FreeCAD/C2/Modifications-and-Dimensioning/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
0:00 | Modifications and Dimensioning பற்றிய tutorialக்கு நல்வரவு. |
0:06 | இந்த டுட்டோரியலில், நாம் கற்க போவது, |
0:09 | பல கோடுகளை உருவாக்குதல் |
0:12 | ஒரு வரியை பிரித்தல் |
0:14 | கோடுகளின் குறுக்குவெட்டுகளைச் சேர்க்கும்போது, snap toolsகளைப் பயன்படுத்துதல் |
0:19 | Fillet மற்றும் chamferஐ சேர்த்தல் |
0:23 | ஒரு கோண பரிமாணத்தை அளவிடுதல் |
0:27 | Leader lineஐ சேர்த்தல் |
0:30 | இந்த டுட்டோரியலை பதிவு செய்ய, நான் Windows 11 OS மற்றும் FreeCAD பதிப்பு 0.21.1ஐ பயன்படுத்துகிறேன். |
0:42 | இந்த டுடோரியலை கற்க, |
0:43 | நீங்கள் FreeCAD இடைமுகத்தை அறிந்திருக்க வேண்டும். |
0:48 | முன்தேவையான பயிற்சிகளுக்கு, இந்த தளத்தைப் பார்வையிடவும். |
0:53 | FreeCADஐ திறக்கவும். |
0:56 | ஒரு புதிய fileஐ தொடங்க, Create New மீது கிளிக் செய்யவும். |
01:00 | Draft workbenchக்கு செல்லவும் |
01:03 | Orthographic மற்றும் top view தேர்ந்தெடுக்கபட்டுருக்க வேண்டும். |
01:08 | பின் line toolஐ தேர்வு செய்யவும் |
01:11 | Combo view panelல் ஏற்படும் மாற்றங்களை கவனிக்கவும் |
01:15 | Continue தேர்வு பெட்டியின் மீது கிளிக் செய்யவும். |
01:19 | இப்போது நாம் பல இடைவிடாத கோடுகள், அல்லது தொடர்ச்சியான கோடுகளை வரையலாம். |
01:26 | வெவ்வேறு கோடுகளை வரைவதற்கு, நாம் ஒவ்வொரு முறையும் line toolஐ தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை. |
01:32 | நான் சில கோடுகளை சேர்த்து காட்டுகிறேன். |
01:36 | நாம் அதிக கோடுகளை சேர்க்கும்போது, பல line objectகள் காம்போ வியூவில் சேர்க்கப்படுகின்றன. |
01:45 | இதிலிருந்து வெளியேற, escape keyஐ அழுத்தவும். |
01:49 | அடுத்து, கோடுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, பின் split toolஐ தேர்ந்தெடுக்கவும். |
01:56 | வரியில் கர்சரை வைத்து, அந்த இடத்தில் வரியை split செய்ய, இடது கிளிக் செய்யவும். |
02:03 | காம்போ வியூ பேனலில் உள்ள 2 line objectகளை கவனியுங்கள். |
02:09 | அடுத்து, வரி வரைபடங்களில் உள்ள ஸ்னாப் toolகளைப் பற்றி அறிந்து கொள்வோம். |
02:15 | 8 ஸ்னாப் டூல்களிலும் கிளிக் செய்கிறேன். |
02:19 | அவற்றைத் தொடர்ந்து இயக்கத்தில் வைத்திருப்பது, உங்கள் வரைதல் திறமையில் முன்னேறுகையில் பயனுள்ளதாக இருக்கும். |
02:25 | அடுத்து, ஸ்னாப் toolகளில் இருக்கும் தேர்வுகளை பற்றி அறிய, ஒரு வரைபடத்தை உருவாக்குவோம். |
02:32 | line toolஐ தேர்ந்தெடுத்து, continue பெட்டியை கிளிக் செய்யவும். |
02:36 | ஒரு கிடைமட்ட கோட்டை வரைவோம். |
02:41 | snap end point tool மீது கிளிக் செய்து 2 வரிகளை வரையவும். |
02:46 | இந்த அம்சம் தெரியும் வகையில், snap ortho tool on ஆக உள்ளது. |
