FreeCAD/C3/Eye-end-part-of-Knuckle-Joint/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
0:01 Eye end part of Knuckle Joint பற்றிய ஸ்போக்கன் டுட்டோரியலுக்கு நல்வரவு.
0:17 இந்த டுட்டோரியலில் நாம் கற்க போவது,
0:10 Sketcher toolsகளை வைத்து, Knuckle jointன் eye end partஐ வரைதல்.
0:15 இந்த டுட்டோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது,
0:18 Windows 11 OS மற்றும்
0:20 FreeCAD பதிப்பு 0.21.2 ஐ பயன்படுத்துகிறேன்.
0:25 இந்த டுடோரியலை கற்க,
0:27 நீங்கள் FreeCAD இடைமுகத்தை அறிந்திருக்க வேண்டும்.
0:30 முன்தேவையான பயிற்சிகளுக்கு, இந்த தளத்தைப் பார்வையிடவும்.
0:35 Eye end part of Knuckle Joint என்பது மையப்படுத்த அல்லது சுழற்ற தேவையான பாகங்களை சேர்க்க உதவுகிறது.
0:41 FreeCADஐ திறப்போம்.
0:44 ஒரு புதிய fileஐ திறக்கிறேன்.
0:47 PartDesign workbench தேர்ந்தெடுத்துள்ளேன்.
0:50 ஒரு புதிய Bodyஐ உருவாக்குவோம்.
0:53 ஒரு புதிய Sketchஐ உருவாக்க Create sketchஐ தேர்ந்தெடுக்கவும்.
0:59 XY-planeஐ தேர்ந்தெடுத்து OK மீது கிளிக் செய்யுங்கள்.
01:03 workbenchஆனது Sketcher workbenchக்கு மாறுகிறது.
01:07 Toolbarலிருந்து Create circle toolஐ தேர்ந்தெடுக்கிறேன்.
01:11 கர்சரை planeன் மையத்தில் வைத்து, இரண்டு செறிவு வட்டங்களை வரையவும்.
01:18 Constrain radiustool ஐப் பயன்படுத்தி வட்டங்களின் radiusஐ அமைப்போம்.
01:24 பெரிய வட்டத்தின் radiusஐ 25 மிமீக்கு மாற்றுவோம்.
01:30 இதேபோல் சிறிய வட்டத்தின் radiusஐ 12.5 மிமீ ஆக மாற்றவும்.
01:36 Create polylinetoolஐ தேர்ந்தெடுங்கள்.
01:40 Polyline tool, கோடுகளை தொடர்ந்து வரைய அனுமதிக்கிறது.
01:44 கர்சரை வெளிப்புற வட்டத்தின் இடது பக்கத்தில் வைக்கவும்.
01:49 கிடைமட்ட கோட்டை வரைய, கர்சரை இடதுபுறமாக இழுக்கவும்.
01:53 இடது கிளிக் செய்து வரியை முடிக்கயுங்கள்.
01:56 செங்குத்து கோட்டை வரைய, கர்சரை செங்குத்தாக கீழ்நோக்கி இழுக்கவும்.
02:01 அதை முடிக்க இடது கிளிக் செய்யுங்கள்.
02:04 அதை வட்டத்துடன் இணைக்க, வலதுபுறத்தில் ஒரு கிடைமட்ட கோட்டை வரையவும்.
02:09 மேல் கிடைமட்ட கோட்டின் நீளத்தை 80 மிமீ ஆக்குங்கள்.
02:14 கோட்டின் மீது கிளிக் செய்து, Constrain horizontal distancetool மீது கிளிக் செய்யவும்.
02:19 lengthஐ 80 மிமீ ஆக மாற்றுங்கள்.
02:23 இரண்டு கிடைமட்ட கோடுகளையும் தேர்ந்தெடுத்து, Constrain equaltoolஐ தேர்வு செய்யுங்கள்.
02:29 சம அளவிலான இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வரைபடங்களை உருவாக்க Constrain equaltool பயன்படுகிறது.
02:36 இப்போது செங்குத்து கோட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
02:38 Constrain vertical distancetool ஐ பயன்படுத்தி அதன் lengthஐ 30 மிமீ ஆக அமைக்கவும்.
02:44 இப்போது Trim edge toolஐ தேர்வு செய்யவும்.
02:49 Trim edge tool ஆனது இரண்டு வெட்டுப்புள்ளிகளுக்கு இடையே ஒரு கோடு அல்லது வளைவை நீக்க பயன்படுகிறது.
