்டன் மீது க்ளிக் செய்க. |
| 05:37 | சரியான மேற்படிவுக்கு, Coefficient மதிப்பை 0.8 ஆக குறைக்கவும். |
| 05:42 | "dz^2" ஆர்பிட்டால்களை மேற்படிவாக்க பிணைக்கப்பட்ட இரும்பு அணுக்களின் மீது க்ளிக் செய்க. |
| 05:49 | 'd-d' முடிவு மேற்படிவைக் காண்க. |
| 05:52 | இப்போது 'p' ஆர்பிட்டால்களின் பக்கவாட்டு மேற்படிவு பற்றி காண்போம். |
| 05:57 | current element ஆக கார்பன் உள்ளதா என உறுதி செய்க. |
| 06:02 | Add a bond tool மீது க்ளிக் செய்க. |
| 06:05 | Bond length கிட்டத்தட்ட 90 ஆ என காண்க. |
| 06:08 | காட்சி பகுதியில் க்ளிக் செய்க. |
| 06:12 | Add or modify an atomic orbital tool மீது க்ளிக் செய்க. |
| 06:16 | Coefficient மதிப்பை ஒன்றாக அதிகரிக்கலாம் |
| 06:20 | 'p' ஆர்பிட்டால் ரேடியோ பட்டன் மீது க்ளிக் செய்க. |
| 06:23 | 'p' ஆர்பிட்டால் கிடைமட்டமாக இருந்தால் அதை செங்குத்தாக சுழற்றவும். |
| 06:29 | பிணைப்பின் விளிம்புகளில் க்ளிக் செய்க. |
| 06:32 | 'p-p' பக்கவாட்டு மேற்படிவைக் காண்க |
| 06:37 | இந்த வகை மேற்படிவில், ஆர்பிட்டால்களின் மடல்களில் ஒரேமாதிரி குறி இருக்கும். |
| 06:43 | அடுத்து, எதிர்மறை மற்றும் பூஜ்ஜிய மேற்படிவுகளுக்கு நகர்த்துவோம். |
| 06:46 | இங்கே எதிர்மறை மேற்படிவுகள் உள்ளன. |
| 06:51 | ஒரு புதிய ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) அப்ளிகேஷனை திறந்துள்ளேன். |
| 06:55 | இப்போது, ஒரு எதிர்மறை மேற்படிவை எவ்வாறு வரைவது என செய்து காட்டுகிறேன். |
| 06:59 | Add a bond tool மீது க்ளிக் செய்க. |
| 07:02 | Bond length கிட்டத்தட்ட 90 ஆ என காண்க. |
| 07:05 | காட்சி பகுதியில் க்ளிக் செய்க. |
| 07:08 | Add or modify an atomic orbital tool மீது க்ளிக் செய்க. |
| 07:12 | 'p' ஆர்பிட்டால் ரேடியோ பட்டன் மீது க்ளிக் செய்து பின் பிணைப்பின் ஒரு விளிம்பில் க்ளிக் செய்க. |
| 07:17 | 'p' ஆர்பிட்டாலை மேற்பக்கமாக கீழ்நோக்கி திருப்ப 180 degree க்கு சுழற்றவும். |
| 07:23 | பின் பிணைப்பின் மற்றொரு விளிம்பில் க்ளிக் செய்க. |
| 07:27 | எதிர்மறை மேற்படிவை கவனிக்கவும். |
| 07:29 | இந்த வகை மேற்படிவில், ஆர்பிட்டால்களின் மடல்களில் வெவ்வேறு குறிகள் இருக்கும். |
| 07:34 | இப்போது, எவ்வாறு ஒரு பூஜ்ஜிய மேற்படிவை உருவாக்குவது என காண்போம். |
| 07:38 | இங்கே பூஜ்ஜிய மேற்படிவு உள்ளது. |
| 07:42 | Add a bond tool மீது க்ளிக் செய்க. |
| 07:45 | காட்சி பகுதியின் மீது க்ளிக் செய்க |
| 07:48 | Add or modify an atomic orbital tool மீது க்ளிக் செய்க. |
| 07:52 | 'p' ஆர்பிட்டால் மீது க்ளிக் செய்க. |
| 07:54 | 'p' ஆர்பிட்டாலை அதன் ஆரம்ப நிலைக்கு சுழற்றவும். |
| 07:59 | பிணைப்பின் ஒரு விளிம்பில் க்ளிக் செய்க. |
| 08:02 | 's' ஆர்பிட்டால் மீது க்ளிக் செய்க |
| 08:05 | பின் பிணைப்பின் மற்றொரு விளிம்பில் க்ளிக் செய்க. |
| 08:09 | பூஜ்ஜிய மேற்படிவை கவனிக்கவும். |
| 08:12 | இந்த வகை மேற்படிவில், ஆர்பிட்டால்களின் நோக்குநிலை ஒரேமாதிரி இல்லை. |
| 08:17 | சுருங்கசொல்ல. |
| 08:20 | இந்த டுடோரியலில் நாம் கற்றது வெவ்வேறு வகை ஆர்பிட்டால்கள் |
| 08:24 | முடிவு மற்றும் பக்கவாட்டு மேற்படிவுகள் |
| 08:27 | ஆர்பிட்டால்களை சுழற்றுதல் மற்றும் மறுஅளவாக்குதல் |
| 08:30 | நேர்மறை, எதிர்மறை மற்றும் பூஜ்ஜிய மேற்படிவு. |
| 08:34 | இப்போது பயிற்சி. |
| 08:36 | ஹைட்ரஜன் க்ளோரைட் (Hydrogen chloride)(H-Cl) மூலக்கூறுடன் 's-p' முடிவு மேற்படிவை வரைக |
| 08:40 | 'dxy-dxy' ஆர்பிட்டால்களின் பக்கவாட்டு மேற்படிவை வரைக |
| 08:44 | மற்ற எதிர்மறை மற்றும் பூஜ்ஜிய மேற்படிவுகளை வரைக. |
| 08:48 | குறிப்பு: சரியான மேற்படிவிற்காக ஆர்பிட்டால்களை சுழற்றுக மற்றும் மறுஅளவாக்குக. |
| 08:56 | செய்துமுடிக்கப்பட்ட பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும். |
| 09:00 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial |
| 09:04 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
| 09:07 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
| 09:12 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
| 09:16 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
| 09:20 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
| 09:27 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
| 09:31 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
| 09:37 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro |
| 09:43 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |