FreeCAD/C2/Inscribe-a-Polygon/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search


Time Narration
0:00 Inscribe a Polygon பற்றிய tutorialக்கு நல்வரவு.
0:06 இந்த டுட்டோரியலில் நாம் கற்க போவது,
0:09 ஒரு வட்டத்திற்குள் ஒரு பென்டகனை பொறித்தல்
0:13 வயர்ஃப்ரேம் அல்லது ஃபிளாட்லைன்ஸ் மூலம் objectஐ format செய்தல்
0:18 நிறம் மற்றும் வரியின் அகலத்தை மாற்றுதல்
0:21 Annotationஐ சேர்த்தல்
0:23 global அல்லது தனிப்பட்ட எழுத்துரு அளவை அமைத்தல்
0:27 ஒரு விளிம்பின் நீளத்தை அளவிடுதல் மற்றும்
0:31 View toolbar
0:33 Zoom மற்றும் reset பற்றி அறிதல்.
0:35 இந்த டுட்டோரியலை பதிவு செய்ய, நான் Windows 11 OS மற்றும் FreeCAD பதிப்பு 0.21.1ஐ பயன்படுத்துகிறேன்.
0:48 இந்த டுடோரியலை கற்க,
0:50 நீங்கள் FreeCAD இடைமுகத்தை நன்கு அறிந்திருக்க வேண்டும்.
0:55 முன்தேவையான பயிற்சிகளுக்கு, இந்த தளத்தைப் பார்வையிடவும்.
01:00 FreeCADஐ திறந்து, ஒரு புதிய fileஐ தொடங்கவும்.
01:04 Draft workbenchஐ தேர்வு செய்யவும்
01:07 Orthographic மற்றும் top view தேர்ந்தெடுத்திருப்பதை உறுதி செய்யவும்.
01:13 இந்த வரைபடத்தில் ஒரு பென்டகனை சேர்ப்போம்.
01:17 FreeCAD ஒரு வட்டத்தின் உள்ளே polygonஐ பொறிக்கிறது.
01:22 ஒரு வட்டத்தின் பென்டகனை பொறிப்பதற்கான சமன்பாடு R என்பது 0.85 மடங்கு A விற்கு சமம்.
01:31 இங்கு A என்பது பென்டகனின் பக்கத்தின் நீளம்.
01:35 R என்பது வட்டத்தின் ஆரம்.
01:39 இங்கே காட்டியபடி Polygon toolஐ கிளிக் செய்யவும்.
01:41 Combo view, Model tabல் உள்ள Sides தேர்வை கவனிக்கவும்.
01:47 ஒரு பென்டகனுக்கு 5 பக்கங்கள் இருப்பதால், அதை 5 ஆக மாற்றவும்.
01:52 கர்சரை, வரைதல் கேன்வாஸுக்கு நகர்த்தி + crosshairஐ கவனிக்கவும்.
01:58 polygonஐ உருவாக்க இடது கிளிக் செய்து பிடித்து இழுக்கவும்.
02:03 முதலில் polygon பொறிக்கப்பட்ட வட்டம் மட்டுமே காணப்படுகிறது.
02:10 இடது காம்போ வியூ பேனலில் Radius அளவை கவனிக்கவும்.
02:16 ஒரு பெரிய வட்டத்தை உருவாக்க நீங்கள் இழுக்கும்போது, raduisன் அளவும் மாறுகிறது.
02:22 நான் radiusஐ 20 மிமீ ஆக வைத்து கேன்வாஸில் கிளிக் செய்கிறேன்.
02:29 இது வட்டத்தின் ஆரத்தை சரிசெய்கிறது, மற்றும் polygonஐ காணலாம்.
02:34 ஒரு objectஐ தேர்ந்தெடுக்க அதைக் கிளிக் செய்து பச்சை நிற அவுட்லைனைக் கவனிக்கவும்.
02:39 புதிய objectஆனது polygonஆக combo viewவில் சேர்க்கப்பட்டுள்ளது.
02:46 combo viewவில் polygon தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும்.
02:51 பேனலின் ஓரத்தில் கர்சரை வைக்கவும்.
02:55 பேனலின் அளவை மாற்ற கிளிக் செய்து இழுக்கவும்.
02:59 Model tabஐ பயன்படுத்தி objectன் பண்புகளை மாற்றலாம்.
03:04 Bounding boxன் முதல் தேர்வாக, true என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
03:10 Objectக்கான bounding box காட்டப்படுவதைக் கவனிக்கவும்.
03:16 கேன்வாஸில் தேர்ந்தெடுக்கப்பட்ட objectகளின் பரப்பளவை உள்ளடக்குவதற்கு, இது அனுமதிக்கிறது.
