GChemPaint/C2/Basic-operations/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration
|
---|---|
00:02 | வணக்கம். ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) ல் அடிப்படை செயல்பாடுகள் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது |
00:11 | ஏற்கனவே இருக்கும் ஒரு file ஐ திறத்தல் |
00:14 | உரையை சேர்த்தல் மற்றும் திருத்துதல் |
00:17 | objectகளை தேர்ந்தெடுத்தல், நகர்த்துதல், திருப்புதல் மற்றும் சுழற்றுதல் |
00:21 | object களை குழு அமைத்தல் மற்றும் ஒழுங்கமைத்தல் |
00:25 | objectகளை வெட்டுதல், பிரதியெடுத்தல், ஒட்டுதல் மற்றும் நீக்குதல். |
00:30 | இங்கே நான் பயன்படுத்துவது, |
00:32 | உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் பதிப்பு 12.04. |
00:36 | ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) பதிப்பு 0.12.10. |
00:42 | இந்த டுடோரியலை பின்தொடர, உங்களுக்கு, |
00:48 | ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) வேதியியல் அமைப்பு திருத்தி பற்றி தெரிந்திருக்க வேண்டும். |
00:52 | இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும். |
00:58 | ஒரு புதிய ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) அப்ளிகேஷனை திறக்க, |
01:01 | Dash home ல் க்ளிக் செய்க |
01:04 | தோன்றும் Search bar ல் டைப் செய்க GChemPaint. |
01:08 | GChemPaint ஐகான் மீது க்ளிக் செய்க. |
01:12 | ஏற்கனவே உள்ள ஒரு file ஐ திறப்பதில் டுடோரியலை ஆரம்பிக்கலாம். |
01:16 | File menu மீது க்ளிக் செய்க, |
01:20 | Open ஐ தேர்ந்தெடுத்து அதன் மீது க்ளிக் செய்க. |
01:24 | fileகள் மற்றும் folderகளை கொண்ட ஒரு விண்டோ திறக்கிறது. |
01:29 | இதிலிருந்து, “propane” என்ற file ஐ தேர்ந்தெடுக்கவும். |
01:32 | file ஐ திறக்க Open மீது க்ளிக் செய்க. |
01:36 | (propane) ப்ரோபேன் அமைப்புக்கு கீழே சில உரைகளை சேர்ப்போம். |
01:42 | toolbox லிருந்து “Add or modify a text”tool ஐ தேர்ந்தெடுக்கவும். |
01:47 | Text tool Property page திறக்கிறது. |
01:50 | Property page பின்வரும் புலங்களைக் கொண்டுள்ளது - Family, Style, Size, Underline, மற்றும் சில. |
02:02 | font பெயர்களின் ஒரு பட்டியலை Family கொண்டுள்ளது. |
02:06 | பட்டியலில் கீழே வருவோம். |
02:11 | Family ல் இருந்து Arial Black ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
02:15 | (propane) ப்ரோபேன் அமைப்பிற்கு கீழே உள்ள காட்சி பகுதியின் மீது க்ளிக் செய்க. |
02:20 | பச்சைப் பெட்டியினுள் ஒரு சிமிட்டும் கர்சரைக் காணலாம். |
02:25 | “Propane” என சேர்மத்தின் பெயரை டைப் செய்வோம். |
02:32 | இப்போது Style ஐ Bold Italic என மாற்றுவோம். |
02:35 | “Propane” உரையைத் தேர்ந்தெடுத்து Bold Italic மீது க்ளிக் செய்க. |
02:42 | fontஅளவை 16 ஆக அதிகரிக்கிறேன். |
