FreeCAD/C3/Industrial-Drawing/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
0:00 | Industrial Drawing பற்றிய ஸ்போக்கன் டுட்டோரியலுக்கு நல்வரவு. |
0:05 | இந்த டுட்டோரியலில் நாம் கற்க போவது, |
0:07 | Flange coupling componentஐ வரைதல் |
0:10 | வரைபடத்தை, Draft workbenchலிருந்து TechDraw workbenchஆக மாற்றுதல். |
0:15 | Dimensionகள் மற்றும் tolerance மதிப்புகளை annotate செய்தல். |
0:19 | இந்த டுட்டோரியலை பதிவு செய்ய, Windows 11 OS மற்றும் FreeCAD பதிப்பு 0.21.2ஐ பயன்படுத்துகிறேன். |
0:28 | இந்த டுடோரியலை கற்க, |
0:29 | FreeCAD இடைமுகத்தை அறிந்திருக்க வேண்டும். |
0:33 | முன்தேவையான பயிற்சிகளுக்கு, இந்த தளத்தைப் பார்வையிடவும். |
0:37 | Industrial drawing ஒரு வரைகலை மொழி ஆகும். |
0:41 | இது, ஒரு objectன் dimension,tolerance மற்றும் geometry ஆகியவற்றின் தகவல்களை வழங்குகிறது. |
0:48 | Flange Coupling. |
0:49 | இது இரண்டு குழாய்கள் அல்லது பைப்புகளை ஒன்றாக இணைக்கும் ஒரு சாதனமாகும். |
0:55 | இது ஒரு குழாயிலிருந்து மற்றொன்றுக்கு சக்தி அல்லது பொருளின் ஓட்டத்தை செலுத்துகிறது. |
01:02 | இப்பொழுது நாம், இந்த industrial drawingஐ வரைவோம். |
01:05 | FreeCAD ஐ திறப்போம். |
01:08 | File மீது கிளிக் செய்து Newவை தேர்ந்தெடுக்கவும். |
01:11 | Draft workbenchஐ தேர்ந்தெடுத்துள்ளேன். |
01:14 | Gizmoவை பயன்படுத்தி Top view மற்றும் Orthographic viewவை தேர்ந்தெடுக்கவும். |
01:19 | Snap Center point மற்றும் Snap Endpoint toolகள் இயக்கப்பட்டிருக்க வேண்டும். |
01:26 | Tool barலிருந்து Circle toolஐ தேர்வு செய்யவும். |
01;30 | Combo Viewல் Continue தேர்வு பெட்டியில் கிளிக் செய்யுங்கள். |
01:34 | Filled தேர்வு பெட்டியை தேர்வு நீக்கம் செய்யவும். |
01:38 | 50 மிமி radius கொண்ட ஒரு வட்டத்தை வரைவோம். |
01:43 | அதே மையத்தைப் பயன்படுத்தி செறிவு வட்டங்களை வரைவோம். |
01:48 | கர்சரை சுற்றளவு மீது வைக்கவும். |
01:51 | இது மஞ்சள் நிறத்தில் உள்ளது, மற்றும் வெள்ளை நிற மைய புள்ளி தெரிகிறது. |
01:57 | radiusஐ பார்க்க, சுற்றளவு மீது கிளிக் செய்து இழுக்கவும். |
02:02 | Radiusல், அதன் மதிப்பை 43 மிமி ஆக மாற்றுங்கள் . |
02:07 | இப்பொழுது, 28.8 மிமி அளவு கொண்ட மூன்றாவது வட்டத்தை வரைவோம். |
02:13 | அதே மையப் புள்ளியைப் பயன்படுத்தி, தொடர்ந்து வட்டங்களைத் வரைகிறேன். |
02:18 | இந்த வட்டங்களின் தனித்தனியான radiusன் அளவு 22.3 மிமி |
02:25 | 21 மிமி |
02:29 | 18 மிமி |
02:33 | மற்றும் 10 மிமி ஆகும். |
02:36 | Combo Viewவில் உள்ள Close button மீது கிளிக் செய்யவும். |
02:40 | இப்போது வட்டத்தின் மையத்திலிருந்து வெளிப்புற வட்டத்திற்கு ஒரு கோடு வரைகிறேன். |
02:45 | Line tool மீது கிளிக் செய்யுங்கள். |
02:47 | இதை செய்ய, Snap Endpoint toolஐ இயக்கவும். |
02:53 | Combo Viewவில் உள்ள Close button மீது கிளிக் செய்யவும். |