03:23 Top மெனுவில் உள்ள view toolbarல் இருந்தும் இதை ஆன் அல்லது ஆஃப் செய்யலாம்.
03:30 கீழே Object styleக்கு வரவும்.
03:33 இங்கே காணப்படுவது போல், Display modeக்காக, புல் டவுன் மெனுவைக் கிளிக் செய்யவும்.
03:38 வயர்ஃப்ரேம் objectன் விளிம்புகளை மட்டுமே காட்டுகிறது.
03:44 நான் Flat lines தேர்வு செய்கிறேன்.
03:48 இது color shade அல்லது color நிரப்பப்பட்ட objectஐ வரைய உதவும்.
03:54 கீழே, line colorற்கான formல் கிளிக் செய்யவும்.
03:58 Select color dialog box திறக்கிறது.
04:03 Dialog boxஐ திறக்க உங்களில் சிலர் மீண்டும் கிளிக் செய்ய வேண்டும்.
04:08 நான் சிவப்பு நிறத்தைத் தேர்ந்தெடுத்து, OKவை கிளிக் செய்கிறேன்.
04:12 objectஐ தேர்ந்தெடுக்கும்போது, ​​அவுட்லைன் பச்சை நிறத்தில் இருக்கும்.
04:18 எனவே இந்த நேரத்தில் மாற்றம் தென்படாது.
04:23 கீழே சென்று, line widthஐ 8ஆக மாற்றவும்
04:28 கீழே Shape colorக்கு செல்லவும்.
04:30 Formல் கிளிக் செய்து, Select color தேர்வை திறக்கவும்.
04:36 Objectக்கு பல faceகள் இருந்தால், வெவ்வேறு faceகளுக்கு வெவ்வேறு வண்ணங்களைத் தரலாம்.
04:43 நான் ஆரஞ்சு நிறத்தைத் தேர்ந்தெடுத்து OK வைக் கிளிக் செய்கிறேன்.
04:48 இங்கே objectன் transparencyயையும் மாற்றலாம் என்பதைக் கவனிக்கவும்.
04:54 இப்போது, ​​வீடியோவை இடைநிறுத்தி, பென்டகனை கொஞ்சம் மறைக்கக்கூடிய ஒரு வட்டத்தை வரையவும்.
05:01 Display modeக்கு flat linesஐ பயன்படுத்தவும், அதை நீங்கள் விரும்பும் வண்ணத்தில் நிரப்பவும்.
05:07 பின்னர் transparency அளவை மாற்றி, மாற்றங்களைக் கவனிக்கவும்.
05:13 object highlightஆக இல்லாதபோது மட்டுமே வண்ண மாற்றங்கள் தெரியும்.
05:19 அடுத்து, பென்டகனின், பக்கத்தின் தூரத்தை அளவிடுவோம்.
05:23 உங்கள் விருப்பத்தின் edgeஐ தேர்ந்தெடுக்க முதலில் கிளிக் செய்யவும்.
05:28 அடுத்து, Draft Annotation toolsல் உள்ள Dimension toolஐ கிளிக் செய்யவும்.
05:34 தேர்ந்தெடுக்கப்பட்ட வரிக்கு, இணையான ஒரு வரி கேன்வாஸில் தோன்றும்.
05:39 இதை annotation வைக்கப்பட வேண்டிய இடத்தில் இருந்து சற்று தள்ளி வைக்கவும்.
05:44 அளவிடப்பட்ட வரி மற்றும் annotationஐ பார்க்க இடது கிளிக் செய்யவும்.
05:50 உங்களில் சிலருக்கு எழுத்து மிகவும் சிறியதாக மற்றும் தெரியாமல் இருக்கலாம்.
05:56 Globalஆக அல்லது தனித்தனியாக நாம் annotationஐ வடிவமைக்க முடியும்.
06:01 Combo view, பின் model டேபில், dimension லேபிளைத் தேர்ந்தெடுக்கவும்.
06:06 கிராபிக்ஸ் பிரிவு மற்றும் line colorற்கு கீழே செல்லவும்.
06:10 select color dialogஐ திறக்க, உங்கள் கணினியைப் பொறுத்து ஒன்று அல்லது இரண்டு முறை கிளிக் செய்யவும்.
06:18 சிவப்பு நிறத்தைத் தேர்ந்தெடுத்து OK வை கிளிக் செய்யவும்.
06:22 பின்னர், கீழே உள்ள பேனலில் உள்ள text பகுதிக்கு செல்லவும்.
06:27 Font size அளவு பகுதிக்குச் சென்று அதை 5 மிமீ ஆக மாற்றவும்.