02:46 | கீழே 16 க்கு வந்து, |
02:48 | அதன் மீது க்ளிக் செய்க. |
02:50 | உரையின் மாற்றத்தைக் கவனிக்கவும். |
02:53 | அடுத்து, Underline அம்சத்தை பயன்படுத்துவோம். |
02:57 | இதன் கீழிறங்கும் பட்டியலில் உள்ள தேர்வுகள்- |
03:00 | None, Single, |
03:02 | Double மற்றும் Low. |
03:05 | Single ஐ தேர்ந்தெடுப்போம். |
03:09 | உரையின் நிறத்தை மாற்றுவோம். |
03:12 | உரையின் முன்னிருப்பு நிறம் “கருப்பு”. |
03:16 | color புலத்தின் கீழ்நோக்கு அம்புக்குறியை க்ளிக் செய்க. |
03:20 | இங்கே பல்வேறு நிறங்களைக் காணலாம். |
03:24 | “ஊதாவை” தேர்ந்தெடுக்கிறேன். |
03:28 | உரையின் நிலையையும் நாம் மாற்றலாம். |
03:32 | -100 லிருந்து 100 வரை Position புலம் கொண்டுள்ளது. |
03:37 | எவ்வாறு உரை மாறுகிறது என காண்போம். |
03:40 | உரையைத் தேர்ந்தெடுக்கவும். |
03:44 | மேல் அம்பு முக்கோணத்தை மவுஸால் க்ளிக் செய்க. |
03:48 | உரை மேல்நோக்கி நகருகிறது. |
03:50 | அதேபோல கீழ் அம்பு முக்கோணத்தை க்ளிக் செய்தால், உரை கீழ்நோக்கி நகருகிறது. |
03:59 | உரையை சாதாரண நிலைக்கு கொண்டுவருவோம். |
04:02 | position புலத்தில் 0 ஐ டைப் செய்க. |
04:05 | பின் காட்சி பகுதியில் க்ளிக் செய்க |
04:09 | இங்கே உங்களுக்கான பயிற்சி. |
04:12 | முதல் டுடோரியலின் பயிற்சியை திறக்கவும். |
04:15 | அமைப்புகளுக்கு n-hexane மற்றும் n-octane என Label செய்க. |
04:19 | font பெயர், font அளவு, underline மற்றும் உரையின் நிறத்தை மாற்றுக. |
04:26 | உங்களின் பயிற்சியின் முடிவு பார்க்க இவ்வாறு இருக்க வேண்டும். |
04:31 | இப்போது objectகளை தேர்ந்தெடுக்கவும் நகர்த்தவும் கற்போம். |
04:35 | “Tool box” ல் இருந்து “Select one or more objects” toolஐ தேர்ந்தெடுக்கவும். |
04:42 | “pentane” மீது க்ளிக் செய்க. |
04:44 | mouse பட்டனை விடாமல், அதை வேறு நிலைக்கு இழுக்கவும். |
04:49 | இப்போது, mouse ஐ விடுவிக்கவும். |
04:52 | அடுத்து ஒரு object ஐ சுழற்றுவோம். |
04:55 | object ஐ சுழற்ற, “Select one or more objects” tool மீது க்ளிக் செய்க. |
05:01 | properties பக்கம் பின்வரும் toolகளை கொண்டுள்ளது, |
05:05 | Flip the selection horizontally, |
05:08 | Flip the selection vertically |
05:10 | Rotate the selection. |
05:13 | இந்த toolகளை பயன்படுத்த, Pentane மீது க்ளிக் செய்க. |
05:17 | Rotate the selection தேர்வை தேர்ந்தெடுக்கவும். |
05:22 | காட்சி பகுதிக்கு சென்று அந்த object மீது mouse ஐ வைக்கவும். |
05:28 | வலஞ்சுழி மற்றும் இடஞ்சுழி திசைகளில் mouse ஐ நகர்த்தவும். |
05:34 | object ன் சுழற்சியை கவனிக்கவும். |
05:39 | இப்போது அந்த object ஐ திருப்ப கற்போம். |
05:42 | Pentane அமைப்பை கிடைமட்டமாக திருப்புவோம். |
05:47 | அமைப்பை கிடைமட்டமாக திருப்ப Flip the selection horizontally tool மீது க்ளிக் செய்க. |