02:54 | கோடு கிடைமட்டமாக இருப்பதை நாம் அறிவோம். |
02:59 | கர்சரை நகர்த்தி, ஒரு கோடு வரையவும். |
03:03 | கர்சரின் + சின்னத்துடன் உள்ள நீல நிறம் + சின்னத்தைக் கவனியுங்கள். |
03:10 | கோடு கிடைமட்டமாக அல்லது செங்குத்தாக இருக்கும்போது மட்டுமே நீலம் + சின்னம் தோன்றும். |
03:17 | கர்சரை வரியின் முடிவில் நகர்த்தவும். |
03:21 | வரியில் ஒரு வெள்ளை புள்ளி மற்றும் நீல guide ஐ கவனியுங்கள். |
03:26 | Continue தேர்வு on ஆக இருப்பதால், நாம் கோடு வரைவதைத் தொடரலாம். |
03:31 | வரியில் லேபிள்களைச் சேர்ப்போம். |
03:35 | snap toolகளில் snap end-point on ஆக இருப்பதைக் கவனியுங்கள். |
03:41 | Text tool மீது கிளிக் செய்யவும். |
03:44 | Annotation எங்கு தேவையோ, அங்கே கர்சரை நகர்த்தவும். |
03:50 | வெள்ளைப் புள்ளியைக் கவனித்து இடது கிளிக் செய்யவும். |
03:54 | தேவையான textஐ type செய்வதற்கான dialog பெட்டி இடதுபுறத்தில் தோன்றும். |
04:00 | இதில் A என டைப் செய்கிறேன். |
04:04 | லேபிள் அடையாளம் தென்படவில்லை என்றால், data tabக்குச் சென்று font size ஐ அதிகரிக்கவும். |
04:13 | இப்போது வீடியோவை இடைநிறுத்தவும். |
04:15 | வரியின் மறுமுனையை C என லேபிளிட, இந்த நடைமுறையை மீண்டும் செய்யவும். |
04:22 | Snap mid-point on செய்யப்பட்டிருப்பதைக் கவனிக்கவும். |
04:27 | கோட்டின் நடுப் புள்ளியையும் அதே முறையில் லேபிளிடலாம். |
04:33 | வீடியோவை இடைநிறுத்தி, நடுப் புள்ளியை B என லேபிளிடவும். |
04:39 | line toolஐ மீண்டும் கிளிக் செய்து, snap perpendicular on செய்யப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும். |
04:46 | கர்சரை கேன்வாஸில் வைத்து, வரியை நோக்கி நகர்த்தவும். |
04:52 | நீல நிற ‘+’ அடையாளம் தெரியும் போது, புதிய கோடு செங்குத்தாக இருக்கும் என்பது நமக்குத் தெரியும். |
04:59 | வீடியோவை இடைநிறுத்தி, இந்தப் புதிய வரிச் சந்திப்பில், D என்ற லேபிளை உருவாக்கவும். |
05:08 | அடுத்து snap intersection பற்றி அறிந்து கொள்வோம். |
05:13 | இதற்கு, முதலில் மற்ற அனைத்து ஸ்னாப் toolகளையும் off செய்ய வேண்டும். |
05:19 | இரண்டு கோடுகளின் குறுக்குவெட்டுக்கு அருகில் கர்சரை நகர்த்தவும். |
05:25 | நீல நிற கிராஸ் அடையாளம், இரண்டு கோடுகளுக்கு இடையே உள்ள குறுக்குவெட்டைக் காட்டுகிறது. |
05:30 | வெட்டும் புள்ளியில் இருந்து மற்றொரு வரியை உருவாக்குவோம். |
05:36 | இடது கிளிக் செய்து கர்சரை நகர்த்தவும். |
05:39 | இடது பேனலில் வரியின் பண்புகள் மாறுவதைக் கவனியுங்கள். |
05:45 | கோணத்தை 45 டிகிரி என டைப் செய்து Enter keyயை அழுத்தவும். |
05:51 | 45 டிகிரியில் வெட்டும் கோட்டைக் கவனியுங்கள். |
05:56 | வீடியோவை இடைநிறுத்தி, வரியின் மீதமுள்ள முனைகளில் மேலும் இரண்டு லேபிள்களை உருவாக்கவும். |