02:54 கிடைமட்ட கோடுகளுக்கு இடையில் இருக்கும் வெளிப்புற வட்டத்தின் வளைவை trim செய்ய, அதை தேர்ந்தெடுக்கவும்.
03:01 Combo viewவில் Closeல் கிளிக் செய்யுங்கள்.
03:04 Gizmoவை பயன்படுத்தி, top viewவை தேர்வு செய்யவும்.
03:09 Model tab க்குச் சென்று Sketchஐ தேர்வு செய்யுங்கள்.
03:13 Tool barலிருந்து Padtoolஐ தேர்வு செய்யவும்.
03:17 Combo Viewவில், Pad Parameters கீழே lengthஐ 30 மிமீ ஆக மாற்றவும்.
03:24 Symmetric to plane பெட்டியை தேர்வு செய்யுங்கள்.
03:27 OK buttonல் கிளிக் செய்யவும்
03:31 இப்போது வரைபடத்தை சுழற்றுவோம்.
03:34 componentன் மையத்தில் கர்சரை வைக்கவும்.
03:37 நடு மவுஸ் பட்டனை அழுத்திப் பிடிக்கவும்.
03:40 வலது கிளிக் செய்து கர்சரை வலது பக்கம் இழுக்கவும்.
03:44 Toolbarலிருந்து, Create a datum plane ஐ தேர்வு செய்யுங்கள்.
03:48 componentsகளை வரைவதற்கான, புதிய planeஐ உருவாக்க இது பயன்படுகிறது.
03:53 இப்போது சதுரத்தின் பின் பக்கத்தை தேர்ந்தெடுக்கவும், அதை ஒரு குறிப்பாக அமைக்கவும்.
03:58 பின், Combo viewவில் OK மீது கிளிக் செய்யுங்கள்.
04:02 componentன் அடிப்பகுதியில் ஒரு plane தோன்றுவதை காணலாம்.
04:06 Model tabலிருந்து datum plane ஐ தேர்வு செய்யுங்கள்.
04:10 Create sketchஐ தேர்வு செய்யவும்.
04:13 Create regular polygon toolற்கு அருகே உள்ள அம்புக்குறியை தேர்வு செய்யவும்.
04:18 இது வெவ்வேறு polygonகளை வரைய பயன்படுகிறது.
04:21 பின், Octagon ஐ தேர்வு செய்யுங்கள்.
04:24 இப்போது கர்சரை planeன் நடுவில் வைக்கவும்.
04:28 மாதிரி வரைபடத்தைப் பார்க்க இடது கிளிக் செய்து இழுக்கவும்.
04:33 octagonஐ பக்கங்களை பின்னே இருக்கும் சதுரத்திற்கு இணையாக அமைக்க சரி செய்யவும்.
04:37 octagon ஐ முடிக்க மீண்டும் இடது கிளிக் செய்யவும்.
04:41 octagon னின் இடது பக்க கோட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
04:44 toolbarலிருந்து, Constrain verticallytool ஐ தேர்வு செய்யுங்கள்.
04:48 இது பக்கத்தை செங்குத்தாக ஆக்குகிறது.
04:51 octagon னின் இடது பக்கக் கோட்டையும் planeன் நடுப்புள்ளியையும் தேர்ந்தெடுக்கவும்.
04:57 toolbarலிருந்து, Constrain distancetool ஐ தேர்வு செய்யுங்கள்.
05:01 Insert length பெட்டியில், நீளத்தை 15 மிமீ என டைப் செய்து, OK வில் கிளிக் செய்யவும்.
05:07 octagon சரியாக அமைந்திருப்பதைக் கவனிக்கவும்.
05:11 Combo view வில் Closeல் கிளிக் செய்யவும்.
05:14 Sketch தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் அதை தேர்ந்தெடுக்கவும்.
05:18 Tool barலிருந்து, Pad tool ஐ தேர்வு செய்யுங்கள்.
05:22 lengthஐ 40 மிமீ என டைப் செய்து, OK வில் கிளிக் செய்யவும்.
05:27 Combo Viewவில், datum planeஐ தேர்வு செய்து, Space barஐ அழுத்தவும்.
05:32 இது planeஐ மறைக்கிறது.
05:34 componentஐ தேர்வு செய்யுங்கள்
05:37 Property tabல் Dataவிற்கு செல்லவும்.