05:55 | டுடோரியலை இங்கே இடைநிறுத்தி தேர்ந்தெடுப்பதை நீங்களே செங்குத்தாக திருப்பி பார்க்கவும். |
06:03 | இப்போது objectகளை குழு அமைப்போம் மற்றும் ஒழுங்கமைப்போம் |
06:06 | objectகளை குழு அமைக்க, அனைத்து objectகளையும் தேர்ந்தெடுக்கவும். |
06:09 | அதற்கு, Edit menuக்கு சென்று, Select All மீது க்ளிக் செய்க. |
06:15 | அல்லது CTRL மற்றும் A விசைகளை ஒருசேர அழுத்தலாம். |
06:20 | ஏதேனும் ஒரு objectன் மீது ரைட்-க்ளிக் செய்க. |
06:24 | context menu திறக்கிறது. |
06:26 | Group and/or align objects தேர்வை தேர்ந்தெடுக்கவும் |
06:31 | ஒரு dialog box திறக்கிறது. |
06:33 | Group பெட்டியின் மீது குறியிடுக. |
06:36 | Align மற்றும் Space evenly தேர்வுகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், அவற்றை குறிநீக்கவும். |
06:42 | OK பட்டன் மீது க்ளிக் செய்க. |
06:45 | objectகள் ஒன்றாக குழுவமைப்பட்டிருப்பதைக் காண்கிறோம். |
06:51 | இப்போது objectகளை ஒழுங்கமைப்போம். |
06:54 | அனைத்து objectகளையும் தேர்ந்தெடுக்க CTRL+A ஐ அழுத்துக. |
06:58 | ஏதேனும் ஒரு object மீது ரைட்-க்ளிக் செய்க. |
07:01 | context menu திறக்கிறது. |
07:04 | Group properties தேர்வை தேர்ந்தெடுக்கவும். |
07:09 | Align பெட்டியின் மீது குறியிடுக. |
07:12 | Align தேர்வு ஒரு கீழிறங்கு பட்டியலைக் கொண்டுள்ளது. |
07:17 | objectகளை ஒழுங்கமைக்க இது சில தேர்வுகளைக் கொண்டுள்ளது. |
07:22 | நான் “Left” ஐ தேர்ந்தெடுக்கிறேன் |
07:25 | OK பட்டன் மீது க்ளிக் செய்க. |
07:29 | மாற்றங்களை கவனிக்கவும். |
07:32 | டுடோரியலை இங்கே இடைநிறுத்தி மற்ற align தேர்வுகளை கொண்டு object களை ஒழுங்கமைத்து பார்க்கவும். |
07:41 | இப்போது cut-வெட்டுதல், copy-பிரதியெடுத்தல் மற்றும் paste-ஒட்டுதல் தேர்வுகளை பயன்படுத்த கற்போம். |
07:47 | Edit menu ற்கு செல்க. |
07:49 | இது அடிப்படை Edit தேர்வுகளான Cut, Copy, Paste மற்றும் Clear போன்றவற்றை கொண்டுள்ளது |
07:57 | இந்த தேர்வுகளுக்கான பொதுவான சுருக்குவழி விசைகள் |
08:00 | வெட்டுவதற்கு CTRL+X |
08:02 | பிரதியெடுக்க CTRL+C |
08:05 | ஒட்டுவதற்கு CTRL+V. இவை ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) லும் அதேபோல வேலை செய்யும் |
08:10 | “Select one or more objects” tool ஐ பயன்படுத்தி ஒன்று அல்லது அதற்குமேற்பட்ட Objectகளை தேர்ந்தெடுக்கவும். |
08:16 | object மீது க்ளிக் செய்க. |
08:18 | வெட்ட CTRL+X ஐ அழுத்துக. |
08:22 | காட்சி பகுதியில் வேறு இடத்தில் object ஐ ஒட்ட CTRL+V ஐ அழுத்துக. |
08:29 | நாம் object ஐ வெட்டும்போது, அது அதன் இடத்திலிருந்து நீக்கப்படுகிறது என்பதை கவனிக்கவும். |
08:35 | அடுத்து, காட்சி பகுதியில் வேறு இடத்தில் object ஐ பிரதி எடுத்து ஒட்டுவோம். |
08:42 | object மீது க்ளிக் செய்து, பிரதி எடுக்க CTRL+C' ஐ அழுத்தி பின் ஒட்ட CTRL+V ஐ அழுத்துக. |