02:58 | Line toolஐ தேர்ந்தெடுங்கள். |
03:00 | Draft snap toolbarல், Array dropdownல் உள்ள, Polar Array மீது கிளிக் செய்யவும். |
03:05 | Combo Viewவில் Polar Array menu திறக்கிறது. |
03:11 | Number of elementsல் 4ஐ தேர்ந்தெடுக்கவும். |
03:13 | வட்டத்தின் மையத்தை காண, சுற்றளவில் கிளிக் செய்யவும். |
03:19 | இப்போது நான்கு கோடுகள், வட்டங்களை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதைக் காண்கிறோம். |
03:24 | அவற்றைத் தேர்ந்தெடுக்க, Ctrl keyயை அழுத்தி, கோடுகளில் இடது கிளிக் செய்யவும். |
03:29 | Property tabல், draw styleஐ Solidலிருந்து Dashdotக்கு மாற்றுங்கள். |
03:35 | கோடுகள், solid வடிவத்திலிருந்து dashdot வடிவத்திற்கு மாறுவதைக் கவனிக்கவும். |
03:40 | கோடு மற்றும் இரண்டாவது வட்டத்தின் குறுக்குவெட்டில், 4 மிமீ radius கொண்ட ஒரு வட்டத்தை வரைவோம். |
03:47 | Radius fieldல், அதன் மதிப்பை 4 மிமி ஆக மாற்றவும். |
03:52 | Circle toolஐ மூட, Close button மீது கிளிக் செய்யுங்கள். |
03:56 | வரைந்த வட்டத்தின் மீது கிளிக் செய்யவும். |
03:58 | Toolbarல் உள்ள Polar array மீது கிளிக் செய்யுங்கள். |
04:01 | Number of elementsஐ 8ஆக மாற்றவும். |
04:04 | மையத்தை உறுதிப்படுத்த, இந்த வட்டத்தின் சுற்றளவு மீது கிளிக் செய்யவும். |
04:09 | மையப் புள்ளியில் இருந்து, 45 டிகிரி இடைவெளியில், எட்டு வட்டங்கள் வரையப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். |
04:14 | வரைபடத்தின் வட்டங்களைத் தேர்ந்தெடுப்போம். |
04:18 | Ctrl keyயை அழுத்திப் பிடித்து, அனைத்து வட்டங்களையும் ஒவ்வொன்றாகக் கிளிக் செய்யவும். |
04:24 | Property tabல் Angular deflection ஐ 28லிருந்து 1 டிகிரிக்கு மாற்றவும். |
04:30 | Deviationஐ 0.5லிருந்து 0.1க்கு மாற்றவும். |
04:35 | மாற்றங்களை ஏற்படுத்த Enterஐ அழுத்துங்கள். |
04:38 | வரைபடத்தில் சரியான வட்டத்தைப் பெற இது செய்யப்படுகிறது. |
04:42 | இப்பொழுது fileஐ save செய்யவும். |
04:45 | உங்களுக்கு ஏற்ற இடத்தில் fileஐ save செய்யவும். |
04:49 | Fileன் பெயரை Industrial drawing என டைப் செய்து Save button மீது கிளிக் செய்யுங்கள். |
04:55 | இப்பொழுது, workbenchஐ Draftலிருந்து TechDrawவுக்கு மாற்றுவோம். |
05:00 | Toolbarல் உள்ள Insert Page using Template tool மீது கிளிக் செய்யவும். |
05:05 | Select a Template File பக்கம் திறக்கிறது. |
05:09 | இந்த பக்கத்தில், உங்கள் விருப்பத்திற்கேற்ப, வரைபடத்தின் templateகளை நீங்கள் தேர்வு செய்யலாம். |
05:14 | தேர்ந்தெடுத்த templateஐ திறக்க Open button மீது கிளிக் செய்யவும். |
05:17 | வலது கீழ் ஓரத்தில், ஒரு tableஐ நீங்கள் பார்க்கலாம். |
05:22 | இந்த tableலில் ஒரு பச்சை நிற மாற்றக்கூடிய text பகுதியை கவனிக்கவும். |
05:28 | இந்த பகுதியில், இரண்டு முறை கிளிக் செய்து விவரங்களை மாற்றலாம். |
05:32 | இங்கே Designed by name என்பதை Spokentutorial என மாற்றுகிறேன். |
05:37 | பக்கத்தின் கீழே, page என்ற புதிய tab திறக்கிறது. |
05:42 | இயல்புநிலை பக்கத்தை உள்ளிட, Insert default Page icon மீது கிளிக் செய்யவும். |
05:48 | இப்பொழுது வரைபடத்திற்கு திரும்புவோம். |
05:52 | draft componentகளை திறக்க Ctrl மற்றும் A களை அழுத்தவும். |
05:57 | Toolbarல் உள்ள Insert projection Group icon மீது கிளிக் செய்யுங்கள். |
06:01 | இந்த tool தெரியவில்லை என்றால், toolbarஐ இழுத்து அனைத்து toolகளும் தெரியும்படி செய்யவும். |
06:07 | Page Chooser பக்கம் திறக்கிறது. |
06:10 | சரியான பக்கத்தை தேர்ந்தெடுத்து, OK button மீது கிளிக் செய்யவும். |
06:14 | சில சமயம், Page Chooser பக்கம் திறக்காது. |
06:18 | பக்கத்தில், வரைபடம் தானாக வருகிறது. |
06;22 | Combo Viewவில், Projection Group menu திறக்கிறது. |
06:26 | projection typeஐ First angle அல்லது Third angleஆக மாற்றலாம். |
06:31 | மாற்றங்கள் தெரிய, OK button மீது கிளிக் செய்யவும். |
06:34 | வரைபடத்தை சரியான இடத்தில் நிலை நிறுத்த, பிடித்து இழுக்கவும். |
06:39 | வரைபடத்தை லேபிள் செய்ய, புதிய toolகள் இருப்பதை கவனி . |
06:44 | இப்பொழுது, வெளி வட்டத்தின், diameterஐ பார்ப்போம். |
06:48 | வெளி வட்டத்தின், சுற்றளவு மீது கிளிக் செய்யவும். |
06:51 | வெளி வட்டத்தின், diameterஐ குறிக்க Insert Diameter Dimension tool மீது கிளிக் செய்யுங்கள். |
06:58 | இங்கே diameterஆனது 100 மிமி ஆக தெரிகிறது. |
07:02 | கோடு மற்றும் அதன் மதிப்பு தெளிவாக தெரிய, phi value மீது கிளிக் செய்து இழுக்கவும். |
07:07 | Combo Viewவில், dialog பெட்டி தெரிய, phi value மீது இரண்டு முறை கிளிக் செய்யவும். |
07:13 | tolerance மதிப்பை அதிபட்ச அளவு மற்றும் குறைந்தபட்ச அளவை நீங்கள் மாற்றலாம். |
07:18 | Overtolerance மதிப்பை +/ -0.05 mm ஆக மாற்றவும். |
07:25 | Equal Tolernace தேர்வு பெட்டியை தேர்வு நீக்கம் செய்யவும். |
07:28 | அம்பு குறிகளை திருப்ப FilpArrowheads தேர்வு பெட்டியில் கிளிக் செய்யுங்கள். |
07:33 | OK button மீது கிளிக் செய்யவும். |
07:35 | இப்பொழுது அடுத்த வட்டத்திற்கு, இதை மீண்டும் செய்யவும். |
07:40 | diameterஐ கண்டுபிடித்து அதன், Overtolerance மதிப்பை மாற்றவும். |
07:48 | OK button மீது கிளிக் செய்யுங்கள். |
07:51 | சிறிய வட்டத்தை தேர்ந்தெடுத்து, பின் Insert Balloon Annotation toolஐ தேர்ந்தெடுக்கவும். |
07:57 | பலூனை இருமுறை கிளிக் செய்து, அதன் பண்புகளை மாற்றலாம். |
08:02 | Combo Viewவில், Balloon dialog பெட்டி திறக்கிறது. |
08:06 | Bubble Shape fieldல் ஒரு சிறிய வட்டம் இருப்பதை கவனிக்கவும். |
08:11 | நீங்கள் bubble shapeஐ rectangleஆக மாற்றலாம். |
08:15 | இப்பொழுது textஐ 8X Dia 8 என மாற்றவும். |
08:19 | இது, 8 மிமி diameter கொண்ட, ஒரே மாதிரியான 8 வட்டங்கள் இருப்பதை குறிக்கிறது. |
08:25 | வெளி வட்டத்திற்கு, மற்றொரு balloonஐ வரையவும். |
08:28 | balloonஐ தேர்ந்தெடுங்கள். |
08:30 | menu barல் TechDrawவுக்கு செல்லவும். |
08:33 | இதில் Extensions: Attributes/Modificationsஐ தேர்ந்தெடுக்கவும். |
08:39 | submenuவிலிருந்து, Select Customize Format Labelஐ தேர்வு செய்யவும். |
08:44 | Combo viewவில் Customize Format dialog பெட்டி தோன்றும். |
08:49 | Radius and Diameter tabலிருந்து, diameter symbolஐ தேர்ந்தெடுக்கவும். |
08:54 | format fieldல் diameterஐ 0.14 ஆக டைப் செய்யுங்கள். |
09:00 | Modifiers tabலிருந்து, Mஐ தேர்வு செய்யவும். |
09:04 | keyboardஐ பயன்படுத்தி vertical barஐ டைப் செய்யவும். |
09:08 | Modifiers tabலிருந்து, A மற்றும் Cஐ தேர்வு செய்யவும். |
09:12 | மற்றொரு vertical barஐ டைப் செய்து, இறுதியாக Mஐ தேர்வு செய்யவும். |
09:17 | மாற்றங்களை உறுதி செய்ய, மேலே உள்ள dialog பெட்டியில், OK button மீது கிளிக் செய்யவும். |
09:23 | bubble shapeஐ rectangleஆக மாற்றலாம். |
09:29 | surface finish செய்ய வேண்டிய இடத்தை கிளிக் செய்து, surface finish மதிப்பை சேர்க்கலாம். |
09:35 | surface finish செய்ய வேண்டிய இடத்தை கிளிக் செய்யுங்கள். |
09:38 | Create a surface finish symbol ஐ தேர்ந்தெடுக்கவும் |
09:42 | Surface Finish Symbols dialog பெட்டி Combo View வில் திறக்கிறது. |
09:47 | சரியான symbolஐ தேர்ந்தெடுத்து, dropdownலிருந்து சராசரியான roughness மதிப்பை தேர்ந்தெடுக்கவும். |
09:53 | பின்னர், மேலே உள்ள OK button மீது கிளிக் செய்யுங்கள். |
09:59 | நாம் செய்தவற்றை save செய்யவும். |
10:02 | இத்துடன் இந்த டுட்டோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
10:04 | நாம் கற்றவற்றை பார்ப்போம். |
10:07 | இந்த டுட்டோரியலில், நாம் |
10:09 | Flange coupling componentஐ வரைந்தோம். |
10:12 | வரைபடத்தை Draft workbenchலிருந்து TechDraw workbenchக்கு மாற்றினோம். |
10:16 | dimension மற்றும் tolerance மதிப்புகளை annotate செய்தோம். |
10:21 | பயிற்சியாக, பின் வருவனவற்றை செய்யவும். |
10:25 | dimensioning toolகள் |
10:28 | Balloon insertion tool மற்றும் Toleranceகளை பயிற்சி செய்யவும். |
10:32 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. |
10:37 | இதை நீங்கள் தரவிறக்கி காணவும். |
10:40 | ஸ்போக்கன் டுடோரியல் திட்டம், செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்களை வழங்குகிறது. |
10:44 | மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
10:48 | உங்களின் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும். |
10:52 | ஸ்போகன் டுடோரியல் திட்டம், இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் நிறுவப்பட்டது. |
10:58 | இந்த டுட்டோரியலை உருவாக்கியது K.சக்திவேல் மற்றும் மாதுரி கணபதி. |
11:02 | இந்த டுட்டோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்து ஆர்த்தி. நன்றி. |