FreeCAD/C3/Isometric-Drawing/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
0:00 | Isometric Drawing பற்றிய டுட்டோரியலுக்கு நல்வரவு. |
0:06 | இந்த டுட்டோரியலில் நாம் கற்க போவது, |
0:09 | Isometric view வை தேர்ந்தெடுத்தல். |
0:12 | ஒரு cube வரைதல் |
0:14 | ஒரு cylinder வரைதல் |
0:16 | box selection பற்றி |
0:19 | ஒரு cone வரைதல் |
0:21 | பாகங்களை group செய்தல் |
0:23 | Fileகளை, பல்வேறு formatகளில் export செய்தல். |
0:28 | இந்த டுட்டோரியலை பதிவு செய்ய, நான் Windows 11 OS மற்றும் FreeCAD பதிப்பு 0.21.1ஐ பயன்படுத்துகிறேன். |
0:38 | இந்த டுடோரியலை கற்க, |
0:41 | நீங்கள் FreeCAD இடைமுகத்தை அறிந்திருக்க வேண்டும். |
0:46 | முன்தேவையான பயிற்சிகளுக்கு, இந்த தளத்தைப் பார்வையிடவும். |
0:51 | FreeCAD ஐ திறக்கவும். |
0:53 | புதிய வரைபடத்தைத் தொடங்க, Create new மீது கிளிக் செய்யவும். |
01:01 | View வில் கிளிக் செய்து, பின் Standard Viewவை தேர்ந்தெடுக்கவும். |
01:05 | Menuவிலிருந்து Axonometricஐ தேர்ந்தெடுத்து, பின் Isometricஐ தேர்ந்தெடுக்கவும். |
01:15 | Canvasல் gizmo ஆனது isometricக்கு மாறுவதை கவனிக்கவும். |
01:18 | மேலே உள்ள Auto ஐகான் மீது கிளிக் செய்யவும். |
01:22 | இந்த toolஆனது தற்போதைய working planeஐ தேர்ந்தெடுப்பதற்காக உள்ளது. |
01:27 | இடது பேனலில் ஏற்படும் மாற்றங்களை கவனிக்கவும். |
01:31 | Top (XY) மீது கிளிக் செய்யவும். |
01:35 | Isometric வரைபடத்திற்கு, working plane ஆனது XY plane ஆக இருக்க வேண்டும். |
01:41 | Isometric view என்பது, 3 அச்சுகளுடன் சீரமைக்கப்பட்ட, 3D objectன் 2D பிரதிநிதித்துவமாகும். |
01:50 | ஒரு cubeஐ வரைவோம் |
01:52 | ஒரு செவ்வகத்தை வரைந்து அதை தேர்ந்தெடுக்கவும். |
01:56 | இடது பேனலில் உள்ள Property tabக்கு செல்லவும். |
02:01 | Display modeஐ wireframeக்கு மாற்றுங்கள் . |
02:05 | height மற்றும் lengthற்கான formக்கு கீழே செல்லவும். |
02:09 | இதை 30 x 30 mm அளவு கொண்ட சதுரமாக ஆக்குகிறேன். |
02:17 | snap end மற்றும் snap ortho toolகள் இயக்கத்தில் இருக்க வேண்டும். |
02:23 | சதுரத்தின் ஒரு ஓரத்தில் இருந்து ஒரு வரியை, சிறிய தூரத்திற்கு வரையவும். |
02:29 | இந்த வரியை தேர்ந்தெடுத்து, அதன் அளவை முன்பு போல 30 மிமி அளவிற்கு மாற்றவும். |
02:36 | Cubeல் ஏற்கனவே உள்ள faceல் இருந்து, மேல் faceஐ உருவாக்குவோம். |
02:42 | முதலில், சதுரத்தின் அளவை கொண்ட செவ்வகத்தை தேர்ந்தெடுக்கவும். |
02:48 | Move tool மீது கிளிக் செய்யவும். |
02;50 | Copy பெட்டியின் மீது கிளிக் செய்யுங்கள். |
02:54 | செவ்வகத்தின் முனைகளில் ஒன்றைக் கிளிக் செய்து, பிடித்து மேல்நோக்கி இழுக்கவும். |
03:01 | வெள்ளைப் புள்ளி தெரியும் போது, இதை line objectன் முடிவில் வைக்கவும். |
03:08 | அதன் நிலையை அமைக்க கிளிக் செய்யுங்கள். |
03:12 | edgeகளை இணைப்பதன் மூலம், cubeன் மீதமுள்ள edgeகளை உருவாக்கவும். |
03:19 | line tool மீது கிளிக் செய்யவும். |
03:22 | மேல் faceன் ஓரங்களில் கிளிக் செய்யவும். |
03:26 | பின்னர் faceன் கீழ் ஓரத்தை நகர்த்தி, வரியை ஓரத்தில் ஒட்டவும். |
03:35 | வெள்ளை நிற புள்ளி தெரியும் போது, கிளிக் செய்து வரியை அமைக்கவும். |
03:40 | அடுத்து, ஒரு cylinderஐ வரைவோம். |