08:50 | நாம் object ஐ பிரதி எடுக்கும்போது, அது அதன் இடத்திலிருந்து நீக்கப்படவில்லை என்பதை கவனிக்கவும். |
08:58 | காட்சி பகுதியை துடைக்க, அனைத்து objectகளைம் தேர்ந்தெடுக்கவும். |
09:02 | அனைத்து Objectகளையும் தேர்ந்தெடுக்க CTRL+ A ஐ அழுத்துக. |
09:06 | Edit menu க்கு சென்று, |
09:08 | Clear மீது க்ளிக் செய்க. |
09:11 | நம் ஆரம்ப அமைப்புக்கு செல்ல, Edit menu க்கு சென்று |
09:16 | Undo மீது க்ளிக் செய்க. |
09:19 | அல்லது CTRL+Z ஐ அழுத்துக. |
09:23 | விசைப்பலகையில் Delete விசையை பயன்படுத்தி ஒரு object ஐ நீக்க, அந்த object ஐ தேர்ந்தெடுத்து. |
09:29 | விசைப்பலகையில் Delete விசையை அழுத்தவும் |
09:33 | ஒரு அமைப்பின் ஒரு பகுதியை மட்டும் நீக்க Eraser tool ஐ பயன்படுத்த கற்போம். |
09:39 | toolbox ல் இருந்து Eraser tool ஐ தேர்ந்தெடுக்கவும் . |
09:43 | ஏதேனும் ஒரு அமைப்பின் பக்கதில் mouse ஐ வைக்கவும். |
09:48 | அமைப்பின் பகுதி சிவப்பு நிறமாக மாறுகிறது. |
09:53 | அந்த அமைப்பின் அந்த சிவப்பு நிற பகுதியை நீக்க அதன் மீது க்ளிக் செய்க. |
09:59 | இப்போது நம் ஆரம்ப அமைப்பை பெற மாற்றங்களை Undo செய்வோம். |
10:08 | இப்போது file ஐ சேமிப்போம். |
10:11 | toolbar ல் Save the current file பட்டனை க்ளிக் செய்க. |
10:16 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
10:22 | சுருங்க சொல்ல. |
10:24 | இந்த டுடோரியலில், நாம் கற்றவை எவ்வாறு |
10:27 | ஏற்கனவே இருக்கும் ஒரு file ஐ திறப்பது |
10:29 | காட்சி பகுதியில் ஒரு உரையை சேர்ப்பது மற்றும் மற்றும் திருத்துவது |
10:33 | objectகளை தேர்ந்தெடுப்பது, நகர்த்துவது, திருப்புவது மற்றும் சுழற்றுவது |
10:36 | Objectகளை குழு அமைப்பது மற்றும் ஒழுங்கமைப்பது |
10:39 | objectகளை வெட்டுவது, பிரதி எடுப்பது, ஒட்டுவது மற்றும் நீக்குவது. |
10:44 | பயிற்சியாக, Eraser tool ஐ பயன்படுத்தி |
10:48 | என்-ஆக்டேன் (n-octane) அமைப்பை என்-பென்டேன் (n-pentane) ஆகவும் |
10:52 | என்-ஹெக்சேன் (n-hexane) அமைப்பை ஈத்தேன் (Ethane) ஆகவும் மாற்றவும். |
10:56 | பயிற்சியின் வெளியீடு பார்க்க இவ்வாறு இருக்க வேண்டும். |
11:00 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
11:04 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
11:08 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
11:13 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
11:18 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
11:21 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
11:28 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
11:32 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11:39 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
11:46 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |