GChemPaint/C3/Charts-in-GChemTable/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம். ஜிகெம்டேபுள் (GChemTable) ல் Chartகள் குறித்த டுடோரிலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது,
00:09 Elemental Chartகள் மற்றும்
00:11 Custom Chartகளை எவ்வாறு உருவாக்குவது.
00:15 இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது
00:18 உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் பதிப்பு 12.04.
00:21 ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) பதிப்பு 0.12.10. மற்றும்
00:25 ஜிகெம்டேபுள் (GChemTable) பதிப்பு 0.12.10.
00:31 இந்த டுடோரியலை தொடர உங்களுக்கு
00:35 தனிமங்களின் ஆவர்த்தண அட்டவணை மற்றும்
00:37 ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
00:40 அதற்கான ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும்.
00:44 ஒரு புதிய GChemTable விண்டோவை திறக்கவும்.
00:49 Dash Home ல் க்ளிக் செய்க.
00:51 தோன்றும் search bar ல் டைப் செய்க “gchemtable”.
00:55 Periodic table of the elements ஐகான் மீது க்ளிக் செய்க.
01:00 View menu மீது க்ளிக் செய்து, Element Chart ஐ தேர்ந்தெடுக்கவும்.
01:05 தேர்வுகளின் பட்டியலைக் காட்டும் ஒரு துணை menu திறக்கிறது .
01:10 Electro-negativity மீது க்ளிக் செய்க.
01:13 Pauling Electro-negativity க்கு எதிராகAtomic number(Z) ஐ கொண்ட ஒரு chart காட்டப்படுகிறது.
01:18 இந்த chartல், அதிகபட்ச Electro-negativity மதிப்பு '4'.
01:23 இந்த Electro-negativity chart ஐ மூடுகிறேன்.
01:26 அதேபோல, View menu ல் Element chart ல் வெவ்வேறு chartகள் உள்ளன,
01:32 Melting Temperature chart ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
01:35 Melting point க்கு எதிராக Atomic number(Z) ஐ கொண்ட chart காட்டப்படுகிறது.
01:41 இந்த chartல், கார்பன் அதிகபட்ச உருகுநிலையைக் கொண்டுள்ளது.
01:46 Melting point chartஐ மூடுகிறேன்.
01:50 இப்போது, "Custom" chart ஐ எவ்வாறு உருவாக்குவது என கற்போம்.
01:54 View க்கு சென்று, Element Chart ஐ தேர்ந்தெடுத்து Custom மீது க்ளிக் செய்க.
02:01 Customize Chart விண்டோ மற்றும் GChemTable Graph விண்டோ திரையில் தோன்றுகின்றன.
02:07 Customize Chart விண்டோ, Graph hierarchy tree ஐ இடப்பக்கமும்
02:11 Graph preview ஐ வலப்பக்கமும் கொண்டுள்ளது.
02:13 நடப்பு வரைப்பட கூறுகள் மற்றும் அவற்றின் படிநிலையை Graph hierarchy tree காட்டுகிறது.
02:20 பலகத்தில் (panel) கொடுக்கப்பட்டுள்ள பட்டன்கள் மூலம் படிநிலையை மாற்ற முடியும்.
02:25 வரைப்படத்தில் மாற்றங்களின் அளவுத்திட்ட பதிப்பை Graph preview காட்டுகிறது.
02:32 Graph hierarchy tree ல், Graph மற்றும் Chart1 ஐ காணலாம்.
02:36 முன்னிருப்பாக, Graph தேர்ந்தெடுக்கப்படுகிறது.
02:39 இப்போது கீழே உள்ள பலகத்திற்கு (panel) செல்வோம்.
02:42 இங்கே, இரு tabகள் உள்ளன: Style மற்றும் Theme.
02:46 முன்னிருப்பாக, Style tab தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
02:51 இங்கே இரு தலைப்புகள் உள்ளன: Outline மற்றும் Fill.
02:55 Outline பின்வரும் 3 கீழிறங்கு பட்டியல்களை கொண்டுள்ளது,
02:59 Style, Color மற்றும் Size.
03:04 இந்த கீழிறங்கு பட்டியல்கள் வரைப்படத்தின் வெளிக்கோட்டு பண்புகளை மாற்ற உதவுகின்றன.
03:09 Style கீழிறங்கு பட்டியலை க்ளிக் செய்து ஏதேனும் ஒரு கோட்டின் பாங்கை தேர்ந்தெடுக்கவும்.