03:44 | Circle tool மீது கிளிக் செய்து, கேன்வாஸில் ஒரு வட்டத்தை வரையவும். |
03:50 | வட்டத்தைத் தேர்ந்தெடுத்து, இடது பேனலில் Filledற்கான பெட்டியைத் தேர்வுநீக்கம் செய்யவும். |
03:57 | radiusஐ 30 மிமீ என டைப் செய்து, Enter keyயை அழுத்தவும். |
04:04 | Isometric viewல் வட்டம் ஒரு ellipseஆக தெரிவதை கவனியுங்கள். |
04:11 | snap center மற்றும் snap ortho toolகள் இயக்க பட்டுருக்க வேண்டும். |
04:18 | மீண்டும் line tool மீது கிளிக் செய்யவும். |
04:21 | வட்டத்தின் மையத்திலிருந்து, ஒரு கோட்டை மேல்நோக்கி வரையவும். |
04:27 | data panelலில் உள்ள property tabல், கீழே length formக்கு செல்லவும். |
04:34 | cylinderன் lengthல் 90 என டைப் செய்து Enter keyஐ அழுத்துங்கள். |
04:41 | Object style பிரிவில் உள்ள Draw styleக்கு செல்லவும். |
04:46 | menuவில் இருந்து line typeஐ, dashdotக்கு மாற்றவும். |
04:51 | இப்பொழுது வட்டத்தை தேர்வு செய்து, move tool மீது கிளிக் செய்யவும். |
04:57 | copy பெட்டியில் கிளிக் செய்யுங்கள். |
05:00 | வட்டத்தின் மீது கிளிக் செய்து, பிடித்து இழுத்து மேலே வைக்கவும். |
05:06 | cylinderன் மேல் faceன் நிலையை அமைக்க கிளிக் செய்யவும். |
05:12 | இங்கே snap toolன் வெள்ளை நிற புள்ளியை கவனியுங்கள். |
05:19 | அடுத்து, snap angle toolஐ இயக்கவும். |
05:23 | line toolஐ தேர்வு செய்யுங்கள். |
05:26 | cylinderன் மேல் faceலிருந்து கீழ் face வரை ஒரு வரியை வரையவும். |
05:32 | சிலிண்டரின் 2 ப்ரொஜெக்டர்களை உருவாக்க இதைச் செய்யவும். |
05:38 | திரையில் உங்களுக்கு போதுமான இடம் இல்லாமல் இருக்கலாம். |
05:43 | கர்சரை கேன்வாஸில் வைத்து, scroll wheelஐ பயன்படுத்தி கேன்வாஸில் பேன் செய்யவும். |
05:51 | அடுத்து ஒரு cone வரைவோம். |
05:54 | Edit மீது கிளிக் செய்து, box selectionஐ தேர்ந்தெடுக்கவும். |
05:57 |
கர்சரை கேன்வாஸுக்கு நகர்த்தி, சிறிய தேர்வுப் பெட்டியைக் கவனிக்கவும்.
|
06:03 | mouseல் இடது கிளிக் செய்து பிடித்து, சிலிண்டரின் அனைத்து பகுதிகளையும் தேர்ந்தெடுங்கள். . |
06:10 | இடது பேனலிலும் கேன்வாஸிலும், 5 பாகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதை கவனிக்கவும். |
06:19 | move tool மீது கிளிக் செய்து, Copy பெட்டியில் கிளிக் செய்யவும். |
06:24 | கேன்வாஸில், பாககங்களின் நகலை மொத்தமாக இழுக்கவும். |
06:31 | மேல் face மற்றும் 2 பக்க ப்ரொஜெக்டர் வரிகளை தேர்ந்தெடுத்து நீக்கவும். |
06:38 | snap angle toolஐ இயக்கவும். |
06:42 | line tool மீது கிளிக் செய்யுங்கள். |
06:44 | 90 மிமீ வரியின் மேல் இருந்து, வட்டத்திற்கு ஒரு ப்ரொஜெக்டர் வரியை வரையவும். |
06:52 | இதை மீண்டும் செய்து, ஒரு ப்ரொஜெக்டர் வரியைச் மறுபுறம் சேர்க்கவும். |
06:59 | அடுத்து, ellipseஐ வரைவோம். |
07:02 | ellipse tool மீது கிளிக் செய்யவும். |
07:04 | கர்சரை கேன்வாஸுக்கு நகர்த்தி, பிடித்து இழுக்கவும். |
07:09 | இப்பொழுது ellipseஆனது ஒரு செவ்வகத்தை போல் நமக்கு தெரியலாம். |
07:14 | இடது பேனலில், டெல்டா x(Dx) மற்றும் டெல்டா y(Dy)க்கான மதிப்புகளை மாற்றவும். |
07:22 | டெல்டா x(Dx)க்கான formல் 50ஐ டைப் செய்யுங்கள், டேப் கீயை அழுத்தி டெல்டா y(Dy)க்கு 60ஐ டைப் செய்யுங்கள். |
07:32 | Enter keyஐ அழுத்தவும். |