06:05 | நான் அவற்றை E மற்றும் F என்று பெயரிடுகிறேன். |
06:08 | அடுத்து ஒரு செவ்வகத்தை வரைவோம். |
06:12 | engineering வரைபடத்தில் ஓரங்கள் மற்றும் பக்கங்கள் பெரும்பாலும் வட்டமாக இருக்கும். |
06:18 | இந்த பழக்கம் கூர்மையான புள்ளிகளை தவிர்த்து, fillet மற்றும் chamfer என்று அழைக்கப்படுகிறது. |
06:26 | செவ்வகத்தில் அனைத்து பக்கமும் மூடி, ஒன்றாக இருக்கும் |
06:30 | எனவே, filletஐ பயன்படுத்துவதற்கு முன், objectஐ முதலில் தனித்தனி வரிகளாக downgrade செய்யவும். |
06:38 | அடுத்து, பக்கத்தில் உள்ள edgeகள் அல்லது கோடுகளைத் தேர்ந்தெடுக்கவும். |
06:43 | Fillet மீது கிளிக் செய்யவும். |
06:44 | Fillet மதிப்பை 10 மிமீக்கு மாற்றி Enter keyயை அழுத்தவும். |
06:50 | கூர்மையான முனை இப்போது மென்மையாக்கப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். |
06:55 | அசல் object மற்றும் fillet இரண்டும் இப்போது இருப்பதைக் கவனியுங்கள். |
07:01 | மீண்டும், இரண்டு அடுத்தடுத்த வரிகளைத் தேர்ந்தெடுத்து, ஃபில்லட்டைக் கிளிக் செய்யவும். |
07:06 | அடுத்து, delete original object பெட்டியை கிளிக் செய்யவும். |
07:12 | filletடற்கு 12 ஐ உள்ளிடவும், இப்பொழுது fillet மட்டுமே உள்ளது என்பதைக் கவனிக்கவும். |
07:19 | அடுத்து, செவ்வகத்தில் உள்ள வேறு இரு கோடுகளைத் தேர்ந்தெடுக்கவும். |
07:24 | பின் Fillet toolஐ தேர்வு செய்யவும் |
07:28 | இம்முறை chamfer மற்றும் delete original object ஐ கிளிக் செய்யவும். |
07:34 | Chamferஐ விட filletல், ஓரம், மிகவும் மென்மையாகவும் சுற்று வட்டமாகவும் இருப்பதை கவனிக்கவும். |
07:42 | பெரும்பாலும் வரைபடத்தில் நாம் கோண அளவீடுகளை செய்ய வேண்டும். |
07:47 | Dimension மீது கிளிக் செய்யவும். |
07:50 | Shift மற்றும் Alt keyகளை சேர்த்து அழுத்தவும். |
07:55 | Combo viewல் அளவுரு மாற்றங்களைக் கவனிக்கவும். |
08:00 | keyகளை அழுத்திப் பிடித்து, கோணத்தை அளவிட வேண்டிய இரண்டு வரிகளைத் தேர்ந்தெடுக்கவும். |
08:07 | நாம் உட்புற அல்லது வெளிப்புற பரிமாணத்தை அளவிட முடியும். |
08:13 | கேன்வாஸில் தேர்ந்தெடுக்கப்பட்ட வரிகளுக்கு இடையே மற்றும் வெளியே கர்சரை நகர்த்தவும். |
08:19 | அளவீட்டைக் குறிக்கும் வளைவு மாறுவதை கவனியுங்கள். |
08:25 | கோணத்தை அளவிட ஒரு முறை இடது கிளிக் செய்யவும். |
08:30 | இப்போது, SHIFT மற்றும் ALT keyகளை விடுவிக்கவும். |
08:35 | அடுத்து, ஒரு leader line ஐ உருவாக்க கற்றுக்கொள்வோம். |
08:39 | Annotationஐ கேன்வாஸில் மிகவும் பொருத்தமான இடத்திற்கு நகர்த்த leader line உதவும். |
08:47 | Label toolஐ தேர்வு செய்யவும் |
08:50 | செவ்வகத்தின் ஒரு முனையை தேர்ந்தெடுத்து, இடது கிளிக் செய்யவும். |
08:55 | கர்சர் ஓரத்தின் அருகில் இருக்கும் போது, நீல சுட்டியை கவனிக்கவும். |
09:01 | ஒரு பக்கத்தில் ஒரு கோட்டை வரையவும். |
09:04 | பின்னர் வரியை வேறு பக்கமாக இழுக்கவும். |
09:09 | ஒருமுறை கிளிக் செய்து மீண்டும் பக்கத்திற்கு இழுக்கவும். |
09:14 | leader lineஐ ஏற்க இடது கிளிக் செய்யவும். |
09:18 | கேன்வாஸில் காட்டப்படும் லேபிள் textஐ கவனியுங்கள். |
09:22 | சில நேரங்களில், லேபிள், கேன்வாஸில் காட்டப்படாது. |
09:27 | அப்படி இருந்தால், முதலில் லேபிள் வரியைத் தேர்ந்தெடுத்து, view tab ஐ கிளிக் செய்யவும். |
09:34 | கேன்வாஸில் உள்ள textன் அளவை மாற்றுவோம். |
09:39 | கீழே View tabக்கு சென்று, text propertiesக்கு செல்லவும். |
09:44 | லேபிள் தெளிவாக தெரிய, textன் அளவை அதிகரிக்கவும். |
09:51 | இந்த அளவு உங்கள் ஒவ்வொருவருக்கும் மாறுபட்டு இருக்கலாம். |
09:56 | Combo viewல், Data tabக்குச் செல்லவும். |
10:00 | Label பிரிவில் Custom text ன் மீது கிளிக் செய்யவும். |
10:05 | வலது புறம் உள்ள Ellipsis மீது கிளிக் செய்யவும். |
10:09 | ஒரு List dialog பெட்டி தெரிகிறது. |
10:13 | “R 10” என டைப் செய்து OKவில் கிளிக் செய்கிறேன் |
10:16 | சிலருக்கு இந்த labelன் மாற்றம் தெரியாமல் இருக்கலாம். |
10:21 | formன் மதிப்பு மாற்றப்பட்டாலும், symbol ஆனது canvasல் தென்படாது. |
10:29 | மாற்றத்தை பார்க்க, முதலில் custom text formன் மீது கிளிக் செய்து பின் canvasல் கிளிக் செய்யவும். |
10:36 | தேவைக்கேற்ப உங்கள் வேலையைச் save செய்து, FreeCADலிருந்து வெளியேறவும். |
10:41 | நாம் கற்றவற்றை பார்ப்போம். |
10:43 | இந்த டுட்டோரியலில், நாம் கற்றது, |
10:46 | வரையும் பொழுது, Continue தேர்வு பற்றி |
10:50 | ஒரு வரியை வெட்டுதல் |
10:52 | கோடுகளில் குறுக்குவெட்டுகளை உருவாக்கும் போது ஸ்னாப் toolகளைப் பயன்படுத்துதல். |
10:58 | Fillet மற்றும் Chamfer |
11:01 | கோண பரிமாணத்தை அளவிட்டோம் மற்றும் |
11:05 | labelலை சேர்ப்பதற்காக leader lineஐ உருவாக்கினோம் |
11:09 | பயிற்சியாக, பின்வருவனவற்றை செய்யவும். |
11:13 | இங்கே உள்ளது போல், ஒரு வரைபடத்தை வரையவும். |
11:17 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. |
11:22 | இதை நீங்கள் தரவிறக்கி காணவும். |
11:25 | ஸ்போக்கன் டுடோரியல் திட்டம், |
11:28 | செய்முறை வகுப்புகள் நடத்தி, |
11:29 | சான்றிதழ்களை வழங்குகிறது. |
11:32 | மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். உங்களின் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும். |
11:38 | ஸ்போகன் டுடோரியல் திட்டம், இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் நிறுவப்பட்டது. |
11:46 | இந்த டுட்டோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்து ஆர்த்தி. நன்றி. |