05:41 Part Designக்கு கீழ், Refine மதிப்பை True விற்கு மாற்றுங்கள்.
05:46 இப்போது component ஐ தேர்வுநீக்க, வெற்று இடத்தில் எங்கேனும் கிளிக் செய்யவும்.
05:51 Tool barலிருந்து, Create a datum plane ஐ தேர்வு செய்யுங்கள்.
05:56 octagonன் அடிபக்கத்தை தேர்வு செய்து, OKவில் கிளிக் செய்யவும்.
06:01 Modeltabலிருந்து, datum plane ஐ தேர்வு செய்யுங்கள்.
06:06 இப்பொழுது, Create sketch தேர்வு செய்யவும்.
06:10 Tool barலிருந்து, Create circletool ஐ தேர்வு செய்யுங்கள்.
06:14 Planeன் நடுவில் இருந்து ஒரு வட்டத்தை வரையவும்.
06:18 Constrain radiustool ஐப் பயன்படுத்தி, radiusஐ 12.5 மிமீ என அமைப்போம்.
06:25 பிறகு Combo view இல் Close மீது கிளிக் செய்யவும்.
06:30 இப்பொழுது sketchஐ தேர்வு செய்யுங்கள்.
06:33 Tool barலிருந்து, Pad tool ஐ தேர்வு செய்யவும்.
06:37 Combo view வில், நீளத்தை 25 மிமீ என டைப் செய்து, OK வில் கிளிக் செய்யவும்.
06:43 Combo Viewவில், datum planeஐ தேர்வு செய்து, அதை மறைக்க Space barஐ அழுத்தவும்.
06:47 இப்போது component ஐ தேர்வுநீக்க, வெற்று இடத்தில் எங்கேனும் கிளிக் செய்யவும்.
06:55 Tool barலிருந்து, Create fillet tool ஐ தேர்வு செய்யுங்கள்.
07:00 வளையத்திற்கும் செவ்வகத்திற்கும் இடையில் வெட்டும் கோட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
07:04 மறுபுறமும் அதை செய்யவும்.
07:06 Combo viewவில், Fillet parametersல், இரண்டு edgeகள் தெரிகின்றன.
07:12 Radiusஐ 24 மிமீ ஆக மாற்றவும்,
07:17 OKவில் கிளிக் செய்யுங்கள்.
07:19 மீண்டும் tool barலிருந்து, Create fillet tool ஐ தேர்வு செய்யுங்கள்.
07:23 ஒரு சதுரத்திற்குள் ஒரு octagonஐ வரையும்போது, ​​நான்கு முக்கோண edgeகள் உருவாகின்றன.
07:29 இவற்றை நாம் மெண்மையாக்க வேண்டும்.
07:31 வரைபடத்தை சுழற்றி, அனைத்து முக்கோண edgeகளையும் தேர்ந்தெடுக்கவும்.
07:38 Combo Viewவில், Fillet Parameters பக்கம் திறக்கிறது.
07:42 Previewவில், தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு edgeகளும் தெரிகின்றன.
07:46 Radius fieldல், Radiusஐ 3 மிமீ என டைப் செய்து, OKவில் கிளிக் செய்யவும்.
07:53 component தயாராக இருப்பதைக் காணலாம்.
07:56 இப்போது fileஐ பொருத்தமான பெயரில் save செய்வோம்.
08:03 இத்துடன், இந்த டுட்டோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
08:07 நாம் கற்றவற்றை பார்ப்போம்.
08:09 இந்த டுட்டோரியலில் நாம் கற்றது,
08:12 Sketcher toolsகளை வைத்து, Knuckle jointன் eye end partஐ வரைதல்.
08:17 பயிற்சியாக,
08:19 இங்கே தெரிவது போல், ஒரு joint pinஐ வரையவும்.
08:23 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. 
08:28 இதை நீங்கள் தரவிறக்கி காணவும்.
08:30 ஸ்போக்கன் டுடோரியல் திட்டம், செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்களை வழங்குகிறது.
08:35 மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
08:37 உங்களின் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்.
08:41 ஸ்போகன் டுடோரியல் திட்டம், இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் நிறுவப்பட்டது.
08:47 இந்த டுட்டோரியலை உருவாக்கியது Dr. சத்ய நாராயணன் மற்றும் K.சக்திவேல்
08:52 இந்த டுட்டோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்து ஆர்த்தி. நன்றி.

Contributors and Content Editors

Arthi