06:32 இப்போது எழுத்தின் அளவு மாறுகிறது.
06:35 இயல்புநிலை எழுத்துரு அமைப்பை மாற்ற, Edit, பின் Preferencesக்கு செல்லவும்.
06:42 இடதுபுறத்தில் Draft tabஐ தேர்ந்தெடுக்கவும்.
06:45 பின்னர் மேலே உள்ள Text and dimensionsஐ தேர்ந்தெடுக்கவும்.
06:50 Global அமைப்பிற்கு தேவையான அளவுருக்களை இங்கே அமைக்கவும்.
06:54 நீங்கள் பின்னர் சேர்க்கும் annotationகளில் மட்டுமே இந்த மாற்றங்கள் ஏற்படும்.
07:00 இப்போதைக்கு நான் அவற்றை மாற்ற விரும்பாததால், Cancel ஐ கிளிக் செய்கிறேன்.
07:06 தேர்ந்தெடுத்த இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள தூரத்தை அளவிடுவோம்.
07:11 முதலில் View டூல்பாரில் உள்ள measure distanceஐ கிளிக் செய்யவும்.
07:16 Report view பக்கம், முதல் புள்ளியைத் தேர்ந்தெடுக்க தூண்டுகிறது.
07:21 நீங்கள் விரும்பும் முதல் புள்ளியில் கிளிக் செய்யவும்.
07:25 பென்டகனின் vertexல் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறேன்.
07:28 பின்னர் நான் மற்றொரு vertexல் கிளிக் செய்கிறேன்.
07:31 அவற்றுக்கிடையேயான தூரம் இப்போது கேன்வாஸில் காட்டப்பட்டுவதைக் கவனியுங்கள்.
07:37 Combo view, model டேபைப் பயன்படுத்தி அளவீடுகளை நீக்கவும்.
07:42 Objectஐ தேர்ந்தெடுத்து அதை நீக்கவும்.
07:45 நீங்கள் எந்த நேரத்திலும் ஜூம் அளவை மறுசீரமைக்க விரும்பலாம்.
07:50 எல்லாப் objectகளுக்கும் அல்லது தேர்வுக்கும் பொருந்தும் வகையில் View toolbar விருப்பங்களைப் பயன்படுத்தவும்.
07:57 இவற்றில் பல context menuக்களாகவும் கிடைக்கின்றன.
08:02 தேர்ந்தெடுக்கப்பட்ட objectஐ உபோயிகிக்க, கேன்வாஸில் வலது கிளிக் செய்யவும்.
08:07 நீங்கள் பல்வேறு toolsகளுடன் பரிச்சயம் பெற, பயிற்சி செய்ய வேண்டும்.
08:13 அவ்வப்போது உங்கள் வேலையைச் சேமிக்கவும்.
08:16 FreeCADஐ மூடுவதற்கு File, பின் Exitஐப் பயன்படுத்தவும்.
08:20 நாம் கற்றவற்றை பார்ப்போம்.
08:22 இந்த டுட்டோரியலில், நாம்
08:24 ஒரு pentagon Inscribe செய்தோம்
08:27 வண்ணம் மற்றும் வரியின் பண்புகளை வடிவமைத்தோம்.
08:30 Annotationஐ சேர்த்தோம்.
08:32 Textன் பண்புகளை வடிவமைத்தோம்.
08:35 மற்றும் இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள தூரத்தை அளவிட்டோம்
08:40 பயிற்சியாக, பின்வருவனவற்றை செய்யவும்
08:44 ஒரு செவ்வகத்தை வரையவும்
08:47 A =25 மிமீ அளவில் ஒரு hexagonஐ வரையவும்.
08:51 குறிப்பு: hexagonஐ, ஒரு வட்டத்தில் பொறிக்க A = r ஆகும்.
08:56 objectகளின் பண்புகளை வடிவமைக்க, வரைந்து பயிற்சி செய்யுங்கள்.
09:01 குறிப்பு: நீங்கள் மாற்றியமைக்க, காம்போ வியூ பக்கத்தில் உள்ள அளவுருக்களையும் பயன்படுத்தலாம்.
09:07 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. 
09:12 இதை நீங்கள் தரவிறக்கி காணவும்.
09:15 ஸ்போக்கன் டுடோரியல் திட்டம், செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்களை வழங்குகிறது.
09:21 மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்
09:24 உங்களின் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்.
09:28 ஸ்போகன் டுடோரியல் திட்டம், இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் நிறுவப்பட்டது.
09:36 இந்த டுட்டோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்து ஆர்த்தி. நன்றி.

Contributors and Content Editors

Arthi