03:15 உதாரணமாக- நான் நீண்ட கோட்டை (Long dash) தேர்ந்தெடுக்கிறேன்.
03:20 கிடைக்கும் அனைத்து நிறங்களையும் காண Color கீழிறங்கு அம்பு மீது க்ளிக் செய்க.
03:25 பச்சை நிறத்தை தேர்ந்தெடுக்கிறேன்.
03:28 "Size" கீழ்மேல் அம்புகளை க்ளிக் செய்து அளவை மூன்று point களாக அதிகரிக்கவும்.
03:34 அனைத்து மாற்றங்களையும் Graph preview area ல் காணலாம்.
03:38 அடுத்து Fill ஐ காண்போம்.
03:41 Fill க்கு கீழே, Type கீழிறங்கு பட்டனைக் காணலாம்.
03:45 Type கீழீறங்கு பட்டன் மீது க்ளிக் செய்து Pattern ஐ தேர்ந்தெடுக்கவும்.
03:50 Pattern ன் காரணிகள் கீழே தோன்றுகின்றன.
03:52 அவை Pattern, Foreground மற்றும் Background
03:58 ஒவ்வொரு காரணியும் தேர்வுகளை தேர்ந்தெடுக்க ஒரு கீழிறங்கு பட்டியலைக் கொண்டுள்ளன.
04:03 விருப்பமான pattern ஐ தேர்ந்தெடுக்க Pattern கீழிறங்கு பட்டியல் மீது க்ளிக் செய்க,.
04:08 'ஆரஞ்ச்' நிறத்தை தேர்ந்தெடுக்க Foreground கீழிறங்கு பட்டியல் மீது க்ளிக் செய்க.
04:13 கருப்பு நிறத்தை தேர்ந்தெடுக்க Background கீழிறங்கு பட்டியல் மீது க்ளிக் செய்க.
04:18 அனைத்து மாற்றங்களையும் Graph preview areaல் கவனிக்கவும்.
04:22 Theme tab தேர்வுகளை நீங்களே ஆராய்ந்தறியவும்.
04:27 இப்போது Graph hierarchy tree Chart1 ஐ தேர்ந்தெடுக்கவும்.
04:31 Add பட்டன் மீது க்ளிக் செய்க.
04:34 தேர்வு பட்டியலில் இருந்து Title to Chart1 ஐ தேர்ந்தெடுக்கவும்.
04:39 கீழே tabகளின் ஒரு புதிய தொகுப்பு தோன்றுகிறது.
04:42 முன்னிருப்பாக, Data tab தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
04:46 Text புலத்தில் chartன் தலைப்பை டைப் செய்க.
04:49 Atomic mass – Fusion Temperature என டைப் செய்கிறேன்.
04:55 Font tab மீது க்ளிக் செய்க.
04:58 இங்கே Font type, Font style, font Size மற்றும் font Color ஐ மாற்றலாம்.
05:05 font size ஐ 14 ஆக அதிகரித்து font color ஐ 'அரக்காக' மாற்றுகிறேன்.
05:13 Text tab மீது க்ளிக் செய்க.
05:15 இங்கே உரையின் Orientation ஐ மாற்றலாம்.
05:19 இதை இரு வழிகளில் செய்யலாம்-
05:21 1. ஒன்று முன்தோற்ற பக்கத்தில் நேரடியாக க்ளிக் செய்வதன் மூலம்...
05:24 2. இரண்டு Angle புலத்தில் கீழ்மேல் அம்புகளை பயன்படுத்தி மாற்றுவதன் மூலம்.
05:31 Position tab மீது க்ளிக் செய்க.
05:34 முன்னிருப்பு மதிப்புகளை அவை இருப்பது போன்றே விட்டுவிடுகிறேன்.
05:38 Graph hierarchy tree ல் திரும்ப வந்து Chart1 மீது க்ளிக் செய்க
05:43 பலகத்தில் கீழே, மூன்று tabகள் உள்ளன,
05:46 Style, Position மற்றும் Plot area காணப்படுகின்றன..
05:50 முன்னிருப்பாக Style tab தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
05:54 Fill க்கு செல்வோம்.
05:56 Type கீழிறங்கு பட்டியலில், Unicolor gradient ஐ தேர்ந்தெடுக்கவும்.
06:01 Direction கீழிறங்கு பட்டியலை தேர்ந்தெடுத்து
06:04 விருப்பமான ஒரு திசையைத் தேர்ந்தெடுக்கவும்.