07:33 | டெல்டா z(Dz)க்கான மதிப்பு தென்படுகிறது. |
07:37 | டெல்டா z(Dz) ஐ அப்படியே 0 மிமீல் விட்டுவிட்டு, Enter keyஐ அழுத்தவும். |
07:45 | திரையில் தெரியும் ellipseஐ கவனியுங்கள். |
07:48 | coneஇன் பாகங்களை box selection செய்யவும் |
07:53 | coneஇன் அனைத்து பாகங்களையும் தேர்ந்தெடுக்கிறேன். |
08:00 | இடது பேனலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பல objectகளை நோக்கி கர்சரை நகர்த்தவும். |
08:07 | அவற்றில் வலது கிளிக் செய்து context menu வை திறந்து, பின் utilitiesஐ தேர்வு செய்யவும். |
08:13 | Add a named groupஐ தேர்வு செய்யவும். |
08:17 | Dialog பெட்டி திறக்கிறது. |
08:21 | Add group dialog பெட்டி தெரிகிறது. |
08:25 | இதில் cone என்ற புதிய பெயரை டைப் செய்கிறேன். |
08:29 | cone என்ற பெயர் கொண்ட ஒரு புதிய group தெரிகிறது. |
08:33 | coneன் மீது கிளிக் செய்து திறந்து, அதன் கீழ் உள்ள தேர்தெடுக்கப்பட்ட அனைத்து objectகளையும் கவனிக்கவும். |
08:40 | அடுத்து, நமது வரைபடங்களை பயனருக்கு ஏற்ற formatல் export செய்ய கற்போம். |
08:47 | முதலில் export செய்ய வேண்டிய objectகளை தேர்வு செய்யவும். |
08:51 | நான், box selectionஐ பயன்படுத்தி, cylinderஐ தேர்வு செய்கிறேன். |
08:56 | File, பின் Exportன் மீது கிளிக் செய்யவும். ஒரு dialog பெட்டி திறக்கிறது. |
09:01 | fileன் typeஐ முதலில் தேர்வு செய்யவும். |
09:04 | அதன் மீது கிளிக் செய்யவும். |
09:06 | பல தேர்வுகள் இருப்பதை கவனிக்கவும். |
09:09 | amf மற்றும் 3mf additive manufacturing formatகளை குறிக்கிறது. |
09:16 | Autodesk DWG 2D format ஆனது autocad formatல் export செய்கிறது. |
09:25 | Image மற்றும் pdf போன்ற formatகளும் பயனர்களின் தேர்வுக்காக உள்ளன. |
09:33 | உங்களுக்கு ஏற்ப, fileன் பெயர் மற்றும் அதன் இடத்தை தேர்வு செய்து, export மீது கிளிக் செய்யவும். |
09:40 | விடியோவை இடைநிறுத்தி, உங்களின் தேர்விற்கேற்ப export செய்து பழகுங்கள். |
09:46 | இப்போதைக்கு, நான் cancel மீது கிளிக் செய்கிறேன். |
09:49 | உங்கள் வேலையை save செய்து FreeCADலிருந்து வெளியேறவும். |
09:54 | நாம் கற்றவற்றை பார்ப்போம். |
09:55 | இந்த டுட்டோரியலில் நாம் கற்றது |
09:58 | Isometric view பற்றி கற்றோம். |
10:00 | ஒரு cube |
10:02 | cylinder மற்றும் cone வரைத்தோம். |
10:04 | box selection பற்றி கற்றோம் |
10:07 | objectகளை group செய்து மற்றும் அதற்கான புதிய பெயரை வழங்கினோம். |
10:12 | பயிற்சியாக, பின்வருவனவற்றை செய்யவும். |
10:15 | இங்கே உள்ளது போல ஒரு blenderஐ வரையவும். |
10:20 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. |
10:24 | இதை நீங்கள் தரவிறக்கி காணவும். |
10:27 | ஸ்போக்கன் டுடோரியல் திட்டம், |
10:29 | செய்முறை வகுப்புகள் நடத்தி, |
10:31 | சான்றிதழ்களை வழங்குகிறது. |
10:33 | மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
10:35 | உங்களின் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும். |
10:39 | ஸ்போகன் டுடோரியல் திட்டம், இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் நிறுவப்பட்டது. |
10:48 | இந்த டுட்டோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்து ஆர்த்தி. நன்றி. |