06:08 End கீழிறங்கு பட்டியலை தேர்ந்தெடுத்து விருப்பமான நிறத்தை தேர்ந்தெடுக்கவும்.
06:14 gradient ன் பிரகாசத்தை அதிகரிக்க “Brightness” ஸ்லைடரை இழுக்கவும்.
06:19 Position மற்றும் Plot area tabகளில் உள்ள தேர்வுகளை நீங்களே ஆராயவும்.
06:25 இப்போது Add பட்டன் மீது க்ளிக் செய்க.
06:28 Plot to Chart1 ஐ தேரந்தெடுக்கவும்.
06:31 பலவகை chartகளுடன் ஒரு துணை menu திறக்ககிறது அவை,
06:34 XY, Bubble, ColoredXY மற்றும் DropBar.
06:40 ஒவ்வொரு வகை Chart உம் வெவ்வேறு துணை chart தேர்வுகளைக் கொண்டுள்ளன.
06:45 XY மற்றும் XY Lines chart தேர்வை க்ளிக் செய்வோம்.
06:51 கீழே tabகளின் ஒரு புதிய தொகுப்பு திறக்கிறது. முன்னிருப்பாக, Style tab தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
06:58 Interpolation க்கு சென்று
07:00 Type கீழ்மேல் அம்புமீது க்ளிக் செய்து “Bezier cubic spline” ஐ தேர்ந்தெடுக்கவும்
07:07 Fill க்கு செல்வோம். Type ல் “Bicolor gradient” ஐ தேர்ந்தெடுக்கவும்
07:12 Data tab மீது க்ளிக் செய்க.
07:15 chart ன் பெயரை, Atomic mass Vs Fusion temperature என டைப் செய்க.
07:20 X: X அச்சுக்கு Atomic mass ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
07:25 Y: Y அச்சுக்கு Fusion temperature ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
07:30 Markers tab மீது க்ளிக் செய்க.
07:33 chart ல் புள்ளிகளை குறியிட 'Markers' பயன்படுகின்றன.
07:37 Marker தலைப்பிற்கு கீழே
07:40 Shape, Fill, Outline மற்றும் Size உள்ளன.
07:44 Shape ஐ circle என தேர்ந்தெடுப்போம்.
07:48 Fill நிறத்தில் 'brown' ஐ தேர்ந்தெடுப்போம்
07:51 மற்றவற்றை முன்னிருப்பாகவே விடுவோம்.
07:54 இப்போது Apply பட்டன் மீது க்ளிக் செய்க.
07:57 தேவையான chart GChemTable Graph விண்டோவில் காட்டப்படுகிறது.
08:03 இப்போது இந்த chart ஐ ஒரு படமாக சேமிப்போம்.
08:06 முதலில் GChemTable Graph விண்டோ மீது க்ளிக் செய்க.
08:11 File ஐ தேர்ந்தெடுத்து Save As Image தேர்வு மீது க்ளிக் செய்க.
08:14 Save As Image dialog box திறக்கிறது.
08:18 File typePS document ஆக தேர்ந்தெடுக்கவும்.
08:22 விருப்பமான file பெயரை டைப் செய்க.
08:24 “my-custom-chart” என டைப் செய்கிறேன்.
08:27 என் file ஐ சேமிக்கும் இடமாக Desktop ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
08:32 Save பட்டன் மீது க்ளிக் செய்க
08:35 இங்கே நான் சேமித்த ஆவணம் உள்ளது.
08:38 அந்த file மீது ரைட்-க்ளிக் செய்து
08:40 Open with Document Viewer தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
08:44 இங்கே என் வரைப்படம் உள்ளது.
08:48 சுருங்க சொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது-
08:51 Elemental Chart களான 1. Electronegativity
08:53 2. Melting Point மற்றும்
08:55 Custom Chartகளை எவ்வாறு உருவாக்குவது.
08:58 இங்கே உங்களுக்கான பயிற்சி.
09:01 ஆராய்க 1. வெவ்வேறு Element chartகள் 2. மற்ற XY chart வகைகள்
09:05 3. "Bubble", "ColoredXY" மற்றும் "DropBar" chart வகைகள் மற்றும்
09:10 4. chartகளை "SVG" மற்றும் "PDF" file formatகளில் சேமித்தல்.
09:16 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
09:20 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
09:23 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
09:28 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
09:33 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
09:36 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
09:44 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
09:48 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:55 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro]
10:01 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst